நாலு காலுமில்லே…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 9, 2026
பார்வையிட்டோர்: 115 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(பழைய கதை புதிய பாடல்)

நண்பர் நான்கு பேர்களாம்
ஒன்று கூடி ஊரிலோர்
பஞ்சுக் கடை வைத்தனர்.

கடையில் மூட்டை மூட்டையாய்
அடுக்கி வைத்த பஞ்சுகள்
விற்று அவற்றால் லாபத்தை
பெற்று மகிழ்ந்து வாழ்ந்தனர்.

கடையில் பெருகி எலிகளோ
மூட்டை பஞ்சைக் கொறித்திட
காற்றில் பஞ்சு பறந்தது
கவலை அவர்க்கு வந்தது!

பூனை ஒன்றை வாங்கியே
பூணும் அணிகள் சூட்டியே
ஆளுக் கொரு காலென
பங்கிப் போற்றி களித்தினர்.

காலுறைகள் சூட்டியும்
காலணிகள் மாட்டியும்
ஆளுக் கொரு காலினில்
அணிகள் பூட்டி களித்தனர்.

வாசலுக்கு ஓடிய
வாலுப் பூனை காலின்மேல்
வாக னுமும் மோதிட
கால் முறிந்து போனது.

முறிந்த காலுக் குரியவர்
தகுந்த சிகிச்சை செய்துபின்
மருந்து எண்ணை தடவினார்
மனதும் கொஞ்சம் வாடினார்.

மற்ற மூன்று கால்களால்
சற்று நொண்டி நொண்டியே
அங்குமிங்கும் பூனையும்
அலைந்து எலியைப் பிடித்தது!

பாயும் போது பூனையின்
மருந்துக் காலின் எண்ணையும்
தீயால் எரியும் விளக்கதன்
திரியில் பற்றிக் கொண்டது.

எரியும் மருந்துக் காலுடன்
இங்கு மங்கும் பஞ்சின்மேல்
திரிய பூனைக் காலதன்
தீயால் மூட்டை எரிந்தது.

நஷ்டம் உன்னால் தானென
முறிந்த காலுக்குரியர்மேல்
முறையீடு செய்ய எண்ணியே
மரியாதை ராமனை அணுகினர்.

வழக்கை ஆய்வு செய்தநம்
வலிமை மிக்க ராமனும்
தனது தீர்ப்பை தந்தவர்கள்
சிக்கல் தீர்த்து வைத்தனர்.

“முறிந்த காலை ஊன்றியே
திரிய வில்லை பூனையும்
மற்ற மூன்று கால்களால்
ஓடித் தாவித் திரிந்ததால்

முறிந்த காலுகுரியவர்
குற்ற மற்ற நல்லவர்
மற்ற மூன்று பேர்களே
குற்ற வாளி என்றிட

போலி நண்பர் மூவரும்
புத்தி பெற்றுத் திருந்தினர்
காலில் நெருப்பு சுட்டவர்
கவலை தீர்க்கப் பட்டது!.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *