என் தங்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2025
பார்வையிட்டோர்: 76 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்து கலாசாலைச் சேவகன் மன்னார்சாமி கடிகாரத்தின் எதிரே தூங்கி விழுந்துகொண்டி ருந்தான். கடிகாரத்தில் மணி நான்கு அடித் தது. அவனும் ஒரு யந்திரத்தைப்போல தூக்கம் கலைந்து எழுந்திருந்து மூலையில் தொங்கிக்கொண் டிருந்த மணியைக் ‘கண கண’ வென்று அடித்து முழக்கினான். 

அடுத்த நிமிஷம் கலாசாலையின் வாசல்பக் கம் ஒரே ஆரவாரம். மாணவர்களும் மாணவி களும் குதூகலத்துடன் வெளியே வந்துகொண்டி ருந்தார்கள். சிறுவர்களும் சிறுமிகளும்,வேட் னுடைய கூட்டிலிருந்து விடுதலையடைந்த, பறவைகள் போல, பல பல ஸ்தாயிகளில் கத்திக் கும்மாளம் அடித்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினார்கள். வயது வந்த மாணவர்கள் இரண்டு மூன்று பேராகப் பேசிக்கொண்டே மெதுவாக கடந்து வந்தார்கள். கட்டிடங்களின் ஓரமாக ஒதுங்கி ஒதுங்கி இன்னும் மெதுவாக வந்து கொண்டிருந்த வயது வந்த மாணவிகளின் கூட்டத்தில்தான் ஆரவாரம் அதிகமாக இல்லை. ஆரவாரமில்லாவிட்டாலும் அவர்கள் அணிந்திருந்த டோலக்குகளும், உடுத்தியிருந்த பச்சை, ரோஸ், மஞ்சள் கலர் புடவைகளும் அவர்கள் வருவதை விளம்பரப்படுத்தின. 

அநேகமாக மாணவர்களெல்லோரும் கலா சாலை வாசலைக் கடந்து கடைவீதிக்குப் போய் விட்டார்கள். பால சுப்ரமணியன் மட்டும் கலா சாலை வாசல்பக்கம் தன் வீட்டு வண்டியின் பின் புறம் நின்றுகொண்டிருந்தான். பெண்கள் கூட் டத்தோடு வந்துகொண்டிருந்த கமலா, பாலு வைக் கண்டதும், தன் சிநேகிதிகளிடம் அவசர மாக விடை பெற்றுக்கொண்டு அவன் பக்கம் விரைவாக வந்து சேர்ந்தாள். 

கமலா ஏதாவது சாமான்கள் வாங்க வேண்டுமானால் பாலுவின் அபிப்பிராயத்தைக் கேட்டுத்தான் வாங்குவது வழக்கம். அன்று தனக்கு ஒரு புடவை வாங்க வேண்டுமென்று அவள் பாலுவிடம் காலையிலேயே சொல்லி வைத்திருந்ததால் பாலு தன் வண்டியோடு அவளுக்காகக் காத்திருந்தான். 

அந்த வருஷம் தான் கமலா இந்துக் கலா சாலையில் வந்து சேர்ந்திருந்தாள். அவள் கலா சாலை சேர்ந்த தினத்தன்று, கலாசாலையில் சேர் வதைப்பற்றி இரண்டொரு விவரங்களை அங்கு நின்றுகொண்டிருந்த பாலுவிடம் கேட்க நேர்ந் தது. பாலு அவளிடம் பதில் சொன்ன முறையிலிருந்து அவளுக்கு அவன் மீது ஒருவிதப் பற்று தல் உண்டாயிற்று. அதுமுதல் தினமும் இரு வரும் பார்த்துப் பேசாமல் போவதில்லை என்றாகி விட்டது. அவர்களுடைய ஒற்றுமையிலிருந்து, அவர்கள் இருவரும் நெருங்கிய பந்துக்களாக இருக்க வேண்டுமென்று மற்றவர்கள் எண்ணிக் கொண்டார்கள். 

கமலா தினமும் கலாசாலைக்கு ஸ்ரீபுரத்தி லிருந்து ரயிலில் வந்துகொண்டிருந்தாள். உடலழகோடு குண அழகையும் பரிபூரணமாகப் பெற்றிருந்தாள். இவ்வளவுதான் கமலாவைப் பற்றிப் பாலுவுக்குத் தெரியும். பாலு சிந்துபூந் துறையிலுள்ள ஒரு பணக்காரவீட்டுப் பையன் ; மிகவும் யோக்கியமானவன் என்பதுவரை தான் மற்ற கமலாவுக்கு அவனைப்பற்றித் தெரியும். விஷயங்களைப்பற்றி ஒருவர்க்கொருவர் கேட்டுக் கொள்ளவில்லை. 

தனக்குக் கமலாவின் சிநேகிதம் ஏற்பட்டது முதல், தான் ஒரு லக்ஷிய மனைவியை அடைந்து விட்டதாகப் பாலு எண்ணி மகிழ்ந்துகொண்டி ருந்தான். அவளுடைய உத்தமமான குணங் களைக் கண்டு தனக்குள்ளேயே வியந்துகொள் வான். அவளைத் தன் வாழ்க்கைப் பாதை முழு தும் உற்சாகத்துடன் அழைத்துச் செல்லத் துடி துடித்தான் அவன். ஆனால் அவன் தன் மனதில் பொங்கி யெழுந்து கொண்டிருந்த உணர்ச்சிகளை அவளிடம் வெளியிடவில்லை. அவனுடைய அடக்க குணமே அதற்குக் காரணம். அவளாகவே ஆரம்பிக்கட்டும் என்று தன் காதலை வெளியிட ஒவ்வொருநாளும் அவன் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். 

கமலா இதுவரையில் பாலுவைத் தவிர வேறு யாரிடமும் மனசைவிட்டுத் தாராளமாகப் பேசியதே கிடையாது. ஆண்கள் யாவருமே அவள் கண்களுக்கு எமன்களாகத் தோன்றினார் கள். கல்விக்கும் செல்வத்திற்கும் அதிதேவதை யாகப் பெண் தெய்வங்களை வகுத்த பழந்தமிழர் கள், கொடூரமான சாவுக்கு எமன் என்ற ஆண் தெய்வத்தைத்தானே உருவகப் படுத்தியிருக் கிறார்கள் என்றெல்லாம் கமலா எண்ணிக்கொள் வாள். ஆனால் பாலுமட்டும் இதற்கு விதி விலக்காகத் தோன்றினான். ஆண்களை அடி யோடு அவள் வெறுத்து வந்தாலும், வெளிக்குத் தெரிவித்துக் கொள்வதில்லை. தன் விதியை நொந்துகொண்டு தன்னையே தேற்றிக்கொள் வாள். தன்னிடம் மிகவும் வாத்சல்யத்தோடு பழகிவரும் பாலுவிடம், தன் நெஞ்சில் ஊறிக் கிடக்கும் குறையைச் சொல்லி ஆறுதல் பெற அவள் எத்தனையோ தடவை முயன்றாள். ஆனால் அதன் விளைவாக அவன் தன்னை ஏளன மாக நினைத்து விடலாமோ என்ற பயம் அவளைச் சொல்ல விடாதபடி தடுத்தது. பாலு நினைத்துக் கொண்டிருந்தது போல் அவள் அவனைக் காதலிக்கவில்லை. தன் துக்கத்தை மறப் பதற்கு அவனோடு பேசிக்கொண்டிருப்பது ஒரு சாதனம் என்றே நினைத்திருந்தாள். அவள் அவனோடு பேசும் போதெல்லாம் அவன் ஒரு சகோதரன் என்ற உணர்ச்சியுடனேயே அவள் உள்ளம் உறவாடிக் கொண்டிருந்தது. 

பாலு இன்று பேச்சை இவ்வாறு ஆரம்பிப் பான் என்று கமலா எதிர் பார்க்கவில்லை.பாலு, வண்டியினுள் கமலாவின் எதிர்ப்புரம் உட்கார்ந் திருந்தான். வண்டி கடைவீதி வழியாகப்போய்க் கொண்டிருந்தது. பாலுவின் மனதில் வெகு நாளாகப் பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சி, வார்த்தைகளாகக் கிளம்பின. 

“கமலா நீ உடுத்தியிருக்கும் இந்த மேக வர்ணப் புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு! இன்னிக்கி இது மாதிரிப் புடவையே வாங்கு.” 

“எனக்கும் இதே நிறம்தான் பிடிச்சிருக்கு” 

“என்ன கமலா, எந்த விஷயத்திலேயும் நான் சொல்றதை நீ அப்படியே ஒப்புக்கொள் கிறாயே. புடவையைப் பற்றிச் சொல்றதிலேயுமா நான் கெட்டிக்காரன்?” 

“அப்படியில்லை! நான் மனதில் எண்ணு வதையே நீங்கள் சொல்லிவிடுகிறீர்கள். அதினால் தான் நீங்கள் சொல்வதை யெல்லாம் நான் ஒப்புக்கொண்டு விடுகிறேன்.” 

“கமலா, ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த மாதிரி புருஷன் சொல்வதை மனைவி ஒப்புக் கொள்வதானால் தாம்பத்ய வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!” 

“ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கும். கடவுள் உங்களுக்கு அப்படிப்பட்ட மனைவியைக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும்.” 

“நிச்சயமாகக் கொடுப்பார்-ஏன் கொடுத்து: விட்டார் என்றே சொல்லலாம். கமலா இருக்கும் போது நான் தேடியாபோக வேண்டும்? என் வாழ்க்கை மிகவும் இன்பமாகத்தான் இருக்கும்.” 

“உங்கள் வாழ்க்கை இன்பமாக அமைவ தற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்யத். தயாராயிருக்கிறேன்.” 

“வேறென்ன செய்யவேண்டும்! நாம் இரு வரும் கலியாணம் செய்து கொள்வதுதானே அதற்கு வழி.” 

கமலா கோபமடைந்தாள். ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் “என்ன அண்ணா, நீங்கள் தானா இப்படிப் பேசுகிறீர்கள்? என்னைக். கலியாணம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தை மட்டிலும் தயவு செய்து விட்டு விடுங்கள்.நான் மனைவியாவதற்குத் தகுதியற்ற வள்.நீங்கள் என்னைச் சகோதரியாகவே பாவிக்க வேண்டும். இதுவே என் வேண்டுகோள். 

66 நீ என் மனைவி ஆகத் தகுதியற்றவள் என்றா சொன்னாய்? 

ஏன் கமலா இப்படிச் சொல்கிறாய்? உன்னை மனைவியாக அடைவதை விட வேறு எனக்கு என்ன பாக்யம் இருக்கிறது. உன்னோடு முதல் முதல் பேசிய அன்றே நான் இதைத் தீர்மானித்து விட்டேன். கமலா நீயே உன்னை தாழ்த்திப் பேசிக்கொள்கிறாய்… கமலா உன்னை இப்பொழுதே என் வீட்டிற்கு  அழைத்துக் கொண்டுபோய் என் அப்பா அம்மாவின் சம்மதத்தைப் பெற்றுக்கொள் ளலாமென்றிருக்கிறேன். நீ தயவு செய்து இந்த ‘அண்ணா’ வேதாந்தங்களை யெல்லாம் விட்டுவிடு. என் வீட்டுக்கு வந்து விட்டு அடுத்த ரயிலுக்கு நீ போகலாமல்லவா? நேரம் கழித்துச் சென்றால் உன் அப்பா அம்மா சண்டைபிடிக்க மாட்டார்களே?” என்று உணர்ச்சி வேகத்தில் ஏதேதோ சொல்லிக்கொண்டு போனான். 

பாலுவின் தீர்மானத்தைக் கேட்டதும் கமலாவிற்குப் பயம் உண்டாயிற்று. “உன் அப்பா, அம்மா” என்ற வார்த்தைகள் அவள் நெஞ்சில் அமுங்கிக்கிடந்த குமுறல்களைக் கிளறி விட்டன. பெருமூச்சுடன் பேச ஆரம்பித்தாள். ” அண்ணா, நான் இந்த ரயிலுக்கே ஊருக்குப் போகவேண்டும். புடவைகூட இன்னொருநாள் வாங்கிக்கொள்ளலாம். உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது. வண்டியை ரயில்வே ஸ்டேஷனுக்குத் திருப்பச் சொல்லுங்கள் ” என்றாள். பாலு வண்டியை ரயிலடிக்குத் திருப்பச் சொல்லிவிட்டுக் கமலாவைப் பார்த்து “நீ எதைப்பற்றிப் பேசப்போகிறாய்?” என்று கேட்டான். 

“என் சொந்த விஷயத்தைப் பற்றித்தான் சில வார்த்தைகள் சொல்லவேண்டும். அதைத் தெரிந்துகொண்டால் நீங்கள் என்மீது கொண் டிருக்கும் தவறான ஆசையை விட்டுவிடுவீர்கள்.” 

“என்ன து ? தவறான ஆசையா? சரியான காதல் என்று சொல். அதை நான் விட்டு விடுவதா? நீ என்னை வெறுத்துத் தள்ளிவிட்டா லும் என் மனதில் எழுந்த இந்தக் காதல் ஒருபோதும் மங்காது. 

“உங்கள் மனதில் தோன்றுவது காதல் என்று நீங்கள் பிரமை கொள்கிறீர்கள். அவ்வளவுதான். இருவர் மனமும் காதல் பாதை யில் செல்லவில்லையே! எனக்கு உங்கள் மீது அபாரமான வாஞ்சைதான் ஏற்படுகிறதே யொழிய, காதல் என்பதற்கு என் உள்ளத்தில் சிறிதும் இடமில்லை.” 

“அப்படியானால் நீதான் தவறாகக் காதல் ணர்ச்சியை வாஞ்சையென்று எண்ணிக் கொள்கிறாய்.” 

“இல்லை அண்ணா, நான் இதை நன்றாக உணர்ந்துதான் சொல்கிறேன்.” 

“கமலா, நான் இன்னொன்று கேட்க மறந்து விட்டேன்… நான் அவ்வாறு சந்தேகப்பட வில்லை.இருந்தாலும் கேட்டு விடுகிறேன். உன் உள்ளத்தில் வேறு யாராவது இடம்பெற்று விட்டார்களோ என்னவோ! அவ்வாறிருந்தால் அதை அறியாமல் நான் உன்மீது காதல் கொள் வது தவறுதானே.” 

“அண்ணா, என்மீதுள்ள அபாரமான வாஞ்சையினால்தான் இம்மாதிரித் துணிந்து கேட்டு விட்டீர்கள். நான் அதற்கும் பதில் சொல்லி விடுகிறேன். எனக்கு ஒருவர் மீதும் காதல் ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்பட்டாலும் அந்த உணர்ச்சியைக் கொன்றுவிடுவேன்.” 

இதற்குள்ளாக ரயில்வே ஸ்டேஷனைச் சமீபித்துவிட்டது வண்டி. 

“கமலா, உன்னால் அவ்வாறு செய்ய முடியுமா? அப்படியானால் நீ ஒரு அபூர்வமான பிறவிதான்.”
 
“ஆமாம். அபூர்வமான பிறவிதான்.தாசி யின் மகளாகப்பிறந்த நான் அபூர்வமான பிறவி தான். ரொம்பக் கேவலமான பிறவியென்று சொல்லுங்கள். தாசியின் மகளான நான் காதல் வாழ்வை அடைவது எப்படி?” 

“என்ன? நீ…… தாசியின் மகளா?” 

“ஆம். தாசி செல்லத்தின் மகள். இதை மறைக்கவும் மறக்கவும்தான் நான் கலாசாலைப் படிப்பை நாடினேன். கேவலமான பிறப்பிற் கேற்றபடி கள்ளமனதும் அமைந்துவிட்டது. இந்த விபரம் தெரிந்திருந்தால் நீங்கள் என்னோடு சிநேகம் செய்திருக்கமாட்டீர்கள். உங்களிடம் கூட நான் என் வரலாற்றை இதுவரை மறைத்து வைத்ததற்கு எனது திருட்டுப் புத்திதானே காரணம்!” 

“கமலா, இதற்காகவா இப்படி வருந்து கிறாய்? எனக்குக் குலம் பெரிதல்ல. குணமும் விவேகமும்தான் வேண்டும். உன்னை நானே மணந்து உன் கவலையையும் அவமானத்தையும் மாற்றுகிறேன். இதற்காக நான் எந்தக் கட்டுப் பாட்டையும் மதிக்கப்போவதில்லை. கமலா, இது உறுதி.” 

“நான் உங்களைக் காதலிக்காதிருக்கையில் நீங்கள் ஜாதிக் கட்டுப்பாடுகளை மீறித்தான் என்ன செய்ய? ” 

“கமலா, திடீரென்று நீ ஏன் என்னை இவ் வாறு ஒரேயடியாக வெறுத்துப் பேசுகிறாய்? உன் அன்புக்குப் பாத்திரமாகாத அவ்வளவு கொடியவனா நான்?’ 

“இல்லை.நீங்கள் என் அன்புக்குப் பாத்திரமாக இருப்பதனால் தான் உங்கள் மீது எனக்குக் காதல் என்பது ஏற்படவில்லை. வாஞ்சை மட்டும் ஏற்படுகிறது. சரி, கலியாணப்பேச்சை இதோடு மறந்துவிடுங்கள். ரயில் வரும் நேர மாகி விட்டது. அண்ணா நான் போய் வரு கிறேன். அடுத்த தடவை நீங்கள் என்னிடம் இம்மாதிரிப்பேச்சை எடுக்கக் கூடாதென்று மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று கமலா அவனுக்கு நமஸ்காரம் செய்து விட்டு ரயிலில் போய் ஏறிக்கொண்டாள். 

பாலு அவளருகில்போய் தழதழத்த குரலில் ”உனக்காக வேண்டுமானால் உன்னோடு இதைப் பற்றிப் பேசாமலிருந்து விடுகிறேன். ஆனால் மனதில் நினைக்காமலிருக்க முடியாது கமலா.” 

அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கை யில் ரயில் புறப்பட்டு விட்டது. விவரிக்கமுடி யாத உணர்ச்சிகளால் தாக்கப்பட்ட பாலு நடைப்பிணம்போல வந்து தன் வண்டியில் ஏறி உட்கார்ந்தான். வண்டி வீட்டை நோக்கிப் புறப்பட்டது. ஆனால் அவனுக்கு அந்த வண்டி எங்கோ திக்குத் திசை தெரியாத ஒரு பாலை வனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது போலத் தோன்றியது. அன்று இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. 

மறுநாள் சனிக்கிழமை. லீவு நாள். பாலு ஸ்ரீபுரத்திற்கு டிக்கட் வாங்கிக்கொண்டு காலை ரயிலில் ஏறினான். கமலாவின் தாயாரைக்கண்டு நேரில் இதைப்பற்றிப் பேசி ஒரு முடிவுக்கு வர லாம் என்பதே அவன் இரவு முழுவதும் யோசித்த யோசனைகளின் முடிவு.தன்னுடைய கெளரவத்தை உத்தேசித்தே கமலா தன்னை மணக்க மறுக்கிறாள் என்று அவன் எண்ணினான். வளுடைய தாயார் மூலமாக அவளை இன்னும் கொஞ்சம் தேற்றினால் கலியாணத்திற்குச் சம்மதித்து விடுவாள் என்பது அவன்கொண்ட நம்பிக்கை! 

ஸ்ரீபுரத்தில் இறங்கிக் கமலாவின் வீட்டை விசாரித்துக்கொண்டு போய்ச் சேர்ந்தான். அது ஒரு பெரிய பங்களாவாக இருந்தது. அந்தப் யங்களா வாசலில் தன்வீட்டு மோட்டார் நின்று கொண்டிருப்பதை அவன் கண்டான், அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

அங்கு நின்ற வேலையாளைக் கூப்பிட்டு “கமலா இருக்கிறாளா? என்று கேட்டான். 

அதற்கு அவன் “சின்ன அம்மாவையா கேக்கிறீங்க. நீங்க யாரு?” என்றான். 

“நான் அவளோடு படிக்கிறேன். படிப்பு விஷயமாக அவளைப் பார்த்துப் பேசவேண்டும்.” 

“சின்னம்மாவை இப்போ பார்க்கமுடியாது சார். அய்யரு வந்திருக்காரு. அவரு போன அப்புறம் வந்தாப் பார்க்கலாம்.” 

“அய்யர் யாரு?” 

“அதுதான் அவுங்க அப்பா ராமசாமி அய்யரு?” 

“என்ன அவளுடைய அப்பா வக்கீல் ராமசாமி அய்யரா?” 

“ஏது நீங்க இப்படி அதிசயமாக் கேக்கிறீங்க உங்களுக்கு எந்த ஊரு?” 

“எனக்கு சிந்து பூந்துறை” 

“அப்படியா?  அய்யர் வீடும் சிந்துபூந்துறையிலேதான் இருக்குது. அய்யரு வீட்டுப் பக்கமா உங்க வீடு?” 

“இல்லே இல்லே. நான் போறேன். நான் வந்து தேடினதாகக் கமலாவிடம் சொல்ல வேண்டாம். என்ன தெரிஞ்சுதா?” என்று என்று சொல்லிக்கொண்டே திரும்பிப் பாராமல் ரயில்வே ஸ்டேஷனை நோக்கிப் பழையபடி நடந் தான். அவன் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது ரயில்வர ஒருமணி நேரமிருந்தது.மூலையில் கிடந்த ஒரு பெஞ்சின் மீது உட்கார்ந்தான். கமலா வீட்டு வேலையாள் சொன்ன பதிலிலிருந்து அவன் மனம் தன்னுடைய தந்தை ராமசாமி அய்யரின் கபட நாடகத்தைப்பற்றியே தீவிர மாகச் சிந்தித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு சாமியார் அவனிடம் வந்து “ஐயா பசிக்கிறது. ஏதாவது கொடுங்கள் ” என்று கையை நீட்டினார். சாமியாரின் காவி  வேஷ்டியையும் ருத்ராக்ஷ மாலைகளையும் கண்ட பாலுவுக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. “போங்கடா அயோக்கியப் பயல்கள். உலகத்தை ஏ ஏமாற்ற வேஷம் போடுகிறது. உலகத்தையே துறந்து விட்டாயோ நீ ? உனக்கேன் இந்த வேஷம்!” என்று ஒருநாளுமில்லாத படி சாமியார்மீது எரிந்து விழுந்தான். 

உலகம் முழுவதுமே வெளிவேஷமாகத் தோன்றியது அவனுக்கு.தன் தகப்பனார் செய்து வந்த பூஜை, கைக்கொண்டிருந்த வைதீக ஆசார அனுஷ்டானங்கள் எல்லாம் தன்னையும்,பளிங்கு போன்ற மனதையுடைய தன் தாயாரையும் ஏமாற்றுவதற்காகத்தான் என்று அவனுக்குப் பட்டது. கமலா முதல்நாள் சொன்ன வார்த்தை கள் ஒவ்வொன்றும் திரும்பவும் அவன் காதுகளில் ஒலித்தது. அந்த வார்த்தைகளின் மூலம் அவள் தன் உள்ளத்தில் உறைந்து கிடந்த துன்பத்தில் ஒரு கோடியைத்தான் வெளியிட் டாள் என்பதையும் பாலு இப்பொழுது உணர்ந்துகொண்டான். தான் அவளிடம் பிதற் றியதெல்லாம் அவள் மனதில் எவ்வாறு தைத் திருக்கும் என்று எண்ணிப் பார்த்தபோது, திரும்பவும் அவள் முகத்தில் விழிக்காமல் எங்காவது ஓடிவிடலாமா என்று நினைத்தான். தானும் அந்தக் கபட நாடகன் ராமசாமி அய்யரின் மகன் தான் என்பதை அவள் என்றைக் காவது அறிந்துகொண்டால் தன்னையும் ஒரு வஞ்சகப் பேயாகவே அவள் தீர்மானித்து விடுவாளே என்று அவன் மனம் புண்பட்டது. 

அவன் மனதில் இரு கட்சிகள் தோன்றி ஒன்றோடொன்று வாதாட ஆரம்பித்தன. “நீ ஏன் இந்த வஞ்சகப் பாரத்தைச் சுமந்து கொண்டிருக்க வேண்டும்? சாயந்திரம் வரை இங்கேயே இருந்து கமலாவைத் தனியாகச் சந்தித்து உண்மை முழுவதையும் அவளிடம் சொல்லிவிடு. உன் தந்தையை மன்னிக்கும்படி அவள் காலில் விழுந்து மன்னிப்புக்கேள். இதுவே உன் மனதை நிர்மலமாக்கும் என்றது ஒரு கட்சி. 

இன்னொரு கட்சி “அட மடையா, கமலாவின் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் ஆத்திரத் தைப் பல மடங்கு கிளறிவிடுவதற்காகவா அவளிடம் அந்தப் பாதகன் ராமசாமி அய்யரைப் பற்றிப் பிரஸ்தாபிக்கப்போகிறாய். வேண்டாம். அது பாவம். முடவனைப் பார்த்து, அவனது நிலைமையை விவரித்து நாம் அனுதாபப்படும் போதுதான் அவனுக்குத் தன்னைப் பற்றி அவமானம் உண்டாகிறது. ஆகையால் நீயாக அவளுடையவருத்தத்தைத் தூண்டிவிட்டு அவள் மனதைப் புண்படுத்தாதே. அவளாகவே அறிந்து கொள்ளட்டும் நீ ராசமாமி அய்யரின் மகன் என்பதை. அதுவரையாவது அவள் மனம் ராமசாமி அய்யரை மறந்திருக்கட்டும்” என்று சொல்லிற்று. 

இரண்டாவது கட்சி சொன்னதே பாலு வுக்குச் சரியென்று பட்டது. அதன்படி நடக்கத் தீர்மானித்துக் கொண்டான். இதற்குள்ளாக ரயில்வரும் சப்தம் கேட்டது. பாலு டிக்கெட் எடுத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் போய் நின்றான். “குப் குப்” என்று ரயில் இஞ்சினி லிருந்து வரும் புகை அன்று அவனுக்கு மட்டி லும் “வேஷம்! வேஷம்!! என்று கோஷமிட்டுக் லும்” கொண்டு வந்ததுபோலத் தோன்றியது. ரயில் புறப்பட்டதும் “நாடகமே உலகம்…” என்று ஒரு எட்டு வயதுப் பிச்சைக்காரப் பெண் பாடிக் கொண்டு வந்தாள். தன் தந்தையைப் பற்றித் தான் அந்தப் பெண் பாடுகிறாள் என்று நினைத்து தன் கையிலிருந்த நாலணாவை எடுத்து அந்தப் பெண் கையில் கொடுத்து விட்டு ஆனந்த மடைந்தான். 

திங்கட்கிழமை காலையில் கமலா வழக்கம் போல ரயிலில் வந்து இறங்கினாள். பாலு அவள் எதிரில் ஓடிப்போய் “கமலா நீ என் தங்கைதான். நான் அன்று உளறியதையெல்லாம் மறந்துவிடு” என்றான். 

“அண்ணா. நல்லவேளையாகக் கடவுள் உங்கள் மனதை நல்லபடியாக மாற்றிவிட்டார். இரண்டு நாளாக நான் இதைப்பற்றியே கவலைப் பட்டுக்கொண்டிருந்தேன். நீங்கள் இம்மாதிரி மாறுதலடைந்தது என் பாக்யம்தான்” 
என்று. சொல்லிக்கொண்டே சந்தோஷத்துடன் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள். பாலுவும் ஏறிக் கொண்டான். வண்டி கடைவீதி வழியாகக் கலாசாலையை நோக்கிப்போய்க்கொண்டிருந்தது. 

எதிரே ராமசாமி அய்யரின் கார் வந்து கொண்டிருந்தது. காரினுள் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்த ராமசாமி அய்யர் அன்றையப் பத்திரிகையில் மூழ்கி லயித்திருந்தார். அந்தக் காரைக் கண்டவுடனேயே வண்டி யினுள்ளிருந்த பாலுவும் கமலாவும் தலையை வேறு வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்கள். ராமசாமி அய்யரின் கார் தெருவில் கிடந்த ஒரு கூடை தூசியையும், வண்டிக்குள்ளிருந்த சகோதர சகோதரிகளின் மனதில் தாங்க முடி யாத ஆத்திரத்தையும் கிளப்பி விட்டு விட்டு வண்டியைத் தாண்டிச் சென்றது. 

– ஆனந்த விகடன், மணிக்கொடி, வசந்தம், யுவன், சக்தி ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன.

– சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.

சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை  "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *