கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 8, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

திரைக்கதை

 

 இரவு மணி ஏழு. இருவது வருடங்களாய் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனராய் கொடி நாட்டி வரும் ஹரிபிரசாத் ,சமீபத்தில் ரிலீசாகி ,மெகா ஹிட்டான தனது படம் ‘ ஆக்‌ஷன் ஹீரோ’ வினை தனிமையில் தனது அறையில் அமர்ந்து ரசித்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார். ‘ஆக்‌ஷன் ஹீரோவில் ‘க்ளைமேக்ஸ் காட்சி நெருங்கிக்கொண்டிருந்தது. இதை எல்லாம் இவ்ளோ சரியா சொல்றியே நீ யார்னுதானே என்னைப்பார்த்து கேக்கறீங்க.சரிதானே?! சொல்றேன்..அப்புறமா! சதீஷ் வேறு யாருமல்ல. ஹரிபிரசாத்தின் அசோசியேட் டைரக்டர்தான் சதீஷ்.மீன் குட்டிக்கு நீச்சல்


திருப்பங்கள்

 

 அன்று யாமினி பிறந்த நாள்,அவளின் அப்பா,அம்மா,தங்கை நண்பர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டார்கள். ஆனால் அவளின் கணவன் ஆதவன் இன்னும் வாழ்த்து கூறவில்லை,அவள் எதிர்பார்த்தது அதைமட்டும் தான் திருமணம் முடித்தப் பின்பு அவளின் முதல் பிறந்த நாள் இது,ஆவலுடன் எதிர்பார்த்தாள்.எப்படி மறந்தான் எனக்கு தெரியாமல் ஏதாவது செய்து அசத்தப்போறான் என்று நினைத்தாள்,வழமைப்போல் காலையில் வேலைக்குப் போய்,மாலையில் திரும்பி வந்தான் ஆதவன்,கையில் ஏதாவது இருக்கா?என்று பார்த்தாள் யாமினி,எதுவும் இல்லை முகம் வாடியது,அதை அவன் கவனிக்கவில்லை,இப்போது தான் எது தேவை என்றாலும்


இதுவும் கடந்து போகும்

 

 ராகவன் கண்ணை மூடி கொண்டு அமர்திருந்தார். முந்தைய நாள் இரவு திடீரென்று பவித்ராவின் அலறல் சத்தம் கேட்டு, சந்தோஷின் அறைக்குள் ஓடினார். அங்கே பாதி கண்களை மூடியபடி, வாயில் பால் போன்ற திரவம் வழிய, தலை தொங்கியவாறு சந்தோஷ் கட்டிலில் கிடந்தான். அவன் உடல் வேகமாக அதிர்ந்து கொண்டிருந்தது. பவித்ரா ஐயோ ஐயோ என்று கதறிக்கொண்டே, அவனை தூக்கி உட்கார வைக்க முயன்று கொண்டு இருந்தாள். பதறியபடியே இருவரும் அவனை காரில் ஏற்றிக் கொண்டு, அருகில் இருந்த


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 குழந்தைக்கு ‘நாம கரணம்’பண்ண ஆரம்பித்த வாத்தியார் இடம் காமாக்ஷியும்,சாம்பசிவனும் குழந்தைக்கு ‘மீரா’ என்று பெயர் வைக்க சொன்னார்கள்.வாத்தியாரும் அந்த குழந்தைக் காதிலே ‘மீரா’ என்று மூன்று தடவை சொன்னார். சாம்பசிவன் வாத்தியாருக்கு வெத்திலை பாக்கு,தேங்காய் பழத்துடன் தக்ஷணையையும் கொடு த்து அனுப்பினான்.வாத்தியார்கள் கிளம்பிப் போனவுடன் சமையல் கார மாமி எல்லோருக்கும் நுனி இலையைப் போட்டு,அவள் பண்ணீ இருந்த கல்யாண சமையலை பரிமாறினாள்.எல்லோரும் சாப்பிட் டு விட்டு சமையல் கார மாமியைப்


காலம் மறந்த இடம்

 

 அத்தியாயம்:௩ – திசை மாறிய பயணம் | அத்தியாயம்: ௪ – வஞ்சகன் பிடிபட்டான் அதே வழியிலேயே வெகு நாட்களாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். நான் உடைந்த கோணமாணியை வைத்து எங்கள் இடத்தை அறிய முயற்சி செய்து கொண்டிருந்தேன். அது கொடுக்கும் முடிவுகள் நம்பத் தகுந்ததாக எப்போதும் இருந்ததில்லை. உறுதியாக நாங்கள் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தாலும் அது மேற்கு நோக்கியே காட்டிக் கொண்டிருந்தது. நான் அதை நொந்து கொண்டிருந்தேன். பின் ஒரு நாள் மத்தியானம்


நடுவேனிற் கனவு

 

 முன்னுரை ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது யாவரும் அறிவர். அவர்தம் நாடகங்கள் நவில்தொறும் நயம் பயப்பன. ஆங்கிலத்தில் சார்லஸ் லாம் (Charles Lamb) எழுதிய ஷேக்ஸ்பியர் கதைகளைத் தழுவியே தமிழில் கதைகளும் எழுதப்பெற்றுள்ளன. இப்போது மூன்றாம் புத்தகமாக நடுவேனிற் கனவு (A Midsummer Night’s Dream), சிம்பலின் (Cymbeline), கார்காலக் கதை (The Winter’s Tale), ஒதெல்லோ (Othello) ஆகிய நான்கு கதைகளும் வெளிவருகின்றன. இப்பதிப்பில், சிறுவர்கட்குக் கதைகள் நன்றாய் மனத்திற் பதியும் பொருட்டுக் கதை உறுப்பினர்களையும்


சிலுவை

 

 அந்த நாற்பது காம்பிரா லயத்தில் நாலாவது காம்பிரா மட்டும் மஞ்சள் குளித்த பெண்போல் தனியாகத் தெரிகிறது. எல்லாச் சுவர்களுமே புகைமண்டிப்போயும், சாணிப் பூச்சில் வெடிப்பு கண்டும் இருக்கையில், நாலாவது காம்பிராவின் அரைச் சுவர் மட்டும் புது மெருகுடன் வெள்ளை மண் பூசப் பட்டு சுண்ணாம்படித்த சுவர் போல் காட்சியளிக்கிறது. கிளாக்கரய்யா பங்களாவுக்கு வெள்ளையடிக்கத் தள்ளப் பட்டபோதே நைசாகக் கண்டக்டரய்யாவிடம் சிலுவை கேட் டான், ‘ஏவுட்டு காம்பிராவுக்கும் ஒரு ஓட்டு ஓட்டிக்கிடங்களா’ என்று . ‘மூச்! காட்டப்படாது’ என்றுட்டார்


பொய் – ஒரு பக்க கதை

 

 பக்கத்துக்கு வீட்டு குடிசைக்குள் நுழைந்த என் மனைவி மரகதம் கையில் மூடிய கிண்ணத்துடன் திரும்பி வந்தாள். வழியில் அமர்ந்திருந்த எனக்கு…. கருவாட்டுக் குழம்பு வாசனை கம கமவென்று என் மூக்கில் ஏறியது. புரிந்து விட்டது! அந்த வீட்டிலிருந்து இதை வாங்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் பிழைப்புக்காக வெளியூரிலிருந்து வந்தவர்கள். கணவர் வாய் பேச முடியாத மனிதர் கூலித் தொழிலாளி. மனைவி, இரண்டு பிள்ளைகளோடு பிழைப்புத் தேடி வந்தவர்களுக்கு ஊர் பெரிய மனிதர் என்கிற முறையில் என்


பந்தி

 

 முதல் பந்தியின் முதல் வரிசையில் நீண்ட நேரத்திற்கு முன்னரே அமர்ந்திருந்த அவனை யாரும் கண்டுகொள்ளாததை அவனும் கண்டுகொள்ளவில்லை. அந்த வாழை இலையின் வனப்பு அவன் வாய் திறந்தது.ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் இலையில் விழுவதை எந்த வரிசையுமின்றி, பாரபட்சமின்றி வயிற்றை நிரப்பி கொண்டிருந்தான். விருப்பமோ வெறுப்போ இன்றி அருகிருப்பதை ஆசையோடு ஏற்று உண்டுகொண்டிருந்தான். அருகில் அமர வைக்க பட்டவர்களும் அவனை தள்ளியே அருவருப்புடன் அமர்ந்தனர் சொந்தக்காரன், சாதிக்காரன், ஊர்க்காரன் ஒவ்வொருத்தனும் ஏனையோரை ஏவிகொண்டிருந்தனர். “இலை போடல, சோறு போடல,


அர்த்தநாரீஸ்வரர்

 

 (இதற்கு முந்தைய ‘அதிதி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). சுபத்ரா, மாருதி, மொரிகா, பட்டாதிகா, விஜயங்களா, லீலாவதி போன்ற பெரிய நிபுணர்கள் பெண்கள் குலத்தில் அவதரித்தது பலருக்கும் தெரியாது. பெண் அரசிகளின், ராணிகளின், வீராங்கனைகளின் பட்டியல் மிக நீண்டது. வீரத்தாய் பற்றிய பாடல்கள் வேதத்திலும், புறநாநூற்றிலும் உள்ளது. வேறு எங்கும் வீரத்தாய் பாடல்கள் இல்லை. கைகேயி தசரத மன்னனுக்கு சாரதியாக இருந்து போரில் வெற்றிவாகை சூட உதவியதால், மூன்று வரங்களைப் பெற்றாள்; ராமாயணம் நமக்குக்