பாவம், இந்த மனைவிமார்கள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 16,957 
 
 

மூடநம்பிக்கைகள் பலவிதம்! அதிலும், நம்ம ஊர்ப் பெண்மணிகளுக்கென்று… குறிப்பாக, மனைவிமார்களுக்குத் தங்கள் கணவன் பற்றிய மூடநம்பிக்கைகள் ஏராளம். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

பாவம், இந்த மனைவிமார்கள்

சமையலறையில் மிக்ஸி அரைத்துக் கொண்டே, ‘என்ன… உங்களைத்தானே?’ என்று கூப்பிட்டால், ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டு இருக்கும் கணவன் காதில் அந்தச் சத்தம் விழுந்து, அவன் உடனே பேப்பரைத் தூக்கிப் போட்டுவிட்டு எழுந்து வருவான் என்று எதிர்பார்ப்பது.

நகரில் கல்யாண மண்டபங்களின் பெயர்கள், அவை அமைந்துள்ள தெருக்கள், போகும் வழி பற்றியெல்லாம் கணவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று நம்பி, அவனோடு விசேஷத் துக்குக் கிளம்புவது.

தான் எத்தனை கிளிக் செய்தாலும் ஸ்பார்க் வராத காஸ் லைட்டரில், தன் கணவர் எப்படியாவது ஸ்பார்க் வரவழைத்து விடுவார் என்று நம்பி, காஸ் ஸ்டவ்வை மூட்டித் தரச் சொல்லி லைட்டரை அவனிடம் நீட்டுவது.

பீரோவின் பின்னால் பரக்… பரக் எனச் சத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கும் மூஞ்சூறு அல்லது எலியை துணி உலர்த்தும் கோலால் கலாட்டா செய்து வெளிப்படுத்தி, எப்படி யாவது சாமர்த்தியமாக விரட்டிவிடுவார் என்று நம்புவது.

தான் வீட்டில் இல்லாத சமயம், புழக் கடைக் கொடியில் காயப் போட்டிருக்கும் துணி களை, மழை வருவதற்கு முன் எடுத்து மடித்து வைப்பார் என்று எதிர்பார்ப்பது. ஆபீஸிலிருந்து ஓட்ட லுக்குப் போனதையும், அங்கு சாப்பிட்ட டிபன் வகையறாக்களையும் வீட்டுக்கு வந்ததும் தன்னிடம் ஒளிக்காமல் சொல்லுவான் என்று அப்பாவியாக நினைப்பது.

எந்தெந்தத் தேதியில் பேப்பர்காரன் பேப்பர் போடவில்லை, வார இதழ்கள் போடவில்லை என்பதற்குச் சரியாகக் கணக்கு வைத்திருந்து, பில் தரும்போது உஷா ராகக் கழித்துக்கொள் வான் என்று தன் கணவனின் புத்திசாலித் தனத்தில் அதீத நம்பிக்கை வைப்பது.

வாங்கி வந்த சாத்துக் குடி, ஆப்பிள் பழங் களின் அசல் விலை யைத்தான் தன்னிடம் கூறுவான் என்று எண்ணுவது.

வீட்டில் எரியாத ட்யூப் லைட்டுகளை அப்படி இப்படித் திருகி என்னமாவது செய்து எரிய வைத்துவிடுவதில் சமர்த்தன் என்றும், ஃப்யூஸ் கட்டையைப் பிடுங்கி ஃப்யூஸ் வயர் போட்டு, போன கரன்ட்டை வரவழைப்ப தில் ஜித்தன் என்றும் சிலாகிப்பது.

நூறு ரூபாய் நோட்டுக் குப் பத்து ரூபாய் நோட்டாக சில்லறை வைத்திருந்து, தான் கேட்டதும் பர்ஸிலிருந்து எடுத்து நீட்டுவார் என்று எதிர்பார்ப்பது.

பி.எஃப். பணத்தில் ஏதாவது லோன் வாங்கியிருக்கிறானா, யாராருக்குக் கடன் திருப்ப வேண்டும் போன்ற தகவலையெல் லாம் தன்னிடம் மறைக்க மாட்டான் என்று எண்ணுவது.

ஆபீஸில் தன் கணவனுக்குக் கீழே இருபது முப்பது பேர் வேலை செய்கிறார்கள் என்றும், அவர்களை யெல்லாம் அவன் ஓட ஓட விரட்டி வேலை வாங்குகிறான் என்றும், அவனைக் கண்டாலே அவர்கள் நடுநடுங்கி, கை கட்டி, வாய் பொத்தி, கப்சிப் ஆகிவிடுவார்கள் என்றும் மனப்பூர்வமாக நம்பி, அதைத் தன் சொந்தக்காரர்களிட மும், சிநேகிதிகளிடமும் சொல்லி, கணவன் பெருமையை மெச்சிக் கொள்வது.

– ஜனவரி 2006.

ja_raa_sundaresan ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன் (பி:சூன் 1, 1932) பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *