போரடித்துவிட்டது!
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 8,062
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தலைமை ஆசிரியர் தரையில் நிற்கமுடியாமல் அதிர்ந்தார்….ஆ என்று அலறினார். அதிர்ந்து பொய் நாற்காலியில் விழுந்தார். கையிலிருந்த கடிதம் நழுவிக் கீழே விழுந்தது. ‘தலைமை ஆசிரியருக்கு என்னமோ ஏதோ’ என்று பதறியடித்து மற்ற ஆசிரியர்கள் ஓடி வந்தார்கள்.
கீழே கிடந்த கடிதத்தை எடுத்துப் பார்த்தனர்….
“பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது எந்த நேத்திலும் வெடித்துப் பள்ளி தூள் தூளாகி விடும்!”
இப்படி எழுதி இருந்த மொட்டைக் கடிதமே அது.
உடனே தலைமை ஆசிரியர் “பள்ளிக்கு இரு தினங்கள் லீவ்” என்று அறிவித்து மாணவர்களை ஓட விட்டு விரட்டினார்.
காவல்துறை, தாசில்தார் குழு, தீயணைக்கும் படை யாவரும் விரைந்தனர். வெடிகுண்டு நிபுணர்களும் உடனே வரவழைக்கப்பட்டனர்.
டப்பாவிலிருந்து டபரா வரை பயங்கர சோதனை நடந்தது.
இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் வீண் புரளி என்று தெரியவந்தது.
ஆசிரியர்களும் போலீஸ்காரர்களும் மொட்டைக் கடிதத்தை மொய்த்தனர். ஏக காலத்தில் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது.
“ஏன் ஒரு மாணவன் எழுதி இருக்கக்கூடாது?”
அனைத்து வகுப்புகளிலும் உள்ள கட்டுரை நோட்டுகள் பரிசீலிக்கப்பட்டன.
மோகனசுந்தரம், பத்தாம் வகுப்பு. வயது பதினேழு. அவன் எழுத்தே தான்.
பயல் திருட்டு விழி விழித்தான். மறுக்க வழியின்றி மருண்டான். “போரடித்துவிட்டது. இரு நாட்கள் லீவ் வேண்டும் என்று ஆசைப்பட்டேன்” என்று அழுது நடுங்கிய வாறு கூறினான்,
தம்பி இப்பொழுது கம்பி எண்ணுகிறான். சேலம் மாவட்டம் ராசிபுரம் அரசினர் பள்ளியில் இது நிகழ்ந்ததாக 1988 டிசம்பர் நாளேட்டில் செய்தி வந்தது.
விமானதளத்திலிருந்து வித்தியாசாலை வரை ஒரே குண்டுப் புரளிதான். இந்தக் குண்டுகளையே ஒழித்து விட்டால் என்ன?
“இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள்… ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்.” [எசேக்கியேல் 39:9]
– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
