என் பெயர் : மணிராம் கார்த்திக்.
பிறந்த வருடம் : 25-ஜனவரி -1987
ஊர் – மதுரை மாவட்டம் , அனுப்பானடி .
அப்பா : மணிராம் – அம்மா : மகாலட்சுமி – மனைவி : சித்ரா.
நான் BCOM பட்டதாரி. 2007ம் ஆண்டு கல்லுரி படிப்பை முடித்தேன். தற்போது தனியார் ஜவுளி சார்ந்த கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு கதை எழுதும் ஆர்வம் , கல்லூரி படிக்கும் போது முதலே இருந்தது. அதனை வெளிக்கொண்டு வர வழி தெரியாமல் இருந்தேன்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு ,
ராணி முத்து இதழில் எனது முதல் சிறுகதை “முதியோர் காப்பகம்” 2024 ம் ஆண்டு வெளியானது.
அப்போது என் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
தீக்கதிர் நாளிதழில் ஞாயிறு இதழில் மற்றொரு சிறுகதை வெளிவந்தது.
தமிழ்நாடு இ பேப்பர்.காம் தின இனைய இதழில் எனது சிறு கதைகள் வெளியான பிறகு மிகுந்த மகிழ்சியுடன் ஆர்வம் அதிகமானது.
பிறகு தான் தெரிந்தது சிறுகதைகளை இணையத்திலும் வெளியிடலாம் என்று.அதற்கான சிறந்த தளம் எது என்பதை தேடிய போது கிடைத்த விடைதான் சிறுகதைகள்.காம்.
இந்த இணையத்தின் மூலமாக 31-ஆகஸ்ட் 2024 அன்று எனது சிறுகதை “அதிர்ஷ்டம்” வெளியானது.
நன்றி சிறுகதைகள்.காம் , என்னை ஒரு கதை ஆசிரியரை தங்கள் இணையத்தில் இணைத்தமைக்கு.
இன்று வரை பத்திற்கு மேற்பட்ட சிறு கதைகள் இந்த இணையத்தில் வெளியாகி உள்ளது. அனைத்து கதைகளும் நல்ல ஒரு கருத்து கூறும் கதைகளாக எழுதியுள்ளேன். இந்த இணையத்தின் மூலமாக கதைகளை படிப்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகமா இருப்பதை கண்கூட காண முடிகிறது.
இனிது இணையத்திலும் எனது சிறுகதைகள் வெளியாகி உள்ளது.
கிரைம் நாவல்கள் , தொடர்கதைகள் எழுத மிகுந்த ஆர்வம் உள்ளது , அதனை முயற்சி செய்து வருகின்றேன்.
நல்ல ஒரு கதை ஆசிரியராக வர வேண்டும் என்ற நோக்கில் …… எழுதி கொண்டு இருக்கிறேன்.. அனைவரின் ஆதரவை நாடி….