கதையாசிரியர் தொகுப்பு: கே.ரங்கநாதன்

1 கதை கிடைத்துள்ளன.

வந்தவன்!

 

  தலைப்புக்கு நன்றி : ‘வாத்தியார்’ சுஜாதா தன் முன்னால் அமர்ந்திருந்தவனை, வங்கி அதிகாரி ஆண்ட்ரூ (எ) ஆண்ட்ரூ மில்லர் பார்த்தான். பழுப்பு நிறமாயிருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். உப்பு/மிளகு தலை முடி ஒழுங்கில்லாமல் கலைந்து, நெற்றியில் புரண்டிருந்தது. இரண்டு நாள் தாடி. ஆசியக் கண்டத்திலிருந்து வந்திருப்பான் போலும். பார்த்தாலே ஆண்ட்ரூவிற்கு வெறுப்பாயிருந்தது. இந்தியா / சீனா / பாகிஸ்தான் / வங்க தேசம் / இலங்கை-யிலிருந்து சலிக்காமல் பயணம் செய்து, ஸ்காட்லாந்திற்கு வந்து, வேலையும் நன்றாகச் செய்து,