ஆன்ம வைத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 59 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு மனிதன் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வந்தான். அவனைச் சோதித்த மருத்துவர் ‘உங்கள் சரீரத்தில் நோய் இல்லை’ என்றார். அவர் மனோவியாதி மருத்துவருமாதலால் அதனையும் சோதித்து வியாதி இல்லை என்று கண்டார்.

வந்தவர், ‘எனக்கு ஏதோ ஒரு வியாதி இருக்கிறது. அதை நான் நன்கு உணர்கிறேன்’ என்றார்.

‘சரி, அப்படியானால் நான் ஒரு ஆலோசனை கூறு கிறேன். இப்பட்டணத்தில் ஓர் நாடகம் நடக்கிறது. அதில் பேர் பெற்ற சிரிப்பு நடிகர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் போனால் உங்களை வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்துவிடுவார். உங்கள் வியாதி எதுவா யிருந்தாலும் பறந்துபோய் விடும்” என்றார் டாக்டர்.

வந்தவர் சொன்னார்:

“அந்தச் சிரிப்பு நடிகர் நான்தானே ஐயா. என் முகத்தில் பொன்னரிதாரம் பூசி கோமாளி வேடம் தாங்கி வந்தமையால் என்னை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை” என்றார்.

மருத்துவர் மெளனமாக நின்றார். வந்தவர் வந்த வழியே திரும்பிப் போனார்.

வந்த நோயாளிக்குத் தேவை ஆன்ம வைத்தியமே. ஆவிக்குரிய வியாதிகள் அணுகாதபடி ஆண்ட வருடைய பிள்ளைகள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.

ஆன்ம வியாதியின் மருத்துவர் இயேசு இரட்சகரே

“நான் உன் பரிகாரியாகிய கர்த்தர்” (யாத்திராகமம் 11:26]

“தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது”. (ரோமர் 14:17)

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *