பாவலரும் காவலரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 3 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட் டைச் சிறப்பாக ஆண்ட மன்னன் கோப்பெருஞ்சோழன். அவன் புலவர் பலரும் பாராட்டுமாறு வாழ்ந்தான்; பாடும் திறமுடைய பாவலனாகவும் திகழ்ந்தான். அவன் பாடிய பாக்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. அம் மன்னன் பாடிய பாக்கள் நட்பின் பெருமையை விளக்குவன. 

அம் மன்னனைக் குறித்துப் புலவர் பலர் பாடி. யுள்ளனர். பாடிய புலவர்கள் கோப்பெருஞ் சோழனின் அரசியல் பெருமை குறித்துப் பாடவில்லை. அதனினும் மேலாக அவன் கொண்ட நட்பைக் குறித்தே பாடி யுள்ளனர். மன்னனாகவும் மாண்புடைப் புலவனாகவும் வாழ்ந்த கோப்பெருஞ்சோழன் நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்தவன். 

பழந்தமிழகத்தில் வாழ்ந்த பல்வேறு மன்னர்களைப் புலவர் பலரும் பாராட்டியுள்ளனர். அப் புலவர் பெரு மக்கள் மன்னரது கொடையையும் வீரத்தையுமே பாராட்டினர். கொடுத்ததைப் பற்றிப் பாடித் தம் செய்ந்நன்றியை வெளிப்படுத்தினர். 

ஆனால், கோப்பெருஞ்சோழனைப் பாராட்டியவர் அவனது கொடைப்பெருமையையோ, ஆட்சிச் சிறம் பையோ பாடவில்லை. அவனது ஒன்றுபட்ட நட்பின் பெருமையையே பாடினர். எனவே, மற்றைய மன்னர் தம் பாராட்டினைவிடக் கோபெருஞ்சோழன் பெற்ற பாராட்டு மிகச் சிறந்ததாகும். 

சோழ நாட்டில் கோபெருஞ்சோழன் வாழ்ந்த காலத்தில், பாண்டிய நாட்டில் பிசிர் என்ற ஊரில் ஆந்தையார் என்ற அறிஞர் ஒருவர் வாழ்ந்தார். அவரது அரும் புலமையையும் நல்லியல்புகளையும் சோழன் கேட்டறிந்தான். ஆனால், அவரை நேரில் பார்த்தது இல்லை. 

நல்லவரோடு நட்புக் கொள்வதை இயல்பாகக் கொண்ட சோழ மன்னன், ஆந்தையாரைப் பெரு நண்பராகக் கருதினான். அவரைக் காணாமலே அவர்பால் பேரன்பும் பெரு நட்பும் கொண்டான். நட்பின் பெருக்கால் ஆந்தையாரைப் பாராட்டிப் பாடினான், 

”பிசிர் ஆந்தையார் நீண்ட தொலைவில் பாண்டி நாட்டில் இருப்பினும் அவரே என் உயிர் நண்பர்; உயர்ந்த நண்பர். அவர் பிறரைப் பழிக்காத பண்புடையவர்; பொய் கூறுவதால் புகழ் வரும் என எவராவது கூறினால்கூடப் புகழுக்காகப் பொய் கூறாதவர். அவர் பெயரை எவராவது கேட்டால், ‘என் பெயர் கோப்பெருஞ்சோழன்’ என என் பெயரைக் கூறுவாரே யொழியத் தம் பெயரைக் கூற மாட்டார். அந்த அளவு என்மீது அன்பும், உறுதியான நட்பும் உடையவர்’ எனப் பலரும் அறியப் போற்றிப் பாராட்டினான். 

சோழனைப் போலவே பிசிர் ஆந்தையாரும் சோழனைக் காணாமலே அவன்மீது அளவு கடந்த நட்புப் பூண்டிருந்தார்; அவனது புகழைப் பாடி மகிழ்ந் திருந்தார். பண்டைப் புலவர்கள் மன்னர்களைக் கண்டு பாடிப் பரிசில் பெறுவர். ஆனால் மன்னனைக் காணா மலே, எவ்விதப் பயனும் எதிர்பாராமல் சோழனைப் புகழ்ந்து போற்றிய பிசிர் ஆந்தையாரின் நட்புப்பெருமை வியக்கத்தக்கது. 

வடக்கு நோக்கி ஓர் அன்னம் பறந்து சென்றது. அதனைக் கண்டு ஆந்தையார் சொன்னார்: 

“அன்னமே! வடக்கு நோக்கிச் செல்லும் நீ உறை யூருக்குப் போ. அங்கு ஆளும் கோப்பெருஞ்சோழனிடம் நேரே சென்று, ‘நான் ஆந்தையாரிடம் அன்புடையவன்’ எனக் கூறினால், உன் மனைவி அணியத்தக்க அணிகள் அத்தனையும் பரிசாகத் தருவான்.” 

இவ்வாறு வாழ்ந்த பிசிர்ஆந்தையார் வயது முதிர்ந் தவர் ஆயினும் அவரது தலைமுடி நரைக்கவில்லை. இதனைப்பற்றிப் பலர் அவரிடம் கேட்டனர். அப்போது ஆந்தையார் சொன்னார்: 

“என் முடி நரைக்காமைக்குக் காரணம் என்ன வென்றா கேட்கிறீர்கள்? கூறுகிறேன். என் மனைவி மக்கள் அறிவுடையவராயுள்ளனர்; என் உளமறிந்து நடக்கிறார்கள். என் இளைஞர்கள் என் கருத்துக்கேற்ப ஏவல்களைப் பிறர் கூறாமலே செய்து முடிக்கும் நல்லவர்கள். நான் வாழும் நாட்டினை ஆள்கின்ற மன்னனும் நீதி தவறாதவன். என்னைச் சூழ்ந்து சான்றோர்கள் பலர் வாழ்கிறார்கள். ஆகவே என் குடும்பத்தாராலும், ஏவலராலும், அரசனாலும், ஊரி லுள்ள சான்றோர்களாலும் எனக்கு நன்மையே ஏற்படு கிறது; துன்பம் ஏதும் இல்லை. எனவே, என் மனத்தில் கவலை என்பதே தோன்றவில்லை. அதனால்தான் என்முடி நரைக்கவில்லை”. 

ஒருவரை. ஒருவர் காணாமலே சோழனும் பிசிர் ஆந்தையாரும் நண்பர்களாய் விளங்கினர். பலருக்கும் அவர்கள் கொண்ட நட்பு பெருவியப்புக்குரியதாக இருந்தது. 

பிள்ளைகள் தன்னை எதிர்த்தமையால் உயிர்வாழ விரும்பாமல் வடக்குத் திசைநோக்கி உண்ணா நோன்பும் பேசா நோன்பும் மேற்கொண்டு உயிர்விடத் துணிந்தான் சோழன்; இந்த நோன்பை மேற்கொள்ளும் இடமாகக் காவிரிக்கரையை, தெரிந்தெடுத்தான். அப்போது கோப் பெருஞ் சோழன், “எனக்குப் பக்கத்தில் என் ஆருயிர் நண்பர் பிசிர் ஆந்தையாருக்கு ஓர் இடம் ஒதுக்குங்கள்” எனக் கூறினான். 

அருகிருந்த புலவர்கள் “அரசே! ஆந்தையார் உன் புகழையும் பெயரையும் கேட்டவரேயன்றி உன்னைக் கண்டு பழகியவர் அல்லர். இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒருமுறைகூட உன்னைக் காண அவர் வந்தவர் அல்லர். அவர் உள்ள இடமோ நீண்ட தொலைவில் உள்ளது.நீ உயிர்விடத் துணிந்த இந்தச் செய்தியினை அவர் அறிய வாய்ப்பில்லை. ஆகவே, அவர் இப்போது இங்கு வருவது இயலாது. அவருக்கு இடம் ஒதுக்குவது வீண் அன்றோ?”எனக் கேட்டனர். 

அவர் கூறியதைக் கேட்ட சோழன், புலவர்களே! அவர் வருவாரா? அவருக்கு எப்படி என் நிலை தெரியும்? என்னும் ஐயம் உங்களுக்கு வேண்டா. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை என்றாலும் உணர்ச்சி யால் நெடுநாளாக ஒன்றுபட்டவர்கள். நல்ல நண்பர்கள். வளமாக வாழுங்காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்க வாராதிருந்தாலும் நண்பனுக்கு இன்னல் வரும்போது தவறாது வருவார். ஆகவே. பிசிராந்தையார் நான் அரசனாகப் புகழோடு வாழ்ந்த காலத்தில் வாராதிருப்பினும், நான் அரசிழந்து உயிர் விடப் போகும் இவ் வேளையில் உறுதியாக வருவார். அவருக்கும் இடம் ஒதுக்குங்கள்” என்றான். 

அரசன் ஆணைப்படி பிசிராந்தையாருக்கும் ஓர் இடம் ஒதுக்கினர். சில நாள்கள் சென்றபின் சோழன் சொல்லியவாறே ஆந்தையார் அக் காவிரிக் கரைக்கு வந்து சேர்ந்தார். தம் இனிய நண்பனின் நிலை கண்டு வருந்தினார். தம் நண்பர் உயிர் வேறு, தம்முயிர் வேறு என அவர் கருதாதவர். ஆதலின், தாமும் அவனோடு உயிர்விடத் துணிந்தார். 

‘பிசிராந்தையார் கண்டிப்பாய் வருவார்’ எனக் கூறிய சோழனின் நம்பிக்கையின்படி வந்து சேர்ந்த பிசிராந் தையார் பெருமையை எண்ணி அனைவரும் வியந்தனர், அவர் இருவர்தம் நட்பினை வியந்து பாராட்டினர். கோப்பெருஞ்சோழனும் பிசிர் ஆந்தையாரும் அருகருகே இருந்து உயிர் துறந்தனர். அழியும் உடல்களை அவர்கள் இழந்தாலும் அழியாப் புகழையன்றோ பெற்றனர்! 

“புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் 
நட்பாம் கிழமை தரும்
” – திருக்குறள்

– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.

புலவர் த.முருகேசன் புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *