ஒருத்தி கடன் வாங்கின நெய்யை வாங்கவில்லை என்றது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2025
பார்வையிட்டோர்: 1,483 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு இடைச்சி இரண்டு பசு வைத்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு எதிர் வீட்டுக்காரியாகிய மற்றொரு இடைச்சி இருபது பசுவை வைத்துக்கொண்டு இருந்தாள். 

இருபது பசுக்காரி இரண்டு பசுக்காரி கையில் ஒரு விசை நெய் கடனாக வாங்கிக்கொண்டாள். கொடுத்தவள் கெடுவிற்போய் அதைக் கேட்ட தற்கு வாங்கினவள், “நான் உன் கையிலே வாங்கினதில்லை ” என்று சாதித்தாள். 

கொடுத்தவள் மரியாதைராமனிடத்திலே போய்ப் பிராது பண்ணிக்கொண்டாள். அவன் பிரதிவாதியை அழைப் பித்து விசாரணை பண்ணும்போது, எனக்கு இருபது பசுக்கள் இருக்கிறதுகள். என் வாதிக்கு இரண்டு பசுக்கள் இருக்கிறதுகள். என்னிடத்தில் அதிகப்பசுக்கள் இருக்கிறது களென்று பொறாமையினாலே நிபம் போடுகிறாள்” என்று சொன்னாள். 

நியாயாதிபதிக்குச் சந்தேகம் பிறந்து மறுநாள் வரச் சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு அவர்கள் வருகிறதற்கு முன்னே நியாயஸ்தலத்துக்குச் சமீபத்திலே சேறாக்கி  வைத்தான். 

மறுநாள் அவ்விருவரும் அந்த வழியாக நடந்து வந்தார்கள். சமீபத்தில் வந்தவுடனே அளவு சரியாக இருக்கிற இரண்டு சொம்புகளில் நிறைய நீர்மொண்டு கொண்டுவரச் சொல்லிப் பேருக்கு ஒவ்வொரு சொம்பு நீர் கொடுக்கச் சொன்னான். இரண்டு பசுக்காரி அந்த நீரிலே பாதியினாலே காலுகளைச் செ(வ்)வையாய்க் கழுவிக்கொண்டு பாதி மீதியாக வைத்தாள். இருபது பசுக்காரி ஒரு சொம்பு நீரும் வார்த்துக் கழுவியும் பாதிச் சேறுகூடப் போகவில்லை. 

அதை மரியாதைராமன் பார்த்து, கடன் வாங்கினவளை அழைத்து, “நீ இருபது பசு வைத்துக் கொண்டிருந்தாலும், குடித்தனத் திறமை இல்லாதவளென்றறிந்தேன். அது எப்படியென்றால் ஒரு சொம்பு நீர் முழுதும் விட்டுக் கழுவியும் பாதிச் சேறாயினும் உன் காலிலே போகவில்லை. அவளோ வென்றால் அரைச்சொம்பு நீராலே தன் காலிலே எவ்வளவும் சேறில்லாமல் கழுவினதால் குடித்தனத் திறமையுடையவளா யிருக்கிறாள். ஆகையால் நீ அவளிடத்திலே நெய் கடன் வாங்கினதற்குச் சந்தேகமில்லை ‘ என் று மோசத்தை வெளிப்படுத்தி வாதி பச்சம் (பக்கம்) தீர்ப்புச் செய்தான். 

பள்ளமுள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும் என்ற பழமொழிப்படியே மோசம் செய்தவளிடத்திலே தெண்டினைச் சம்பாதித்தது. 

– மரியாதைராமன் கதைகள் (ஆய்வுப் பதிப்பு), இரண்டாம் பதிப்பு: மே 2001, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரசுவதி மகால் நூலகம் வெளியீடு, தஞ்சாவூர்.

பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்)  மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும்.  புகழ்மிகு கதையிலக்கியங்கள் :  விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *