கதையாசிரியர் தொகுப்பு: எம்.சேகர்

5 கதைகள் கிடைத்துள்ளன.

மன அழல்

 

  திரு. பரந்தாமன் அன்றைய மாலைப்பொழுதில் மிச்சமிருக்கும் வயதைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். இதுநாள்வரையிலான வாழ்க்கை அவருக்குத் தூக்கிப்போட்டுவிட்டுப் போகும் காகிதக் குப்பைகளாகத் தெரிந்தது. ஏறக்குறைய அவரின் பெரும்பாலான வாழ்க்கையின் பக்கங்கள் எழுதப்பட்டு இறுதி அத்தியாயத்துக்காக மட்டும் காத்திருப்பதாக அவருக்குத் தெரிந்தது. மனம் வெறும் வெறுமைகளை மட்டுமே தாங்கிக்கொண்டு இருப்பதாகத் தோன்றியது. மற்றவர்களைப் போலத்தான் அவரின் வாழ்க்கையும். ஓர் அலுவலகத்தின் சாதாரண அலுவலராக அதற்கான வழக்கமான தகுதிகளுடன் ஒரு வேலையோடு ஆரம்பமானது. கடின உழைப்பு அதே அலுவலகத்தில்


படையல்

 

  ‘அன்பு, நீ இங்க தங்கக்கூட வேணாம், கொஞ்ச நேரம் வந்துட்டாவது போ…அது போதும்’ அந்தக் குரல் அடிக்கடி என்னைத் தொந்தரவு செய்துகொண்டேயிருந்தது. இதுநாள்வரையில் இதைப்பற்றி நான் யோசித்துப் பார்த்ததுகூட கிடையாது. அப்படி யோசிக்க நேரமும் அவசியமும் இருந்ததும் இல்லை. காலையில் அவசர அவரமாக எழுந்து அலுவலகம் செல்லவே நேரம் சரியாக இருக்கும். தங்கியிருக்கும் அந்த வாடகை வீட்டிலிருந்து அந்த அலுவலகம் அப்படியொன்றும் அதிக தூரமில்லைதான். இருந்தாலும் இந்த நகரத்து வாழ்க்கையில் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். சிறிது தாமதித்தாலும்


அப்பாவின் படகு

 

  அப்பா மீண்டும் பழையபடி ஆரம்பித்துவிட்டார். இந்த வார இறுதியில் தஞ்சோங் ஈராவ் கம்பத்துக்குச் சென்றபோது பலகைக் கடைக்காரன் ஆமெங்கின் பேச்சின் ஊடே என்னால் இதை அறிந்துகொள்ளமுடிந்தது. அம்மாவுக்குக் கூட இந்தப்போக்குப் பிடிக்வில்லை. முன்பிருந்தே அண்ணனுக்கும் இது பிடித்ததில்லை. ஏன் எனக்கும்கூட இது பிடிக்கவில்லைதான். ஆனால் அப்பாவுக்கு முன் இந்தப் பிடித்தமில்லை என்பது எதுவும் செய்ய முடியாத ஒரு சூழல்தான். அம்மாவுக்கு அப்பாவை எதிர்த்துப் பேசவோ தட்டிக்கேட்கவோ திராணியில்லை. அவள் வளர்ந்து வாழ்ந்துவரும் சூழல் அப்படி. அம்மாவைப்


தாய்

 

  ‘அப்பா, இனிமேல் நா அந்த வீட்டுல இருக்கமுடியாது, என்னை இப்பவே வந்து கூட்டிக்கிட்டுப்போங்க’ மகள் யாழினி கூறியதைக்கேட்டதும் அதிர்ந்துதான் போனான் சுப்பரமணியம். தான் ஓட்டிக்கொண்டிருந்த கம்பெனியின் வேனை பி.ஐ.ஈ. நெடுஞ்சாலையின் ஓரமாகச் சிக்னெலைப் போட்டு நிறுத்திவிட்டு, ‘இப்ப என்ன ஆச்சு?’ ‘முடியலப்பா, இனிமே நா அங்க போகமாட்டேன், பள்ளி முடிஞ்சு பஸ் ஸ்டோப்புல வேய்ட் பண்றேன்’ அவனின் பதிலுக்குக்கூட காத்திராமல் போனை வைத்துவிட்டாள். என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. மணியைப் பார்த்தான். மணி 6.30.


ஒரு விடியலின் கிழக்குப்பொழுதுகள்

 

  இன்று முதல் இரவு. புதிய இடம். புதிய சூழல். முதன்முதலாகப் படுக்கப்போகும் ஒரு கட்டில், மெத்தை, அதன்மேல் வெண்விரிப்பு, போர்வை மற்றும் தலையணை. அனைத்தும் எனக்குப் பழக்கமில்லாதவை. இந்த இடத்தின் காற்றும்கூட எனக்கு வித்தியாசமாகப்பட்டது. உடலில் வேறு விதமான, இதுவரை நான் அறிந்திராத ஓர் உணர்வை உண்டாக்கி எனக்குள் என்னென்னவோ மாற்றங்களை இந்த இரவுக்குள் அவை ஏற்படுத்தலாம். மாற்றம் ஒன்றுதான் இதுவரையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இந்த உலகை இயக்கிக்கொண்டிருக்கிறது. அடுத்துவரும் விடியலுக்குள் நானும் மாறியாக