எனக்கு இந்த தண்டனையே குடுங்க…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 48,237 
 
 

ராமசாமி கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் அவன் ஆசைப் பட்டது போல பல இளம் பெண்களுடன் பழகி வந்து சுகம் கண்டு மிகவும் சந்தோஷமாக இருந்தான்.தன் மனதுக்குள் ‘கல்யா ணம் கட்டி கிட்டா ஒத்தி கூட தான் சுகம் அனுபவிக்க முடியும்.கல்யாணம் கட்டிக் கிடாம நாம் இருக் கிறதாலே இப்படி பல பெண்களுடன் சந்தோஷமாக இருந்து வர முடிகிறது’ என்று சொல்லி சந்தோஷ ப் பட்டான்.

இன்னும் பல பாவங்களை எல்லாம் செய்து வந்தான்.

ஒரு நாள் அவன் ‘ஸ்கூட்டா¢’ல் போய் கொண்டு இருக்கும் போது, விபத்துக்கு உள்ளாகி நடு ரோட்டிலே இறந்து விட்டான்.

உடனே எம தூதர்கள் அவனை எம லோகத்துக்கு அழைத்துப் போனார்கள்.

எமன் சிம்மாசனத் தில் உட்கார்ந்துக் கொண்டு சித்ரகுப்தனைப் பார்த்து ”சித்ர குப்தா,இந்த மானிடன் அவன் வாழ்க்கையிலே பண்ண பாவங்களை எல்லாம் சொல்லு” என்று உத்தரவு போட்டான்.

உடனே சித்ரகுப்தன் தன் பெரிய புஸ்தகத்தை எடுத்து ராமசாமி அவன் வாழ்க்கையிலே பண் ண பாவங்களை எல்லாம் ஒரு அரை மணி நேரம் படித்தான்.
எமனுக்கு மிகவும் கோபம் வந்தது.

அவர் உடனே சித்ர குப்தனையும்,ஐந்து எம தூதர்களைக் கூப்பிட்டு கோபத்தோடு “இவ்வளவு பாவம் பண்ணி இருக்கானா இந்த மானிடன்.இவனை நீங்க மானிடர்கள் செஞ்ச பாவங்களுக்கு எம லோகத்திலே நான் தர உத்தர வு போட்டு இருக்கும் ‘கடும்’ தண்டனை படங்கள் இருக்கும் அறைக்கு அழைத்து போய்,அவன் எந்த தண்டனையை கேக்கறானோ,அந்த தண்டனையை உடனே நிறைவே ற்றுங்கள்.உடனே இந்த மானிடனை இங்கே இருந்து உடனே இழுத்துக் கொண்டு போங்க” என்று கர்ஜித்தான்.

ராமசாமிக்கு பயம் வந்துவிட்டது.

’நாம இறந்து போன பிறகு எம லோகத்திலே கடும் தண்டணை குடுப்பாங்கன்னு தொ¢ஞ்சு இரு ந்தா,நான் எந்த தப்பையும் பண்ணீ இருக்க மாட்டேனே.எனக்கு முன்னமே தொ¢யாம போச்சே’ என்று வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தான்.

எம தூதர்கள் ராமசாமியின் கைகளையும்,கால்களையும் சங்கிலியால் கட்டி,அவனைஇழுத்துக் கொண்டு எமன் சொன்ன போன ‘ரூமு க்கு’ப் போனார்கள்.

அந்த ரூமில் நுழைந்தவுடன் சித்ரகுப்தன் ராமசாமியைப் பார்த்து “ஏய் மானிடனே,இந்த ரூமில் மொத்தம் அறுபது தண்டனைகளை சித்தா¢க்கும் படங்கள் இருக்கு.நீ அதை எல்லாம் பார்த்து விட்டு, உனக்கு எந்த தண்டனை வேண்டுமோ அதை கேள்” என்று சொன்னார்.

பிறகு ஒரு எம தூதனைக் கூப்பிட்டு “இவனுக்கு எல்லாம் படத்தையும் காட்டு.அப்புறமா இந்த மானிடன் எந்த படத்தை காட்டுகிறானோ அந்த தண்டனை என் கிட்டே வந்து சொல்லு.நான் இவனு க்கு அந்த தண்டனை போதுமா,இல்லை இன்னும் அதிகமான தண்டனையை குடுக்கணுமான்னு சொல்றேன்.நீ அந்த தண்டனை நிறைவே ற்று”என்று உத்தரவு போட்டார் சித்ர குப்தன்.

பிறகு எம லோகத்துக்கு வந்து இருக்கும் அடுத்த மானிடன் செய்த பாவங்களை பற்றி சொல்ல எம தர்மராஜன் முன்னாலே அவருடைய புஸ்தகத்தை வைத்துக் கொண்டு தயாராய் நின்றுக் கொண்டு இருந்தார் சித்ரகுப்தன்.

எம தூதர்கள் காட்டின படங்களை எல்லாம் மெல்ல தன் கால்களை மெல்ல இழுத்துக் கொண்டு ஒன்று ஒன்றாய் பார்த்தான் ராமசாமி.

அவனுக்கு மயக்கமே வந்து விட்டது.

ஒரு படத்தில் பாவம் செஞ்ச ஒருவனை கொதிக்கும் எண்ணை இருக்கும் பெரிய கடாய் ஒன்றில் போட்டு வறுப்ப்து போலவும்,அடுத்த படத்தில் ஒருவனை நிர்வாணமாக படுக்க வைத்து, நாலு எம தூதர்கள் கூரான ஈட்டியால் மாறி மாறி குத்துவது போலவும்,அடுத்த படத்தில் நிர்வாணமாய் நிற்கும் ஒருவனை நாலு எம தூதர்கள் சாட்டையால் விடாமல் எல்லா பகக்கதிலே இருந்து அடிப்பது போலவும்,அடுத்த படத்தில் நாலு எம தூதர்கள் ஒருவனை நிர்வாணமாக்கி விட்டு கொதிக் கும் ஒரு பெரிய தண்ணீர் பாணையிலே முக்கி முக்கி எடுத்துக் கிட்டு இருந்தது போலவும் இருந்தது.

உடனே ராமசாமி பயத்தால் “எனக்கு இதுக்கு மேலே எந்த படத்தையும் பாக்க ரொம்ப பயமா இருக்கு.நான் பாவம் பண்ணினவன் தான்.இல்லைன்னு நான் சொல்லலே.தயவு செஞ்சி,உங்கள்ளே யாராவது ஒரு ரொம்ப தயவு உள்ளவரு எனக்கு கொஞ்சம் கம்மியான தண்டனை இருக்கிற படமா காட்டுங்க ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.

உடனே சீனியர் எம தூதன் “அப்படி எல்லாம் நாங்க தர முடியாது.நீ எல்லா படத்தையும் நல்லா பார்த்து விட்டு உனக்கு எந்த தண்டனை பிடிக்குதோ அதைத் தான் கேக்கணும்” என்று சொல்லி கர்ஜித்தான்.

வேறே வழி இல்லாமல் ராமசாமி வேர்த்து,வேர்த்து கொட்ட மீதி படங்களை ஒவ்வொரு படமாக பார்த்துக் கொண்டு வந்தான்.

முதல்லே பார்த்த படங்களை விட அடுத்து,அடுத்து வந்த படங்கள் இன்னும் கொடூரமானதாகவே இருந்தது.

கடைசி மூன்று படங்கள்தான் பாக்கி இருந்தது.

ராமசாமி அந்த படங்களே பார்க்க ஆரம்பத்தான்.

அத்தனை பயத்திலும் அவன் பார்த்த ஒரு படம் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அந்த படத்தில் கண் ரெண்டும் தொ¢யாத,பொக்கை வாயுடனும்,எலும்பு கூடு போல நிர்வாண மாக இருந்த ஒருவன் மடியிலே ஒரு பதினெட்டு வயது பெண் நிர்வாணமாக உட்கார்ந்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தான்.

உடனே ராமசாமி தன்னை அழைத்து வந்த சீனியர் எம தூதனை பார்த்து “இந்த படத்திலே இருக்கிற தண்டனையை எனக்கு குடுங்க”என்று சொன்னதும் எல்லா எம தூதர்களும் விழுந்து,விழுந் து சிரித்தார்கள்.

ராமசாமிக்கும் ஒன்னும் புரியவில்லை.

’நான் இந்த ‘ரூம்’லெ இருக்கிற ஒரு படத்தை காட்டி இந்த தண்டனையை குடுங்கன்னு தான்னு கேட்டேன்.இவங்க ஏன் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க’ என்று யோஜனைப் பண் ணிக் கொண்டு இருந்தான்.

ஐந்து எம தூதர்களும் ஒரு பதினைஞ்சு நிமிஷம் விடாம சிரித்தார்கள்.

பிறகு,அந்த சீனியர் எம தூதன் “பாவி மானிடனே.அந்த படத்திலே இருக்கிற தண்டனை அந்த கிழவனுக்கு இல்லே.அந்த வயசு பொண்ணுக்கு.நீ வேறே ஏதாவது தண்டனையை கேளு” என்று சொல்லி விட்டு மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தான்.

ராமசாமிக்கு மறுபடியும் பயமும் வேர்த்து கொட்டலும் ஆரம்பித்து விட்டது.

இதற்கிடையில் ராமசாமி காட்டின படத்தை எமனிடன் போய் சொன்னான் ஒரு எம தூதன்.

உடனே எமன் ராமசாமி இருந்த இடத்துக்கு வந்தான்.

’எந்த தண்டனை யை நாம் கேப்பது’ என்று புரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான் ராமசாமி.

அந்த ‘ரூமு’க்கு வந்த எமன் ராமசாமியை பார்த்து “நிறைய பாவம் செஞ்ச மானிடனே, உனக்கு எந்த மாதிரி தண்டனை வேணும்ன்னு கேட்டே”என்று சிம்மக் குரலில் கேட்டான்.
ராமசாமிக்கு பயமும்,வேர்த்து கொட்டுவதும் அதிகமாகியது.

அவன் பதில் ஒன்னும் சொல்லாமல் பயத்துடன் நின்றுக் கொண்டு இருந்தான்.

சீனியர் என தூதன் ராமசாமி தேர்ந்து எடுத்த படத்தை காட்டி, ”ப்ரபோ,இந்த அற்ப மானிடன் இந்த படத்தைக் காட்டினான்” என்று சொல்லி விட்டு ராமசாமி காட்டின படத்தை காட்டி விட்டு சற்று நகர்ந்து நின்றான்.

ஏற்கெனவே கோவைப் பழம் போல இருந்த எமன் கண்கள் இன்னும் சிவப்பாகியது.

கோபம் அதிகமாகி “அற்ப மானிடனே,பூலோகத்தில் நீ நிறைய பாவங்கள் பண்ணி இருக்கே. இங்கெ வந்தும்,நீ ஒரு இளம் பெண் நிர்வாணமாக இருக்கிற தண்டனையைக் கேக்கறாயா.உனக்கு ஒரு தண்டனை போறாது.மூனு தண்டனைகளை தர சொல்லி உத்தரவு போடறேன்” என்று கர்ஜித்து விட்டு அங்கே இருந்த சீனியர் எம தூதனைப் பார்த்து “இந்த அற்ப மானிடனுக்கு மூன்று ‘கடும்’ தண்டனைகளை உடனே குடு” என்று உத்தரவு போட்டு விட்டுப் போனார் எமன்.

ராமசாமி தன் மனதுக்குள் ‘நாம ஒன்னும் கேக்காம இருந்து இருந்தா,இந்த ‘ரூம்’லே இருந்த ஒரு தண்டனை தான் கிடைச்சு இருக்கும்.பூலோகத்திலே அத்தனை இளம் பெண்களுடன் சுகம் அனுபவிச்சும்,அந்த ஆசை தீராம செத்துப் போய் இங்கே வந்தும்,நிர்வாணமா இருக்கும் ஒரு இளம் பெண்ணைப் பார்த்து மயங்கி ஆசைப் பட்டு விட்டேனே’ என்று தன் ‘பெண் ஆசையை’ நன்றாக திட்டிக் கொண்டு இருந்தான்.

ராமசாமி அழுதுக் கொண்டே,முடியாமல் மெல்ல தன் கால்களை இழுத்துக் கொண்டு,சீனியர் எம தூதனுடன் அவர் கொடுக்கப் போகும் மூன்று தண்டனைகளை “அனுபவிக்க” போய்க் கொண்டு இருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *