இடையன் கண்ட கனவு




(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முன் ஒருகாலத்தில் ஆடு மேய்க்கும் பையன் ஒருவன் இருந்தான். அவன் எப்பொழுதும் களிப்புடன் இருப்பான். ஆடு மேய்ககும்போது பாட்டுப் பாடிக் கொண்டே இருப்பான்.
ஒருநாள் வெயில் நேரத்தில் மரத் தடியில் படுத்து உறங்கினான். அப்பொழுது ஒரு கனவு வந்தது. ஒரு மலைமேல் ஏறுவது போலவும் மலை உச்சியில் அரி ஆசனத்தில் தான் அமர்ந்திருப் பது போலவும் தெரிந்தது. அவன் அருகில் ஓர் அழகய பெண் வீற்றிருப் பது போலவும் தன்னுடைய தலையில் பொன்னாலாகிய மகுடம் அணிந்திருப் பது போலவும் தோன்றியது, ‘நான் அரசனாகி விட்டேன்’ என்று கத்தினான். உறக்கம் கலைந்தது.
மறுநாளும் மாடு மேய்த்துவிட்டு மரத்தடியில் படுத்து உறங்கினான். அதே கனவு மறுபடியும் வந்தது. ‘இன்னொரு முறை இந்தக் கனவு வந்தால் நான் கட் டாயம் அரசன் ஆவேன்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
மூன்றாவது நாள் அதே மரத்தடியில் படுத்து உறங்கினான். பழைய கனவு மீண்டும் வந்தது. ஆடுகள் ஒட்டிக் கொண்டு போய்ச் சொந்தக்காரரிடம் ஒப்புவித்தான். மாடு மேய்க்கும் கோலை எடுத்துக்கொண்டு வெளியில் புறப்பட்டான. நாள் முழுவதும் நடந்து மாலை நேரததில் ஒரு காட்டிற்கு வந்து சேர்ந்தான். மனிதர்கள் நடமாட்டமே இல்லை. ஒரு குடிசை வீடுகூடக் கண்ணுக்கு தெரியவில்லை.
புதர்களின் நடுவில் படுத்து உறங்கினான். சில மனிதர்கள் உரக்கப் பேசும் குரல் கேட்டு விழித்துப் பார்த்தான். அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் பின்னால் சென்றான். ஒரு. வைக்கோல் போர் தெரிந்தது. அதன், பின்னால் ஒளிந்துகொண்டான்.
அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து அது ஒரு கள்வர் கூட்டம் என்று தெரிந்தது, கள்வர் தலைவன் மற்றவர்கள் செய்த வேலைகளைப் பற்றிக் கேட்டான். ‘எனக்கு ஒரு மாயச் சட்டை கிடைத்திருக்கிறது. சட்டைப் பையில் இருக்கும் பணத்தை எடுத்தால் மறுபடியும் சட்டைப் பை நிறைந்து விடுகின்றது’ என்று ஒருவன் கூறினான்.
‘அருமையான பொருள்தான்’ என்று தலைவன் மெச்சிக்கொண்டான்.
‘எனக்கு ஒரு தொப்பி கிடைத்தது; அதை வைத்துக்கொண்டு வெடிகுண்டுகள் வீசலாம். எடுக்க எடுக்கக் குண்டுகள் வந்து நிறைகின்றன’ என்று இரண்டாவது ஆள் சொன்னான்.
‘அற்புகமான் வேலைதான்!’ என்று. தலைவன் தட்டிக்கொடுத்தான். மூன்றாவது மனிதனிடம் ‘நீ என்ன கொண்டு வந்தாய்?’ என்று கேட்டான்.
‘எனக்கு ஒரு பட்டாக்கத்தி கிடைத்தது. கத்தியின் முனை தரையில் பட்டால் அந்த இடத்தில் பல வீரர்கள் தோன்றுவார்கள்’ என்றான்.
‘நல்ல வேலை செய்தாய்’ என்று தலைவன் தலையை அசைத்தான். நான்காவது ஆள் அவன் எதிரில் வந்து நின்றான்.
‘இந்தச் செருப்புகளை அணிந்து கொண்டு ஓர் அடி எட்டி வைத்தால் ஏழு மைல்களுக்கு அப்பால் செல்லலாம்’ என்றான்.
‘இதுவும் ஓர் அற்புதம். நீங்கள் எல்லோரும் இன்று நல்ல வேலை செய்திருக்கிறீர்கள். கிடைத்த பொருள்களை எல்லாம் பத்திரமாக எடுத்து வையுங்கள். சற்றுநேரம் படுத்து உறங்கலாம். காலையில் நிறைய வேலை இருக்கிறது’ என்று தலைவன் கட்டளை இட்டான்.
எல்லோரும் நன்றாய் உறங்கிய பிறகு இடைப் பையன் மெதுவாக வெளியில் வந்தான். மந்திரச் சட்டையை எடுத்து அணிந்து கொண்டான். தொப்பியை எடுத்துக் தலையில் போட்டுக் கொண்டான். பட்டாக்கத்தியை இடையில் செருகிக்கொண்டு, புதிய செருப்புகளைக் காலில் அணிந்து கொண்டான்.
மாயச் செருப்புகளின் உதவியால் அடிக்கு ஏழு மைல்கள் பாய்நது சென்றான். அந்த காட்டின் தலைநகருக்கு வந்து சேர்ந்தான். ஒரு சத்திரத்தில் போய்த் தங்கினான். சட்டைப் பையைத் திருப்பினான். பொற்காசுகள் கீழே விழுந்து குவிந்தன. விலை உயாந்த ஆடைகளை வாங்கினான். அவைகளை அணிந்து கொண்டு அரண்மனைக்குச் சென்றான். ‘அரசனை நேரில் காண வேண்டும்’, என்றான்.
அரசனுடைய அருமை மகள் இடைப்பையன் இருக்கும். இடத்திற்கு வந்தாள். அரசனும் அவனிடம் வந்தான்.
‘நான் ஒரு பெரிய வீரன். என்னிடம் ஏராளமான சேனைகள் .இருக்கின்றன. நான். உங்களுக்கு உதவியாக இருப்பேன்’, என்றான்.
‘எனக்கும் ஒரு பெரிய சேனை வேண்டும். பகைவர்கள் சூழ்ந்துகொண்டு தொல்லை கொடுக்கிறார்கள்’, என்று அரசன் சொன்னான்.
‘நான் பகைவர்களை எல்லாம் வென்றுவிடுகிறேன். நான் வெற்றியுடன். திரும்பினால் இளவரசியை எனக்கு மணம் செய்து கொடுக்கிறீரா?’ என்று கேட்டான்.
மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் எண்ணிப் பார்த்தான்.
‘நீ வெற்றியுடன் வந்தால் என் மகளைத் தருகிறேன்’ என்று அரசன் வாக்களித்தான்.
இடைப்பையன் ஊருக்கு வெளியில் சென்றான். பட்டாக்கத்தியை எடுத்து நிலத்தில் ஊன்றினான். ஏராளமான போரவீரார்கள் வந்து அணி வகுத்து நின்றனர். அவ்வளவு பெரிய சேனை எந்து நாட்டிலும் பார்க்க முடியாது. அந்தச் சேனையுடன் பகைவர்களை எதிர்த்தான். கடும்போர் நடந்தது. தொப்பியின் உதவியால் வெடிகுண்டு களை வீசினான். பட்டாக்கத்தியை நிலத்தில் குத்தினால் புதிய சேனைகள் தோன்றின. போர்வீரர்கள் மேலும் மேலும் வந்து சேர்ந்தனர்.
பகைவர்கள் எல்லாம் வீழ்ந்து மடிந்தனர். மீதி இருந்தவர்கள் புறமுதுகு காட்டி, ஓடிவிட்டனர். இடைப்பையன் வெற்றியுடன் வீடு திரும்பினான்.
‘உம்முடைய பகைவர்களின் சேனைகளைச் சின்னா பின்னம் ஆக்கி விட்டேன்’ என்று அரசனிடம் தெரிவித்தான்.
அரசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். இளவரசியை இடையனுக்கு மணம் செய்து கொடுத்தான். சில ஆண்டுகளுக்குப் பின், அரசன் காலம் ஆனான். இடையனுக்கு அரச பதவி கிடைத்தது. அவனுடைய கனவு பலித்துவிட்டது.
– அயல்நாட்டுக் கதைக்கொத்து (ஆறு புத்தகங்கள்), முதற் பதிப்பு: மார்ச் 1964, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை