ஆன்மக் கண்ணாடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 80 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அடிக்கடி வழிப்பயணம் செய்வோர் தங்க பையில் கண்ணாடி, சீப்பு வைத்துக்கொள்வர்.

கிறிஸ்தவர்கள் கையில் எப்போதும் ஓர் ஆன்ம கண்ணாடி இருத்தல் வேண்டும்.

ஒரு வியாபாரி எகிப்து தேசத்திலிருந்து மேற்றி ஆப்பிரிக்காவிலுள்ள கல்வி அறிவில்லாத ஒரு கிராம திற்குப் போனான்.

அந்தக் கிராம அதிகாரி ஒரு பெருமைக்காரன் தன்னை மிகவும் அழகுள்ளவன் என எண்ணிக்கொன டான். அவன் இதுவரை முகக்கண்ணாடியைப் பார்த்த வனல்லன்.

முதலில் அந்த அதிகாரி வீட்டுக்கே வியாபா போனான். முகக்கண்ணாடி ஒன்றை விலைக்குக் கொடு தால். முதன் முதலாக அவன் கண்ணாடியை கண்டான்.

“இந்த அவலட்சணமான மிருகம் இங்கு எப்படி வந்தது?” என்று அதிகாரி, வியாபாரியை ஆங்காரத்துடன் கேட்டான்.

“கண்ணாடியில் உங்கள் முகத்தையே நீங்கள் பார்க்கிறீர்கள். அது வேறு ஒரு மிருகமல்ல. நீங்க தான்” என்று வியாபாரி சாந்தமாகச் சொன்னான்.

அதிகாரிக்குக் கனகோபம் வந்தது. ‘இதுவா என் முகம்? நான் இவ்வளவு கேவலமாகவா இருக்கிறேன்’ என்று கூறிக் கோபத்தில் கண்ணாடியை வீசி எறிய அது துண்டு துண்டாய் உடைந்து நாறுங்கியது.

நம் புறநிலையைக் காட்டுவது முகக்கண்ணாடி.

நம் அக நிலையைக் காட்டுவது ஆன்மக் கண்ணாடியாகிய பைபிள்.

“நான் தேவனை முக முகமாய்க் கண்டேன்.” [ஆதியா.32:30]

“இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்கிறோம்; அப்பொழுது முகமுகமாய்ப் பார்ட்போம்.” [1 கொரிந்தியர் 13:12]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *