அயலான் பெண்சாதியைத் தன் பெண்சாதி என்றது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2025
பார்வையிட்டோர்: 1,443 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருவன் தன் பெண்சாதியை அழைத்துக்கொண்டு ஊர்ப்பயணம் போகையில் வழியிலிருக்கிற ஆற்றிலே புருசன் முன்னும் பெண்சாதி பின்னுமாகப் போகிறபோது மற்றொருவன் இவர்கள் பின்னாலே இறங்கி வந்தான். 

இவன் வருகிறதை அவர்கள் பாராமல் போகும்போது தண்ணீர் ஆழமாக இருக்கிற இடத்திலே அந்த ஸ்திரீ யானவள் புடவையை நனையாமல் தூக்கிக்கொண்டு போகையால் பின்னே வருகிறவன் அவள் அடித்துடை யிலே இருக்கிற ஒரு ஒரு மச்சத்தை அடையாளமாகப் பார்த்துக் கொண்டு கரையேறினவுடனே அந்த ஸ்திரியைத் தன் பெண்சாதி எனறு சொல்லி, அவள் புருஷன் அவளை அழைத்துக்கொண்டு போகவொட்டாமல் தடுத்தான். 

அவ்விருவரும் வழக்காடிக்கொண்டு நியாயாதிபதியா கிய மரியாதைராமனிடததிற்குப் போனார்கள். அவள் புருஷன் “என் பெண்சாதியைத் தன் பெண்சாதியென்று இவன் நிபம் சொல்லுகிறான்” என்று பிராது செய்தான். நியாயாதிபதி அந்த அந்நியனைக் கேட்கும்போது அவளைத் தன் பெண்சாதி என்று சாதித்தான். 

நியாயாதிபதி, “உங்களிலே யாருக்காவது சாட்சி யுண்டோ?” என்று கேட்டான். சொந்தப் புருஷன், “நாங்கள் நெடுந்தூரத்திலிருந்து வருகிறபடியால் எங்களுக்குச் சாட்சியில்லை” என்றான். பழி பாவத்திற்கு அஞ்சாத துஷ்டனானவன், எனக்குச் சமீபத்திலே சாட்சியில்லை. ஆனால் இவளை என் பெண்சாதியென்று ருசுக் கொடுக்கிறதற்கு ஒரு திஷ்ட்டாந்திரம் கொடுக்கிறேன். 

அது என்னவென்றால் நான் அனுபோகசாலி ஆகையால் இவள் அடித்துடையிலே ஒரு மச்சமிருக்கிறது. ஸ்திரீகளை விட்டுச் சோதித்து அறியலாம்” என்றான். 

அப்படியே சோதித்து அறிந்த பின்பு அந்த ஸ்த்ரீயை “உன் புருஷன் யார்?” என்று கேட்டான. சொந்தப் புருஷனையே காட்டினாள். அதற்கு மேலே சந்தேகம் பிறந்து மரியாதைராமன் அந்த ஸ்த்ரீயைப் பெண்டுகள் காவலிலும் மற்றிரண்டு பேரையும் புருஷர்கள் காவலிலும் வைத்து மறுநாள் உதயத்திலே அவ்விருவரையும் ஒரு இடத்திற்கு அழைத்துக்கொண்டு வரச்சொல்லி, கொலை செய்வோனை அழைப்பித்து, “இவ்விருவருக்குள்ளே ஒரு ஸ்திரியின் கற்பை அழிக்கப் பிரயாசைப்படுகிற மகாபாதகன் இன்னான் என்று உனக்கு முன்னே அறிவித்தே னல்லவா? இன்னம் நிஜத்தைச் சொல்லாமையால் அவனை இப்போதே வெட்டிப் போடு” என்று உத்தரவு கொடுத்தான். அவன் கத்தியை உருவிக்கொண்டு போகையில் மோசக்காரன் பயந்து, “உண்மையைச் சொல்லி விடுகிறேன். என்னை வெட்ட வேண்டாம்” என்று ஆற்றிலே தான் கண்ட மச்சத்தைக் கொண்டு வியாச்சியமாடத் தொடங்கியதை உண்மையாகச் சொல்லிவிட்டான்.  

நியாயாதிபதி துஷ்ட்டனுக்குத் தகுதியான தெண்டினையைச் செய்வித்து அந்த ஸ்த்ரியைச் சொந்தக்காரனிடத்திலே ஒப்பித்தான். அடாத காரியம் செய்தாரி படாத பாடு படவேணுமென்கிற பழமொழியை அறிந்த துஷ்ட்டன் அப்போதுதான் மெய்யென்று அறிந்தான்

*தெரியா திமைக்குற்றம் கண்ணுக்கென் றெய்திடும் தீவினைகள் கரியாய் வழக்குக்கள் சொல்பவர்க்கே கொண்ட காதலன்முன் சரியாய் மறுச்சொன்ன வனுக்குப் பாரிஇத் தையலென்ற மரியாதி ராமன் கதைபோற், குறுங்கை மலைநம்பியே. -நம்பி சதகம் 81.

– மரியாதைராமன் கதைகள் (ஆய்வுப் பதிப்பு), இரண்டாம் பதிப்பு: மே 2001, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரசுவதி மகால் நூலகம் வெளியீடு, தஞ்சாவூர்.

பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்)  மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும்.  புகழ்மிகு கதையிலக்கியங்கள் :  விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *