மதமாற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 7 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தூரத்தில் எங்கோ கிணற்றுவெடி வெடித்துப் பாறாங்கல் லொன்று சிதறிப் பறந்து பொலீரென்று உதிரும் ஓசை! நாளை பிற்பகல் என் கடிதத்தைப் படிக்கப்போகும் டல்சியின் இதயமும் இப்படித்தானே சிதறிச் சின்னாபின்னமாகி… என் நினைவே தன் நினைவாக என்பிரிவில் துன்புற்றுத் தினம் கடிதம் எழுதும் அவள் நிரந்தரமாக என்னைப் பிரியநேர்வதை அறியும்போது……? பச்சை மலைகளின் தடுவே பாலாடை போன்று தூரப் பார்வைக்குத் தெரியும் அந்த நகரத்து அஞ்சலகத்துக்கு நான் மாற்றலாகி டல்சியின் வீட்டில் ஓர் அறையில் வாழ்வும் அவள் வீட்டில் உணவுமாக ஒப்பந்த மாகி, ஓய்வு நேரங்களில் அவளுக்குக் கணக்குச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடாகி, அவள் என்னெதிரில் அமர்வதற்கும் வாய்திறந்து பேசுவதற்கும் நாணித் தடுமாறிக் கன்னஞ் சிவந்து, விளங்கிய கணக்கையும் விளங்காததுபோல் நடித்து, என்னை மீண்டும் மீண்டும் பேசவைத்துக் கேட்பதில் ஏதோ இன்பத்தைக் கண்டு முகங்கனிந்து, களவாகப் பார்த்துக் குறுநகைபூத்து…. அப்பப்பாஎத்தனை பசுமையான நினைவுகள்! 

நாட்கள் செல்லச் செல்ல அவள் தானே தயாரித்துத் தன் கையால் எனக்கு ஊட்டி மகிழ்ந்த உணவு வகைகள் எத்தனை! தளிர் விரல்களில் தன் இதயத்தையே மலர்களாக ஏந்தி வந்து தந்த நாட்கள் எத்தனை ! தன்கைக்குட்டையால் என் சேட்டிலும் லோங்சிலும் படிந்து கிடந்த தூசியைத் துடைத்து விட்ட நாட்களையும், என்னை வேலைக் கேக விட் டுப் பின்னே நின்று பார்த்து அவள் இதயம் பூரித்த பனி புலராக் காலை நேரங்களையும், “என்னை நீங்கள் மறக்க மாட்டீர்களே?” என்று அடிக்கடி அவள் கண்கலங்கிக் கேட்ட சந்தர்ப்பங்களையும் நினைக்கும் பொழுது? ஐயோ என்நெஞ் சம் வெடிக்காதோ? 

”டல்சீ! உன் சந்தேகம் சரியாகி விட்டதம்மா! இன்று தொழிலிற்காகவும் வேறு அற்ப சலுகைகளுக்காகவும் கலப்பு மணம் என்ற பெயரில் மதம் மாறும் மானங் கெட்டவர் மத்தியில் நான் உன் சமயத்திற்கோ நீ என் மதத்துக்கோ மாறுவது மானக் கேடம்மா! நீ மானம் மிக்கவள். நானும் அப்படி வாழ்வதையே நீ விரும்புவாய்! ஆகவே அநியாய மானவற்றிற்கு மதம் மாறுவோரின் கொடுமையால் நியாயமானவற்றிற்கும் மதம் மாறாமல் நீயும் நானும், அழுது அழுது வாழ்விழந்து சாக வேண்டியதுதான் டல்சீ! 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *