பூதம் விழுங்கிய கதையும், புலராத வானமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2025
பார்வையிட்டோர்: 247 
 
 

அந்த செத்த வீட்டு மரண அறிவித்தல் பார்க்கும் போது சிரிப்பழகியின் முகம் தான் உறுத்தலாக, கண் முன்னால் வந்தது இப்படி எத்தனை முகங்கள் எவ்வளவு மனிதர்கள் நேற்று இருந்தவன் இன்றுஇல்லாதொழியும் உலகில் அழகு மாயையில் சஞ்சரிக்கும் மனிதர்கள் குறித்து வேதம் சொல்லவா முடியும்.

பூசணியை நேர்முகமாக சந்தித்து, ஒருயுகமாகிறது அவளை சந்திக்க வேண்டுமானால், யாழ்ப்பாண மண்ணைத் தான் மிதிக்க வேண்டும் அது துருவமாகிப் போய், வெகுநாளாகிறது. கண் எதிரே சத்தியம், சடம் வெறித்த காட்டில் வெறும் நிழலாககலியின் முகம் இருண்டு கிடந்தது வானத்தை தொலைத்து விட்டு, வாழ்க்கையை தேடுபவர்கள் மத்தியில், மாறாக தெய்வீக வரம் கேட்டு உயிர் உருகி வாழும் மாது என்கிற அந்த மாது சிரோண்மணி, அதைப் பார்த்த நிலையிலும் கூட அழவராமல், சிரிப்புத் தான் வந்தது. சிரிப்பழகி என்பதுஅறிவிலார் பேச்சுஇதை வாய் கூசாமல், சொல்லிக் காட்டியவளுக்கு சுட்டுப் போட்டாலும் வேதம் வராது, பூதம் தான் வருமென்பதற்கு இதுவே போதும் இடறிக் குதிக்கிற அந்த ஒரு சொல். இது பூரண அன்பு வழிபாட்டின் நிமித்தம் தோன்றிய ஒன்றல்ல இதை வெளிக் கொணர்ந்தவளை நினைக்கும் போது பரிதாபமே மிஞ்சியது.

ஆம், அவளைப், பற்றிக் கூற வேண்டுமானால், சகதி தான் குளிக்க நேரும் நேரிலே பார்த்தால் அவளின் அழகு ஜடக் கோலம், ஒப்பனை விருத்தியோடு மிகைப்பட தோன்றும் அவள் வாழ்ந்த காலம் ஒரு யுகத்து க்கு முன் ஒரு கரிநாள். அந்த பெரியம்மாவை மாதுவும் அவள் உறவு மனிதர்களும் சீனியாச்சி என்றே அழைப்பார்கள். அவள் அந்தக் காலத்திலேயே, புருஷன் வேலை நிமித்தம் காரணமாக, கொழும்புவாசியாகவே ஆகி விட்டிருந்தாள் அப்படியாக வரக் கூடியவர்களுக்கு, அழகு தான் முக்கியமென்று பேச்சு அடிபடுகிறதுபேச்சென்ன, மாதுவே அதை ஒரு வேதமாக, உள் வாங்க நேர்ந்திருக்கிறது. இதன் பொருட்டே, அவளின் நிஷ்டை கூடிய தவம் அன்று முகநூலில் சிரிப்பழகியின் கண் கொள்ளாக் காட்சியைக் கண்ட, பிறகு மனம் இன்னும் வலித்தது அதுவும் அவள் புருஷனின் மரணச் செய்தியின் ஊடாக விழுந்த பிம்பம் இது ஒரு மாயச் சுழல்,அதிலகப்பட்டுகாயப்பட வீழ்ந்தாலும், மாதுவுக்குவேதவசமாகி விட்ட களிப்பு நிலை தான் எப்போதும் அவள் பெரியக்காவின் கல்யாணத்தன்று அவளை சோடித்து அலங்கார அழகு தேவதையாக மாற்றி செப்பனிட சீனியாச்சி வீட்டிற்கு வந்திருந்திருந்த தருணம்.

தோ ஆயிற்று மாது இதை வேடிக்கை பார்க்க அங்கேயே வெகு நேரமாய் தரித்து நின்று கொண்டிருந்தாள் சும்மா வேடிக்கை பார்க்கத் தான். மாய உலகின் பிடிக்குள் சிக்காமல், அவள் மறு துருவம் உடம்பின் நிலையாமை பற்றி அப்பாவிடம் பாடம் கேட்டு வளர்ந்த பெருமை அவளுடையதாகிறது இது அறியாமல், சீனியாச்சியின் வக்கணை பேச்சு . இங்கே யாரும் நிஜமல்ல அவள் மிக ஆராய்ந்து கண்டு பிடித்த ஒரு நிஜம் அவளின் அண்ணன் மகள் பூசணி குறித்த ஒரு சுய கருத்து, அவள் சொல்கிறாள்.

பூசணியின் சிரிப்பு இருக்கே, உண்மையில் அவள் சிரிப்பழகி தான் . என்ன சொல்லுறியள் ?

நாங்கள் என்னத்தை சொல்லுறது ? பெரிய வித்வ மேதை. நீங்கள் சொன்னால், சரிதான் என்றாள் மாது சிரிப்பை அடக்கிக் கொண்டு, பிறகு கேட்டாள்.

சீனியாச்சி! நீங்கள் எந்த உலகத்திலை இருக்கிறியள்? இது மெய்யே? எங்களுக்கு சிரிக்க வராது அழத்தான் தெரியும் என்று சொல்லிக் காட்டுகிற மாதிரியல்லவா இது இருக்கு.

உதை விடுங்கோ. இதைப் பற்றிக் காலம் சொல்லுற கதையைக் கேட்பம்.

என்றாள் மாதுசுயத்தை அறிய நேர்ந்த பெருமிதக் களை மாறாமல், அவள் சொன்ன வேதம் ஒன்றும் வீண் போகவில்லை.

காலம் விழுங்கிய கணக்கில் இதுவும் ஒன்று. கண் எதிரே எத்தனையோ விழுக்காடுகள். மாதுவின் அம்மப்பா அதாவது அவளின் அம்மாவின் பெற்றோரெல்லம் வாழ்ந்து களித்ததெல்லாம், ஏழாலை கிழக்கு மண்ணில் தான் அந்த செம்பாட்டு மண் புழுதி, மாதுவின் மனதில் ஒரு சிரஞ்சீவிக் காவியமாகவே நிலைத்த, ஒன்று சிறுமியாக இருந்த, போது எத்தனை தடவைக்கள் அங்கு போய் வாழ்ந்து களித்திருக்கிறாள் அவர்களுக்கு, ஒரேயொரு மகள் தான் மாதுவின் அம்மா இருந்தாலும் மண் ஒட்டவில்லை வாழ்க்கை எங்கோ துருவத்தில், இந்த சீனியாச்சி மாதுவின் அப்பா சிதம்பரத்தின் கடைசி தம்பி பெண்சாதி. இருந்தாலும் ஸ்டேஷன் மாஸ்டராத இருந்த, அப்பாவின் கடைசிதம்பியின் யிடமே உதவி கேட்டு வழ்ந்ததால் தான் சீனியாச்சிக்கு அவர்கள் மீது அவ்வளவு கடுப்பு அதன் பிரகாரமே சிரிப்பழகியின் கதையும் தொடர்ந்தது இது வெறும் கதையல்ல , ஊன்றிப் படிக்க வேண்டிய வேதம் மாதுவின் அம்மப்பா அவர்கள் வீட்டிலே தான் வந்து, இறந்து கிடக்க, அம்மாவுக்குத் துணையாக மாமி வேறு வீட்டடிலே வந்து இரவு முழுக்க, அம்மாவின் காதில் இரகசியமாக, ஏதோ மந்திரம் ஓதிக் கொண்டிருந்தாள் அது வேறொன்றுமில்லை சிரிப்பழகியின் கதை காற்றில் வேறு பறக்கிறதாம் ஆம் மகராசா வீட்டுப் பெண் அவள் பத்துப் பேருக்கு நடுவில் பிறந்தாலும் முடிசூடா ராணி, வசிப்பதென்னவோ மாளிகை வாசமேயென்றாலும் குடி மூழ்கி விட்ட, கதைதான் சிரிப்பழகியாய் வேறு தொலைந்து விட்டாள் கழுகுக் கண்கள் சும்மா விடுமா? எவனோ வேலைகாரனோடு கூடிக் களித்ததன் விளைவாக , அவள் கதை சந்தி சிரிக்க வந்து விட்டதாய் இரவு முழுக்க, மாமி சொல்லக் கேட்டு , மாதுவிற்கு பெரும் மன உளைச்சல் தான் ஏற்பட்டது. திடீரென்று சீனியாசியைக் கண்டு, குசலம் விசாரிக்க, வேண்டும் போல், ஓர் உந்துதல். ஊரெல்லாம் பற்றி விட்ட தீயாய் சிரிப்பழகியின் கதை பரவிக் கொண்டிருக்க, சீனியாசியிடம் நலம் விசாரிக்க, திடீரென்று நலம், விசாரிக்க அங்கு வந்து சேர்ந்தாள் மாது.

நல்ல வேளை சீனியாச்சி அன்று தான் கொழும்பிலிருந்து வந்திருந்தாள் மாது கதவைத் தட்டியதும் ஒப்பனை கலையாமல் கதவைத் திறந்து பார்த்த போது, ஆதர்ஸதேவதையாக அப்பழுக்கற்ற புன்னகை மாறாமல், மாதுவைக் கண்டதும் அவள் சகஜ நிலை மாறி, திடீரென்று இருண்டு கறுத்தது.

கதவைத் திறந்து வழி விட்டதும் மாது நிழலை மிதித்து எகிறிக் குதிக்கும் பெருமிதக் களையோடு, சிரித்தபடியே உள்ளே வந்தவுடன் தாங்கமாட்டாமல் கேட்டாள்.

ன்னவாம் சிரிப்பழகி1 நாங்கள் அழுகையில் விழுந்து கிடப்பதாய் நினைச்சுக் கொண்டு, அவளை சிம்மாசனம் போட்டுஅமர வைச்சுக் கொண்டு, அப்ப என்ன சொன்னியள் நீங்கள்?இப்ப என்னவாச்சு கேக்கிறன் பதில் சொல்லுங்கோ சீனியாச்சி.

அதை விடு என்றாள் அவள்.

எதை விடுறதெண்டு கேட்கிறன் இந்த அழகு மாயையிலை எரிஞ்சு போறதுக்கு நான் ஒன்றும் உங்களைப் போலை பிறக்கேலை. இப்ப கேக்கிறன் சொல்லுங்கோ சீனியாச்சி ஆருக்கு சமாதி கட்ட இதை நீங்கள் சொல்ல நேர்ந்தது. வாயைத் திறந்தால், வேதம் தான் வர வேணும். பூதம் வந்தால், இது மட்டுமல்ல இதுக்கு மேலேயும் நடக்கும் இதைச் சொல்லத் தான் நான் வந்தது புரிஞ்சுதோ இல்லையோ?சொல்ல வேண்டியதுஎன் , கடமை அப்புறம் உங்கள் இஷ்டம் . அவள் சொல்லி விட்டு போய் விட்டாள். தலைக்கு மேலே சூழும் நெருப்பின் நடுவே, பூதம் விழுங்கி விட்ட வெறும் கதையாய், இப்போது நானல்ல அந்த சிரிப்பழகியின் கதை தான் சந்தி சிரிக்க வந்து, விட்டதாய் பெரும் ஆற்றாமையோடு அவள் நினைவு கூர்ந்தாள் இப்படி பூதம் விழுங்குதற்கு நான் மட்டுமல்ல, சிரிப்பழகியும் கூடத் தான் என்று பட்டது.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *