கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 5,998 
 

அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 | அத்தியாயம்-18

கோயம்பேடு பஸ் ஸ்டேண்டுக்கு வந்து திண்டிவனம் போகும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு திண்டிவனம் வந்து சேர்ந்தாள் ராணீ.பஸ்ஸை விட்டு கீழெ இறங்கி ராணீ தன் தலையை புடவைத் தலைப்பால் தன் முகத்தை பாதி மறைத்து கொண்டாள்.மெல்ல தன் வீட்டை நோக்கி நடந்தாள் ராணீ.தன் பையில் அவள் வைத்து இருந்த தாலியை எடுத்து தன் கழுத்தில் கட்டிக் கொண்டாள்.பிறகு மெல்ல தன் வீட்டு வாசலுக்கு வந்து “அம்மா,அம்மா” என்று மெல்ல குரல் கொடுத்தாள் ராணீ.தன் பெண் ராணீயின் குரல் போல் இருக்கவே முத்தம்மா “யாரு, யாரு” என்று குரல் கொடுத்தாள்.“நான் தாம்மா ராணீ” என்று மெல்ல பதில் சொன்னாள் ராணீ.”இதோ வரேன், இதோ வரேன் “என்று பதில் குரல் கொடுத்துக் கொண்டே எழுந்து வந்து கதவைத் திறந்தாள் முத்தம்மா.“வா ராணீ வா, எங்கே இந்த நடு ராத்திரியிலே தனியா வந்து இருக்கே.இன்னும் முன்னே வர பஸ்சிலே கிளம்பி வரக் கூடாதா.மணி பன்னண்டு தாண்டி இருக்கும் போல் இருக்குதே” என்றாள் முத்தம்மா. அவள் கண் பார்வை கொஞ்சம் மங்கலாக இருந்து வருவதால் அவளுக்கு ராணீ கட்டி இருந்த தாலி நல்ல வேளை அவ கண்லே படலே.“இல்லேம்மா நான் சென்னையை விட்டு கிளம்பும் போதே ரொம்ப லேட்டா யிடுச்சி.இதுக்கு முன் பஸ் ‘பிரேக் டவுன்’ ஆயிடுச்சி. அதனால்லே இந்த பஸ் தான் கிடைச்சுதும்மா” என்று சொல்லி விட்டு உள்ளே வந்து பையை வைத்து விட்டு தன் அம்மாவின் பாயின் பக்கத்தில் தான் முன்னே உபயோகித்து வந்த பாயைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள் ராணீ.“அம்மா நீ எப்படி இருக்கே.உன் உடம்பு ரொம்ப மெலிஞ்சு இருக்கேயேம்மா. ஏம்மா,நீ வேளா வேளைக்கு சரியா சாப்பிடறது இல்லையா”என்று அம்மாவின் உடம்பை தொட்டுப் பார்த்துக் கொண்டு கேட்டாள் ராணீ.“அதெல்லாம் ஒன்னுமில்லே ராணீ.நீ அனுப்புற பணத்திலே நான் நல்லா சாப்பிட்டு தான் வரேன்.வயசாகுது இல்லே,அது தான் இளைப்புக்கு காரணம்.வேறே ஒன்னும் இல்லே ராணீ” என்று சொன்னாள் முத்தம்மா.“நீ எப்படி இருக்கே ராணீ.நீ வேலை செய்யற இடத்திலே உனக்கு சம்பளம் எல்லாம் சரியா தராங்களா.நீ கஷ்டம் இல்லாம இருந்து வரயா.உன் சித்தி ஜோதி எப்படி இருக்கா..அவ புருஷன் இன்னும் ஜெயில்லே தான் இருக்கானா?எப்ப வெளியில் விடுவாங்களா அவரை.பாவம் ஜோதி அவ கஷடம் எப்போ விடியுமோ” என்று கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டாள் முத்தம்மா. ராணீ எல்லாத்துக்கும் பதில் சொன்னாள்.முத்தம்மா கொஞ்சம் சந்தோஷமாய் இருந்தாள்.

“படுத்துக்க ராணீ,மீதியே நாம காலையிலே நிதானமா பேசிக்கலாம்.நீ படுத்துத் தூங்கு” என்று சொல்லி ராணீயை படுக்கச் சொல்லி விட்டு முத்தம்மா படுத்துக் கொண்டாள்.ராணீயும் தன் அம்மா பக்கத்தில் படுத்துக் கொண்டு கொஞ்ச நேரம் தன் அம்மாவைக் கட்டிக் கொண்டு இருந்தாள். அவளுக்குத் தூக்கம் வரவிலை.அவள் மனது எண்ணமிட்டுக் கொண்டு இருந்தது.

காலை சேவல் கூவியது.முத்தம்மா மெல்ல புரண்டு படுத்தாள்.கடவுள் பேரை சொல்லிய படி மெல்ல எழுந்திரிக்க ஆரம்பித்தாள் முத்தம்மா.

உட்காந்துக் கொண்டு இருந்த அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு “அம்மா ஒரு ஐஞ்சு நிமிஷம் எங்கிட்டே உக்காரும்மா.நான் உன் கிட்டே நிறைய பேசணும்மா. கொஞ்சம் உக்காரும்மா” என்று முத்தம்மா கையைப் பிடித்து தன் பக்கத்துலே உட்கார வைத்தாள் ராணீ.“சரி ராணீ,நான் உக்காற்றேன்” என்று சொல்லி ராணீ பக்கத்தில் திரும்பி உட்கார்ந்தாள் முத்தம்மா.

“அம்மா நான் உன் கிட்டே ஒரு சமாசாரம் சொல்லப் போறேன்.நீ பதட்டப் படாம கேளும்மா.வேலைப் பண்ணுற வீட்டிலே இருக்கிறவங்க ரொம்ப நல்லவங்க.அந்த வீட்டுக்கார ஐயாவுக்கு ஒரு தம்பி வீட்டோட வேலை இல்லாம இருந்து வந்தரும்மா.அவரும் ரொம்ப நல்லவர் தாம்மா.ஒரு நாள் அவங்க எல்லாம் வெளியி லே போய் இருந்தப்ப நான் மட்டும் வீட்டுலே வேலை செஞ்சுக்கிட்டு இருந்தேன்.அப்போ அந்த ஐயாவின் தம்பி என்னே ‘கெடுத்திட்டாரமா’…..” என்று ராணீ முழுக்கச் சொல்லி முடிக்கவே இல்லை.”என்னடி இது உனக்கு பைத்தியமா பிடிச்சி இருக்கு.இவ்வளவு பொ¢ய சமாசாரத்தே இவ்வளவு நிதானமா ஆர அமரச் சொல்றே.இதுக்காடி உன்னே நான் சென்னைக்கு அனுப்பினே. இப்போ நான் என்ன பண்ணுவேண்டீ…..” என்று தலையில் அடித்துக் கொண்டு ‘ஓ’வென்று கத்த ஆரம்பிக்கும் போது ராணீ அவள் வாயை பொத்தினாள்.“அம்மா நான் சொல்றதை முழுக்க கேளும்மா.நீ கத்தி ஊரை இப்போ கூட்டாதே” என்று சொல்லி விட்டு கொஞ்ச நேரம் ஆனதும் “அம்மா அப்புறமா நடந்ததை முழுக்கக் கேளம்மா.இது நடந்த சில நிமிஷத்துக்கெல்லாம் அந்த விட்டுக்கார ஐயாவும் அம்மாவும் வீட்டுக்கு வந்துட்டாங்க.அவருக்கு விஷயம் தெரிஞ்சு அவர் அந்த தம்பியை நல்லா புரட்டி புரட்டி அடிச்சுட்டாரு கோவத்திலே.கையிலே அடிச்சது போதாதென்ன்று அங்கு இருந்த மரக் கட்டையாலே வேறு அடிச்சாரும்மா.அப்புறம் என் கிட்டே வந்து ராணீ ‘தயவு செஞ்சி போலீஸ்லே இந்த சமாசாரத்தை சொல்லி விடாதே.அப்புறம் ‘போலீஸ் கேஸ்’ ஆனா எல்லோருக்கும் கஷ்டம். இந்த வீட்டுலே உன்னே நாங்க எந்த காரணம் கொண்டும் வேலையிலே இருந்து நிறுத்த மாட்டோம்.நீ உன் உயிர் இருக்கும் வரை நீ இங்கே வேலை செஞ்சு வா.இந்த வீடு உன் வீடு மாதிரி’ என்று சொல்லி என் கையைப் பிடிச்சிக் கொண்டு கெஞ்சினாங்க அந்த ஐயாவும் அம்மாவும். தன் அம்மாவின் வாயாய்ப் பொத்திக் கொண்டு “கத்தாம கேளும்மா.நம் அக்கம் பக்கத்திலே இருக்கவங்க காத்திலெ விழப் போவுதும்மா.அந்த நேரம் பாத்து அந்த அம்மா அந்த தம்பியைத் தொட்டுப் பார்த்தாங்க. அந்த பையன் இறந்திட்டாரம்மா.அவர் பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு இருந்தாரு.அந்த அம்மா வேறே வந்து எங்கிட்டேவந்து ‘ராணீ தயவு செஞ்சி போலீஸ்லே சொல்லி விடாதேம்மா.அப்புறமா என் புருஷனும் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும்’ என்று சொல்லி கெஞ்சினாங்க. அவங்க ரெண்டு பேர்கள் படற கஷடத்தே நான் பாத்தேன் ம்மா.என் மனசே நான் மாத்திக்கிட்டேன் ம்மா. என்னே கெடுத்தவன் என்னவோ இறந்து போயிட்டான்.அவங்களும் கெஞ்சராங்க.எனக்கும் ஒரு வேலை வேணுமே.அந்த நேரம் பாத்து அந்த ஐயாவும் அம்மாவும் ‘நான் முழுகாம இருக்கே ன்னு தெரிஞ்சதும் அந்த ஐயாவும் அம்மாவும் ‘ராணீ,நீ உன் ஊரான திண்டிவனத்துக்குப் போய் மெல்ல உன் அம்மா கிட்டே நடந்ததை என்னாம் நிதானமா சொல்லி அவங்களைப் புரிய வச்சு,,உன் வயித்திலெ வளர இந்தக் குழந்தையை பெத்துக்கிட்டு,மறுபடியும் இங்கே வேலைக்கு வா.நாங்க உன்னை வேலைக்கு வச்சுக்கிறோம்.நீ காலம் பூராவும் உன்னையும் உன் குழந்தயையும் நாங்க இந்த வூட்டிலே வச்சு கிட்டு இந்த வீட்டிலே வேலை செஞ்சு வர அனுமதிக்கி றோம்.அது வரைக்கும் நாங்க உனக்கு மாசா மாசம் ஆறு நூறு ரூபாய் மணி ஆரடர் பண்¢றோம். உனக்கு பிரசவம் ஆகும் மாசத்தில் பணமும் அனுப்பறோம் .நீ கவலைப் படாம உன் அம்மா கூட இருந்து குழந்தையைப் பெத்துக்கோ ராணீ. அப்புறமா இங்கேயெ வூட்டு வேலை க்கு வா’ ன்னு சொல்லி அனுப்பி இருக்காங்கம்மா” என்று ஒரு கதையை ஜோடிச்சு சொல்லி முடித்தாள் ராணீ.

கொஞ்ச நேரம் போனதும் “அம்மா அக்கம் பக்கத்திலே யாராச்சும் கேட்டா ‘ஆமா என் பொண்ணு சென்னை யிலே ஒருத்தனே காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டா.அவன் இப்போ தூபாய்லே வேலை கிடைச்சு போய் இருக்கான். திரும்பி வர ரெண்டு வருஷம் ஆவும். அதனாலே தான் ராணீ பிரசவத்திற்கு இங்கே வந்து இருக்கான்னு தைரியமா சொல்லு..அவங்களா நமக்கு சோறு போடப் போறாங்க.நம்ம கதையை நாம கவனிச்சுக்கலாம்மா” என்று சொல்லி தன் அம்மாவை சமாதானப் படுத்தினாள் ராணீ.ஒரு பத்து நிமிஷம் போனதும் “என்னவோம்மா நீ சொல்றது சினிமாவிலே வர கதை போல இருக்கு.சரி நாம இருந்து வருவோம் ராணீ.வேறே என்ன பண்றது ராணீ. நல்ல வேளை நீ இந்த அவமானம் தாங்காமே எங்கேயும் குளத்துலே,கிணத்திலே, விழுந்து உன் உயிரை மாய்ச்சிக்காம,தைரியமா இருந்துக் கிட்டு வந்து இந்த விஷயத்தை என் கிட்டே சொல்லி விட்டு என்னுடன் வாழ வந்தாயே.அதுவே எனக்கு போதும்மா. நீ என்னுடனே இரும்மா.நீ பிள்ளையே பெத்துக் கிட்டு என்னோடவே இருந்து வாம்மா. நான் ரெண்டு பேரும் வேலை செஞ்சி இங்கே பிழைச்சு க்கலாம்மா.நீ மறுபடியும் சென்னைக்கு எல்லாம் போக வேணாம்மா.பொல்லாத ஊரும்மா பட்டணம்.இனிமே எந்த காரணம் கொண்டும் நான் உன்னை தனியா குழந்தையுடன் அனுப்ப மாட்டேன் ராணீ” என்று கோவமாகச் சொன்னாள் முத்தம்மா.‘மெல்ல நாம எதோ ஒரு பொய்க் கதையைச் சொல்லி நம்ம அம்மா வை நம்ப வச்சு விட்டோம்’ என்ற சந்தோஷத்தில் ராணீயும் எழுந்து தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். முத்தம்மா ராணீ இட்டுக் கட்டி சொன்ன கதையையே எல்லோருக்கும் சொல்லி மெல்ல சமாளித்தாள்.

ராணீ திண்டிவனம் வந்து ஓரு வாரம் ஓடி விட்டது.ராணீ தான் சேமித்து வைத்திருந்த பணம்,நடராஜன் கொடுத்த பணம்,கமலா கொடுத்த பணம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொண்டு முத்தம்மாவிடம் கொடுத்தாள்.

அன்று வேலையில் இருந்து வந்து திரும்பின நடராஜன் ”கமலா, என் நண்பன் கருணா எங்க செக்ஷனில் யூனியன் லீடர்.அவன் ‘மானேஜ்மென்ட்டை’ நிறைய நியாயமான கேள்விகளைக் கேட்டு வந்தான்.இதை பொறுக்காத ‘மானேஜ்மெண்ட்’, இன்னைக்கு கருணாவை ஒரு பொய்யான ‘கேஸில்’ ‘புக்’ பண்ணி அவனை ‘சஸ்பெண்ட்’ பண்ணி விட்டாங்க.இனிமே ‘கேஸ்’ நடந்து அதில் கருணா ஜெயிச்சு வந்தாத் தான் அவன் மீண்டும் வேலைக்கு வரமுடியும். இந்த கேஸ் முடிய எட்டு ஒன்பது மாசமாவது ஆகும் போல் இருக்கு கமலா.அது வரை அவனுக்கு ‘அரை சம்பளம்’ தான் வரும்.அதனால்லே நாங்க ஒரு எட்டு பேர் அவனுக்கு தலா ஆளுக்கு ஆறு நூரு ரூபாய் கொடுத்து இந்த எட்டு ஒன்பது மாசம் அவனுக்கு உதவலாம்ன்னு இருக்கோம் கமலா. பாவம் கருணா. எங்களுக்குப் பாடு படப் போய் அவனுக்கு இந்த கஷ்டம் வந்திடுச்சி கமலா”என்று சொல்லி வருத்தப் படுவது போ நடித்தான் நடராஜன். “அதனால் என்னங்க இந்த மாதிரி சமயத்திலே நாம தான் அவருக்கு நிச்சியம் உதவணுங்க.நீங்க அவருக்கு பணம் உங்க பங்கான ஆறு நூறு ரூபாய் குடுங்க.நாம நமக்கு வரும் மீதி பணத்திலே குடித்தனம் பண்ணலாங்க. நமக்கு ஒரு கஷ்டமும் இல்லீங்க”என்றாள் கமலா. கமலா அந்தப் பக்கம் போனதும் தனக்குள் சந்தோஷப் பட்டுக் கொண்டான் நடராஜன்.

நடராஜன் மாதம் பிறந்ததும் ஆறு நூறு ரூபாயை,ராணீக்கு அவன் ஆ·பீஸ் பக்கத்தில் இருக்கும் ‘போஸ்ட் ஆ·பீசில்’ இருந்து மணி ஆர்டர் பண்ணி அந்த மணி ஆர்டா¢ல் ராணீயின் உடம்பைப் பற்றி விசாரித்தும்,நல்ல ஆகாரமாய் சாப்பிட்டும் வரச் சொல்லியும் எழுதி இருந்தான் நடராஜன்.நடராஜன் ஆறு நூறு பணம் அனுப்பியதைப் பாத்து ராணீ சந்தோஷப் பட்டாள். ராணீ அந்த பணத்தில் தனக்கும் தன் அம்மாவுக்கும் வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொடுத்து வந்தாள்.ராணீ மணி ஆர்டர் பாரத்தில் கை எழுத்து போட்டு பணம் வாங்கிக் கொண்டதற்கு ‘அக்னாலெட்ஜ்மெண்ட்’ நடராஜனுக்கு ஆறு நாளில் கிடைத்து விட்டது.அதில் ‘ராணீ’ என்று அவள் தமிழில் கை எழுத்துப் போட்டு இருந்தாள்.நடராஜன் அந்த ‘அக்னாலெஜ்மனட்’ காகிதத்தை தன் பர்ஸில் வைத்து கொண்டான்.

சரோஜாவும் சிவலிங்கமும் ஒரு நாள் வந்து நடராஜனிடம் சொல்லி விட்டு வந்து கமலாவை தங்கள் விட்டுக்கு அழைத்துப் போனார்கள். நடராஜன் கமலாவை தனியாக அழைத்து ”கமலா,உங்க அப்பா அம்மாவிடம் இப்போ பணம் அதிகம் இருக்காது.அதனால் நீ உன் சம்பள பணம் பூராவும் அவங்க கிட்டே கொடுத்து வா.நீ நல்லபடி பிரசவம் ஆகி குழந்தையோடு என்னோடு கூட வந்து இருக்கும் போது உன் சம்பள பணத்தை நான் வாங்கிக்கிறேன்.அது வரை எனக்கு வரும் என் சம்பள பணம் எனக்குப் போதும் கமலா”என்று சொல்லி அனுப்பினான் நடராஜன்.கமலா தன் பெற்றோர்களுடன் சந்தோஷமாக இருந்து வந்தாள்.அந்த மாதம் சம்பளம் வந்ததும் கமலா தன் புருஷன் சொன்னதை சொல்லி தன் சம்பளத்தை தன் அப்பா அம்மாவிடம் கொடுத்தாள்.

கமலாவின் வளைகாப்பு,சீமந்தம்,போன்ற விழாகளுக்கு ஏற்பாடு பண்ணினார்கள் சிவலிங்கமும் சரோஜாவும் .போனில் சம்மந்திகளுக்கு சொல்லி அவர்களை அந்த விழாக்களுக்கு வரும் படி அழைப்பு விடுத்தார்கள் இருவரும். அந்த விழாக்களுக்கு நடராஜன் அரியலூர் போய் தன் அப்பா, அம்மா, எல்லா உறவினர்களையும் சென்னைக்கு அழைத்து வந்தான்.விழா மிகவும் நன்றாக ந்டந்தது. எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷம்.விழாக்கள் முடிந்ததும் நடராஜன் அப்பா,அம்மா, உறவினர்கள் எல்லோரையும் அரியலூருக்குக் கொண்டு போய் விட்டு விட்டு சென்னை திரும்பி வந்தான் நடராஜன்.

மாதங்கள் அதிகம் ஆகி விடவே கமலா பிரசவ ‘லீவூக்கு’ அப்ளை பண்ணினாள். டியூட்டி முடித்து விட்டு வீட்டுக்கு வந்த நடராஜன் கட்டிலில் படுத்துக் கொண்டு நிம்மதியாக யோஜனைப் பண்ணினான்.’பாவம் ராணீ,அவ அம்மாகிட்டே அவ என்ன சொல்லி சமாளிச்சளோ.அவ அம்மா அவளை எப்படி ஏத்துகிட்டு இருப்பா. நாம எந்த ‘அடரஸ்ஸ¤க்கு பணம் அனுப்பி அந்த பணம் ராணீக்கு கிடைச்சு இருக்கு” என்று நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டு இருந்தான்.

பிரசவத்திற்கு நாள் நெருங்கி விடவே கமலாவை ‘நர்ஸிங்க் ஹோமில்’ கொண்டு போய் சேர்த்தார்கள் சரோஜாவும் சிவலிங்கமும்.உடனே நடராஜனுக்கும் போனில் சொன்னார்கள். நடராஜனும் உடனே ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ வந்து விட்டான். மூன்று மணி நேரம் கழித்து டாக்டர் லேபர் வார்ட்டில் இருந்து வெளியெ வந்து “உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கு.இன்னும் அரை மணி நேரம் கழித்து ‘நர்ஸ்’ வந்து சொன்னவுடன் நீங்க உள்ளே போய் குழந்தையையும் அம்மாவையும் பார்க்கலாம்” என்று சொல்லி விட்டுப் போனாள் பிரசவம் பார்த்த டாகடர். மூவருக்கும் மிகுந்த சந்தோஷம்.நடராஜன். உடனே அவன் அப்பா அம்மாவுக்கு ‘கமலாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக’ போனில் சொன்னான்.அவர்களும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

இரண்டு மணி நேரம் கழித்து பிரசவம் பார்த்த லேடி டாக்டர் நடராஜனையும் கமலாவின் பெற்றோர்களையும் தனியாக அழைதாள்.அந்த லேடி டாகடர் நிதானமாக அவர்களைப் பார்த்து ”நான் சொல்ற விஷயத்தை கொஞ்ச கவனமா கேளுங்க.நான் கமலா பிரசவத்தின் போது பாத்தேன். அவ கர்ப பை மிகவும் சுருங்கி இருக்குங்க.அதனாலே அவளுக்கு இனிமேல் குழந்தை பிறக்காது. இதை இப்ப நீங்க அவ கிட்டே சொல்லாதீங்க.அவ இப்போ ரொம்ப பலவீனமா இருப்பா.அவளை நீங்க வீட்டுக்கு அழைச்சுப் போய் நிதானமா கொஞ்ச நாள் கழித்து இந்த விஷயத்தைச் சொல்லுங்க” என்று எச்சரித்து விட்டுப் போனாள்.கமலாவின் பெற்றோர்களுக்கும், நடராஜனுக்கும் டாக்டர் சொன்ன விஷயம் ஒரு பூகம்பம் போல இருந்தது.அவர்கள் மூவரும் ஆடிப் போய் விட்டார்கள்.சிறிது நேரம் கழித்து “டாகடர் கமலாவைப் பத்தி சொன்ன சமாசாரத்தை நீங்க அவசரப் பட்டு அவ கிட்டே சொல்ல வேணாம்.நிதானமாக நான் அவ வீட்டுக்கு வந்ததும் நிதானமா சமயம் பாத்து சொல்லிக்கிறேன்” என்று சொன்னான் நடராஜன்.

ரெண்டு நாள் கழித்து நடராஜன் அனுப்பிய ஆயிரம் ரூபாய் மணி ஆர்டர் ராணீ கைக்குக் கிடைத்தது. பணத்தை வாங்கிக் கொண்ட அவள் உடனே தன் அம்மாவிடம் “அம்மா அவர் ‘எனக்கு பிரசவ செலவுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பி இருக்கார்ம்மா.இன்னும் பதினை ஞ்சு நாள் கழித்து இன்னும் ஐனூறு ரூபாய் பணம் அனுப்பறேன் என்றும் எழுதி இருக்கார்ம்மா’ என்றாள் சந்தோஷத்துடன்.முத்தம்மாவுக்கும் சந்தோஷமாய் இருந்தது.அந்த வார கடைசியிலேயே ராணீக்கு பிரசவ வலி எடுக்கவே அவள் அம்மாவுடன் ஒரு ஆட்டோவில் போய் ஆஸ்பத்திரியில் ‘அட்மிட்’ ஆனாள். இரண்டு மணி நேரத்தில் ராணீக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு தான் ‘ராஜன்’ என்று பேர் வைத்து செல்லம்மாக ‘ராஜ்’ என்று கூப்பிடப் போவதாயும் சொன்னாள் ராணீ.

மணி ஆர்டர் ‘அக்னாலஜ்மென்ட்’ துண்டு அவன் கைக்குக் கிடைத்ததும் அதை தன் பர்ஸில் ஜாக்கிறதையாக வைத்துக் கொண்டான்.கமலா குழந்தைக்கு ‘தொட்டில் போட்டு பேர் வைக்கும்’ விழாவுக்கு ஏற்பாடு பண்ணினார்கள் சிவலிங்கமும் சரோஜாவும்.நடராஜன் அம்மாவும் அப்பா போனிலேயே தங்கள் சந்தோஷத்தை தெரிவித்தார்கள்.பிறகு அவர்கள் அரியலூரில் இருந்து சென்னைக்கு அந்த விழாவுக்கு வந்தார்கள்.அந்த விழாவில் பார்வதி குழந்தைக்கு ‘ஆனந்த்’ என்று பேர் வைக்கலாம் என்று சொன்னாள்.இந்த பேர் எல்லோருக்கும் மிகவும் பிடித்து இருக்கவே எல்லோரும் ‘சரி’ என்று சொல்லி குழந்தைக்கு ‘ஆனந்த்’ என்று பேர் சூட்டினார்கள்.விழா முடிந்ததும் சென்னையில் ஒரு வாரம் இருந்து விட்டு நடராஜன் அப்பா, அம்மா,உறவினர்கள் எல்லோரும் கிளம்பி அரியலூர் போய் விட்டார்கள். அவர்கள் கிளம்பிப் போனதும் கமலா நடராஜனை தனியா அழைத்து “ பாவங்க, உங்க நண்பர் கருணாவை பார்க்கவே ரொம்ப பா¢தாபமா இருந்ததுச்சிங்க நீங்க எல்லோரும் ஆளுக்கு கொடுக்கும் ஆறு நூறு ரூபயை வச்சு கிட்டு வாழகையை நடத்தி வறார்”என்று சொன்னாள். நடராஜனுக்கு கமலா சொன்னதை கேட்டதும் என்னவோ போல இருந்தது. இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் “ஆமாம் கமலா.எனக்கும் ரொம்ப கஷ்டமா தான் இருந்திச்சி. ஆனா ’மானேஜ் மெண்ட்’ சீக்கிரமாகவே அவனை மறுபடியும் வேலைக்கு எடுத்து கிட்டு விடுவாங்க.நீ வீணா கவலைப் படாதே” என்று சொல்லி சமாளித்தான்.

ராணீ குழந்தையை பார்க்கும் போதெல்லாம் ‘குழந்தை அவர் ஜா¨ போலவே, நல்ல அழகா இருக்குதே’என்று நினைத்து சந்தோஷப் பட்டாள்.குழந்தைக்கு மூனு மாசம் ஆனதும் ராணீ வீட்டு வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தாள்.

மூன்று மாதம் ஆகி விட்டது கமலாவுக்கு குழந்தைப் பிறந்து.நடராஜன் தனக்கு ‘டயம்’ கிடைத்த போதெல்லாம் போய் கமலாவையும் குழந்தையையும் பார்த்து விட்டு வந்தான்.ஒரு நாள் சாயங்காலம் நடராஜன் கமலாவைப் பார்க்க வந்தான்.இருவரும் தனியாகப் பேசிக் கொண்டு இருந்து வரட்டும்’ என்று எண்ணி சிவலிங்கமும் சரோஜாவும் கோவிலுக்குக் கிளம்பிப் போனார்கள்.கமலா நடராஜனுடன் நிறைய விஷயங்கள் பேசி வந்தாள்.கமலா ந்டராஜன் சொன்ன எல்லா விஷயங்களையும் சந்தோஷமாக கெட்டுக் கொண்டு இருந்தாள்.

பிறகு கமலா நிதானமாக “நாம இவனுக்கு ஒரு நாலு வயசு ஆன பிறவு தாங்க அடுத்த குழந்தையே பெத்துக்கணுங்க.நீங்க என்ன சொல்றீங்க’ என்று கேட்டு விட்டு நடராஜன் சொல்லப் ஓகும் பதிலை ஆவலாக கேட்க காத்துக் கொண்டு இருந்தாள்.நடராஜன் கொஞ்ச நேரம் பதிலே சொல்லவில்லை.அவன் முகத்தில் சற்று வாட்டம் காணப் பட்டது.“என்னங்க நான் கேக்கறேன். நீங்க பாட்டுக்கு பதில் சொல்லாம என்னவோ யோசிச்சுக் கிட்டு இருக்கீங்க.நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கலையாங்க” என்று அவன் முதுகைத் தட்டிக் கேட்டாள் கமலா.“நீ சொல்றது சரி தான் கமலா ஆனா…..” என்று சொல்லி நிறுத்தினான் நடராஜன்.அவனுக்கு இப்போது சொல்லலாமா, இல்லை வேறு சந்தர்ப்பத்தில் சொல்லலாமா என்ற சந்தேகம் வந்தது.“என்னங்க இது.நீங்க ஆனான்னு இழுக்கு றீங்க.நீங்க ஏதோ சொல்ல வா£ங்க. விவரமா சொல்லுங்க” என்று சொல்லி நடராஜனை அவரப்படுத்தினாள் கமலா. ‘இப்போ கமலா அவ அம்மா வீட்டிலே தான் இருக்கா.சந்தோஷமாய் வேறு இருக்கா. எப்போ சொன்னாலும் விஷயம் ஒன்னு தான்.அவ இந்த விஷயம் கேட்டு ஓவரா அழுதாலோ,கவலை பட்டாலோ அவ அப்பா அம்மா அவளுக்கு ‘ஆமாம்மா உனக்கு பிரசவம் பார்த்த டாக்டர் அப்படித்தாம்மா சொன்னார்.நாங்களும் கேட்டோம் ன்னு’ சொல்லி கமலாவை சமாதானப் படுத்த முடியும்.கமலா நம்ம விட்டுக்கு வந்தப்புறம் நான் சொன்னா கமலா அப்பா அம்மா அப்போ அங்கே இருக்க மாடாங்களே கமலாவை சமாதானப் படுத்த.நாம் தானே சமாதான படுத்த வேண்டி இருக்கும்’ என்று எண்ணி இந்த சமாசாரத்தை இப்போதே சொல்லி விடலாம் என்று முடிவு பண்ணினான் நடராஜன்.

“நான் இப்ப சொல்வது உனக்கு அதிர்ச்சியா இருக்கும் கமலா.இருந்தாலும் மனதை திடப் படுத்திக் கிட்டு நான் சொல்வதை கொஞ்சம் கவனமா கேளு.உனக்கு பிரசவம் பாத்த லேடி டாக்டர் உனக்கு குழந்தை பிறந்தவுடன் எங்க கிட்ட வந்து ‘கமலாவுக்கு இனி அடுத்த குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை.அவ கருப்பை மிகவும் சுருங்கி விட்டு இருக்குது இந்த குழந்தையை நீங்க ஜாக்கிற தையா வளத்து வாங்க’ன்னு சொல்லிட்டுப் போனாங்க.நாங்க மூவரும் அதிர்ச்சி அடைஞ்சோம்.என்ன பண்றது கமலா சொல்லு. உன் உடல் கூறு அப்படி இருந்தா நாம் என்ன பண்ண முடியும் சொல்லு.இது எல்லாம் கடவுள் செயல்.நம்ம கையில் ஒன்னும் இல்லை கமலா” என்று சொல்லி நிறுத்தினான் நடராஜன்.அவன் சொன்னதைக் கேட்டு கமலா ஆடிப் போய் விட்டாள்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *