விறகைப் பொன்னாக்கி!
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 3
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குஷ்டரோக ஆஸ்பத்திரியின் ஆண்கள் வார்ட்டில் நான் ஒவ்வொரு நோயாளியாக காய்ச்சல் பார்த்துக்கொண்டு கடைசியாக அவனிடம் வந்தபொழுது அவன் எ னைப் பார்த்துப் பார்த்துப் பயந்து திருதிருவென வீழித்தான். துர் நடத்தையின் பலனாக இந்தக் கொடுநோயைக் கட்டிக் கொண்டவர்கள் வெட்கத்தால் அவமானப்பட்டுப் புழுங்குவது இயல்பே! என்றாலும் இத்தனை தூரம் பதறிய ஒரு நோயாளியை இதுவரை திடீரென்று என்னை அம்மா! என்றழைத்து மெல்லக் கேட்டான்.
”உங்களுக்குத் திருமணமாகவில்லையா?’ ‘இவன் யார் இதைக் கேட்க ‘ என்று நான் எண்ணிக்கொண்டாலும் கருகிய முகத்தோடு, இல்லை என்பதுபோலத் தலையசைத்தேன்.
“ஏன்? எதற்காக?” – அவன் குரலில் ஒலித்த ஆத்திரம் என்னை அதிரவைத்து, ஆத்திரத்தைக் கிளப்ப “ஏன் உன்னைப்போல் அழுகிச் சாகவா?” சினத்தில் கத்தி விட்டு உடம்பெல்லாம் பதற நின்றேன்.
அவன் படுக்கையில் எழுந்தமர்ந்து நெஞ்சைப் பற்றிக்கொண்டு விம்மிக்குலுங்க. கண்ணீர் பொலுபொலென்று உதிர்ந்தது. பார்க்கப் பரிதாப மாக இருந்தது எனக்கு.
“என்னை மன்னித்துவிடு! பருவ முறுக்கில் பாழாகி அழிய இருந்த என்னை அன்போடு இடித்துரைத்து, என் நெஞ்சுள் தெய்வமாகப் புகுந்து கொண்டு தன் நினைவால் என்னைப் பைத்தியமாக்கிவிட்ட பரஞ்சோதி என்னும் ஒருவர் என் பண்பைச் சந்தேகித்து எங்கோ சென்றுவிட்டதால் என்னுள்ளம் தீயில் விழுந்த புழுவாகி வெறும் உடம்பு வாழ்வை வெறுத்ததால் நான் திருமணஞ் செய்துகொள்ளவில்லை. என் மனச்சாந்திக்காகவே இந்த நர்ஸ் வேலைக்கு வந்தேன். ஆத்திரத்தில் தவறுதலாக உன்னைப் புண்படுத்திவிட்டேன், என் வேலைக்கு இருக்கவேண்டிய பொறுமையை எப்படி இழந்தேனோ..!’
அவன் பேசினான்: “நான் ஒரு பேதைப் பெண்ணின் பண்பை, அன்பை நம்பாமல் அவளை விட்டுப் பிரிந்து அவளை மறக்க எங்கெங்கோ அலைந்தும் எதை எதையோ செய்தும் நோய்களைக் கட்டிக்கொண்டதுதான் மிச்சம். இறுதியிலும் அவளை மறந்தபாடும் இல்லை. துன்பம் தொலைந்தபாடுமில்லை. கண்ணீரில் அவன் குப்பைத்தாடி நனையலாயிற்று. அம்மா! தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர்…” என்று அவன் தயங்கியபோது நான் ஏனோ கதறியழும் நெஞ்சோடு தண்ணீர் எடுத்துவர ஓடிக்கொண்டிருந்தேன் மீண்டும் வந்த பார்த்த போது அவன் படுக்கை வெறுமையாகக் கிடந்தது. அதிர்ந்து பதறி நின்றஎன் கண்களில் அவன் படுக்கையில் தொங்கிய ‘டிக்கட்டில்’ கிடந்த பரஞ்சோதி என்ற பெயர் பட்டபோது “ஐயோ” என்று தலையில் கை வைத்துக் குழற வேண்டும் போல இருந்தது. ஆம் அது என் பரஞ்சோதி தான். விறகைப் பொன்னாக்கித் தன்னைக் கரியாக்கிக்கொண்ட பசும்பொன்! ஐயோ என் பரஞ்சோதி!
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
மிகச்சிறிய மிருகங்கள்
நீ.பி.அருளானந்தம்
October 12, 2026
நவீன நல்லதங்காள்
இரா.கலைச்செல்வி
October 12, 2026
ஸ்க்ரைப்
ஜூனியர் தேஜ்
October 12, 2026