உந்தன் நிழலாய் நானடி தோழி…
அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30
அத்தியாயம் – 25

தாத்தாவுக்குச்செய்ய வேண்டிய பனிரெண்டுநாள் காரியங்களைச் செய்து முடித்தாகிவிட்டது.
அந்தப் பனிரெண்டுநாளும் ரேவதியோடு ஒரு வார்த்தை பேசவில்லை முரளி.
சாஸ்திரிகள் கூப்பிடும்போது முரளிக்கு அருகில் வந்து நிற்பதும் ..பின் உள்ளே சென்று விடுவதுமாய் இருந்தாள் ரேவதி.
பதிமூன்றாம்நாள் சுபஸ்வீகாரம்.முடித்தாயிற்று.
கிரேக்கியம்னு சொல்ற சுபஸ்வீகாரம் முடிஞ்சன் னிக்கி எந்தக் கோவிலுக்கா வது போய்ட்டு வரது வழக்கம்.. தெருக் கோடீல இருக்கற புள்ளையார் கோவிலுக்காவது போய்ட்டு வாங்கோ..
சொல்லிவிட்டுப் போனார் சாஸ்த்திரிகள்.
முரளி கோவிலுக்கெல்லாம் போகவில்லை.போகும் மனநிலையில் அவனில்லை.
பதிமூன்று நாட்களும் வெளிமனிதர்களும் உறவினர்களும் வருவதும் போவதுமாய் இருந்ததாலும் சடங்குகள் அதிக அளவு செய்யப்பட வேண்டியிருந்த தாலும் மனதை அடக்கி வைத்திருந்த முரளி..எல்லா சடங்குகளும் சம்பிரதாயங் களும் முடிந்து வீடு வெறிச் சிட..
தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டான்.
தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து வாய்விட்டு அழுதான்.
சாரு..சாரு..ஒங்குளுக்கு துரோகம் பண்ணிட்டே சாரு..
துரோகம்பண்ணிட்டே..நா ஒரு பாவி..நா ஒரு பாவி சாரு பாவி தலையிலடித்துக் கொண்டான்.
வேறொரு அறையில் அமர்ந்திருந்தாள் ரேவதி.
நடந்ததனைத்தும் கனவுபோல் இருந்தது அவளுக்கு.
பெற்றவர்களின் விபத்து சாவு..உற்றார் உறவினர்க ளின் தன்மீதான அக்கறையின்மை..
அவற்றால் ஏற்பட்ட அச்சம், அழுகை, தனிமை, பாதுகாப்பற்ற உணர்வு..
அனைத்தையும் நொடியில் மாற்றி..தன் பேரனையே தன்னை மணக்கவைத்து..
அற்புதம் செய்துவிட்டு மறைந்துபோன கிழவரை எண்ணி எண்ணி வியந்துபோனாள் ரேவதி.
என்ன கிழவர்னு நெனைக் கிறோம் தாத்தாவ..இனிமே அப்பிடி நெனைக்கக்கூடாது.
இவருக்கு அவர் தாத்தான்னா நமக்கும் அவர் இனிமே தாத்தாதா.
இவருக்கும்னா சொன்னோம்…இவர்க்கு.. இவர்..அதென்ன தாலி கட்டினவர்னா.. பொம்னாட்டில்லாம் அவாள ஆட்டமேடிக்கா ‘இவர்’ அப்பிடீன்னு சொல்றது பழக்கமாயிடருது?
சொல்லும் போதே என்னமோமாரி இருக்குல்ல..
ஏதோ ஓர் உரிம வந்தாப்ல..கெடச்சாப்ல..
அப்பாவும் அம்மாவும் இறந்துபோய் முப்பத்தெட்டு நாட்களாகி முதன்முதலாய்..
ரேவதியின் இதழ்களில் லேசான புன்னகை அரும்பியது.
அப்பா..அம்மா..நீங்க பண்ற ஆசிர்வாதம்தா..இதுமாரி நல்லவர் எனக்கு புருஷனா கெடச்சிருக்கார்.
அப்பா அம்மா..
இவர்.. நல்லாபடிச்சவர்.. டாக்டருக்குப்படிச்சவர்.. பம்பாயில டாக்டரா இருக்கார்.ஒரு கெட்ட பழக்கமு கெடைதுன்னு இவரோட தாத்தா சொன்னார்.இவரப்பாத்தா அப்பிடித்தா தெரியறது.
சின்ன வயசுதாம்மா இருவத்தெட்டு வயசு தானாம்.தாத்தா சொன்னார்.
இந்தப் பொண்ணுகழுத்துல தாலியக்கட்டுனு தாத்தா சொன்னதுமே..எதுவுமே சொல்லலியே..கேக்கலியே.. தாலியக்கட்டிட்டார்ப்பா எங்கழுத்துல..ஆமாம்மா.. தாலிய கட்டிட்டார்.
தாத்தா காரியத்த ரொம்ப ஸ்ரத்தயா செஞ்சார்ப்பா.
செஞ்சார்ம்மா..
அநாதயா.. நிர்க்கதியா நின்ன எனக்கு நல்ல வாழ்க்க அமஞ்சுபோச்சு..
எல்லாத்துக்கும் காரணம் அந்தத் தாத்தாவும்.. ஒங்க ரெண்டுபேரோட ஆசிர்வாத முந்தா..
அப்பா..அம்மா..என்று விம்மினாள்.மீண்டும் அழுதாள் ரேவதி. பெற்றவர்களை வாழ்க்கையில் ஏற்படும் எந்தமாற்றமும் மறக்கடித்து விடாது.
அடுத்துவந்த ஒருவாரமும் இருவருக்குமிடையே பேச்சே இல்லாமல் தான் நேரம் நகர்ந்தது.
அவன் அவனறையிலும்.. இவள் ஒரு அறையிலுமாய்..
பெற்றவர்கள் இறந்து போனதுமுதல் இன்று வரை நாற்பத்தைந்து நாட்களாக ரேவதியின் இரவுகள் தூக்கமின்றியே நகர்ந்தன.
ஒன்று பெற்றவர்களோடு மனதால் பேசுவாள்.. இல்லாவிட்டால் சாருவுக்கு நடப்பதையெல்லாம் மானசீகமாய் சொல்லிக் கொண்டிருப்பாள்.
சாரு..தூங்கிட்டியா?
தூங்கலில்ல?..
சாரு.. அப்பாவும் அம்மாவும் கார்ஆக்சிடண்ட்ல செத்துப்பேட்டான்னு சொல்லி அழுதேன்ல ஒங்கிட்ட..
அந்தக் கொடும நடந்த இருவத்திமூணாவாது நாள் எனக்குக் கல்யாணாமா யிடுத்து.நீ நம்பலீல்ல..
என்னாலயே நம்ப முடீலடி சாரு.
எ அப்பா அம்மாவ காரேத்திக்கொன்ன பாவியோட புள்ளயே எங்கழுத்துல தாலி கட்டிட்டார்டி.
காரேத்தி எ அப்பா அம்மாவக் கொன்னவ ஒரு குடிகார..
எல்லா கெட்டபழக்குமு உள்ளவனாண்டி அந்தப் பாவி.
ஆனா இவர் அவரோட தாத்தாமாரி ரொம்ப நல்லவர்டி..ஒரு கெட்ட பழக்கமு இல்லாதவர்.
இவரோட தாத்தா.. ஒ அப்பஞ்செஞ்ச மகா பாவமான செய்லால இந்தப்பொண்ணு நிர்கதியா நிக்கிறா..இந்தப்பொண்ணுக்கு நாம நல்லது ஏதாவது செய்யணும்னா..இவுளுக்கு நீ தாலிகட்டி மனைவியா ஏத்துண்டு நல்ல புருஷனா நடந்துக்கணும்..இது என்னோட கடசி ஆசன்னாரு பாரு..
இவர் தன்னோட தாத்தாவ ஒருவார்த்த கேக்கலையே.. மறுத்துப்பேசலியே..அந்த நெலேலயும்..எங்கிட்ட இந்தத் திருமணத்துல சம்மத மான்னு கேட்டுட்டு தாண்டி..நா சம்மதம்னு தலயாட்டின அப்றந்தாண்டி எங்கழுத்துல தாலி கட்டினார்.
இதுலேந்தே இவர் எவ்வளவு நல்லவர்னு தெரியுதில்ல?
இத்தனயும் சொன்னேனே..இவர் பேரச்சொல்லல பாரு..
பேரு..பேரு..முரளிகிருஷ்ணா டாக்டருக்குப்படிச்சிருக்கார்டி.
எங்க டாக்டரா இருக்கார் தெரியுமா?நீ இருக்குற பம்பாயில..
அங்கதானே சாரு நீ இப்பவும் இருக்க?
நா இவரோட சீக்கிரமே பம்பாய் வந்துடுவே.. குடித்தனம் வெக்கணுமே..
அப்பிடி பம்பாய்க்கு நா வந்துட்டேன்னு வையி..
எ சாரு எங்க இருக்கான்னு தேடறதுதா எ மொத வேல..
எ சாருவ பாக்கணும்.
சாரு.. சொல்லும் போதே அழுகவருதுடி..நீதாண்டி நா..
நாதாண்டி நீ..
நீ சிரிக்கிறயா..கல்யாணம் ஆகின அப்றமு இப்பிடி நீதாண்டி நா..நாதாண்டி நீன்னு சொல்றயேடி ரேவின்னு..
ஆமா..எப்பவும் அப்டிதா சொல்லுவே..நீ எ உயிர்த்தோழிடி..இவர் எம் புருஷ..புருஷ வந்தாச்சுனா ஃப்ரெண்டு இல்லேன்னு ஆயிடுமா?
எனக்கு ஆகாது..நீ எ உயிர்..உயிர்த்தோழிடி சாரு..
நா சாகரவர இது மாறாதுடி சாரு..
கண்களில் பெருகிய கண்ணீரைத்துடைத்துக்கொண்டாள் ரேவதி.
தன் உயிர்த் தோழியின் அன்புக் காதலனே தன் கணவன் என்பதை ரேவதி எப்படி அறிவாள்?
அப்படி அறியும் நாள் வரும்போது என்ன செய்வாள்?
காலம் ஆடும் ஆட்டத்திற்கு யார் விளக்கம் சொல்ல முடியும்?
மேலும் நான்கு நாட்கள் எந்த மாற்றமும் நிகழவில்லை.
முரளி வெளியில் செல்வதும் வீடு திரும்புவதுமாக இருந்தான்.
முகத்தில் சந்தோஷமில்லை.
உடுத்தும் ஆடையில் ஒரு நேர்த்தியில்லை.சாப்பாட்டில் அக்கறை இல்லை.
கிட்டத்தட்ட முரளி ரேவதியின் கழுத்தில் தாலிகட்டி ஒரு மாதப்போகிறது..அவன் இந்த ஒருமாதத்தில் ரேவதியை ஒருமுறைகூடப் பேர் சொல்லி அழைக்க வில்லை.
பம்பாய்க்கும் செல்வதற் கான ஏற்பாடும் செய்ய வில்லை.
தாத்தா செத்துப்போனா வருத்தமாதா இருக்கும். அதுக்காக ஒரு மாசமாவா அப்டியே இருப்பா?
இவர் தாத்தாக்கே இப்பிடி வருத்தம் கொண்டாடினா..
அப்பா அம்மா ரெண்டு பேரையும் எழந்துட்டு நிக்கற நா எப்பிடி இருக்கணும்?
ஒரு வேள தாத்தாவோட வற்புறுத்தலால எனக்குத் தாலிகட்டினாரோ?
இப்ப ஏண்டா கட்டினோம்னு ஃபீல் பண்றாரோ?
முரளியைப்பற்றி..தனக்குத் தாலி கட்டியவனைப்பற்றிப் புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தாள் ரேவதி.
அத்தியாயம் – 26
கிச்சனில் அடுப்பு மேடை யைத் துடைத்துக் கொண்டிருந்த ரேவதி.. பின்புறத்திலிருந்து நாம ரெண்டுநாள்ள மெட்ராஸோட போறோம்.
அங்கதா நா கிளினிக் ஆரம்பிக்கப்போறேன் என்று வந்த முரளியின் குரல் திடுக்கிட வைத்தது.
தாத்தா இல்லாத இந்த வீடும் புடிக்கில..பாக்கறவால்லாம் என்னப்பாத்ததுமே..தோ போரானே அந்தப்பைய..அவ அப்பந்தா குடிச்சிப்பிட்டுக் கார தாறுமாறா ஓட்டி புருஷ பொண்டாட்டிய கொன்னுட்டான்னு சொல்லும் போதெல்லாம் நாக்க புடுங்கிண்டு சாகலாம் போலருக்கு..அதால இந்த ஊர்ல இருக்கவும் புடிக்கல..
சடக்கெனப்பின்னால் திரும்பி..கிச்சன் வாசப்படியருகே நிற்கும் முரளியைப்பார்த்தாள் ரேவதி.
அவன் தன் கழுத்தில் தாலி கட்டிய போதுகூட அவனை நன்றாகப் பார்க்கவில்லை.
தாத்தாவின் காரியச்சடங்கு களின் போது அவ்வப்போது சாஸ்த்திரிகள் அழைக்கும் போதுமட்டும் முரளியின் பக்கத்தில் வந்து நின்று விட்டுப்போனதுண்டு.
அதெல்லாம் முடிந்தபிறகு முரளியை அதிகம் பார்க்கவே இல்லை.
ஒன்று அறையிலேயே அடைந்து கிடப்பான். இல்லாவிட்டால் வெளியில் சென்று விடுவான்.
முதல்முதலாய் இப்போது தான் அவனை கிட்டத்தில் பார்க்கிறாள்.
கடவுளே..இவருக்கு நிச்சயமா நா போருத்தமே இல்ல..
இவர் எப்பிடி இருக்காரர் பாக்க?ஆனா நா.. எந்தவிதத்துலயும்னா இவருக்குப் பொருத்த மில்லாதவளா தோண்றது.
அழகு படிப்பு அந்தஸ்து எதுலயும் இவருக்கு நா பொருத்தமில்லாத போது இவரோட தாத்தா இவர கம்ப்பல் பண்ணி எங்கழுத் துல தாலி கட்டவெச்சது தப்பு.
மகா தப்பு.
தாத்தாதா அப்பிடி சொன்னார்னா எனக்கெங்க புத்திபோச்சு?..இவர் இந்த திருமணத்துல ஒங்குளுக்கு சம்மதமான்னு கேட்டப்ப இல்லனு சொல்லாம ஏ தலையாட்டினோம்?
இவராவது தாத்தாட்ட தாலிகட்டமாட்டேன்னு மறுத்துருக்கலாம்.
கடசீ ஆச கடசீ ஆசன்னு சொல்லி..அந்தத்தாத்தா என்ன இவர் தலேல கட்டிட்டு கண்ணமூடிட்டாரே?
இவர் அப்பா செஞ்ச பாவத்துக்கு இவுருக்கு தண்டனையா?
மலைக்கும் மடுவுக்கும் இருக்குற வித்யாசமான்னா தெரியறுது இவருக்கும் எனக்கும் தெரியிற பொருத்தம்.
நொடிநேரத்திற்குள் நினைத்து முடித்த ரேவதி..
அப்ப பம்பாய்?.. பம்பாய்லதானே டாக்டரா இருக்கறதா சொன்னார் தாத்தா..அங்க போகல?மெட்ராஸ்ங்கிறார்?
அப்ப சாருவ பாக்க முடியாதா?
மெட்ராஸா?பம்பாய்யில்ல?..
பளிச்சென்று மனதிலிருப் பது கேள்வியாய் அவளை யறியாமல் வெளியில் வந்தது.
என்னயிது?இவரே மொதமொதலா நேரவந்து நின்னு பேசறார்..
நாம்போய் கேள்வில்லாம் கேக்கறேன்.
சரின்னு மட்டும் சொல்லாம மெட்ராஸா பம்பாய்யில்ல?னு கேக்குறோம்.
ஏ..பம்பாய் இல்லாட்டா மெட்ராஸ்னா வரமாட்டியானு கேட்டா?
சட்டென சற்று கலவரத்தோடு அவன் முகம் பார்த்தாள்.
முரளியின் முகத்தில் நொடி நேரம் வேதனை பரவி சட்டென இயல்புக்கு வந்ததாய்த்தோன்றியது ரேவதிக்கு.
பம்பாய் இவருக்குப் புடிக்கிலயோ..அதா மெட்ராஸ்ங்கிராறோ?
இவர் இஷ்ட்டபடர எடம்தான் நாம போகணும்..அதென்ன பம்பாய்யில்லனு கேக்குறோம்..தப்பில்ல..
சும்மாதா கேட்டேன்.மெட்ராஸ் போறமா சரி என்றாள் மெதுவான குரலில்.
பதிலேதும் சொல்லாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான் முரளி.
மெட்ராஸ் வந்தாயிற்று.
அவ்வளவாய் பரபரப்பில் லாத பகுதியில் அமைந்திருந்தது வீடு.
ஆனால் பரபரப்பான பகுதியில் தனது கிளினிக் கைத் திறந்திருந்தான் முரளி.
ரேவதியைப் பொருத்தவரை நிலைமையில் மாற்றம் எதையும் உணரவில்லை அவள்.எல்லா வசதியும் செய்து தந்திருந்தான் முரளி.
எத்தனை வசதிகள் இருந்தாலென்ன தாலிகட்டிய கணவனின் அன்பான அழைப்பு.. ஆசைப்பார்வை எதுவும் இல்லாதபோது வசதிகள் சந்தோஷம் தந்துவிடுமா என்ன?
இதுக்கு எங்கழுத்துல தாலிகட்டாமயே இருந்திருக்கலாம்.ரெண்டுபேரோட வாழ்க்கையும் வேஸ்ட் என்று தோன்றியது ரேவதிக்கு.
காலையில் தான் செய்து வைக்கும் டிபனைச் சாப்பிடுவதும்..காபி குடிப்பதும்.. கிளினிக்கிற்குக் கிளம்பிப் போவதும்..மதியம் இரண்டரை மணிக்கு வந்து மதியசாப்பாடு சாப்பிடுவ தும்..மீண்டும் கிளினிக் சென்றால் இரவு பத்தரை மணிக்குத் திரும்புவதுமாய்.. முரளி தினசரி ஷெட்யூலாய் வைத்துக்கொண்டபோது மௌனமாய் அழுவதைத் தவிற வேறெதும் செய்ய முடியவில்லை ரேவதியால்.
ரேவதிக்கு ஒரே ஒரு முன்னேற்றம் மட்டுமே தெரிந்தது கடந்த ஒரு வரமாய்.
ஞாயிற்றுக் கிழமை கிளினிக் கிடையாது. அன்றுமட்டும் வீட்டிலிருப் பான் முரளி.
தன் அறைக்குள் சென்று கதவை முழுவதுமாய்ச் சாத்திக்கொள்பவனின் அறைக்கதவு இப்போ தெல்லாம் ஞாயிற்றுக் கிழமை அவன் வீட்டிலிருக் கும்போது கொஞ்சமாய்த் திறந்தபடி இருக்கிறது.
அன்று ஞாயிற்றுக்கிழமை.
டிபன் சாப்பிட்டாயிற்று.
மதிய சாப்பாட்டுக்கான சமயலை மெதுவாய் சமைத்துக் கொள்ளலாம்.
கொஞ்சநேரம் வாசல் வராண்டாவில் போய்னா நிக்கலாமா?உள்ளயே இருக்கறது ரொம்ப போராருக்கு நினைத்தபடி வாசலை நோக்கி நடந்தவளின் பார்வை அவளையறியாமல் கொஞ்சம் கூடுதலாய்த் திறந்திருந்த முரளியின் அறைக்குள் சென்றது.
சேரில் அமர்ந்திருந்த முரளியின் முன்பிருந்த மேஜைமீது.. அது டைரி யாகத்தான் இருக்க வேண்டும்..பார்த்தால் டைரிபோல்தான் தோன்றியது ரேவதிக்கு.
டைரி இருந்தது.
முரளியின் இடது கையில் ஒரு போட்டோ..வலது கையில் பேனா இருப்பது தெரிந்தது.
முரளியின் உடல் குலுங்குவது தெரிந்தது. அவன் கண்களை மாற்றிமாற்றித் தன் தோளில் ஷர்ட்டின்மீது துடைத்துக் கொள்வதும் தெரிந்தது.
என்னது இவர் அழராறா என்ன? எடது கைல போட்டோ..வலது கைல பேனா..
எதுத்தாப்ல மேஜ மேல டைரி..ஒடம்பு அழறாப்ல குலுங்கறது..கண்ண சட்டேல தொடச்சிக்கறார்.
கடவுளே போட்டோல தாத்தாவோ?மாசம் மூணாகப்போறுது தாத்தா செத்துப்போய்..இன்னுமா வருத்தம் கொறையாம அப்டியே இருக்கும்?
தாத்தா செத்துப்போனதுல வருத்தமாதா இருக்கும்..
இல்லேங்கல..அதுக்குனு மூணுமாசமா வருத்தம் கொஞ்சமாக்கூட கொறையாதான்ன?
எண்பது வயசுக்கு மேல தானே தாத்தா செத்துப் போயிருக்கார்.
வயசான தாத்தா செத்துப்போனதுக்கு மூணுமாசமா துக்கம் கொண்டாடுராறே இவர்..
அப்ப அப்பா அம்மாவ எழந்துட்டு நிக்கற எனக்கு எவ்வளவு வருத்தமும் வேதனையுமிருக்கும்.
ஆறுதலா ஒருவார்த்த.. பாசமா ஒரு பார்வ.. ஒன்னுமில்லையே இவர்ட்டேந்து எனக்கு..
எதுக்கு தாலிகட்டினார்.
பொண்டாட்டியா இந்தப் பொண்ண ஏத்துக்குறேன்னு தானே?ஆனா பொண்டாட் டிங்கிற அந்தஸ்தக் குடுக்கலையே..
சாப்பாடும் துணிமணியும் சோப்பும் சீப்பும் ஒரு ஆம்படையான் காமிக்கிற அன்புக்கு ஈடாயிடுமா?
நா என்ன பொம்மையா? ஜடமா?
ஒரு ஆம்பள நெஜமான நல்லவன்னு எதவெச்சு சொல்றது?தாலிகட்டின பொண்டாட்டிய எதமா வெச்சுக்கருத வெச்சுதா.
ஊருக்கு நல்லவனா இருந்தா போதுமான்ன?
அதுக்காக இவர கெட்டவர்னு சொல்லவல்ல..ஆனா நாம தாலிகட்டின பொண்ண சந்தோஷமா வெச்சுக்க ணும்னு ஏ தோணலனுதா கேக்கறேன்.
வராண்டாவின் கிரில் கேட்டைப்பிடித்துக்கொண்டு நின்றிருந்த ரேவதியின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்ற..
ப்ச்..என்றாள் வேதனையுடன்.
தாத்தா..நல்லா கல்யாணம் பண்ணி வெச்சேள்.. சாகரத்துக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி.
என்னமோ ஒங்க புள்ள என்னப்பெத்தவாள காரமோதி சாகடிச்சதுக்கு..
ப்ராயசித்தம்பண்றதா நெனச்சேளோ என்னவோ?..
ஒங்க புள்ள பெத்த புள்ளைய.. ஒங்க பேரன..
அவர யோசிக்கவே விடாம..
இந்த பொண்ணு கழுத்துல தாலியகட்டு.. தாலிய கட்டு..
நா சாகறதுக்குள்ள தாலியகட்டுனு அவசரப் படுத்தி..வற்புறுத்தி தாலிகட்ட வெச்சேளே..ஒங்க பேரனோட விருப்பத்தப் பத்தி நெனச்சுப்பாத்தேளா?
ப்ராயச்சித்தம் பண்ணிட் டோம்ங்கிற நிம்மதியோட நீங்க போய்ச் சேந்துட்டேள்.
ஆனா ஒங்க பேரன் நிம்மதிய எழந்துட்டாப்லனா தோண்றது அவரப்பாத்தா..
ஏ..நா நிம்மதியா இருக்கேனா? நானும் நிம்மதியா இல்லியே..
எதுக்கு இந்த பொம்ம கல்யாணம்?
எ அப்பாவும் அம்மாவும் செத்துப்போன அன்னிக்கு நா மனசால செத்துப் போனே..இப்ப இவரோட பாராமுகத்தால தினந்தினம் செத்துப்போறே..
நீங்க எனக்கு வாழ்க்கையா அமச்சுக்குடுத்துட்டு செத்துப் போயிருக்கேள்?
தினம் தினம் நொந்துபோற நெலமய ஏற்படுத்திக் குடுத்துட்டுப் போயிருக்கேள்.
நீங்கபண்ணினது.. ஒங்க புள்ள எ பெத்தவாள சாகடிச்சதவிட கொடுமயான பாவச்செயல்.
கண்களில் அரும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் ரேவதி.மனம் துவண்டு போயிருந்தது.
தாத்தா..கத்திக்கொண்டே படுக்கையில் எழுந்து அமர்ந்து கொண்டான் முரளி.
உடம்பு நடுங்கியது. வியர்த்துப் போயிருந்தது.
வலதுகையின் தோளுக்கும் முழங்கைக்கும் இடையிலான பகுதியை இடது கையால் தொட்டுப் பார்த்துக்கொண்டான். மின்சாரம் பாய்ந்த பகுதிபோல் ஏதோ ஓர் உணவு அப்பகுதியில் உணர்ந்தான்.
தாத்தா..தாத்தா..என்னது கனவுல தாத்தா வந்து என்னென்னவோ கேள்வின்னா கேக்கறார்..
தாலிகட்டின பொண்டாட்டிக்கு மனைவிங்கிற அந்தஸ்த குடுத்தியாங்கிறார்.நீ அந்தப் பொண்ணுக்கு வாழ்க்க பிச்ச போடல..
அந்தப் பொண்ணும் வாழ்க்க குடுன்னு ஒன்னண்ட வந்து அழுது கெஞ்சல..
நாந்தா அந்தப் பொண்ணுக்கு ஒன்ன தாலிகட்டச்சொன்னே..மனைவிங்கிற அந்தஸ்த குடு.. நல்ல கணவனா நடந்துக் கோன்னு சொன்னே..
ஒனக்கு அதுல விருப்பமில்லாம இருந்திருந்தா நீ தாலிய எம்மூஞ்சிலயே விட்டெறிஞ்சிருக்கணும்.
முடியாது தாத்தான்னு சொல்லிருக்கணும்..
எ கடசி ஆசைய நெறை வேத்தி வெக்கிறாப்ல அந்த பொண்ணு கழுத்துல தாலிய கட்டின.
ஆனா அந்தப்பொண்ணுக்கு மனைவிங்கிற அந்தஸ்த்த குடுத்து வாழ வெச்சியா?
வெறும் சோறும் துணியும் ஒரு பொண்ணுக்கு சந்தோஷம் தரும் வாழ்க்கை யாயிடுமா?
நா என்னோட ஆன்மா சாந்தியடையாம அலையிறேன்.
அந்தப் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கைய அமச்சுத் தராம அந்தப் பொண்ணோட வாழ்க்கையக் கெடுத்துட் டேன்.
எ புள்ள..ஒ அப்ப.. அந்த பொண்ணுக்கு செஞ்ச பாவத்தவிட அந்தப் பொண்ணுக்கு நா செஞ்சதுதா மகா பாவச் செயல்..
தன் கனவில் வந்து தன் கையைப்பிடித்து இழுத்து தன்னை எழுப்பி தாத்தா சொன்னதுபோல் இருக்க..தாத்தா என்று கத்தியபடி எழுந்தான் முரளி.
மணிபார்த்தான்.விடிகாலை மணி மூன்றாகியிருந்தது.
படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தாள் ரேவதி.
ப்ச்..என்றாள்.மணி மூனாருது.புடிக்கல..வாழ்க்க புடிக்கல..கிட்டத்தட்ட மூணுமாசத்துக்குமேல ஆறுது இந்த ஊம வாழ்க்க வாழ ஆரம்பிச்சு..
அப்பா..அம்மா..ஏம்மா என்ன இப்பிடி என்ன அநாத யாக்கிட்டுப் போனேள்?
நா என்னம்மா பாவம் செஞ்சேன்?
கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்து கன்னங்களில் இறங்கி மடியில் வீழ்ந்தது.
அறைக்கதவு தட்டப்படும் சப்தம்.தொடர்ந்து..
ரேவதி..என்று அழைக்கும் முரளியின் குரல்..
முதன் முதலாய் தன்னை ரேவதி என்று அழைத்தபடி கதவைத்தட்டும் கணவன் முரளி.
அதிர்ந்துபோனாள் ரேவதி.
அத்தியாயம் – 27
சாரு..
ம்..
எதுவுமே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?
எதப்பத்தி?..
எதப்பத்தியா?லேசான கோவத்தோடு கேட்டார் லோச்சனி.
நேத்து நாலு டாக்டர் பையனுங்க போட்டோ குடுத்தேனே பாத்தியா?
நாலுபேருமே எம்.டி. பண்ற பசங்க..நல்ல குடும்பத்த சேந்தவங்க..
நீ பதில் சொன்னாத்தானே தேவல..
இப்டியே கம்முன்னே இருந்தா என்னன்னு நெனைக்கிறது?அப்பாக்கும் அறுவத தாண்டியாச்சு வயசு..
அடிக்கடி ஏதாவது ஒடம்பு சொல்றார்.
எம்பிபிஎஸ் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ்பண்ணின..
ஆப்றம் டிஜிஓ பண்ணனும்ன.. ரெண்டுவருஷமாச்சு அதையும் முடிச்சிட்ட..
டாக்டர் சுஜிதா..டாக்டர் தீபிகா ரெண்டுபேரும் நடத்துற மகப்பேறு மருத்துவ மனையில அவாள்ட்ட அசிஸ்டெண்டா சேந்து பிராக்டீஸ் பண்ற..
ரொம்ப கெட்டிக்காரினு அவாகிட்ட நல்லபேரும் வாங்கிட்ட..தனியாவே மருத்துவமனை தொறக்குற அளவு தெறமயிருக்கு ஒனக்கு..
இன்னும் என்ன. வேணும் இதுக்குமேல?வயசு இருவத்தேழு.இன்னும் கொழந்தல்ல நீ..
டாக்டரா இருந்தா அவா கல்யாணமே பண்ணிக்க மாட்டாளா?அவாளுக்கும் குடும்பம் கொழந்தன்னு..
அம்மா ப்ளீஸ்..இன்னிக்கு ஹாஸ்பிடல்ல ஒரு சிஸர் இருக்கு..நாதா பண்றே.. எம் பொறுப்புதா முழுசா..
வேறெதையும் திங் பண்ணமுடீல என்னால..நா கிளம்புறேன்.
கிளம்பிவிட்டாள் சாரு.
மழுப்பலாய் பதில் சொல்லி விட்டுக் கிளம்பிச் செல்லும் சாருவை வேதனையோடு பார்த்தார் லோச்சனி.
ரெண்டுவருஷத்துக்கு முன்னாடி இருந்த சாருவா தெரீல இப்ப இருக்குற சாருவப்பாத்தா..
மனசுல எதையோ மறச்சு வெச்சுண்டு வெளீல சொல்லாம தவிக்கிறாப்ல இருக்கு.
சொன்னாதானே தெரியும்?.
ஒருவேள லவ்வு கிவ்வுன்னு..
அதுல தப்பு ஒன்னுமில் லியே.. நானும் இவரும் காதலுக்கு ஒன்னும் எதிரி இல்ல..
ஒருவேள வேற மதமா இருந்து..வேத்துமதம்னா நம்ம அப்பா அம்மா ஒத்துக்காட்டனு பயந்து காதல மறைக்கிறாளோ?
இல்ல தன்னோட கால்ல
சின்ன கொறையிருக்குறத பெரிசா நெனச்சு பொண்ணுபாக்கவரவங்க நிராகரிச்சிட்டுப்போனா அது அவமானம்..அதுனால கல்யாண முயற்சீலயே எறங்க பயப்படராளோ?
பலவாறு சிந்தித்துத் தவித்தது லோச்சனியின் உள்ளம்.
பாவம் அவருக்கென்ன தெரியும்?
சாரு.. முரளியின் துரோகம் நினைத்து மருகுவதும்..
காதல் தோல்வியால் ஏற்பட்ட வலியும் வேதனையும் அவளைத் திருமணம் என்ற சொல்லையே வெறுக்க வைத்திருக்கிறதென்றும்.
காரில் ஏறி அமர்ந்து கொண்டவளின் கண்களில் இதோ நான் வந்து குளம் கட்டப்போகிறேன் என்றது கண்ணீர்.
கண்களுக்குள் ஊறிய கண்ணீரை வெகு பிரயத்தனப்பட்டு உள்ளே இழுத்துக் கொண்டாள் சாரு.
எங்கே கண்களிலிருந்து வழியும் கண்ணீரை கர்ச்சீப்பால் துடைக்கப்போய் அதைக் காரினுள்ளிருக்கும் சின்னக்கண்ணாடியில் டிரைவர் பார்த்துவிட்டு என்ன டாக்டர்பொண்ணு அழறாங்கனு நெனச்சுட்டா?..
கண்ணீர் வழிஞ்சு கன்னத்த நனைக்குதுன்னு நெனச்சா?
எப்படியும் நிமிடுதெறிக்கும் இந்த டிராபிக்கில் ஹாஸ்பிடல் போய்ச்சேர அரைமணிநேரமாகும்.அரைமணியில் போய்ச் சேர்ந்தாலே அது அதிசயம் என்று நினைத்தவளாய்..
ஜன்னல் வழியாக வெளியே பார்வையைச்செலுத்தினாள்.
நிறைய ஹிந்திப்பட போஸ்டர்கள்..பழயபடங்க ளும்..புதுப்படங்களுமாய்.
கார் முன்னேற முன்னேற அவை பின்னோக்கிச் சென்றன.
சிலபடங்களின் போஸ்டர்கள் கண்ணில்பட்டபோது நெஞ்சுவலித்தது சாருவுக்கு. அடிவயிறு எம்பி கேவலை உருவாக்க முயன்றது.
வெகு கஷ்ட்டப்பட்டுக் கேவலை அடக்கிக் கொண்டாள்.
பார்க்கில் அமர்ந்திரும் வேளையில் ..
சாரு..இந்த படத்துல வரும்ல இந்தப்பாட்டு..அத நா பாடவா?
பாத்தே..இன்னிக்குக் காலேல காலேஜ் கெ ளம்பி வரும்போது காலண்டர்ல பாத்தே..
இந்த ராசிக்காராளுக்கு இன்று இரவுக்குள் காதுவலி ஏற்பட வாய்ப்புண்டுனு போட்ருந்தது.நா அப்ப நம்பல..ஆனா இப்ப அது நெஜாமாகுமோன்னு தோண்றது..முரளியைக் கிண்டலடித்துச் சிரித்தாள்.
கிண்டல்?பாடரத கேட்டுட்டு சொல்லணும் காது வலிக்குதா இல்லை யான்னு..வலிச்சா நா இயர்ட்ராப்ஸ் வாங்கித்தரே..
சிரித்தான் முரளி.
அவன் பாடும்போது அச்சு அசலாய் முகமது ரஃபி பாடுவது போல் குரல் அப்படியே இருந்தது.
அடுத்தபாடலை கிஷோர்குமார்போல் குரல்மாற்றிப்பாடியபோது அசந்தே போனாள் சாரு.
முரளி..நீங்க இப்பிடிலா பாடுவேளா?அசத்திட்டேள் முரளி..நா கூட காதுவலி அது இதுனு சொல்லி ஒங்கள கிண்டல் பண்ணிட்டே..ஸாரி..
என்றாள் சாரு நிஜமான வருத்தத்தோடு.
இட்ஸ் ஓகே..விடுங்க சாரு..
அன்பாய் கனிவாய் சொன்ன முரளியின் குரல் இப்போதும் காதில் ஒலித்தது சாருவுக்கு.
கண்ணீரைக்கட்டுப்படுத்த முடியாமல் தோற்றுப் போனாள் சாரு.
பாவி பாவி காதலிக்கறாமாரி நடிச்சு ஏமாத்திட்டயே..
எப்டீல்லாம் நல்லவம்மாரி நடிச்ச?என்னவெல்லாம் பேசின..எப்டீல்லாம் சத்தியம் செஞ்ச?..என்னவெல்லாம் சொல்லி நம்ப வெச்ச?
ஏ..என்னவிட அழகான படிச்ச பணக்கார பொண்ணு கெடச்சாளா?
அதா குடுத்த சத்தியம்.. நம்பிக்க எல்லாத்தியும் காத்துல பறக்கவிட்டுட்டுப் போய்ட்டியா?
பாவி..பாவி..நீ நல்லாவே இருக்கமாட்ட..
பாவி நீ லெட்டர் போடறதா சொல்லிட்டுப் போனத நம்பி நா தினம்தினம் காத்துண்ருந்து ஏமாந்தத சொல்றதா?
எம்பிபிஎஸ் ரிசல்ட் வந்தப்ப நீயும் என்னோட காலேஜ் வருவேன்னு சொன்னத நெனச்சு நீ வல்லயேன்னு அழுததா சொல்றதா?
எம்பிபிஎஸ்ல முதல்வகுப்புல பாஸ்பண்ணியும் அத சந்தோஷமா கொண்டாட முடியாம நா தவிச்சத சொல்றதா?..
ஒருமாசமாகியும் ஒன்டேந்து எந்த தகவலும் வராததால நீ தங்கியிருந்த ஹாஸ்டல்ல போய் விஜாரித்தப்ப..நீ ஒருமாசமாகியும் வரவேல் லனு ஹாஸ்டல் செக்யூரிட்டி சொன்னப்ப நா அழுதத சொல்றதா?
நீ சம்பளமே வாங்காத ஃப்ரீ சர்வீஸ் பண்ணின ஹாஸ்பிடல்ல போய் விஜாரிச்சாப்ப நீ வரதேல்லனு சொன்னதக் கேட்டு ஷாக்கானத சொல்லவா?
ஒனக்கு எதானும் ஆகியிருக்குமோங்கிற பயத்துல..மெட்ராஸ்ல ஒரு டாக்டர்ஸ் மீட்..ஒரு சிம்போஸியம் நடக்கறதாவும் அதுல கலந்துக்கப் போறதாவும் ஆத்துல பொய்ய சொல்லிட்டு..
ஃப்ளைட் ஏறி மெட்ராஸ் வந்து.. அங்கேந்து வாடக கார்ல மாயவரம் வந்து நீ குடுத்த ஒங்காத்து ஆட்ரஸுக்கு..
வீட்டுவாசலுக்கு வந்து.. எறங்கினப்ப..
கண்கள் கட்டுப்பாட்டைமீறி கண்ணீரை கன்னத்தில் இறக்கின.
மனதுக்குள் அன்று நடந்த சம்பவம் ஆக்ஷன் ரீப்ளே ஆனது..
கார் அந்த முகவரிக்கான வீட்டில் வந்து நின்றபோது காருக்குள்ளிருந்தே வீட்டைப்பார்த்தாள் சாரு.
வீட்டின் கதவில் பூட்டு தொங்குவது தெரிந்தது.
என்னது வீடு பூட்டிருக்கு.
சரியான அட்ரஸ்தானே இது.
கையிலிருந்த துண்டுச் சீட்டிலிருக்கும் முகவரியைப் படித்துவிட்டு மீண்டும் வீட்டைப் பார்த்தாள்.
ஆர்.கிருஷ்ணமூர்த்தி..
எக்ஸ்.சர்வீஸ் மேன்..
டோர் நம்பர்.. தெருவின் பெயர் எல்லாமே சரியாக இருந்தது.
இதுதா முரளியோட தாத்தா இருக்கற வீடு.முரளியாம்.
ஆனா பூட்டிக் கெடக்கு?
ஒருவேள முரளியோட தாத்தாக்கு ஒடம்பு முடியலயோ?ஹாஸ்பிடல்ல சேத்ருப்பாளோ?
அதா வீடு பூட்டிருக்கோ?அதுனாலதா முரளி பம்பாய்க்கு வரலியோ?
பலவாறு யோஜனை எழ காரைவிட்டு கீழே இறங்கி னாள் சாரு.
சுற்றும்முற்றும் பார்த்தாள்.
விசுநாதா இருடா.. கிஷ்ணமூர்த்தியாத்து வாசல்ல கார்வந்து நிக்கறது பாரு..
யாரோ வந்ருக்கா.. யாரு?..யாரப்பாக்கணும்?னு கேட்டுட்டு வரே..செத்த பொறு..வந்து சொல்றே..
ஒடம்பே முடீல..ஒருமாசம் படுக்கேல கெடந்தாலும் கெடந்தே..சரியா கண்ணும் தெரியல..காதும் கேக்கல..
ஒடம்பே தள்ளல..வயசு கொஞ்சமாவா ஆச்சு..
சொல்லிக்கொண்டே சாருவின் அருகில் வந்தார் காமாக்ஷிப்பாட்டி.
யாரு?யார் வேணும்?
மிஸ்டர்.கிருஷ்ணமூர்த்தி..
ராணுவத்துல இருந்தாரே அவராம்தானே இது?
யாரு?கிஷ்ணமூர்த்தி மாமாவ பாக்கவந்தேளா?
அவர்போய்ச்சேந்து மூணுமாசமாச்சு..
என்னது அவர் காலமாயிட்டாரா..கடவுளே என்றாள் சாரு..
பாட்டீ காமுபாட்டீ..
விசுநாதா ஏண்டா கத்தற?..
இவா கிஷ்ணமூர்த்தி மாமாவ தேடிண்டு வந்ருக்கா வெவரம் சொல்லீட்டு வரே..கத்தாத..வரமாட்டேனா..
பாட்டி..மாமி..
பாட்டீன்னே கூப்புடு..சின்னப் பொண்ணாதானே இருக்க..
அந்தமாமாவோட பேரன்..
ஆமா பேரன் ..யாரு முரளிகிருஷ்ணாவ கேக்கறேளா?
ஆமா பாட்டி..
முரளிகிஷ்ணா..கிஷ்ணமூர்த்தியோட ஒரே பேரன். பம்பாய்ல டாக்டரா இருந்தான்.
பம்பாய்லேந்து தாத்தாவப் பாக்கவந்தா..
பாக்கவந்ததும் நல்லதா போச்சு. பேரன் இங்க இருக்கும்போதே கெழவர் செத்துப் பேட்டார்.
தாத்தா காரியத்த நன்னா ஸ்ரத்தையா செஞ்சான்.
ஆம்படையா பக்கத்துல நிக்க
ரொம்ப ஸ்ரத்தையா தாத்தாக்கு பன்னெண்டுநாள் காரியத்த செஞ்சான்.
கொழாந்தேள் நன்னா இருக்கணும் தாத்தா ஆசிர்வாதத்தோட..
என்ன தாத்தாவோட காரியத்த முரளி ஆம்படையா பக்கத்துல நிக்க.. ஸ்ரத்தயா செஞ்ஜாரா?பகீரென்றது சாருவுக்கு.அதிர்ந்து போனாள் சாரு.
பாட்டீ..என்னது முரளிகிருஷ்ணாவுக்கு கல்யாணமாயிடுத்தா?
காமு பாட்டீ..சீக்கிரம் வரேளா இல்லையா?கத்தினான் விசுநாதன்..
இவன் ஒத்த..பேச விடாம..கிளம்பினாள் பாட்டி.
பாட்டி பாட்டி இதமட்டும் சொல்லிட்டுப்போங்கோ..
முரளிகிஷ்ணாக்கு கல்யாணாமாயிடுத்ததா?
பின்ன பொய்யா சொல்றே?..
அவன் அந்த பொண்ணு கழுத்துல தாலிகட்டினத இந்த ரெண்டு கண்ணாலயும் பாத்தே..
இப்பதா ஜொரம் வந்தப்பறம் கண்ண மறைக்கிறது..அப்ப நன்னாதா கண்ணு தெரிஞ்சுது.
அந்த பொண்ணுபேருகூட..
ப்ச்..மறந்து தொலஞ்சுடுத்து.. வயசாயிடுத்தோனோ?
முரளிகிஷ்ணா பொண்டாட்டிய அழச்சுண்டு இந்த ஊரவிட்டுப்போயி மூணுமாசமிருக்கும்.அது லேந்து வீடு பூட்டித்தா கெடக்கு.பம்பாய்க்குப் போனானோ..வேற எங்கயாவது போனானோ தெரியல..
சொல்லிக்கொண்டே போய்விட்டாள் காமாக்ஷி பாட்டி.
நிலைகுலைந்துபோனாள் சாரு.விழாமலிருக்க காரின் கதவைப் பிடித்துக் கொண்டாள்.
பாவி..பாவி..இப்பிடியா துரோகம் பண்ணுவ?.. காதலிக்கறாமாரி நடிச்சு..
பழகி..துரோகி.. துரோகீ..
கத்தவேண்டும்போல் இருந்தது சாருவுக்கு.
எப்படி காரில் மெட்ராஸ் வந்து..எப்படி ஃப்ளைட்டில் பம்பாய் வந்து.. வீடுவந்து சேர்ந்தாளோ?கடவுளுக்கே வெளிச்சம்.
முடிந்தது..எல்லாம் முடிந்தது..மாறிப்போனாள் சாரு..வேடிக்கை.. விளையாட்டுப்பேச்சு எல்லாம் போயிற்று.
முரளியின் துரோகத்தை நினைத்து நினைத்து நெஞ்சம் தவித்தது.
பகலில் மருத்தமனையில் தன்னைமறந்து பணியில் ஈடுபட்டாள்.
லோச்சனியோடும்.. தியாகுவோடும் இருக்கும் நேரங்களில் சாதாரணமாக இருப்பது போல் கஷ்டப்பட்டு நடித்தாள்.இரவில் தனியாய் இருக்கும்போது அழுதாள்.
ரேவி ..ரேவியென்று தோழியை மனதுக்குள் அழைத்து முரளிகிருஷ்ணா தனக்கு துரோகம் செய்து விட்டதாய்ச் சொல்லிச் சொல்லி அழுதாள்.
ரேவி அந்தப்பாவி என்ன காதலிக்கறாதா நடிச்சி ஏமாத்திட்டாண்டி ரேவீ..
எவளயோ கால்யாணம் பண்ணிண்டுட்டாண்டி ரேவீ அந்தப்பாவி..தோழியிடம் நெஞ்சு வெடிக்குமளவு சொல்லி அழுதாள்.
பாவம்தான் சாரு.. முரளிகிருஷ்ணா சூழ்நிலைக்கைதியாகி..
தன் அன்புத்தோழி ரேவதியைத்தான் மணந்திருக்கிறானென்று எப்படி அறிவாள்?
விதிசெய்யும் மோடி வித்தையை(மாயாஜால வித்தை)யார்தான் அறிவார்?
– தொடரும்…
November 20, 2026