எங்கிருந்தோ வந்த குரல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2025
பார்வையிட்டோர்: 3,164 
 
 

இரவு மணி பத்து . மாத்திரையைச் சாப்பிட்டு உறங்கலாம் என்று கட்டிலை நோக்கிச் சென்றார் தொழிலதிபர் மோகன். ஆன வயதை யாரும் கணிக்க முடியாத தோற்றம் கொண்டவர். எப்போதும் அலுப்பும் சலிப்பும் கொள்ளாதவர். தன்னுடைய காதல் மனைவியை இழந்தும் பாசத்துக்குரிய மகனையும் மருமகளையும் விபத்தில் பறிகொடுத்தும் கலங்காமல் கடமைகளை ஆற்றி வருபவர். அவருக்கு இப்போது இருக்கிற ஒரே உறவு அவருடைய பேரன் சஷாங்க் . இரண்டு நாட்களுக்கு முன்பு அவனுக்கு நண்பர் ஒருவரின் பேத்தியை மணம் முடித்து கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் , கட்டிலை நோக்கிப் போகும் போது அவருடைய கைபேசி ஒலித்தது.

“சொல்லுப்பா என்ன இந்த நேரத்துல நம்ம கஸ்ட் ஹவுஸ்ல வசதி குறைவு எதுவும் இல்லையே “

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல தாத்தா … இங்க ஒரு சூப்பர் மார்க்கெட்ல சேல்ஸ்ல அப்பா ஜாடையில ஒரு லேடிய பார்த்தேன் தாத்தா ரம்யா தான் சொன்னா டாடி மாதிரியே இருக்காங்கன்னு …”

மோகன் பெருமூச்சு விட்டார்.

“நான் தொலைத்த செல்வம் பா .. தானாக தன் வாழ்க்கையை அமைச்சுக்கறேன்னு போன என்னோட பொண்ணு மேனகா .. உன்னோட அத்தை …. நீ என் செல்வத்தை இல்ல கண்டுபிடிச்சு இருக்கே .. நான் நாளைக்கே அங்கே வரேன்.. “


கொடைக்கானலில் உள்ள தொழிலதிபர் மோகனின் விருந்தினர் இல்லம்.மறு நாள் காலை நேரம். மோகன் அங்கு போய்ச் சேர்ந்த போது மேலாளரும் ஊழியர்களும் வெளியே நின்று கொண்டிருந்தனர். மேலாளர் பாபு என்கிற நடுத்தர வயது ஒல்லியான , மீசை நபர்அவர் அருகில் வந்தார்.

மோகன் முகம் கடுகடுப்பானது.

“என்னய்யா ஆச்சு .. ஏன் எல்லாரும் வெளியே நிக்கறாங்க …”

“சார் கரண்ட் ஷார்ட் சர்க்யூட்ன்னால நைட் தீ பிடிச்சிடுச்சு… “

“என் பேரனும் அவன் மனைவியும் எங்கே ? அவங்களுக்கு ஒண்ணும் ஆகலையே … “

“அவங்க சேப் ஆக இருக்காங்க ஐயா … பக்கத்துல இருக்கிற ஓட்டல்ல தங்க வெச்சிருக்கேன்… “

மோகனுடைய கைபேசி ஒலித்தது.

“சஷாங்க் … என்னப்பா பேட் மார்னிங் ஆ இருக்கு … நான் இங்க வந்துட்டேன் … “

“உள்ளே போய் ரிலாக்ஸ் பண்ணுங்க தாத்தா ரெண்டு பேரும் இதோ வரோம் தாத்தா “

“நீ வர்றது இருக்கட்டும் .. எப்படி தப்பிச்சே … “

“சஷாங்க் வெளியே வா ரம்யா வெளியே வா ரெண்டு பேரும் உடனே வெளியே வாங்கன்னு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஒரு பெண் குரல் மீண்டும் மீண்டும் ஒலிச்சுகிட்டே இருந்தது .. நாங்க வெளியே வந்துட்டோம் … அப்புறம் எங்க ரூம்ல பயர் பத்திகிட்டு எரிஞ்சதை பாரத்தோம் … மிராக்கிள் தாத்தா … நீங்க பேனிக் ஆகாதீங்க.. எங்களுக்கு ஒண்ணும் இல்ல .. ஒங்கள அத்தை மேனகா இருக்கிற கடைக்கு அழைச்சுகிட்டு போறேன் . ஒங்க எனர்ஜி மல்ட்டிபிள் ஆயிடும் … “

“அத்தை மேனகாவை பார்க்க முடியாது ப்பா அவ அமானுஷ்யமா உன்னைப் பின்தொடர்ந்து வந்திருக்கா நைட் ல பங்களாவுக்கு வந்து உங்க ரெண்டு பேரையும் காப்பாத்தி இருக்கா … ஆவியானாலும் விட்ட குறை தொட்ட குறையா பாசம் போகலை.. சரி நீ வா … “

மறுமுனையில் அவரது பேரன் தாத்தா தாத்தா என்றான். மோகன் , தன்னுடைய மகளைப் பற்றி எண்ணி மீண்டும் பெருமூச்சு விட்டார் .

– அத்தை மடி மெத்தையடி, சின்னஞ்சிறு புனைகதைகளின் தொகுப்பு.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *