கதையாசிரியர் தொகுப்பு: நயீம் சையத்

11 கதைகள் கிடைத்துள்ளன.

சேற்றில் மலர்ந்த தாமரை

 

  (இதைப்புரிந்து கொள்ள இதற்கு முந்திய பாகம் : ஒரு கோலமயிலின் குடியிருப்பு என்ற கதையை வாசிக்கவும்) பாகம் 2 சிற்றுண்டி பில் கொடுக்க சர்வரிடம் கேட்ட பொழுது என் கையை தடுத்தி மல்லிகாவே அதை வெடுக்கென்று சர்வர் கையிலிருந்து இழுத்துக்கொண்டார். பூப்போன்ற இந்த மங்கைக்கு எத்தனை சோதனைகள், எத்தனை அல்லல்படும் இன்னல்கள் இடற்பாடுகளின் தொடர்ச்சி, பாதுகாப்பற்ற இருப்பிடம் ஒரு நிரந்தரமற்ற கேள்விக்குறியான ஒரு வாழ்க்கை, எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆபத்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு அகோர


ஒரு கோலமயிலின் குடியிருப்பு

 

  ஒரு இலட்சிய நாயகியின் உண்மைச் சம்பவம் சுமார் 40 ஆண்டுகள் கழிந்து விட்டன! எனது இளமைப் பருவம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். வாழ்க்கையின் கொடூர சோதனைகளை அலட்சியமாக சந்தித்து, கண்ணுக்குப் புலப்படாத நாமே கிழித்துக்கொண்ட வருமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்தும், சற்றும் சலிக்காமல், கவலையின்றி கழிந்த அந்தக் காலம், இப்பொழுது நினைக்கையில் பகீர் என்கிறது முதுமை எய்திக்கொண்டிருக்கும் என் உள்ளம். மிகச் சுருக்கமாக சொல்வதென்றால், காலம் செய்த கோலத்தில் வேலையிழந்த அருமைத் தந்தையார், அனைத்து சுக


முட்டை கசக்கும்

 

  நமது நாட்டில் பலவிதமான விளக்கங்கள் அளிக்கப்பட்டு மிகவும் பாராட்டப்படக்கூடிய உறவுகளில் முதலில் இடம்பெறுபவள் தாய்தான் அப்புறம்தான் தந்தை. இது தான் பொதுவான உலக நியதியாகவும் இருக்கிறது. ஐரோப்பிய கலாச்சாரத்தில் வளர்த்த பிள்ளை பெரியவனானதும், வேலை தேடி எங்கேயாவது சென்றுவிடுவதால், அவன் தனியாகவே தங்கி, தனக்கென்று ஒரு குடும்பத்தை உண்டாக்கிக்கொள்கின்றான், அதில் பெற்றோருடைய பங்கு மிகவும் சொற்பமாக இருக்கும். தான் பெற்ற பிள்ளை எத்தனை தவறுகள் செய்தாலும், அவைகளை திரும்ப திரும்ப செய்தாலும், அனைத்தையும் மறந்து, கோபத்தை


பெண் பாவம் பொல்லாதது!

 

  இப்படியும் பழி வாங்க முடியுமா? இதில் சில பகுதிகள் அருவருப்பைத் தரலாம்… பொருத்துக்கொள்க…. மங்கையர் மென்மையானவரே, அதில் சந்தேகமே இல்லை, ஆனால் அதே நேரத்தில், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களே ஆண்களை விட அதிக வலியை தாங்குகின்றனர் என்பதும் உண்மைதானே? பொருத்துக்கொள்வதற்கும் ஒரு அளவு இருக்கிறது. அந்த அளவு மீறினால்…. “சாது மிரண்டால், காடு கொள்ளாது…” என்பார்கள். அது தான் நடக்கும்… சில வருடங்களுக்கு முன் எங்கேயோ நான் படித்த சம்பவங்களில் ஒன்றுதான் என் மனதைத்


பெயர் சூட்டும் சம்பிரதாயம்

 

  “ரோஜா என நாம் அழைக்கும் ஒரு பெயரில் என்ன இருக்கிறது? வேறு பெயரில் கூட அது நறுமணமாகத்தான் இருக்கும்…” என ரோமியோ ஜூலியட் என்ற காதல் காவியத்தில் ஷேக்ஸ்பியர் தன் தத்துவத்தை வெளிப்படுத்தினார். ஒரு வேளை அது காதலர்களுக்கு பொருத்தமாக இருக்கலாம். ஏனெனில் காதலுக்கு கண்ணில்லை என்பார்களே, அதுபோல் காதும் இல்லை. இருந்திருந்தால், காதலர் மற்றவருடைய அறிவுரையைக்கேட்டு சுதாரித்துக்கொண்டிருப்பர் அல்லவா? எப்படியோ காதலிக்கும் ஒருவனுக்கு பெயர் என்ன, அவள் தெரு நாய் கூட மனதை கவர்ந்து