ரசிப்பும் ருசிப்பும்

ரசிப்பதையெல்லாம் அடைய நினைக்கிறோம் அடைந்ததை எல்லாம் ரசிக்க மறக்கிறோம்.
அறிவழகன் என்பவர் ஒருவர் இருந்தார் அவருக்கு மாளிகை வீடு கட்ட வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. ஆனால் இவர் ஒரு சிறிய வீட்டில் தான் வாழ்ந்து வந்தார்,
எங்கே மாளிகை வீட்டை பார்த்தாலும் நின்று ரசித்து விட்டு தான் வருவார்.
எப்படி எல்லாம் விதவிதமாக மாளிகை வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து பல திட்டங்களை வைத்திருந்தார். இந்த நிறம் அடிக்க வேண்டும் இந்த மாடல் வைக்க வேண்டும் என்று பல திட்டங்களை வைத்திருந்தார். நிறைய வேலைகளை செய்து பணத்தை சேகரித்தார் வீடு கட்டுவதற்கு தேவையான அளவு பணமும் சேகரித்து வைத்திருந்தார்.
இப்பொழுது அவர் நினைத்தபடி அந்த மாளிகை வீட்டை கட்டுவதற்கான வேலையையும் தொடங்கினார். ஒரு ஆறு மாதம் கழித்து பார்த்தவுடன் ஓரளவுக்கு வேலை முடிந்து விட்டது. அடுத்து மூன்று மாதம் கழித்துப் பார்க்கும்போது முழு வேலையும் முடிந்து விட்டது.
அந்த நேரம் பார்த்து இவருக்கு வெளிநாட்டில் வேலை வந்தது வேலைக்கு சென்றார். அதன் பிறகு அடுத்த மூன்று வருடம் கழித்து தன் சொந்த ஊருக்கு வருகிறார் அதன் பிறகு இன்னொரு நாட்டில் வேலை வருகிறது அங்கேயும் சென்று விட்டார் கடைசியில் நாடு நாடாக சென்று 15 வருடம் கழித்து திரும்பவும் சொந்த ஊருக்கு வருகிறார். வந்து தான் கட்டிய வீட்டில் அமர்ந்து பார்க்கிறார். தன் மனதில் இந்த வீடு கட்டுவதற்காக தான் இவ்வளவு கஷ்டப்பட்டேன். ஆனால், நான் இப்பொழுது கட்டிய இந்த வீட்டின் அழகை ரசிக்கவே மறந்து விட்டேன்.
“ரசிப்பதையெல்லாம் அடைய நினைக்கிறோம் அடைந்ததை எல்லாம் ரசிக்க மறக்கிறோம்”
என்று நினைத்தபடியே தன் அறைக்குள் சென்று ஓய்வு எடுத்தார்.
– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: April 3, 2026
பார்வையிட்டோர்: 94