கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 46,157 
 

கார்த்திகை மாதம், மிதமான காலைப் பொழுது. எப்பவும் எட்டு, ஒன்பது மணிக்கு எழும் சக்தி, அன்று ஐந்து மணிக்கெல்லாம் எழரானா காரணமில்லாமலா.? அதுவும் விடுமுறை நாளில்..!

ஆமாங்க, புதுசா வாங்கன `டூ வீலர்`, அவனை இரவு முழுவதும் தூங்க விடாம தொல்லை செய்தது. இத்தனிக்கும், பண்ணிரெண்டு மணி வரை, அந்த வண்டியை இயந்திர பாகங்களை நுணுக்கமாக நோட்டமிட்டிருந்தான். பின், அதன் கையேடு (மேனுவெல்) எடுத்து ஒன்றுக்கு இரண்டு முறை படித்தபடி வண்டியில் அந்தந்த பாகங்களை பார்த்து சரி செய்து கொண்டிருந்தான்.

இரவு முழுவதும் வண்டியை பற்றிய கனவே அவனது கண்ணில். விடியற்காலை எழுந்ததும் அவன் வண்டியை பார்க்க வெளியே வந்தான்.

வெள்ளை பனிப்புகை நடுவில் தேவதை போல் அந்த `டூ வீலர்` அவன் கண்ணுக்கு தெரிந்தது. ஆம், கார்த்திகை மாத குளிர்பனி அவனது வண்டியில் இருக்கை மேல் சீராக படிந்து இருந்ததை கண்டான், அந்த பனி படிந்த இருக்கையின் மேல் அவனது பெயரை எழுதி அழகு பார்த்தான். படிந்த பனியில் எழுதுவது எல்லோருக்கும் ஒரு குழந்தை தனமான ஆசை தானே..!

பின், காய்ந்த துணி ஒன்று எடுத்து வந்து வண்டியை துடைத்து வெளியே தள்ளினான். உலா வருவதற்கே..! வண்டியை `ஸ்டார்ட்` செய்தான். வண்டியின் குறைவான சப்தம் அவனை வெகுவாக ஈர்த்தது. மெல்ல வண்டியை ஓட்டிச் சென்றான், அவன் கவனம் முழுவதும் சாலையில் அல்ல, வண்டியில் தான்.

வழியில் தன்னுடன் கல்லூரியில் படித்த பெண்ணை பார்க்க, வண்டியின் வேகத்தை முழுவதுமாக குறைத்தான், இது அவளிடம் தான் வாங்கிய புது வண்டியை காட்ட வேண்டும் என்பது இந்த நேரத்தில் சக்திக்கு முளைத்த ஒரு சின்ன ஆசை. தூரத்தில் இருந்து `ஹார்ன்` இருமுறை வேகமாக அடித்தபடி வந்தான், சக்தி நினைத்தது போலவே அவள் இவனையும், இவன் வண்டியையும் நோட்டமிட்டாள். அவள் பார்க்கும்வரை குறைந்த வேகத்தில் சென்ற வண்டி, அவள் பார்த்ததும் வேகம் பல மடங்கு ஆகி, அந்த மெயின் ரோடு பக்கம் திரும்பியது. அந்த வண்டி அங்கு திரும்பும் வரைக்கும் அவளது கண் இமைக்கவில்லை, அப்படினா நீங்களே தெரிஞ்சிகோங்க அந்த வண்டி எவ்வளவு `ஸ்ப்பீடுனு`.

மெயின் ரோடு திரும்பியதும், மீண்டும் அவனது வண்டியின் வேகம் சட்டென்று குறைந்தது. அவனது கவனமும் வண்டிக்கு திரும்பியது. கொஞ்ச தூரம், செல்ல செல்ல நீண்ட வரிசையில் வண்டிகள் நிற்பது அவனது கண்களுக்கு புலப்பட்டது. அந்த வரிசையில் இவனது வண்டியும் நின்றது, விடியற் காலை தான் அது இன்னும் முழுவதுமாய் விடியவில்லை அந்த காலை பொழுது, இன்னும் 20-30 நிமிடத்தில் விடிந்து விடும் என்பது அவன் கணிப்பு.

சக்தியின் `டூ வீலர்` முன் ஒரு நீள `கார்` ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காரைப் பார்த்ததும் சக்திக்கு ஒரு ஆசை முளைத்தது, அடுத்தது வாங்கனா இந்த மாதிரி கார் தான் வாங்கனும் என்று யோசித்துகொண்டே சாலையை எட்டிப் பார்த்தான்.

சக்திக்கு என்ன என்று ஒன்னும் புரியவில்லை, ஏன் எல்லா வண்டியும் வரிசையா இருக்குதுன்னு..? சரி என்ன பிரச்சன்னனு போய் பார்க்கலாம் என்று பார்த்தால்.. புது வண்டிய நிர்த்திட்டும் போக அவனுக்கு மனசில்லை. அதனால் அங்கேயே வண்டிகள் செல்லும் வரை காத்துகொண்டிருந்தான் சக்தி, முன்னால் இருக்கும் வண்டிகள் ஆமை போல நகர்ந்தது. சரி திரும்பி வந்த வழியே போகலாம்னு பாத்தா பின்னால் இரண்டு லாரி ஒன்றன் பக்கத்தில் மற்றொன்று விகிதம் நின்று கொண்டிருந்தது, இவ்வளவு காலையில் அந்த சாலையில் இவ்வளவு வண்டி ஒன்றாய் நின்றதுமில்லை. அதை அவன் பார்த்ததுமில்லை. சரி, கொஞ்ச நேரம் தான் ஆகும்னு `வெயிட்` பண்ணிட்டு இருந்தான். இதற்க்கு நடுவில் அவனது வண்டியின் அழகையும் ரசித்து கொண்டு இருந்தான். சில வினாடிகளில், பெட்ரோலின் அளவை மூடி திறந்து பார்த்தான், அளவு அதிகமாய் இருப்பதை கண்டதும் புண்முருவளிட்டான்.

அவனது முன் நின்ற காரை உற்று நோக்கினான் சக்தி.

கண்ணாடியில், பனி படிந்திருந்தது, அதனால் உள்ளே யார் என்று அவனால் சரிவர பார்க்க முடியவில்லை, ஒரு மாதிரி சில இடங்களில் தண்ணீர் சொட்டியபடி ஒரே கலங்கலாகவே தெரிந்தது, வண்டியில் இருந்து சாய்ந்து எட்டிப் பார்த்தான் சக்தி, அப்படியே சரியாய் மூன்று வண்டிக்கு முன்னால், நான்கு ஐந்து காவலர்கள் எல்லா வண்டியையும் உள்ளே கதவை திறந்து நன்கு பரிசோதித்து கொண்டு இருந்தனர்.

முந்தய காரில் இருந்த டிரைவர் தனது முகத்தில் இருக்கும் பயத்தை மறைத்துக்கொண்டு, பக்கத்தில் இருப்பவரிடம் விசாரித்தார், என்ன பிரச்சனை?? எதனால எல்லாரையும் `செக்` பண்றாங்க என்று?

என்ன `செக்` பன்றாங்கன்னு, சரியா தெரியில தம்பி., ஆளாளுக்கு ஒன்னு ஒன்னு சொல்றாங்க..!!. அவர் அங்கு சொன்னது சக்தியின் காதுகளுக்கும் எட்டியது.

இதை கேட்டதும் அந்த டிரைவரின் மனதில் “ஒருவேள போலீஸ் அந்த பையன தான் எல்லா வண்டியிலையும் தேடி வராங்களோ”..! என்று பக்கத்தில் உட்கார்ந்தவனிடம் அந்த பையனின் கை கால்களில் கட்டி இருந்த கட்டையெல்லாம் அவிழ்த்து விட சொன்னார்.

உடனே அந்த காரின் முன் கதவை திறந்து ஒருவன் இறங்கினான். இரு பக்கமும் திரும்பி திரும்பி பயத்துடன் பார்த்தான். சக்தியின் வண்டி நோக்கி வந்தான். அவனது முகம் சக்திக்கு நன்கு பதிந்தது. `காருக்கு` பின்னால் வந்து டிக்கியை திறந்து உடனே உள்ளே ஏறி சாற்றிக்கொண்டான், அந்த சில வினாடிகளில் அவனது கண்ணுக்கு ஒரு சிறுவன் (சுமார் ஆறு-ஏழு வயசு இருக்கும்) கை, கால்கள் கட்டியபடி இருப்பதை பார்த்தான். ஆனால் அந்த சிறுவனின் முகத்தை சக்தி சரியாக பார்க்கவில்லை, இருப்பினும் டிக்கியை திறந்து மூடும் பொழுது ஒரு மஞ்சள் நிற அட்டை ஒன்று கீழே விழுந்ததை கண்டான்.

இந்த ஊரத் தாண்டற வரைக்கும் இயல்பா இருக்கிற மாதிரி நடிக்கலாம். ஆனா பையன் பத்திரம் டா..!! என்று அந்த டிரைவர் எச்சரித்து கொண்டே இருந்தார் .

குழந்தை, கொஞ்சம் தூக்க நிலையில் இருப்பதால், அவன் குழந்தையை தோள் மீது சாய்த்து படுக்க வைத்துகொண்டான்..

அடுத்தது இந்த காரை செக் பண்ண ஆரம்பித்தார்கள், காரில் இருந்த இருவரும் பயத்தின் உச்சியில் ஆனால் வெளியில் காட்டவில்லை, உடனே அந்த கான்ஸ்டேபிள் சார்… சார்…

இருவரும் மேலும் பயந்தனர்.

இந்த வண்டில ஒன்னும் இல்ல, இந்த காருக்கு வழிய விடுங்க என்று சொல்ல, அந்த கார் போக வழி விடப்பட்டது.

அந்த இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை, சில நிமிடங்களுக்கு, இருந்தும் பெருமூச்சி விட்டுக்கொண்டு ,சரி வழி விட்ட வரைக்கும் போதும் என்று எண்ணிக்கொண்டே அந்த டிரைவர் காரை வேகமாக ஓட்டிச் சென்றார்.

அருள்மதி நகைக்கடை, இது தான் அந்த ஊருக்கு ஒரு அடையாளம், ரொம்ப பெரிய கடை கிடையாது, ஆனாலும் சின்ன கடையினும் சொல்லிட முடியாது. யாரு கிட்ட வழி கேட்டாலும், வழி சொன்னாலும் இந்த கடைய மையமா வைத்து தான் சொல்லுவாங்க. இன்று மட்டும் அந்த கடை மூன்று மணிநேரம் லேட்டா தான் திறப்பாங்க. ஏன்னா அந்த கடை சூப்பர்வைசர் வெங்கட்ராமனுடைய பொன்னு `மகாலக்ஷ்மி` க்கு இன்று கல்யாணம். அந்த கல்யாணத்துக்கு தான் கடைல எல்லாரும் போய்ன்னு இருக்காங்க. நானும் அங்க தான் போறேன் என்றார் அந்த கடை முதலாளியின் (பி.ஏ) வேலுமணி.

வெங்கட்ராமனை பற்றி சொல்லியே ஆகனும்ங்க. எவ்வளவு கஷ்டப்பட்டு அவர் பொன்னுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்தாரு தெரியுமா???.., அதை சொல்லி மாள முடியாது. அப்படி இப்படின்னு ஒரு வழியா நல்ல மாப்பிள்ளைய பாத்து முடிச்சிடாரு, மாபிள்ளையோடைய, அம்மா தான் வரதட்சணை அதிகமா கேட்டாங்க, இருந்தாலும், அந்த மாப்பிள்ளைய விட மனசிலாம அவங்க கேக்குற ரெண்டு லட்சம் ரொக்கமும், காது மூக்கு மறைப்பதோடு, “வைர” நெக்லசையும்(சுமார் 5 லட்சம் இருக்கும்) போடுவதாக ஒப்புகொண்டார் வெங்கட்ராமன்.

மகாலக்ஷ்மி ஏற்கனவே அவர் அப்பாவிடம் போட்ட கட்டளை இதுதான்… “நான் ஒரு பரம ஏழைக்குகூட மனைவியாக இருக்கத் தயார்….வரதட்சணை வாங்குபவருக்கு மட்டும் மனைவியாக மாட்டேன், வரதட்சணை வாங்கரவங்கலாம் கையாலாகாதவர்கள்” இது விஷயம்லாம் அவருக்கு நல்லா தெரிந்தும் நல்ல சம்மந்தத்தை விடமுடியாமல் ஏற்பாடுகளை ஆரம்பித்தார்.. வெங்கட். அவள் அம்மா ஒரு நாள் தற்செயலாக அடுப்படியில் உலரியதில், இந்த வரதட்சணை விஷயம் `மகாலக்ஷ்மிக்கு` கல்யாணத்துக்கு முன்னாலே தெரிய வந்தது..

அவள் எவ்வளவோ எடுத்து சொன்னாள், இந்த கல்யாணம் வேண்டாம் என்று.. ஊருக்கே பத்திரிக்கை கொடுத்தாச்சு…இப்ப என்ன செய்ய சொல்ற… உடனே அவள் “நம்மளே விருப்பபட்டு நகைய போடறது வேற.. அவங்களா கேட்டு வாங்கறது வேற”…!!!

வெங்கட் உடனே, போய் மனச குழப்பிக்காம ஒழுங்கா தூங்கு… எல்லாம் அப்பா பாத்துக்குறேன் என்று சொன்னார்..துளியும் விருப்பமில்லாமல் குழப்பத்துடன் சென்றாள் அவர் மகள்.

வெங்கட்டின் முதலாளி வேற கல்யாணத்துக்கு முன்னாலே அவர் பொண்ணு கல்யாணத்துக்கு ரெண்டு பவுன் அன்பளிப்பா தந்தாருனா பாத்துக்கோங்க? அவர் முதலாளிக்கும், அந்த கடைக்கும் எவ்ளோ விசுவாசமா இருக்காருன்னு..!!!

அவரு, மேல எதாவது பழி போடனும்னே, அலையிற நம்ம விசுவநாதனுக்கு இந்த முறையும் ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம். ஆமா, விச்சு சார் முதலாளியோட தங்கச்சி பிள்ளை. அவரும் இந்த கடையிலே தான், இருபது வருஷமா மேனேஜரா இருக்காரு. நானும் நம்ம முதலாளிக்கு தான் பத்து வருஷமா (பி.ஏ) வா இருக்கன். எங்களுக்கெல்லாம் சீனியர் வெங்கட் சார் தான், கடைய ஆரம்பிச்சதிலிருந்தே அவர் அங்க தான் வேல செய்றாரு, இந்த கடை எனக்கு அத்துப்படி, எனக்கு ஒரு குறையும் இல்லை இவர் கிட்ட சேர்ந்த நேரம், நான் நல்லாவே இருக்கன். என்று நினைத்தபடி மண்டபத்தை நெருங்கினார் வேலுமணி.

மண்டபத்தின் வாயிலில், வாங்க வாங்க என்று எல்லாரையும் வாய் நிறைய புன்னகையுடன் வரவேர்த்துக் கொண்டிருந்தார் வெங்கட்ராமன். வேலுமணியை பார்த்ததும் கவனிப்பு கொஞ்சம் கூடியது. என்ன சார்?? எப்படி போகுது கல்யாணம்லாம்?

இதுவரைக்கும் சுமூகமா போகுது. எந்த பிரச்சனையும் இல்ல.!!

இனிமேலும் எல்லாம் நல்லா தான் போகும். நான் உள்ள இருக்கேன். நீ எல்லாரையும் கவனி என்று மண்டபத்தின் உள்ளே சென்றான் வேலுமணி. கல்யாணத்துக்கு கடையில் இருக்கும் ஒவ்வொரு ஊழியர்களாக வந்தபடி இருந்தார்கள். வெங்கட்ராமனின் எதிர்பார்ப்பு எல்லாம் மாணிக்கம் ஐயாவின் வருகைக்காகத் தான். அவர் தான் அந்த நகை கடையின் முதலாளி, ரொம்ப தங்கமான மனுஷன், அவர மாதிரி ஒருத்தர் இந்த பூமியில் வேற யாராவது பொறக்க முடியுமா? அதனால தான் எல்லாருக்கும் அவர புடிக்குது. எனக்கும் தான். என்று வாசலையே எதிர்பார்த்துக் கொண்டே, கல்யாணத்துக்கு வருவோர்களை வரவேர்த்து கொண்டிருந்தார் வெங்கட்ராமன்.

சிவப்பு கார் ஒன்று வந்து மண்டபத்தின் வாயிலில் வந்து நின்றது. வெங்கட்ராமனின் முகம் சட்டென்று மாறியது, அவருக்கு நன்றாக தெரியும் அந்த, கார் மேனேஜர் விசுவநாதன் கார் என்று, இருந்தும் வாயில் ஒரு பொய் சிரிப்புடன், அவரை வரவேற்றார் வெங்கட்ராமன். அவரை உள்ளே அழைத்துக்கொண்டு போனார் வெங்கட்ராமன். உடனே மேனேஜர் நான் பாத்துக்குறேன் நீ போய் வருபவர்களை கவனி என்றார். சரி, என்று வெளியே வர, வெங்கட் எதிர்பார்த்தது போல நீல கலர் கார் ஒன்று வந்தது. வெங்கட்டின் முகம் மலர்ந்தது. இம்முறை வருவது வேற யாரும் இல்லை அவர் முதலாளி மாணிக்கம்.

போய் கார் கதவை திறந்து அவரை வரவேற்றார் வெங்கட், மறு பக்க காரின் கதவை திறந்து அவரது மகனும் அந்த திருமணதிற்கு வந்தார்.

என்னப்பா எப்படி போகுது? என்றார் மாணிக்கம். உங்க புண்ணியத்துல நல்லா போகுது ஐயா. உள்ள வாங்க ஐயா என்றான் வெங்கட். மண்டபத்தின் உள்ளே வந்ததும் அவருக்கென்றே தனியாய் எடுத்து வைத்திருந்த “வி.ஐ.பி” இருக்கை எடுத்து முன் வரிசையில் போட்டர் வெங்கட். மேனேஜரும், (பி.ஏ) வேலுமணியும், முதலாளி பக்கத்தில் வந்து ஒட்டிகொண்டனர்.

என்னங்க, சம்மந்தி நகை, புடவைலாம் எடுத்து வர சொல்றாங்க, அவங்க தட்டுல வச்சி தருவாங்களாம், அத பொன்னு வாங்கிகொண்டு போய் மாத்திகிட்டு வரணுமாம். என்று வெங்கட்டின் மனைவி `தனபாக்கியம்` வெங்கட்டிடம் சொன்னாள்.

அதுக்கென்ன, என்று பொன்னு ரூமுக்குள்ளே சென்று வைத்த நகை புடவையெல்லாம் எடுத்து ஒரு பெரியத் தாம்புலத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு போய், அவர் சம்மந்தியிடம் சேர்த்தார் வெங்கட்ராமன். அதை ஊர் பார்க்க அவர் மகள் மகாலக்ஷ்மியிடம் வழங்கினார். அவளும் அதை காலில் விழுந்து பெற்றுகொண்டார். இந்த சடங்கு தேவையில்லை. இருந்தாலும், நகை சரியாய் இருக்கிறதா என்று பரிசோதித்து கொள்வதற்கு அவளின் வருங்கால மாமியார் சகுந்தலாவின் திட்டம் தான் இது.

இது முதற் வரிசையில் உட்கார்ந்திருந்த மேனேஜரின் கண்ணுக்கு பளிச் என்று தென்பட்டது. அந்த `வைர நெக்லஸ்` எங்கயோ பார்த்தது போல் தெரிந்தது. வேலு கிட்ட தானே அந்த நெக்லஸ் இருக்கும் லாக்கரின் சாவி இருந்ததே..! என்று சந்தேகப்பட்டு உடனே வேலுவை அழைத்து கொண்டு மாடிக்கு போனான் விச்சு.

என்ன விச்சு சார், எதுக்கு சார் என்ன மாடிக்கு கூட்டிட்டு வரிங்க?

கீழ ஒரே புழுக்கமா இருக்குது, இங்க பாரு எவ்வளவு சில்லுனு காத்து வருது, கொஞ்சம் நேரம் காத்தாரலாமுன்னு தான் இங்க உன்ன கூட்டிட்டு வந்தேன்,

பரவாயில்ல யா நம்ப வெங்கட்ராமன், எப்படியோ இந்த கல்யாணத்த அவர் ஒருத்தரு சம்பளத்துல இவ்வளவு தூரம் சிறப்பா கொண்டு வந்துடாரு. நம்ம இன்னும் அவருக்கு நிறைய செஞ்சிருக்கணும் நம்ம முதலாளி அவருக்கு ரெண்டே பவுன் தான் குடுத்தாரு, நான் அந்த இடத்துல இருந்தா நிறைய செஞ்சிருப்பேன், என்று சூசகமாக பேசி வேலுவின் வாயை கிளறினான், அந்த வைர நெக்லசை பற்றி அறிந்துகொள்ள.

வேலு, அந்த நெக்லஸ் எங்க வாங்குனதுன்னு கேட்டியா? அந்த நெக்லசும் நம்ம கடைல இருக்கிற நெக்லசும் ஒரே மாதிரியே, அதே டிசைன்ல இருக்குல?!! என்று வேலுவிடம் கேட்டார் விச்சு.

தயக்கத்துடன் “ஆமாம்” போட்டான் வேலு.

விச்சு உடனே எனக்கு எல்லாம் தெரியும், உண்மையை சொல்லு, இல்லனா ஐயா கிட்ட சொல்லிடுவேன் என்று மிரட்டினான். ஏது அந்த நெக்லஸ்??

விச்சு சாருக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சி என்று, அதனால தான் இப்படி மறைமுகமாக கேக்குறாரு என்று புரிந்துகொண்டான் வேலுமணி. இதுக்கு மேல உண்மைய மறைக்கறது பயனில்லை, பேசாம உண்மைய ஒப்புக் கொள்வோம் வேலு உண்மையை உளறிக் கொட்டினான். போன வாரம் வெள்ளிகிழமை மாலை நேரத்தில், அவரு என்ன கடையில கூப்ட்டாரு, நா போனதுக்கு அவர் இந்த மாதிரி நிலமையை சொன்னாரு, எல்லாம் நகையும் எப்படியியோ வாங்கிட்டாராம், ஆனா திடீர்னு அந்த வைர நெக்லசை மட்டும் காணலையாம், வீடு முழுவதும் தேடி பாத்துட்டாராம், கிடைக்கலாம். போலீஸ் கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று கேட்டேன். கல்யாண நேரத்துல போலீஸ் லாம் வந்தா, நல்லா இருக்காது அதே சமயம் கல்யாணமும் தடை பட்டுவிடும் என்று அவர் சொல்லலன்னு சொன்னாரு சார்.

அதனால ஒரு நாலு நாளைக்கு மட்டும் யூஸ் பண்ணிட்டு தருவதா ரொம்ப கெஞ்சி கேட்டுகினாரு. மறுபடியும் அதே மாதிரி வச்சிட்றத்தா எனக்கு கோவில்ல கற்பூரம் அடுச்சி சத்தியம் பண்ணி சொன்னாரு, யாருகிட்டயும் சொல்ல வேண்டாம் என்று ரொம்ப கெஞ்சி கேட்டுகினாரு. அவர பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல எவ்ளோ நேர்மையானவர் இது வரைக்கும் எதாவது உதவி நம்ப கிட்ட கேட்டிருப்பாரா? அதனால தான் லாகர்ல இருந்து எடுத்து கொடுத்தேன். நாலு நாளைக்கு நீங்களும் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோங்க சார் அவர் எப்படியும், சொன்ன மாதிரியே நாலு நாளைல நகைய வச்சிருவாரு, நீங்க இத பெருசு படுத்தாதிங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் பொன்னுக்கு கல்யாணம் இருக்கு சார்… என்று வேலு விச்சுவிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டார்.

“ஹா… ஹா.. ஹா.” வில்லன் போல சிரித்தார் விச்சு,

ஏன் சார் இப்படி சிரிக்கிறிங்க? இது போதும்யா எனக்கு. நீ சொன்னதெல்லாம் இந்த போன்ல நான் `ரெக்கார்ட்` பண்ணிட்டேன் என்று போனை எடுத்து காட்டினார் விச்சு. இனிமே, நான் சொல்ற மாதிரி தான் நீ கேக்கணும், இல்லனா இதுக்கு உடந்தையா இருந்த உன்னையும் முதலாளிகிட்ட போட்டு குடுத்துருவேன் என்றான் விச்சு.

சட்டென்று முகம் மாறியது வேலுமணிக்கு.சொல்லுங்க சார் இப்ப நான் என்ன செய்யனும்…

இப்ப வெங்கட்ராமன் கடையில இருந்து நகைய எடுக்கல, திருடி இருக்கான்.

சார்…!!???? என்ன சார் சொல்றிங்க, அவரு தான் நாலு நாளைல நகைய திருப்பி வச்சிருவாரே அப்புறம் அது எப்படி திருட்டு ஆகும்.

வச்சா தானே..!! அதுக்கு முன்னால் அந்த நகைய நாம திருடுறோம், அந்த பழிய வெங்கட்ராமன் மேல போடறோம். இதான் ப்ளான்.

சார், இது தப்பில்லையா சார் என்றார் வேலுமணி?

அப்ப, நீங்க பன்னதுலாம் சரியா என்று நக்கலாக கேள்வி கேட்டார் விச்சு சார். மௌனம் காத்தார் வேலுமணி.

பக்கத்தில் ஒரு சின்ன பையன் விளையாடி வந்து கீழே விழுவதை பார்த்தான், அவனை தூக்கி விட்டான் விச்சு. அவன் கையில் வட்ட வடிவிலான ஒரு விளையாட்டு பொம்மை வைத்திருப்பதை கண்டான். அதை பார்த்ததும் விச்சுவிற்கு அவன் சிறிய வயதில் விளையாடின நியாபகங்கள் சில வினாடிகளுக்கு வந்து சென்றன.

நேரத்த கடத்த கூடாது, உடனே அந்த வைர நெக்லஸ திருடனும், அந்த பழியை வெங்கட்டின் மேல் போடனும் என்ற நோக்கில் கீழே இறங்கி வந்தார் விச்சு, உடன் வந்தார் வேலுமணி விருப்பம் இல்லாமல்.

எல்லா சம்பர்தாயமும் முடிந்து, பொன்னு அந்த தட்டுடன் மணமகள் அறைக்கு சென்றாள்.

விச்சு அதை எப்படியாவது திருடனும் என்று, பொன்னு ரூம் பக்கமா போனான். அவள் அப்பா பொன்னு ரூமில் இருந்து சீக்கரம் கிளம்பனும் என்று சொல்லிகொண்டே வெளியே வந்தார்.

வெங்கட், எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்துருச்சி, நான் கிளம்பனும் இந்த “கிப்ட்ட” கொடுத்துட்டு போலாம்ன்னு வந்தன் என்றான். ஓ அப்படியா சரி உள்ளே வாங்க என்றான்.

உள்ளே சென்றதும் அவன் கண்ணுக்கு முதலில் தென்பட்டது, அந்த தாம்பூல தட்டு தான், அதில் அந்த வைர நெக்லஸ பார்த்தான், இவன் உள்ளே சென்று “கிப்ட்” கொடுத்ததும் விடாது இரும்புவது போல் பாவித்தான். உடனே அங்கு இருந்த இருவரும் பதறினார்..

மணப்பெண் `மகா` ஒரு பக்கம் செல்ல..

வெங்கட் உடனே வெளியே சென்று தண்ணீர் எடுத்து வந்தனர்.. இதற்க்கு நடுவில் தட்டில் இருந்த நகையை எடுத்து, அவனது நடிப்பை தொடர்ந்தான் விச்சு.

தண்ணீர் எடுத்து வந்ததும்.. விச்சு உடனே மயங்குவது போல் நடித்து.,கீழே விழுந்தான்.. அவரை வெங்கட் தண்ணீர் தெளித்து எழுப்பினான்.

வெளியே வந்து ஒரு ச்சாரில் உட்காரத்தான், பக்கத்தில் வேலுமணி.

கொஞ்ச நேரத்தில் கூச்சலும் குழப்பங்களும் மண்டபத்தில் நிலவியது.

ஒருவேளை, மேலே நாம் பேசியதை அந்த சிறுவன் கேட்டிருப்பானோ என்ற உறுத்தல் மட்டும் விச்சுவிற்கு.. உஷாராக விச்சு லாவகமாக பேசி அந்த குழந்தையை அழைந்து கொண்டு போய் காரில் ஏற்றினான், ஆனால் அந்த சிறுவனோ வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச வில்லை. உடன் இருந்த (பி.ஏ) வேலுமணி, விச்சுவிற்கு உதவியாக இருந்தான். அதிகாலை என்பதால், கொஞ்சம் இருள் சூழ்ந்து இருந்தது. அந்த சிறுவனின் கை, கால்களை கட்டி டிக்கியில் போடப்பட்டு, அந்த காரை விச்சு ஓட்ட, வேலுமணி முன்சீட்டில் உட்ட்கார்ந்தபடி இருவரும் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

அந்த கார் ஊர் எல்லையை தாண்டும் பை-பாஸ் ரோட்டிற்கு வந்தது. அங்கு பார்த்தால் நீண்ட வரிசையில் வண்டிகள் நிறுத்தப்பட்டு, காவலர்கள் சோதனை போடப்பட்டு இருந்தன. விச்சு நடுங்கினான். கூடவே வேலுமணியும் தான்.

முகத்தில் பயத்தை மறைத்துக்கொண்டு, பக்கத்தில் இருக்கும் வண்டி காரரிடம் எதனால எல்லாரையும் `செக்` பண்றாங்க? என்று விசாரித்தார் விச்சு,

என்ன செக் பன்றாங்கன்னு சரியா தெரியில தம்பி., ஆளாளுக்கு ஒன்னு ஒன்னு சொல்றாங்க..!!

இதை கேட்டதும் அந்த விச்சுவின் மனதில் “ஒருவேள போலீஸ் அந்த பையன தான் எல்லா வண்டியிலயும் தேடி வராங்களோ”..! என்று பக்கத்தில் உட்கார்ந்திருந்த வேலுமணியிடம் அந்த பையனின் கை கால்களில் கட்டி இருந்த கட்டையெல்லாம் அவிழ்த்து விட சொன்னார்.

இந்த தகவளை அறிந்ததும் காரின் முன் கதவை திறந்து வேலுமணி இறங்கினான். இரு பக்கமும் திரும்பி திரும்பி பார்த்தான். சக்தியின் வண்டி நோக்கி வந்தான். `காருக்கு` பின்னால் வந்து டிக்கியை திறந்து உடனே உள்ளே ஏறி சாற்றிக்கொண்டான், அந்த சில வினாடிகளில் அவனது கண்ணுக்கு ஒரு சிறுவன் கால்கள் கட்டியபடி இருப்பதை தூரத்தில் இருந்த சக்தி பார்த்தான். ஆனால் அவனது முகத்தை சக்தி சரியாக பார்க்கவில்லை இருந்தும் டிக்கியை திறக்கும் போது ஒரு மஞ்சள் அட்டை கீழே விழுவதை `சக்தி` பார்த்தான்.

போலீஸ் செக் பண்ணி முடிக்கற வரைக்கும், வேலுமணி அந்த சிறுவனின் கை கால்களின் உள்ள கட்டை அவிழ்த்து விட்டான். டிரைவர் சீட்டில் இருக்கும் விச்சு உடனே பையன் பத்திரம் என்று வேலுமணிக்கு எச்சரித்தான்.

கட்டு அவிழ்தவுடன் பாதி மயக்கத்தில் அந்த சிறுவன் எழுப்பி பின் சீட்டில் உட்காரவைத்தான், பக்கத்தில் வேலுமணி உட்கார, புதிய வண்டியில் உட்கார்ந்துகொண்டே இதை கவனித்தான் சக்தி. சக்திக்கு எதுவும் புரியவில்லை என்றாலும், ஏதோ தப்பு நடக்கிறது என்று தெரிகிறது. எழுந்த சிறுவன் மயக்கத்தில் மீண்டும் கண் அசந்தான்.

போலீஸ் அந்த காரை செக் பண்ணியும் முடித்தது.

சக்தி வண்டிய கொஞ்சம் முன்னாடி தள்ளி, கீழே இருந்த அந்த மஞ்சள் அட்டையை எடுத்தான்.அந்த மஞ்சள் அட்டை வேறு ஒன்றும் இல்லை. வெங்கட்ராமன் இல்லத் திருமண விழா அழைப்பிதழ் தான்.

போலீஸ் சக்திய செக் பண்ணி முடிக்கும் முன், அவன் முன்னாள் இருந்த விச்சுவின் கார் சட்டென்று சென்றது. சக்தி இதை போலீஸிடம் தெரிவிக்க வில்லை. சொல்லலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் அவனிடம் இருந்து தீருவதற்குள் அந்த கார் அவனை விட்டு வெகு தூரம் சென்றது.

சக்திய செக் பண்ணி முடித்ததும் அந்த கார் பின்னால் சென்றான் சக்தி. கொஞ்சம் தூரம் சென்ற சக்திக்கு, அந்த கார் அவனது கண்ணுக்கு தென்படவில்லை.

ஒரு வகை மன உருத்தலுடன் வீடு திரும்ப வண்டியை திருப்பினான். திருப்பும் பொழுது அந்த திருமண பத்திரிக்கையை ஒரு முறை எடுத்து பார்த்தான்.

அதில், வெங்கட்ராமனின் பெயரும் அதன் கீழ் அவரது செல் நம்பரும் இருப்பதை கண்டான் சக்தி.

சரி போன் பண்ணி பார்க்கலாம் என்று அதில் இருக்கும் எண்ணை பார்த்து தொடர்பு கொள்ள முயற்சிக்கும் பொழுது, அதிலிருந்த கடைசி எண் அவன் கண்ணுக்கு சரிவர தெரியவில்லை, கொஞ்சம் அழிந்த மாதிரி தெரிந்தது.

ஒரு சாயலில் பார்த்தால் எண் “ஆறு” போல உள்ளது, ஒரு சாயலில் பார்த்தால் எண் “சுழியம்” அதாவது (பூஜ்ஜியம்) என்று அவன் கண்ணுக்கு தெரிந்தது. அப்பொழுது பார்த்து அவனது போனில் வேறு ஒரு அழைபிற்கான கட்டணம் மட்டுமே இருந்தது.

அதனால் எந்த எண்ணிற்கு போன் பன்னலாம் என்று குழம்பினான் சக்தி.

ஆறா? சுழியமா? என்று குழப்பத்துடன் மீதமுள்ள ஒன்பது நம்பரையும் போனில் பதிவு செய்து கடைசி எண்னிற்காக யோசித்தபடி நிமிர்ந்து பார்த்தான்.

வானம் மெல்ல மெல்ல வெளுக்க தொடங்கியது, அதில் சிவப்பு நிறத்துடன் கதிரவன் காட்சியளிப்பதை பார்க்கையில், சூரியனை வணங்கியபடி, அவனது கை விரல் அந்த போனில் கடைசி எண் `சுழியமாய்` தான் இருக்கும் என்று யூகித்து பதிந்தான்.

சரி தற்செயலோ, அதிர்ஷ்டமோ என்று அவன் அந்த எண்ணை தொடர்பு கொள்ள பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தான்.

`ரிங்` போனது…

அந்த பக்கம் இருப்பவர் போனை எடுத்து எதுவும் பேசாமல் காதில் வைக்க, சக்தி பதட்டமாக `ஹலோ` சார் இருக்கீங்களா?? என்றான்.

மறுபக்கம், ஏதோ உருட்டும் சப்தம் கேட்டது. பின், மீண்டும் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.

போனில் இருந்த கடைசி காசும் தீர்ந்து போனது.

சரி, வீட்டுக்கு போகலாம் என்று வண்டியை திருப்பினான். கொஞ்ச தூரம் போகையில் மீண்டும் அந்த நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.

சட்டென்று வண்டியை நிறுத்தி, போனை எடுத்து `ஹலோ சார் ` அங்க எதவாது குழந்தைய காணுமா சார்? என்று கேட்டான்.

அந்த நிமிடம் அவனது எண்ணம் முழுவதும் கார் டிக்கியில் இருந்த குழந்தையை பற்றி தான்.

மீண்டும் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.

என்ன பண்ணலாம்.. என்று யோசித்துகொண்டே வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்தான்.

மீண்டும் ஒரு அழைப்பு வந்தது. இந்த முறை எப்படியாவது தெளிவாய் கேட்டு விட வேண்டும் என்று போனை வேகமாக எடுத்தான்.

டேய்… சக்தி காலங்காத்தால எங்க டா போன?

நான் ஒரு கல்யாணத்துக்கு போகணும் சீக்கரம் வா..! என்ன வண்டியில இட்டுன்னு போடா.. நேத்தே சொன்னன்ல.. எங்க போய் தொலஞ்ச என்றார் சக்தியின் அப்பா கோபத்துடன்.

ஹ்ம்ம், பக்கத்துல தான் ப்பா இருக்கன். இதோ வந்துட்றன் ப்பா என்று வீட்டுக்கு சென்றான்.

வீட்டுக்கு போனதும் அவனது அப்பா அவனை திட்டி தீர்த்தார். இன்னும் உனக்கு அஞ்சு நிமிஷம் தான் டைம், சீக்கரம் கிளம்பி வா, என்று அவன் அப்பா வெளியே வந்து அவனது வண்டியை துடைத்து கொண்டிருந்தான்.

சக்தி கிளம்பி வெளியே வந்தான்.

உள்ள, டேபிள் மேலே கல்யாணப் பத்திரிக்கை வச்சி இருந்தன்., அத போய் எடுத்துட்டு வா என்றான் அவன் அப்பா.

சக்தியும் உள்ளே போய் அந்த பத்திரிக்கையை எடுத்து வந்தான்.

அப்பாவிடம் கொடுத்தான்.

சில வினாடிகளில் சட்டென்று, அவன் அப்பாவிடமிருந்து பிடுங்கினான்.

வண்டியில் ஸ்பீடோமீட்டர் பக்கத்தில் மடித்து வைத்திருந்த அந்த காரில் இருந்து விழுந்த பத்திரிகையுடன், இந்த பத்திரிக்கையும் ஒப்பிட்டான்.

இரண்டும் ஒன்றாக இருந்தது.

பரபரப்புடன் உடனே அவனது கண் வெங்கட்ராமனின் செல் நம்பரை தேடியது.

பார்த்தால் கடைசி எண் மாறுபட்டு இருந்தது.

சக்தியின் அப்பாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. இன்னாடா ஆச்சு என்றான்.

சொல்றன் ப்பா வண்டியில ஏறுங்க என்று இருவரும் மண்டபத்திற்கு சென்றனர்.

மண்டபத்தின் வாயிலில் வாழை மரங்களில் ஒன்று கீழே தள்ளப்பட்டு இருந்தது, மண்டபத்தில் ஆங்காங்கே கூச்சல்களும் குழப்பங்களும் இருந்தது, மணமேடை அருகில் சில பேர் தலையில் கைவைத்து உட்கார்ந்து கொண்டிருந்தது. சிலர் கலங்கிய கண்களுடன் சுவற்றில் சாய்ந்தபடி இருந்தனர்.

அதில் ஒருவர், எப்படி நடக்க வேண்டிய கல்யாணம் எப்படி நின்னு போனதே என்று உருக்கமாக சொன்னார்.

இதை பார்த்த சக்தியும், சக்தியின் அப்பாவும் அதிர்ந்து போனார்கள்.

என்ன ஆச்சு, என்று வெங்கட்டின் உறவினரிடம் சக்தியின் அப்பா விசாரித்தார்.

சக்தி உடனே நான் நினைத்தது சரி தான், என்று இங்க யார் குழந்தயாவது காணவில்லையா என்றான், எல்லோரும் சக்தியை திரும்பி பார்த்தார்கள்.

என் குழந்தையை நீ பார்த்தியா என்றான் அந்த சிறுவனின் தாயார் சக்தியிடம்.

ஆமாங்க, அதிகாலைல பை-பாஸ் ரோடு கிட்ட ஒரு சிவப்பு காரில் அவனை பார்த்தேன்.

சிவப்பு கார் என்றவுடன், வெங்கட்ராமன் திரும்பி பார்த்தான்.

சிவப்பு காரிலா?

அந்த, கார் நம்பர் ஞாபகம் இருக்காதா என்றார் வெங்கட்ராமன்?

கொஞ்சம் நினைவில் இருக்கு “72”.. அப்புறம் என்று யோசித்தான் சக்தி.

சந்தேகமே இல்லை, இது விசுவநாதனின் வேலையா தான் இருக்கும்.

அந்த சிறுவனின் தாயும் அவருக்கு மகள் மாதிரி தான்.அவள் குமுறுவதை இவரால் பார்க்க முடியவில்லை, எங்க வீட்டு விஷேஷத்துல இப்படி ஆச்சுனு ஊர் முழுவதும் தெரிய வேணாம், இந்த ஒரு களங்கமே போதும் என்று சக்தியை கூடிக்கொண்டு விச்சுவின் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

போகும் வழியில், `வெங்கட்` தனது மகளின் திருமணம் நின்ற கவலையில் கண்களில் நீர் ததும்ப உட்கார்துகொண்டு வந்தார்.

கவலை படாதிங்க சார், என்று சக்தி ஆறுதல் கூறியபடி சென்றனர்.

தம்பி உனக்கு தெரியாது, என் பொன்னு கல்யாணம் நின்றதுகூட எனக்கு இவ்வளவு வருத்தம் இல்ல தம்பி.

கல்யாணத்துல நகை காணும்னு சொன்னதும், சம்மந்தி உடனே கல்யாணத்த நிறுத்த..

எங்க முதலாளி ஐயா போய் என் சம்மந்தி கிட்ட பேசினாரே..! அத நினச்சா தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

அப்படி என்ன சார் சொன்னங்க ..?

உங்களுக்கு இன்னும் மூணு மாசத்துக்குள்ள நகை கைக்கு வரும், நல்ல நேரம் முடிய போகுது , சீக்கரம் மாப்பிள்ளைய தாலி கட்டச் சொல்லுங்க என்று அவரின் முதலாளி அந்த சகுந்தலா அம்மாவை கேட்க..

முடியவே முடியாது என்று, “கொக்கு” போல் ஒற்றை காலில் நின்றாள் சகுந்தலா..

நகை இருந்தா கல்யாணம், இல்லனா நாங்க கிளம்பறோம் என்று மாபிள்ளையை எழுப்பினான் சகுந்தலா.

ஒரு நிமிஷம் என்று வெங்கட்ராமனை தனியே ஒரு ரூமுக்குள் அழைத்தார் அவன் முதலாளி.

ஏம்ப்பா வெங்கட்ராமா, நம்ம கடையில இதே மாதிரி ஒரு நெக்லஸ் இருக்குதுல அத எடுத்துட்டுவா.. முதல்ல உன் பொன்னு கல்யாணம் தான் முக்கியம் என்றார்.

வெங்கட்டின் கண் மேலும் கலங்கியது, ஐயா நா பெரிய தப்பு பண்ணிட்டன் என்று முதலாளியின் காலில் விழுந்தான்.

எழுந்திரு ப்பா, என்று அவனை தூக்கி விட்டார் அந்த முதலாளி.

என்ன மன்னிச்சிருங்க ஐயா, என்று அழுதான்.

என்ன ஆச்சு..?

ஏற்கனவே நான் கல்யாணத்துக்காக வாங்கன நெக்லஸ் திருடு போய்டுச்சு ஐயா அதனால….????!!!

அதனால…

கடைல இருக்குற நகையத்தான், எடுத்துட்டு வந்தேன். இங்க இருந்தது கடையில இருந்த அதே நகை தான்.இப்ப இதுவும் காணாம போய்டுச்சு, என்று தேம்பினான் வெங்கட்ராமன்.

நீ இப்படி செய்வேன்னு நா கனவுலகூட நினைத்து பார்கவில்லை…!!!

அவன் முதலாளி, சில வினாடிகள் பொறுமை காத்து..

சரி உனக்கு ஒரு ச்சான்ஸ் தரேன், எனக்கு நீ நகைய தர வேண்டாம்.. அதுக்கு பதிலா என் பையனுக்கு உன் பொன்ன கொடு, இதே மேடையில கல்யாணத்த வச்சிக்கலாம் அவங்க நிறுத்தனா நிறுத்திட்டு போகட்டும்..

நீ என்ன சொல்ற????

தயங்கினான், இல்ல ஐயா, இது சரி பட்டு வராது, என்று சொல்ல மேலும் கோபப்பட்டார் மாணிக்கம்,

சரி, இது தான் உனக்கு கடைசி ச்சான்ஸ் . நகைய இன்னும் ரெண்டு நாளைக்குள்ள வந்து கடையில ஒப்படைக்குற.

இல்லனா நான் போலீஸ்யிடம் போக வேண்டியது இருக்கும்.. பாத்துக்கோ..! என்று எச்சரித்து சென்றார் முதலாளி.

முதலாளி சென்றதும், வேறு பிடிப்பின்றி, அங்கு சகுந்தலா சொல் கேட்டு மாப்பிளை வீட்டார் அனைவரும் கல்யாணத்தை நிறுத்தி சென்றனர்.

வெங்கட் அவர்களிடம் எவ்வளவோ கேட்டுப்பார்த்தான், கெஞ்சியும் பார்த்தான், அழுதும் பார்த்தான். பலன் அளிக்கவில்லை. “மகாலக்ஷ்மி” ஓடி வந்து “நா அப்பவே சொன்னன் கேடீங்களா ப்பா” என்று அவரை வந்து கட்டி அணைத்துக்கொண்டார்.

இதற்க்கு நடுவில் வெங்கட்டின் அண்ணன் மகளின் குழந்தையை காணவில்லை என்று அலறி வந்து சொல்ல, ஆளாளுக்கு ஒரு பக்கம் போய் தேட ஆரம்பித்தார்கள்.

“யார் கண்ணு பட்டுதோ தெரியில, அடுத்தடுத்து இப்படி ஆகுது.”

ஒன்னும் கவலை படாதிங்க சார், விஸ்வநாதன் தான் குழந்தைய கடத்தனாரன்னு தெரிஞ்சிடுச்சில அவர சுலபமா புடிச்சிடலாம் என்றான் சக்தி..

இருவரும் விஸ்வநாதனின் வீட்டிற்கு சக்தியோடைய பைக்கில் சென்று அடைந்தனர்.

சக்தி காலையில் பார்த்த அந்த சிவப்பு கார் விச்சுவின் வீட்டின் முன் வெளியில் நின்று கொண்டிருந்தது.

காலிங் பெல்லை அடித்தான் வெங்கட்.

வறேன் வறேன்.., என்று சொல்லிகொண்டே வந்து கதவை திறந்தான் விஸ்வநாதன்.

வெங்கட்டை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான். முகத்தை சகஜமாக வைத்துகொண்டு “கல்யாணம்லாம் எப்படி நடந்தது”? என்று விசாரித்தான்.

பதிலுக்கு குழந்தை எங்கே என்று கோபமாகக் கேட்டான் வெங்கட்.

எந்த குழந்தை, எனக்கு ஒன்னும் தெரியாது என்றான் விஸ்வநாதன்..

நடிக்காத டா, எங்களுக்கு எல்லாம் தெரியும், நீ தான் குழந்தைய திருடுன என்று..

இப்ப எங்க அந்த குழந்தை? எதுக்கு அந்த குழந்தைய கடத்துன? உண்மைய இப்ப நீ சொல்லிறியா, இல்லையா??? என்று ஆத்திரத்தில் பொங்கினான் வெங்கட்ராமன்.

நான் எந்த குழந்தையையும் கடத்தவில்லையே..!!

சார், அவன் உண்மையை சொல்வது மாதிரி தெரியில.. சக்தி உடனே வீட்டில் விளையாடி கொண்டு இருக்கும் அவனது இரண்டாவது குழந்தையை தூக்கி கையில் வைத்துகொண்டான்.

ஒழுங்கா உண்மைய சொல்லிட்டு குழந்தைய வந்து வாங்கிக்கோ.. நீங்க வாங்க சார் என்று வெங்கட்டை அழைத்தான் சக்தி குழந்தையுடன்..

ஒரு நிமிஷம் இருங்க நடந்ததை சொல்லிட்றேன்.. குழந்தைய நான் தான் கடத்துனேன்..

சக்தி உடனே, விரிந்த கண்களுடன் அதான் எங்களுக்கு தெரியுமே..?

இப்ப எங்க அந்த பையன்? எதுக்காக கடத்தன.??

மூச்சி வாங்கிகொண்டு, விச்சு மெல்ல சொல்ல ஆரம்பித்தான்.

“இரண்டு வாரத்திற்கு முன்னால் ஒரு நாள் இரவு, மாமா(முதலாளி) என்ன கூப்பிட்டு இருந்தாரு..

நானும் அவர் வீட்டுக்கு போயிருந்தன். அவரு என்ன சொன்னாருன்னா….

இன்னும் இரண்டு நாளில் வெங்கட் பொன்னுக்கு கல்யாணம், நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ, எனக்கு தெரியாது.. அந்த பொன்னு கல்யாணம் நடக்க கூடாது.

என்ன மாமா சொல்றிங்க.. என்னாச்சி?? நீங்களா மாமா இப்படி சொல்றிங்க? என்று பதட்டத்துடன் கேட்டான்.

ஆமா, என் பையனுக்கு என்னடா குறைச்சல்.. கொஞ்சம் “தண்ணி” பழக்கம் இருக்குது அவ்ளோ தானே..! ஊர்ல யாருக்கும் இல்லாததா?

அதுக்கு போய், என்ன உன் பையன் “ஒழுக்கமில்லாதவன்” அப்படி இப்டின்னு சொல்லி என் பையன வேணாம்னு சொல்றான்..

ஆயிரம் பொண்ண, நான் என் பையனுக்கு பாக்கட்டுமா?

ஏதோ என் பையன் ஆசப்பட்டான் என்று, இறங்கி வந்து கேட்டா அந்த வெங்கட் பையன் ரொம்ப தான் ஆடறான்..

அவன்கிட்ட எவ்ளோ தூரம் கெஞ்சி இருப்பன்.. நா முதலாளி மாதிரியா அவன் கிட்ட பழகிருப்பன்…அப்படி என்ன டா அவனுக்கு திமிரு?

என்னையே சுற்றி இருந்த பையன், இப்ப இன்னானா மறுபடியும் இதபத்தி என் கிட்ட பேசாதிங்கன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டான்.

அதலாம் எனக்கு தெரியாது.. அந்த பொன்னு கல்யாணம் நடக்க கூடாது. அவ்ளோ தான். அப்படியே அந்த பொன்னுக்கு கல்யாணம் நடந்தா அது என் பையனோட தான் நடக்கணும்.

நீ என்ன வேணாலும் பண்ணு, பிரச்சனை வந்தா நான் பாத்துக்குறேன்.

ஆனா ஒன்னு, இதுல என் பேரு கொஞ்சம் கூட வெளியில வரவே கூடாது, நான் என்ன லூசா அவன் பொன்னு என் பையன கல்யாணம் செய்யலன்னதும் அவன வேலைய விட்டு அனுப்பர்துக்கு.. இதல்லாம், கொஞ்சம் நாசூக்கா தான் கையாளனும் என்று மாமா சொன்னார்.

நீ போய் கல்யாணத்த நிறுத்துற வழிய பாரு, அன்னிக்கு என் பையனோட தான் அந்த பொன்னுக்கு கல்யாணம் நடக்கணும், அதுக்கு உன்டான ஏற்பாடுலாம் நான் பண்றேன் என்றார் அவர்.

நிறையே பிளான் பண்ணன், எல்லாம் சொதப்பலாவே முடிஞ்சிது… அன்னிக்கு காலைலதான் தெரிஞ்சுது.. இந்த `நெக்லஸ்` இல்லனா கல்யாணம் தன்னால நின்னுடும்னு அதனால தான், அந்த நகைய உன் பொன்னு ரூமுக்கே வந்து திருடினேன்..

இன்று, இன்னும் ஒரு விஷயம் தெரிய வந்தது..

இல்ல வெங்கட் வேண்டாம், அத சொன்ன நீ ரொம்ப வருத்தபடுவ..!!

இதுக்கும் மேலயுமா நான் வருத்த பட போறேன்.

நீ உன் பொண்ணுக்கு ஒரு மாபிள்ளைய பார்த்தாயே அதுகூட நம்ம அய்யாவோட செட்-அப், தான். நீ நகைய ரெடி பண்ணி இருந்தால் கூட அந்த பொம்பள “சகுந்தலா” கல்யாணத்த நிறுத்தி இருக்கும். மாமா அவர்களுக்கு கொடுக்கவேண்டியதுலாம் ஏற்கனவே செஞ்சிட்டாரு இந்த விஷயமே எனக்கு இப்ப தான் தெரியும், தெரிஞ்சிருந்தா நான் நெக்லசையும் எடுத்து இருக்க மாட்டேன், அந்த குழந்தையையும் கடத்தி இருக்க மாட்டேன்.

என், மேல நம்பிக்க இல்லாம மாமா இப்படி செஞ்சிடாரு போல,

அப்படியே..இடிந்து போய், சுவற்றில் சாய்ந்தபடி கீழே உட்கார்ந்தான் வெங்கட்ராமன்.

சக்தியும் அதிர்ந்து போனான்.

சில வினாடிகளுக்கு பின் சக்தி, அதுக்கு ஏன் பையன கடத்துனீங்க என்று கேட்டான்.

அதுவா…நகைய திருடுவது பத்தி, நானும் வேலுமணியும் மாடியில பேசிட்டு இருந்தப்போ அந்த பையன் கேட்டுட்டான்..

அந்த பையன் யார் கிட்டயாவது சொல்லி பிளான கெடுத்துருவான்னுதான் அந்த பையன கடத்தினோம், என்று எல்லா தவறுகளை பாதி வார்த்தைகளை சொல்லி மீதி வார்த்தைகளை முழுங்கியபடி ஒப்புகொண்டான்.

அடப் பாவிகளா..!!!! “வேலுமணியும்” இதற்க்கு உடந்தையா?

இப்ப அந்த குழந்தை எங்க தான் இருக்கு? என்று கேட்டான் சிவத்த முகத்துடன் வெங்கட்,

தெரியவில்லை, வேலுமணியிடம் தான் நான் பையனை அனுப்பி வைத்தேன்.

சரி, அவன நான் பாத்துக்குறேன், இப்ப சொன்ன மாதிரியே, எங்கு வந்தும் நீ இங்க சொன்னத அப்படியே சொல்லனும் என்று எச்சரித்து சென்றனர் சக்தியும் வெங்கட்டும். அவனும் வேறு வழியிலாமல் சரி என்றான். அதுக்குள்ளே விச்சு முதலாளிக்கு போன் செய்து அவர்களை எச்சரித்தான்.

வெளியே வந்து வேலுமணிக்கு போன் பன்னான் வெங்கட்.

அவன் போனை எடுக்கவில்லை. மறுமுறை முயற்சித்தான் அப்பொழுதும், அவன் போனை எடுக்கவில்லை.

திரும்பியும் அவர்கள் இருவரும் அந்த பை-பாஸ் ரோடு வழியாய் வந்தனர். சக்தி விடியற்காலையில் பார்த்த அதே வரிசை, அதே கண்காணிப்பு இன்னும் முடியவில்லை.

அந்த வழியில் இருவர் பேசிக்கொண்டு போவது அவன் காதுகளில் விழ, அவனுக்கு காலையில் பேசிய அந்த “ராங் கால்” நினைவிற்கு வந்தது..

இவன் போனை எடுத்தான். அதில் காசு இல்லை என்றதும், வெங்கட்டிடம் போன் வாங்கினான்.

சார், உங்க நம்பர சொல்லுங்க என்று வெங்கட்டிடம் கேட்டான்.

இப்ப எதுக்கு அதலாம் என்று கேட்டான்….

சொல்லுங்க சார்.

“நம்பரை சொன்னான் வெங்கட்”.

வெங்கட் சொன்னதில் கடைசி நம்பரை மட்டும் அழித்து அதற்க்கு பதில் சுழியம் (ஜீரோ) என்ற எண்ணை போட்டு, கால் பன்னான்..

வெங்கட்டின் போனில் (எம்.டி) என்று அந்த செல் நம்பர் வெங்கட்டின் போனில் பதிவு செய்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

என்னாச்சி என்றார் வெங்கட்.

வெங்கட்டிடம் நடந்ததை சொன்னான்.

வெங்கட்டின், முகம் வியர்த்தது. இந்த மாதி ஆளுங்கலாம் சும்மா விடக்கூடாது எப்படியாவது போலீஸ் ல பிடிச்சி கொடுக்கணும் என்று சக்தியிடம் சொன்னான் வெங்கட்.

முதலாளியின் வீட்டுக்கு போய் பாக்கலாம் என்று இருவரும் வேகமாகச் சென்றனர்.

முதலாளி வீடு இருக்கும் ரோடு ஒரு குறுகியச் சாலை. அது ஒரு ஒரு வழிச் சாலை என்றும் சொல்லலாம்.

தூரத்தில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வருவதை பார்த்த சக்தி, வண்டியின் வேகத்தை குறைத்து கொஞ்சம் ஓரம் கட்டினான்.

ஆம்புலன்ஸ் அவர்களை வேகமாகக் கடந்தது.

ஆம்புலன்ஸ் சென்றதும் அவர்கள் இருவரும், முதலாளி வீட்டுக்கு போய் பாக்கலாம் என்று சென்றனர். இருவருக்கும் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அங்கே அவரது வீடு பூட்டி இருந்தது. ஆனால் அவரது கார் மட்டும் வெளியே இருந்தது, இருவரும் குழப்பத்தில் இருந்தனர்.

அந்த கார் பக்கத்தில் பாட்டில் ஒன்று உடைந்திருந்ததை கண்டான் சக்தி,

சார்… சார்… என்று வெங்கட்டை நகர்த்தி விட்டான் சக்தி ..கீழே பாத்து சார்..

பாட்டில் உடைந்திருந்தை பார்த்தார் வெங்கட். பின் அதை எடுத்து பார்த்து தூரப் போட்டான் சக்தி.

பின், கொஞ்ச நேரம் அந்த காரை உற்று பார்த்தான் ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று… காருக்கு கீழே பார்த்தான்… எல்லா பக்கமும் பார்த்தான் அவனுக்கு பெரிதாய் சொல்லும்படி ஒரு தடயமும் அவனுக்கு கிடைக்கவில்லை. சக்தி சில வினாடிகள் சுதாரித்து…எதுவும் பேசாமல், திடீரென்று வெங்கட்டை வண்டியில் ஏற்றிக்கொண்டு, குறுக்கு வழியில் சென்று, ரோந்து பணியில் இருக்கும் காவலர்களுடன் இருவரும் இணைந்தனர்.

இன்னும் அந்த சோதனை முடியவில்லை.காலை சோதனை இட்டது போல், எல்லா வாகனங்களையும் பரிசோதித்து கொண்டிருந்தனர் காவலர்கள்.

அங்கிருந்து, அதி விரைவாக ஆம்புலன்ஸ் `சைறேன்` சத்தத்துடன் வந்தது.

காவலர்கள், அந்த வண்டிக்கு வழி விட, மற்ற வண்டிகளை நகரச் வழி செய்வோம் என பேசிக்கொண்டிருந்தனர்.

சக்தி உடனே, சார் அந்த வண்டிய கொஞ்சம் செக் பண்ணிட்டு அனுப்புங்க சார்..

எதை ஆம்புலன்ஸ்சையா?

ஆமா சார்..!!!!

யார்ரா நீ… சுத்தப் பைத்தியகாரனா இருப்ப போல…. நம்ம நிறுத்துற அந்த சில நிமிடங்களில் கூட ஒரு உயிர் போவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கு.. அதனால இதை மட்டும் நான் செய்யமாட்டேன்..

ஏம் ப்பா கான்ஸ்டெபில், எல்லா வண்டியையும் கொஞ்சம் தள்ளி நிறுத்த சொல்லு…

“ஓக்கே” சார் என்றார் கான்ஸ்டெபில்…

சார்.. ப்ளீஸ் சார், எனக்காக ஒரே நிமிஷம் நிறுத்தி பாருங்க சார்…

சக்தியின் கண்களில் இருந்த ஏக்கத்தையும், உண்மையையும் பார்த்த அந்த இன்ஸ்பெக்டர்.

கான்ஸ்டெபில், அந்த ஆம்புலன்ஸ்ச நிறுத்து.

சார்..!!!!

நிறுத்துயா?

நிறுத்து நிறுத்து… வேகம் குறையாமல் வந்தது வண்டி..

இந்த பக்கம் அணைத்து காவலர்களும் வழி மறிக்க, வண்டி சட்டென்று நின்றது வண்டி.

நின்றதும், அதன் பின் கதவை திறந்தார், இன்ஸ்பெக்டர்..

இன்ஸ்பெக்டருக்கு காத்திர்ந்தது அதிர்ச்சி.

உள்ளே அனைத்தும் விலை மதிப்பிலாத `பழங்கால ஐம்பொன் சிலைகள்`, சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது, மேலும் அவை தான் நம் பழமைக்கு அடையாளம். மறுபக்கம் ஒரு மூலையில் சக்தி தேடி வந்த சிறுவன் மயங்கிய நிலையில் உள்ளே இருந்தான்.

காவலர்கள் தேடுவது கிடைத்தது.

முதலாளியும், பி.ஏ வேலுமணியும் கையும் களவுமாக மாட்டிகொண்டனர். இருவரின் கைகளிலும் விளங்கு போடப்பட்டது.

குழந்தையின் முகத்தில் தண்ணீர் தெளித்தார் இன்ஸ்பெக்டர்.. குழந்தை லேசாக கண் விழித்தது..

உன் பேரு என்ன ப்பா??

பதில் எதுவும் வரவில்லை.. என்னைய்யா பையன் எதுவும் பேசமாட்டிக்கிறான்..

இல்லை சார், அவன் பேசமாட்டான்.. பிறவியில இருந்தே அவனுக்கு பேச்சு வராது.. அதை கேட்டதும் சக்தி அதிர்ச்சி அடைந்தான்.. முதலாளியும் தான்…

பக்கத்தில் இருந்த வெங்கட்டை பார்த்ததும் குழந்தையின் கண்கள் விரிந்தது, அவனிடம் வர ஏங்கியது அவனது கைகள் கண்களும் தான்.

அந்த பையன் யாரு??? என்றார் இன்ஸ்பெக்டர்..

இன்ஸ்பெக்டரிடம் அனைத்து விஷத்தையும் எடுத்து சொன்னார் வெங்கட்ராமன்.

பின்னர், குழந்தை வெங்கட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சக்தியை பாராட்டி அனுப்பிவைத்தார். அங்கிருந்த காவலர்கள் “சக்திக்கு” சல்யூட் அடித்தனர்.

வெங்கட்டுடன், சக்தி மீண்டும் மண்டபத்துக்கு கிளம்பினர்…

போகும் வழியில்…

சக்தியின் கூர்மையை கண்டு வியந்தான் வெங்கட்…

நீ எப்படி சக்தி, குழந்தை அந்த ஆம்புலன்சுல தான் குழந்தை இருக்குதுன்னு யூகிச்ச என்று வெங்கட் கேட்டார்.

அதுவா சார் எல்லா தப்பு பண்றவங்களும் அவங்களுக்கே தெரியாம சில தடயங்கள விட்டுட்டு போவாங்க சார்..

அந்த மாதிரி உங்க முதலாளியும்(நக்கலாக) நமக்காக சில இடத்துல தடயங்கள விட்டுட்டு போயிருந்தார்.

அது என்னது??!!

இன்று காலை உங்களுக்கு “போன்” பண்ண்றதுக்கு பதிலா வேற ஒருத்தருக்கு “போன்” தெரியாம பண்ணிடன், அங்கு சில பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது, கூடவே “சிலையெல்லாம் பத்திரம்” என்று யாரோ சொன்னது என் காதில் வந்து விழுந்தது, இப்ப தான் தெரிந்தது அது உங்கள் முதலாளி என்று..!

கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுப்பா என்றார் `வெங்கட்` சக்தியிடம்.

சார், நாம ரெண்டு பேரும், உங்க முதலாளி வீட்டுக்கு போனோம்ல, அவரு வீடு பூட்டி இருந்தாலும் அவரு காரு மட்டும் அங்க இருந்துதே…!!

ஆமா, “அதுல தான் எனக்கு ஒரு சின்ன தடயம் கிடச்சிது.”

நீங்க நல்லா கவனிச்சிங்களா அந்த கார்ல “லைப் இஸ் கோல்ட்” என்று ஒரு வாசகம் எழுதி இருந்துதே கவனித்தீர்களா????…

ஆமா, இது எங்க கடையின் விளம்பர வாசகமாச்சே..!!!!

ஹ்ம்ம் அதே, வாசகம் அந்த ஆம்புலன்ஸின் பின் பக்கமும் எழுதி இருந்துதே அத நீங்க பாத்திருக்க மாட்டிங்க??

?????!!!!

அந்த விளம்பர வாசகம் உங்க “நகை கடைக்கும்” பொருந்துற மாதிரி இருந்துச்சு, அப்புறம் அந்த “அம்புலன்சுக்கும்” பொருந்துற மாதிரி இருந்துச்சி.

அதுவும் இல்லாம,அந்த அவரு வீட்டுக்கு முன்னாடி கண்ணாடி பாட்டில் ஒடஞ்சி இருந்துதே.., அது ஒரு மருந்து பாட்டில் “அனஸ்த்தீசியான்னு” சொல்லுவாங்க… முதலுதவிக்காகதான் அதை அதிகம் பயன் படுத்துவாங்க.. அப்புறம் அத ஓரமா எடுத்து போடும் போது, ஆம்புலன்சில பயன்படுத்தும் “வட்ட” வடிவிலான “பிளஸ்” ஸ்டிக்கர் ஒன்று கிழிந்திருந்தது, இதலாம் வச்சி பாக்கும் போது தான் அங்க இருந்து தான், அந்த வண்டி கிளம்பி இருக்குன்னு ஒரு சின்ன கெஸ்.

இதல்லாம் வச்சி தான், அவங்க ஆம்புலன்ஸ வேற ஏதோ ஒரு தப்பான விடயத்திற்க்கு பயன்படுதராங்கனு தோனுச்சு.

சக்தியின் ஆக்கபூர்வமான கையாளுதலை கண்ட வெங்கட் நெகிழ்ந்தான், அவனின் நிதமான வேகமும், கூர்மையான அறிவும், தெளிவான பார்வையும் வெங்கட்டை வெகுவாக ஈர்த்தது.

பின், இருவரும் அந்த குழந்தையுடன் மண்டபத்திற்கு வந்து அடைந்தனர்.

மண்டபத்திற்கு சென்றதும் அந்த குழந்தையை அவள் அம்மா வாரி கையில் அணைத்துகொண்டார்..

சரி சார், நாங்க கிளம்பரறோம்.. என்றான் சக்தி அவனது தந்தை வேணுகோபாலுடன்.

வேணு, ஒரு நிமிஷம்..

கேக்குறேன்னு தப்பா நினைக்காதிங்க.., என் பொன்ன உங்க மருமகளாக ஏற்றுகொள்ள உங்களுக்கு சம்மதமா?

என்ன சார், திடிர்ன்னு இப்படி கேக்குறிங்க, என்று தயங்கினான் வேணுகோபால்.

ஏன்யா தயங்கற,

அத்தனை பேரு வேடிக்க பார்த்து சும்மா இருந்தப்ப, என் பேரன கண்டுபிடிச்சி கொடுத்தது யாரு? அது மட்டுமா தமிழனோட அடையாளத்தை உன் மகன் கண்டு பிடிச்சி இருக்கான். அதுவும் இல்லாமல், இப்படி ஒரு கூர்மயானவன, திறமையானவன இனிமேல் நான் எங்கு தேடனாலும் கிடைக்காது.

கல்யாணத்துக்கு முன்னாலே இவ்ளோ அக்கறையோடும், பொறுப்போடும் இருக்கிறானே?? இவனே எனக்கு மாபிள்ளையா வந்தா, என் மகளை பத்திரமா பார்த்துக்கொள்வான் நம்பிக்கை எனக்கு இருக்கு..!

இவன விட்டா, இல்ல இல்ல இவர விட்டா, என் பொன்னுக்கு வேற நல்ல மாப்பிள்ளை கிடைக்குமான்னு எனக்கு தெரியாது.

சரி என்று சொல்லுங்க. என்ன சக்தி உனக்கு சம்மதம் தானே???

அவன், அப்பாவை பார்த்தான்.

அப்புறம் என்னைய்யா, பையனே ஒப்புக்கொண்டான் வேற என்னைய்யா வேணும் .. வேணு சில குழப்பத்துடன் சம்மதித்து, பின் போன் செய்து, சக்தியின் அம்மாவை உடனே அந்த மண்டபத்துக்கு அவசரமாக அழைத்தான்.

பதறி மண்டபத்துக்கு, வந்த அவள் அம்மாவுக்கு காத்திருந்தது அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

“பையன்” மணமேடையில்..!

என்ன நடந்தது என்று வேணுவை கேட்க, வேணு நடந்ததை கூறினார்.. கூடவே வெங்கட்டும் சக்தியின் அம்மாவுக்கு நடந்ததை கூறி, அவன் அம்மாவை சம்மதிக்க வைத்தனர்.

கல்யாணம் நெருங்கியது.

மணமேடையில் அவரது மகளின் அழகை பார்த்து ரசிக்கும் வேலையில், மகாலக்ஷ்மியின் கழுத்தில் தொலைந்து போனதாக எண்ணிகொண்டிருந்த அந்த வைரநெக்லஸ் இருந்துது..

இந்த நகை எப்படி, கிடைத்து… என்று அவள் மனைவியிடம் கேட்டார் வெங்கட்..

இப்ப எதுக்குங்க அதலாம்.. எப்படியோ கடச்சிடுச்சில.. அதை நினைத்து சந்தோசப் படுங்க, என்றாள் வெங்கட்டின் மனைவி.

கோபமாக, இல்லை எனக்கு இப்ப தெரிஞ்சாகனும்… எப்படி நகை கிடைத்தது…

அதை நான் சொல்றன் அப்பா, என்றாள் மகாலக்ஷ்மி மணமேடையில் இருந்தபடி,

காலைல, இங்கு நடந்த அந்த கொடுமையான சம்பவத்துக்கு அப்புறம், நீங்களும் சக்தியும் மண்டபத்துல இருந்து கிளம்புனீங்களே அப்புறம், கொஞ்ச நேரத்துல நான் ரூமுக்கு போய் இருந்தன், அங்க டேபிள் மேல ஒரு பார்சலும் அதுக்கு கீழே ஒரு பேப்பரும் இருந்துது, அந்த பேப்பர படிச்சதுக்கு அப்புறம் தான் எனக்கு எல்லா உண்மையும் புரிஞ்சிது.

அந்த பேப்பர்ல, எனக்கு நீங்க பாத்தீங்களே ஒரு மாப்பிள்ள அவரு என்ன எழுதி இருந்தாருனா…., “நான் உன்ன கல்யாணம் பண்ணற பாக்கியம் இந்த ஜென்மத்துல எனக்கு கிடைக்காம போய்டுச்சு, கேவலம் பணத்துக்கு ஆசப்பட்டு எங்க அம்மா கூட சேந்து ஒரு தேவதையை இழந்துட்டன்னு” எழுதி இருந்தாரு.

நான் உனக்கு செய்த துரோகத்துக்கு, இதோ உங்க வீட்டில் இருந்து எங்க அம்மா திருடின நகைய உனக்கே கொடுக்குறன், இதை எங்க அம்மா எப்படி திருடுனாங்கனு நான் சொல்ல விரும்பல, சொன்னா அந்த அதிர்ச்சில இருந்து நீ வெளியே வருவது ரொம்ப கஷ்டம், அதனால தான் அதை உன் கிட்ட சொல்ல வில்லை, என்ன மன்னிச்சிரு என்று எழுதி இருக்க, பார்சலை பிரித்து பார்த்ததும் அங்கு உள்ளே மிண்ணியது தொலைந்து போனதாக என்னிகொண்டிருந்த நீங்க முதன் முதலில் வாங்கன வைர நெக்லஸ்

அப்ப தான் எனக்கு ஒன்னு புரிஞ்சது, நாம கஷ்டப்பட்டு வாங்கற பொருள் எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்மல விட்டு எங்கயும் போகாதுன்னு.. போனாலும் நம்ம கைக்கு திரும்பி எதாவது ஒரு ரூபத்துல நம்மிடம் வந்து விடும்.

வெங்கட் முகம் மலர்ந்தது, அவருக்கு எல்லாம் சரிவர ஆரம்பித்தது.

ஐயர் நாழி ஆவுது, இப்பயாவது ஆரம்பிக்கலாமா???

ஆரம்பிக்கலாம் ஐயரு…

“கெட்டிமேளம், கெட்டிமேளம்” என்று சொல்ல

மேள தாளங்களோடு, மங்கள நாதம் முழங்கியது.

சக்தி மகாலக்ஷ்மிக்கு “தாலி” கட்டினான்.

அனைவரின் கைகளிருக்கும் அட்ச்சதை அரிசி இருவரின் மேல் விழ,

முகத்தை துடைத்தபடி போதும் போதும் என்றான்.

டேய்… சக்தி எழுந்திரு டா…!!!

என்று அவன் அம்மா சொன்னாள். என்ன அங்க போதும் போதும்னு சொல்ற…

நான் இங்கே உன் மேல தண்ணி தெளிச்சுட்டு இருக்குறன், நீ என்னடானா “அர்ச்சத அரிசி” வாங்குற மாதிரி தலைய காமிச்சுகுனு இருக்கே சொரணையே இல்லாம..!!!

சக்தி எழுந்திருடா, அப்பா உன்ன எழுப்ப சொன்னாரு…

இப்படி தூங்கனா என்னடா அர்த்தம்???

இவ்ளோ வயசு ஆகுதே, இனிமேலாவது சீக்கரம் எழுந்திருக்க பழகு, என்று அவன் அம்மா அவனை தூக்கத்தில் இருந்து ஒரு வழியாக தட்டி எழுப்பினான்.

திடுக்கிட்டு எழுந்தான் சக்தி. அவனது தலையணை முழுவதும் நனைந்து இருந்தது. “வியர்வையில் பாதி, அவன் அம்மா அவன் மேல் தெளித்த தண்ணீரில் மீதி”

அட கனவா.? என்று ஆச்சிரியப்பட்டான், சில வினாடிகள் அந்த அதிர்ச்சி அவனிடம் இருந்து மீளவில்லை.

எழுந்து போய், பேய் அடித்த மாதிரி ஒரு பக்கம் உட்கார்ந்தான். இன்னும் அவன் அந்த தாக்கத்தில் இருந்து வெளியில் வரவில்லை என்பது மட்டும் உறுதி.

போய் முதல்ல பல்ல வெளக்கு டா..!! என்றாள் அவன் அம்மா.

“கண்களை” சிமிட்டிக்கொண்டே சக்தி எழுந்து வெளியே சென்றான்.

புதியதாய் வாங்கன வண்டியின் மேலே பனித்துளிகள் படிந்திருப்பதை கண்டான்.

அதன் மேலே அவனது பெயரை எழுதினான்.

சக்தியின் அப்பா `வேணுகோபால்` கடைக்கு போயிட்டு உள்ளே வர..!

வண்டியின் சீட்டில் பெயர் எழுதுவதை பார்த்து., இந்த பழக்கம் இன்னும் உன்ன விட்டு போலையா?

புண்முருவளிட்டான் சக்தி.

சக்தி, உள்ள வா ஒரு நிமிஷம் என்று கூப்பிட்டார் அவனது அப்பா வேணுகோபால்.

உனக்கு ஒரு “குட்-நியூஸ்” என்று அவன், அப்பா அவனிடம் ஒரு லெட்டரை கொடுத்தான்.

ஆவலுடன் பிரித்து படித்தான்.. சந்தோஷத்தின் உச்சியில் சக்தி.

சக்தி எதிர்பார்த்த மாதிரியே அவனுக்கு “சப்-இன்ஸ்பெக்டர்” போஸ்டிங் வந்துருச்சி..

சக்தி சீக்கிரம் கிளம்பி ரெடியா இருடா. நான் ஒரு கல்யாணத்துக்கு போகணும் என்றார் அவனது அப்பா வேணுகோபால்.

அவர் கையில் இருக்கும் மஞ்சள் நிற கல்யாண பத்திரிக்கையை பார்த்து முழித்தான் சக்தி..!!!

என்னடா மறந்துட்டியா?? நேற்று தான் உன்னிடம் சொன்னேன்ல, ஒரு கல்யாணத்துக்கு போகணும்னு..!!!

என்னது கல்யாணத்துக்கா?? என்ற கேள்வி கலந்த ஆச்சிரியத்துடன் சக்தி.

Print Friendly, PDF & Email

6 thoughts on “சுழியம்

  1. வெரி சூப்பர் அண்ட் இண்டரஸ்டிங் ஸ்டோரி . இ லைக் வெரி
    மச். சக்திஇன் கனவு சூப்பர் . எ குட் டைம் பாஸ் ஸ்டோரி .தன்க்யௌ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *