ரோல் மாடல்!

சார் சார் என்ற குரலை அதிகாலைக் கேட்ட ராகவன், வெளியே பார்க்க, ஒரு இளைஞன் பார்க்க கல்லூரி மாணவன் போலத் தெரிந்தான்.
வணக்கம் சார், நான் மணி திருத்தணி கல்லூரி மாணவன் என்றான்.
ராகவனின் மனைவி இந்திரா, இதே வேலையாப் போச்சு, கல்லூரி கட்டணமா? என்றாள்.
அன்றைய தினம் காலை எழுந்தது முதலே தாத்தா, பாட்டி இருவருக்கும் சண்டை. தாத்தா ஒய்வு பெற்ற அரசு ஊழியர். பென்ஷன் வருகிறது. பாட்டி இல்லத்தரசி. பெண் 3, ஆண் இரண்டு மணமுடித்து பேரன், பேத்தியோடு வாழ்க்கை.
மே, ஜூன் மாதங்களில் கல்லூரிக் கட்டணம் கட்ட வரும் ஏதாவது ஒரு மாணவனுக்கு கல்லூரி கட்டணம், வேறு மாணவனுக்கு தீபாவளி சமயத்தில் டிரஸ்.
இது சுமாராக 15வருடங்களாக நடந்து வருகிறது. அன்றைய தினம் மூடு இருவருக்கும் சரியில்லை.
பாட்டி, நீ போய் பிறகு வா என்றதற்கு,
அந்தப் பையன் உடனே, பாட்டி, நான் கல்லூரி படிப்பை முடித்து, கேம்பஸ் மூலமாக வேலை கிடைத்து முதல் மாதமாக சம்பளம் வாங்கி இருக்கிறேன். உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டி வந்திருககிறேன்.
நீங்கள் செய்த மாதிரி நானும் பண உதவி செய்ய விரும்பி உங்களை ரோல் மாடலாக எடுக்க விரும்புகிறேன் என க்கூறி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றான் அந்தப் பையன்.
November 26, 2026