இளவரசி தேவயானி




(2025ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தேவயானி இளவரசி தான். ஆனால் அரச குலத்தி பிறந்தவள் கிடையாது. மரகத நாட்டு இளவரசர் தேவகுமாரனைத் திருமணம் செய்து கொண்டதால் இளவரசியானவள். அவள் ஒரு உபாத்தியாயரின் மகள். கலா சாலை ஒன்றில் கற்கச் சென்ற இடத்தில்தான் தேவகுமாரன் அவளைச் சந்தித்தான். கண்டவுடன் அவள் மீது மையல் கொண்டான்.
தேவகுமாரன் மன்னரிடம் தனது விருப்பத்தைச் சொன்னபோது அவர் மனம் அதிர்ந்து போனார். எத்தனையோ தேசங்களின் அரசர்கள் தங்களது புத்ரியை அவருக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது. தேவகுமாரனுக்கு மணம் செய்விக்கத் தயாராய் இருந்தனர்.
ஆனால் அவனோ ஒரு ஏழை உபாத்தியாயரின் மகளை மணக்க விரும்புகிறானே ?
மன்னர் மனம் வெதும்பினார். இருந்தாலும் அவர் தேவகுமாரனின் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்கவில்லை. அவளையே அவனுக்கு மணம் செய்வித்தார்.
மணம் செய்வித்து விட்டாரே ஒழிய அரச குலத்தில் பிறவாதவள் என்பதால் அவரால் தேவயானியை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இன்முகம் காட்டாமல் அவளைப் புறக்கணித்தே வந்தார்.
மன்னருக்கு இரண்டு புதல்வர்கள். மூத்தவன்தான் தேவகுமாரன். தவயானியின் கரம் பற்றியவன். மன்னர் இளையவன் ராஜகுமாரன். அவருடைய காலத்திற்குப் பின்னல் மூத்தவன் எனற முறையில் தேவகுமாரனுக்குத்தான் முடி சூட்ட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய அவர் விரும்பவில்லை. அவன்தான் அரச குலத்தில் பிறவாத பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டானே? அவர் இளையவனுக்கே முடிசூட்ட விரும்பினார்.
மேலும் இளையவன் தனது சகோதரன் போன்று கிடையாது. அரச குலத்திற்கே உரித்தான செருக்கும் தறுக்கும் நிறையப் பெற்றவன். ராஜ்யத்தின் எல்லைகளை விரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆவல் கொண்டவன்.
ஒருவேளை அவனுக்கு முடி சூட்டினால் மூததவன் இருக்க இளையவனுக்கு முடி சூட்டுவதா என்ற குடி மக்களின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருக்குமே ? மன்னர் யோசித்தார். அவருக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது.
பக்கத்து நாட்டு அரசனோடு மன்னருக்கு ஒரு பிணக்கு இருந்தது. அவன் அவர்கள் நாட்டின் கனிமவளம் நிறைந்த ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற மறுத்தான்.
அவனிடம் இழந்து நிலப்பரப்பை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு அவன் மீது போர் தொடுக்க வேண்டும். அந்தப் போர் இளையவன் தலைமையில் நடைபெற வேண்டும். கண்டிப்பாக அவன் வெற்றி பெறுவான்.
இதனால் அவன் கீர்த்தி (புகழ்) பல மடங்கு பெருகும். அந்த வெற்றியை முன் வைத்தே அவனுக்கு மகுடம் சூட்டி விடலாம். மூத்தவன் இருக்க இளையவனுக்கு முடி சூட்டுவதா என்ற அதிருப்தியும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் எழாது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதாகக் கணக்குப் போட்டார் மன்னர்.
போர் பிரகடனம் செய்வதற்கு முன்னால் போர் யுக்திகள் குறித்து விவாதிப்பதற்காக இரகசியக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார் மன்னர். உயர்மட்ட அமைச்சர்கள், ஆலோசகர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் திடீரென்று எங்கிருந்தோ பிரசன்னமானாள் தேவயானி.
தேவயானியைக் கண்டதும் மன்னர் எரிச்சலுற்றார். அவளை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி மெய்க்காப்பாளருக்கு உத்தரவிட்டார்.
இளவரசியை எப்படி வெளியேற்றுவது என்று அவர்கள் தயங்கி நின்றனர். குமரகுருபரர் மன்னரின் அவையில் கொலு வீற்றிருக்கும் மூத்த அறிஞர். மருத்துவம் வானவியல் என்று பல்வேறு துறைகளில் பாண்டியத்துவம் பெற்றவர். மன்னரின் ஆலோசகரும் கூட. அவரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். மன்னர் யாரையும் கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவை அவர் விரும்பவில்லை. அவர் மன்னரிடம் இடித்துரைத்தார். மன்னர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் இப்போது பேசினார்.
“மன்னா, தேவயானி ஏதோ சொல்ல விரும்புகிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தான் கேட்போமே?” என்றவர் அவளைப் பார்த்து கண் குறிப்பு காட்டினார்.
தேவயானி பேச ஆரம்பித்தாள்.
“மன்னா, எதிரி நாட்டு அரசன் சிற்றரசன்தான். தாங்கள் அவனைக் கண்டிப்பாக போரில் வென்று விடுவீர்கள். ஆனால் அவன் தைரியம் மிக்கவன். தங்களை எதிர்த்துத் தீரமுடன் போரிடுவான். இதனால் இரு தரப்பிற்கும் பலத்த உயிர் சேதமும் பொருட்சேதம் உண்டாகும். இதனால் உண்டாகும் பெரும் துயரமும், நிதிச் வந்து சேரும். ஏற்கனவே கடந்த சுமையும் கடைசியில் குடி மக்களைத் தான் மூன்றாண்டுகளாக வறட்சியின் காரணமாக குடிமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசுக்குச் செலுத்த வேண்டிய அடிப்படை வரிகளைக் கூட செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இதில் போரினால் உண்டாகும் கூடுதல் சுமை அவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டு செய்யும். மன்னா… யுத்தம் என்பது அகராதியில் இடம் பெறக் கூடாத கொடிய யுத்தத்தில் வென்றவர்கள் வார்த்தை. யாருமிலர். அதில் ஈடுபட்ட அனைவருக்கும் அது தோல்வியையேப் பரிசாகத் தந்திருக்கிறது. இது தாங்கள் அறியாதததல்ல. நம் நாட்டில் கற்றறிந்த அறிஞர் பெருமக்களுக்கா பஞ்சம் ? அவர்களைத் தூது அனுப்புங்கள். அவர்கள் சென்று பேசி வரட்டும். யுத்தம் வேண்டாம். புறாக்கள் பறக்கட்டும். இதுவே எனது வேண்டுகோள்” என்ற தேவயானி மன்னரின் பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து விடுவிடுவென்று வெளியேறிச் சென்று விட்டாள்.
மன்னர் யோசித்தார். அவையில் ஒரு கனத்த அமைதி நிலவியது. அனைவரும் ஒருவித எதிர்ப்பார்ப்புடன் மன்னரின் முகத்தைப் பார்த்தபடி இருந்தார்கள். அவர்களின் கண்களில் சற்றுமுன் தெரிந்த யுத்த வெறி இப்போது இல்லை. தான் ஒருதலைப்பட்சமாக எடுத்த முடிவிற்கு வேறு வழியின்றி அவர்கள் உடன்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டார்.
குமரகுருபரர் தலைமையில் ஒரு அறிஞர் குழுவைத் தூது செல்லப் பணித்தார். அவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் எதிரி நாட்டு மன்னன் தான் ஆக்கிரமித்த நிலப்பகுதி களிலிருந்து வெளியேற ஒப்புக் கொண்டான்.
வெற்றி! இது மன்னர் பெற்ற வெற்றி அல்ல. தேவயானி தந்த வெற்றி. தனது திறமையான சொல்லாடலால் மன்னரின் மனத்தை மாற்றிய வெற்றி.
தேவயானியால் ஒரு யுத்தத்தையே தடுத்து நிறுத்த முடியும் என்றால் அவளால் அளப்பறிய நற்செயல்களையும் திறம்பட செய்ய இயலுமே? தேவகுமாரனுக்கு ஒரு மதியூகம் மிக்க மந்திரியாய் செயல்பட முடியுமே?
அப்படிப்பட்ட பெண்ணை அரச குலத்தில் பிறவாதவள் என்ற ஒரே காரணத்திற்காக நான் ஒதுக்கி வந்தேனே? சுடு சொற்கள் கூறி அவமதித்தேனே?
மன்னர் தனது செயல்களை எண்ணி வருந்தினார். அவர் மனம் மாறினார். தேவகுமாரனுக்கே முடி சூட்டினார்.
தேவகுமாரன் – தேவயானி தம்பதியர் நீண்ட நெடுங்காலம் மரகத நாட்டை சீரும் சிறப்புடன் ஆட்சி செய்தார்கள்.
– மானுடம்’ சிற்றிதழில் வெளிவந்த கதையாகும்.
![]() |
எனது பெயர் மா.பிரபாகரன். மதுரையில் வசித்து வருகிறேன் சித்த மருத்துவத்தில் பி.எஸ்.எம்.எஸ் இளங்கலைப் பட்டம் பெற்றவன்@ அரசு மருத்துவர். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஜீலை - 2024 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். பெரியவர்களுக்கான எனது படைப்புகள் தினமணிகதிரில் பல வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான எனது முதல் படைப்பு சிறுவர்மணியில் 2006 ஆம் ஆண்டு வெளியானது. எனது சிறுவர் சிறுகதைகள் குழந்தை…மேலும் படிக்க... |