கவிஞரேறுவின் கதை!




(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சின்னச்சங்கரன் தெருவில் போய் ‘எழுத்தாளர்’ ‘கவிஞரேறு’ துரைசாமி வீடு எது என்று சிறுசுகளை என்ன, பெருசுகளைக் கேட்டால் கூடக் சொல்லிவிடும், அப்படி யாரும் இங்கு இல்லை என்று ; கவிஞரேறுவின் புகழ் அப்படி! ஆனால் வட்டிக்குப் பணம் கொடுக்கும் நாச்சாரம்மா வீடு எது என்று கேட்டால் சிறுபிள்ளை என்ன, கீரிப்பிள்ளையும் சொல்லும், அதோ ஒற்றைத் தென்னைமரம் நிற்கிறதே அந்த வீடுதான்’ என்று: அம்மாவின் புகழ் அப்படி! ‘கவிஞரேறு துரைசாமி’ என்று எழுதப்பட்டு வீட்டுவாசலில் தொங்கிய மரப்பலகையையும’ வெறிநாய் வந்ததென்று எடுத்து அதன்மீது ஒருநாள் வீசிவிட்டாள் நாச்சாரம்மா. அன்றிலிருந்து கவிஞரேறுவின் முகவரி கூட கேள்விக்குறியாகிவிட்டது.
நாச்சாரம்மாவின் ஒன்று விட்ட மாமன் மகன்தான் கவிஞரேறு துரைசாமி. நாச்சாரம்மா வயசுக்கு ‘வந்தபொழது ‘பொழுதுடன் புலர்ந்த கமல மே! கானகந்தில் மலர்ந்த கலாபமே! என்று தொடங்கும் ஒரு கவிதையை எழுதிக்கொண்டுபேரய் நரணத்துடன் கொடுத்தார் வாங்கிப்பார்த்ததும் நாச்சாரம்மாவிற்கு பேராச்சரியமாகி விட்டது. துரைசாமியத்தானுக்கு தமிழல்லரத பிற மொழியல்லாம் தெரியுமா என்னுமளவுக்கு எழுத்து க்கூட்டி அதைப் படித்துப் படித்து மாய்ந்து போனாள். கடைசியில் தமிழாசிரியர் வீட்டில் எடுபிடி வேலை பார்க்கும் சின்னக்கருப்பனிடம் காட்டித்தான் அதற்கு அர்த்தம் கொண்டாள். சின்னக்கருப்பனும் சும்மாவா என்ன? தமிழாசிரியர் வீட்டில் வேலை பார்ப்பவனாயிற்றே! அக்கவிதையின் அர்த்தத்தைச் சும்மா’புட்டுப்புட்டு’ வைத்தான். ‘நீ குப்பை கொண்டு போனபொழுது அழகாக நடந்தாய்’ என்றுதான் எழுதியிருப்பதாக சத்தியம் செய்து சொன்னான். அவ்வப்போது ஆங்கிலத்திலும் எடுத்து விட்டான். ஆங்கிலம் பேசுவது அவ்வளவு எளிது என்பது அவனுக்கும் அப்போதுதான் தெரிந்தது.
‘அத்தானுடன் குப்பை கொட்டுவது அம்மிக்கல்லை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு சேற்றுக்குள் நடப்பதற்குச் சமம்’ என்று நாச்சாரம்மா அப்போதே தெரிந்துகொண்டாள். போதாக்குறைக்கு அவ்வப்போது அச்சிற்றூரில் நாலைந்து சில்லுண்டிகளையும் சேர்த்துக்கொண்டு அத்தான், நாடகமும் போடுவதைப் பார்த்து எதிர் வீட்டு காமாட்சிப்பாட்டியிடம் போய் அறிவுரை கேட்டாள். காமாட்சிப்பட்டிக்கு, இப்படியே எல்லோருக்கும் சொல்லிச் சொல்லியும் வெற்றிலை வாங்கிப் போடக்கூட எவளும் உதவ வில்லையே என்று கோபம். நாச்சாரம்மாவின் கொமட்டில் குத்தாத குறைதரன் ‘எல்லாம் இப்போ கேப்பியடி, அப்பறம் மூணு வருஷத்துல மூணு பெத்துட்டு நாலாவதையும் வயித்துல சொமந்துட்டு, புருஷன்கூட சண்டையின்னு வந்து நிப்பியடி! போங்கடி போக்கத்தவள்களா’ என்று சொல்லிவிட்டு, ‘அதெல்லாம் ‘அஞ்சிராத்திரி’ ரகசியம்டி. அது கழிச்சுப்பாருடி’ன்னு கொஞ்சம் கோபத்துடனேயும் அலுப்புடனும் சொல்லி அனுப்பிவிட்டாள்
அஞ்சு ராத்திரியெல்லாம் அவளுக்குத் தேவைப்படவேயில்லை. ரெண்டு நாள் கழிந்தவுடன் கவிஞரேறு தானாகவே வெந்நீர் வைக்க ஆரம்பித்துவிட்டார். நாச்சாரம்மாவிற்கு இரண்டு நாள் கழித்து திடீரென்று ஜலதோசம் பிடித்தது: கையும் காலும் கடுத்தது. வெந்நீர் வைத்துக்கேட்க இதைவிட வேறு என்ன உடற்கோளாறுகள் வர வேண்டும் நாச்சாரம்மாவுக்கு? அன்று ஆரம்பித்தவள்தான்! இதோ இன்றுவரை, கவிஞரேறு இலக்கியக்கூட்டதுக்குக் கிளம்புகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் போதும் ‘அம்மா.. பெத்தவளே.. காலெல்லாம் கடுக்குதம்மா.. வயித்த வேற வலிக்குதே‘ என்று பினாத்த ஆரம்பித்து விடுவாள். அப்புறம் துரைசாமி என்ன செய்வார். சொல்லுங்கள் பார்க்கலாம், விகுவிகுவென்று வீட்டிற்குள் செல்வார். மூக்குக்கண்ணாடியைக் கழட்டி வைப்பவர் முகக் கண்ணாடியை எடுத்து வைத்துக்கொண்டு தன் தலையில் தானே குட்டிக்கொள்வார். ‘ நங்கு நங்கெ’ன்று குட்டிக்கொண்டவர் பிறகு வெளியே வந்து வெந்நீர் வைப்பார்! ஏதோ முற்பிறவி வாசம் போல இது!
நாச்சாரம்மாவின் ஜெயங்கொண்டம் சித்தப்பா வாரிசில்லாமல் செத்துப்போனார். சித்தப்பாவிற்கு நஞ்சைநிலம் கொஞ்சம் இருந்தது. சித்தப்பாவின் கடைசிக்காலத்தில் அவரை நன்றாகக் கவனித்துக் கொண்டதற்காக அச்சொத்தில் பாதி நாச்சாரம்மாவிற்கு வந்தது. நாச்சாரம்மா எங்கே அவரைப் பார்த்துக்கொண்டாள்? துரைசாமி அவர்கள்தான் அவரோடு அடிக்கடி பேசி கடைசி காலத்தில் கொஞ்சம் நிம்மதியோடு வைத்திருந்தார் அவரை. சித்தப்பாவின் போறாத காலம் கவிஞரேறுவின் கவிதைகளையும் கதைகளையும் அவர் படிக்க ஆரம்பித்ததுதான். பிறகு சிறிது நாட்களில் வாய் பேச முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டார்.
அச்சொத்து வந்த கணக்கில் நாச்சாரம்மாவிடம் முன்னாடியே அச்சாரம் போட்டு வைத்திருந்ததால் துரைசாமி அவர்களுக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தது. தான் எழுதி வைத்த கவிதைகளையும் கதைகளையும் வைத்து எப்படியாவது ஒரு புத்தகம் போட்டுவிட வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தார். நாளுக்கு நாள் இப்படி யோசிக்க யோசிக்க அவருக்குள் புதுத்தெம்பும் உற்சாகமும் ததும்பி யோடத்துவங்கின. பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிய நாளில் தான் அந்த வட்டாரத்திலேயே துரைசாமிக்கு நெருக்கமானவரும் அண்ணாச்சி என்று அவரை உரிமையோடு அழைப்பவருமான ‘பார்வதி மளிகைக்கடை உரிமையாளர் வேலு அண்ணாச்சி வந்து வாசலில் நின்றார்.
‘வாரும் அண்ணாச்சி! எப்படி இருக்கியே?’ என்றார் துரைசாமி.
‘இருக்கேன் அ ண்ணாச்சி . எப்பு டிப்போவுது பொழப்பு தழப்பெல்லாம்?’ அண்ணாச்சி ஆர்வத்தோடுதான் கேட்டார்.
‘போவுது அண்ணாச்சி. இப்போக்கூட டவுனுக்குத்தான் கௌம்புறேன்.. ஒரு புஸ்தகம் போடலாமுன்னு’ துரைசாமி சொல்லி முடிப்பதற்குள் அண்ணாச்சி குறுக்கிட்டார். ‘ புத்தகம் போடங்கிறீய; டவுனுக்குக் கௌம்புறங்கிறீயே. கையில காசு பணம் இல்லைன்னு சொன்னதா கேள்விப்பட்டேன்!’ என்றார் நல்ல நைலான் வலையோடு!
‘இல்லெ அண்ணாச்சி. காசு பணம்ல்லாம் இருக்கு. கவித போடுற புத்தகத்துக்கு அட்டப்படம் போடத்தான் யோசனை! என்ன போடச் சொல்லுறதுன்னு தெரியலை! அதான் யோசனை!’ என்றார் கவிஞரேறு அப்பாவியாய்.
‘இதிலே எதுக்கு அண்ணாச்சி இவ்ளோ யோசிக்கிறீய? தூக்குல தொங்குற மாதிரி ஒருத்தன் படம் போட்டு அதுக்குக் கீழே பார்வதி மளிகைக்கடை ஓனர்ன்னு போடச்சொல்லுங்க’ என்றார் வேலு அண்ணாச்சி.
துரைசாமி அவர்களுக்கு பக்கென்று தொண்டை அடைத்தது. ‘என்ன அண்ணர்ச்சி இப்புடிப் போசுறியெ?!’ என்றார் வருத்தத்தோடு.
‘பின்னே என்ன அண்ணாச்சி. கடை வெச்சி வியாபாரம் பண்ணுறது கத கவித எழுதுறது மாதிரி சுளுவான சமாச்சாரமா? பேப்பர எடுத்து நாலு எளுத்த கிறுக்கிப்புடலாம்; கவித வந்துரும், கத வந்துரும். கடை அப்பிடியா? நாலு பேருகிட்டெ குடுப்போம்; வாங்குவோம். எப்பவும் ரொட்டேஷன் அண்ணாச்சி. பத்து காசு ஒருத்தர்ட்டே படுத்துருச்சுன்னா நானும் படுத்துர வேண்டியதுதான்!’ சொல்லி விட்டு வானத்தைப் பார்த்தார். துரைசாமியும் வானம் பார்த்தார். கவிதைகளெல்லாம் வானத்திலே மேகமாகப் பறப்பது போலவும் வேலு அண்ணாச்சி வேகவேகமாக அவற்றை அள்ளி மிளகாய் மூட்டைக்குள் போட்டு அடப்பதைப் போலவும் தோன்றியது. புத்தக ஆசையும் சித்தப்பா ஞாபகமும் அன்றோடு போனது.
முசிறியில் ஏதோ இலக்கியக் கூட்டம் நடத்துவதாகவும் அதில் எழுத்தாளர் கவிஞரேறு துரைசாமி அவர்களுக்குப் பட்டம் வழங்கப் போவதாகவும் அதனால் கண்டிப்பாய் வரும்படியும் அவருக்கு அழைப்பிதழ் வந்தது. போஸ்ட்மேனைக் கையெடுத்துக் கும்பிட்டு இச்செய்தியைத் தனது மனைவிக்குத் தெரியாமல் மறைத்து வைக்கும் படி சொன்னார். நாச்சாரம்மாவிற்கு திடீர் வயிற்று வலி வந்துவிடும் என்று பயந்ததால் முதல் நாளே பொடி நடையாய் நடக்க ஆரம்பித்து விட்டார்.
விழாவில் அவரையும் சேர்த்து ஐம்பது பேருக்கு விருதளித்தார்கள். கூட்டம் குறைவாக வருமாதலால் வருபவர் அனைவருக்கும் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாக நிர்வாகி சொன்னதைக் கவிஞரேறு கேட்டதாகத் தெரியவில்லை. கவிஞரேறுவிற்குப் பக்கத்தில் உட்கார்ந்தவர் ராகு , கேது, செவ்வாய் தோஷங்கள் கழிப்பவராம். அவருக்கு எதற்கு விருது? தெரியவில்லை. ஆனால் அவருக்கு ஜலதோஷம் போல! பத்து நிமிடத்திற்கொருமுரை தும்மினார். அதுவும் கவிஞரேறுவின் காதுக்கருகில் ஏதோ ரகசியம் சொல்பவர் போல் வந்து நச்சு நச்சென்று தும்மினார். கவிஞரேறு விற்கு வந்த கோபத்தில் அவரது மூக்கைப் பிடித்து இடுக்கியால் திருகி மிளகாய்ப்பொடியில் தோய்க்க வேணடும் போலத் தோன்றியது. தான் அமர்ந்திருந்த முக்காலிக்கு இரண்டு கால்களும் ஒரு காலுக்கு, கல்லை வைத்து முட்டுக்கொடுத்திருககிறது என்பதாலும் அமைதியாக இருந்தார்.
எழுந்து விருது வாங்கப்போகையில் வேறு நச்சென்று தும்மித் தொலைத்தார் ஜலதோஷம் பிடித்தவர்! ‘சனியனே சும்மாயிரு’ என்று வாய்க்கு வந்ததைச் சொல்லித் திட்டிவிட்டுப் போய்விட்டார் துரைசாமி. விருது வாங்கித் திரும்பி வந்தவர் அருகில் செவவாய் தோஷக் கழிப்பாளர் இல்லாததைக் கண்டு சந்தோசமாய் இருக்கையில் அமர, அந்தோ பரிதாபம்! பொத்தென்று தரையி்ல் விழுந்தார் துரைசாமி. ஒரு கலைஞனை அவமானப்படுத்த இதைவிட என்ன வேண்டும்? பக்கத்து இருக்கையில் பரந்துகிடந்த சோடாபுட்டி பெண் எழுத்தாளர் ஏதோ வினோதமாய்ச் சிரிக்க , துரைசாமிக்கு முகக்கண்ணாடி உடனடியாகத் தேவைப்பட்டது.
கூட்டம் முடியும் போதாவது எப்படியும் பஸ்ஸிற்குப் பணம் தருவார்கள் என்று காத்திருந்து பார்த்தார் கடைசிவரை யாரும் அது பற்றி வாயத் திறக்கவில்லை. எல்லோரும் போய்விட்டா்கள் செவ்வாய்தோஷக்காரர் மட்டும் கையில் வெற்றிலைப்பொட்டி யோடு அங்கு நிற்பதைக் கண்டார். அவரிடம் போய்க் கேட்பதற்கு நடந்தே போய்விடலாம். நடக்க ஆரம்பித்தார். அதுதான் அவருக்குக் கடைசி ‘இலக்கியக்கூட்டம்’. அதற்குப் பிறகு ‘இலக்கியக்கூட்டம வாருங்கள்’ என்று அழைப்பிதழ் வந்தால் நேரே அடுப்பங்ரகரைக்குச் சென்று அவராகவே வெந்நீர் வைக்க ஆரம்பித்துவிடுவார்!
கையில் குடையோடு நீண்ட ‘கிருதா’ வைத்துக்கொண்டு அவரைப் பார்க்க வந்தார் ஒருவர். வந்தவர் நாச்சாரம்மாவிடம், ‘கவிஞரேறு வீடு எது?’ என்று கேட்க, கையில் ‘மாட்டுச்சாண வரட்டி’ தட்டிக் கொண்டிருந்த நாச்சாரம்மா அவரை ‘ஒருமாதிரி’ பார்க்க கிருதாக்காரர் மெல்ல பின்வாங்கினார் ‘ஏதோ பைத்தியம் போல’ என்று மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டு இரண்டடி தள்ளியே நின்றார். நல்லவேளை! அந்நேரம் பார்த்து சாணம் பிசைவதற்காக பித்தளை வாளித் தண்ணீருடன் வெளியே வந்தார் கவிஞரேறு.
‘என்ன கவிஞரே! இந்தக் கோலத்தில்! கையில் தமிழ் வாளெடுத்து களப்பணி புரிந்துகொண்டிருப்பீர் என்றல்லவா யோசித்துக் கொண்டே வந்தேன்…’ என்றார் வந்தவர்.
என்னமோ தெரியவில்லை! மேடைகளில் கோலிகளைச் சிதற வட்டாற் போல, கப்பிக் கொட்டைகளை உரசியது போல வெண்கலக் குரலில் வேங்கையாய் முழக்கமிடும் கவிஞரேறுவிற்கு சுத்தமாய்ப் பேச்சே வரவில்லை. தொண்டையைக் குச்சியால் சுரண்டியது போல சன்னக்குரலில் பேச ஆரம்பித்தார். அவ்வப்போது சாண வரட்டிகள் வீசப்படுமிடத்தையும் பார்த்துக்கொண்டார். ‘ கொஞ்சம் காத்தருளுங்கள். சடுதியில் வருகிறேன்’ என்று சொல்லி விட்டு உள்ளே போனார்.
பத்து நிமிடங்களில் முழுக்கை சட்டையோடு திரும்பி வந்தவர் நாச்சாரம்மவைப் பார்த்தார். கிருதாக்காரர் சும்மாயிருந்திருக்கலாம். ‘யாரிந்தப் பெண்? விழிப்பதே சரியில்லையே! பைத்தியம் போலிருக்கிறதே!’ என்றார் சூழ்நிலையறியாமல்! வந்தது வேகம் நாச்சாரம்மாவிற்கு! வரட்டியைச் சரியாய்க் குறி பார்த்தாள். முதல் வரட்டியைச் சுவரைப் பார்த்து வீசியவள் இரண்டாம் வரட்டியைச் சரியாய் வீசினாள். கிருதாக்காரர் பசுக்களை வணங்குபவர் போல! உள்ளுணர்வால் அத்தருணத்தில் திரும்பிப் பார்த்தவர் நல்லவேளை, கொஞ்சம் ஓதுங்கிக்கொண்டார். வரட்டி மாட்டின் மீது போய் அடித்துச் சிதறியது. விட்டார் ஓட்டம் கிருதாக்காரர்! வேட்டியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு ‘பைத்தியம் பைத்தியம்’ என்று கத்திக் கொண்டே ஓடினார். அநேகமாய் ஊர் எல்லையில்தான் திரும்பிப் பார்த்திருப்பார்.
அன்று தான் கவிஞரேறுவிற்குக் கொஞ்சம் கோபம் வந்தது. வேகமாக உள்ளே போனவர் முகக்கண்ணாடியை எடுத்தார். பழக்கதோசமாய் கை தலைக்குச் சென்றது. ஓங்கி அடித்தார் கண்ணாடியை! சுக்கு நூறானது கண்ணாடி! சாணக் கையோடு உள்ளே வந்த நாச்சாரம்மா எனன இருந்தாலும் அப்படிச் செய்திருக்கக்கூடாது, அதுவும் ஒரு தமிழ் எழுத்தாளரை, கவிஞரை, நாடக ஆசிரியரை ஏன் ஒரு ஓவியரும் கூட அவர் அதையெல்லாம் விட அவளது கணவர். அவரை இப்படிச் செய்யலாமா? சாணக்கையால் அவரது தலை முடியைப் பிடித்து ஆட்டினாள். உலகமே சுற்றியது அவருக்கு.
ஒரு முடிவோடு எழுந்தார். ஆற்றங்கரை நோக்கிச் சென்றார். பொங்கி வரும் நீரில் முங்கி முங்கிக் குளித்தார். பிறகு ஆலமரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்தவர் அப்படியே படுத்து உறங்கலானார். திடுமென மனதில் வள்ளியப்பன் நினைவுக்கு வர, எழுந்தார்.
வள்ளியப்பன் அவரது வகுப்புத்தோழர். ஒரே ஊர். அரசியலில் சேர்ந்து இப்போது நான்கு லாரிகள் ஓடுகின்றன. மினிபஸ்ஸூக்கு லைசென்ஸ் கேட்டு வருகிறார் கிடைத்தால் நாலு பஸ் வாங்கி விடும் வசதியும் ஆர்வமும் இருந்தது அவரிடம் பையன் பக்கத்து ஊரில் காலேஜ் படிக்கிறான். ஏதாவது அவசர உதவி என்று கேட்டால் தயங்காமல் செய்வார். அவரிடம் போகலாம் என்றுதான் கிளம்பி வந்தார். அவரது வீட்டிற்கு வந்து அமர்ந்தவுடன்தான் அது ஞாபகத்துக்கு வந்தது.
சென்ற தேர்தலின் போது தன் கட்சிக்கு ஓட்டுக் கேட்கத் தோதுவாக கவிதை அல்லது பாடல்களைக் கேட்டிருந்தார் வள்ளியப்பன். கவிஞரேறுவிற்கு முதலில் எரிச்சல் வந்தது. பிறகு சன்னமாக விசனப்பட்டவர், தன்னைப்போல இலக்கியவாதிகளின் நிலையை எண்ணிப்பார்த்தார். பாரதியையே மன்னனுக்கு எழுத வைத்தவர் களல்லவா? புதுமைப்பித்தனைக் கூட சினிமாவுக்கு எழுத வைத்தவர்களல்லவா? முடியாது என்று மறுத்துவிட்டார். அப்போதிலிருந்து வள்ளியப்பன் இவரிடம் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை. அதுதான் இப்போது ஞாபகத்துக்கு வந்தது.
பையன் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். டிவியில்’பன்னி’ வரைந்து கொண்டிருந்தது. துரைசாமி நிஜமாகவே வாயைப் பினந்தார். பன்றிகள் வரையுமா? வாயில் பிரஷ் பிடித்து வரைந்து கொண்டிருந்தது அது. ஏதோ சத்தம் கேட்க திரும்பியவர் வள்ளியப்பன் வந்ததைப் பார்த்ததும் எழுந்தார். ‘வா தொரச்சாமி’ என்ற வள்ளியப்பன், டிவியில் பன்றி வரைந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொஞ்சம் நக்கலாகவே கேட்டார். அட! பன்னி வரையுதுடா! வரையக்கூடத் தெரியுமா அதுக்கு. நல்லா வரையுதே..!’ என்றவர் ‘ஏய் சுரேஷு.. நம்ம துரைசாமி மாமா கூட நல்லா வரைவார் தெரியுமாடா?’ என்றார் அவரது மகனிடம்.
சுரேசு பன்றியைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு துரைசாமியைப் பார்க்க திரும்பினான். துரைசாமி எழுந்து ஆலமரத்தை நோக்கி நடந்தார். பன்றியா பசுச்சாணமா இனி அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
– மருதம், முதற் பதிப்பு: டிசம்பர் 2006, எம்.கே.குமார் வெளியீடு, சிங்கப்பூர்.