மு.பொன்னம்பலம்

 

மு.பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மு. பொன்னம்பலம் எழுதிய “திறனாய்வின் புதிய திசைகள்” என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது.

எழுதிய நூல்கள்

  • அது (1968)
  • அகவெளிச் சமிக்ஞைகள் (1980)
  • விடுதலையும் புதிய எல்லைகளும் (1990)
  • பேரியல்பின் சிற்றொலிகள் (1990)
  • யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (1990)
  • கடலும் கரையும் (1996)
  • காலி லீலை (1997)
  • நோயில் இருத்தல் (1999)
  • திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000)
  • ஊஞ்சல் ஆடுவோம் (2001)
  • பொறியில் அகப்பட்ட தேசம் (2002)
  • சூத்திரர் வருகை
  • விசாரம்
  • திறனாய்வின் புதிய திசைகள் (2011)