யானையின் உணர்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 80 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரங்கூனில் யானைகள் பெரிய பெரிய தேக்கு மரங்களைத் துதிக்கையால் தூக்கிக் கப்பலில் ஏற்றும். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஆங்கில வர்த்தக கம்பெனி யானைக்குட்டிகளை விலைக்கு வாங்கி இந்த வித வேலைக்குப் பழக்கினார்கள்.

ஆறு நாளும் வேலை, ஏழாம் நாளில் மனிதருக்கும் யானைகளுக்கும் விடுமுறை.

ஒரு சனிக்கிழமை இரவு ஆற்றில் வெள்ளம் மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஞாயிறு காலை ஆற்றோரத்திலுள்ள மரங்களை அகற்றா விடில் தண்ணீர் அடித்துக்கொண்டு போய்விடும். யானைகளைக் கொண்டுவரச் சொன்னார் மேலாளர்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.

யானைகளை எப்படி எப்படியோ கொண்டுவர பார்த்தார்கள். முடியவில்லை, யானைப் பாகன்கள் ஈட்டி கொண்டு குத்தி, யானைகளை வரிசையாக வெளியே நிறுத்தினார்கள். யானைகள் அசையவில்லை. துறட்டியால் காதைக்குத்தித் துன்புறுத்தினார்கள். ஒவ்வொரு யானையும் அந்தந்தப் பாகனை சொல்லி வைத்தாற்போ துதிக்கையால் தூக்கி மேலே கொண்டு போய் கீழே மெதுவாக வைத்தது.

‘ஓய்வு நாளில் எங்களைக் கஷ்டப்படுத்தலாகாது இன்று வேலை செய்யமாட்டோம்’ என்ற கருத்தைச் சொல்லும் பாவனையில் வேலை நிறுத்தம் செய்தன.

பகுத்தறிவில்லாத யானைகள் சுய அறிவால் தூண்டப்பட்டு வேலை செய்ய மறுத்து விட்டன.

“ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும். உன் மிருக ஜீவனானாலும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்”. (யாத்திராகமம் 20:10)

”ஓய்வு நாளிலே நன்மை செய்வது நியாயந்தான்.” (மத்தேயு. 12:12)

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *