பதவிப் பரிதாபங்கள்…
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: October 15, 2026
பார்வையிட்டோர்: 337
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3

மக்கள் தொகை பெருக்கம் காரணமாக ‘மலையரசி’ என்கிற பட்டப் பெயரை ஊட்டி எப்போதோ இழந்து விட்டது.
தன் எழிலான இயற்கையாலும், பசுமையாலும், குளுமையாலும் ‘இளவரசி’ எனும் பெயரை கொடைக்கானல் இன்றும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
காடு, மலை, மரம், பசுமை, புல்வெளி, குளிர்ச்சி என எங்கும் பரவசம், புத்துணர்ச்சி.
அந்த இயற்கை எழிலை அனுபவித்துக் கொண்டிருந்த தன்ராஜ் விகாஷ் பக்கம் திரும்பி…
“மாப்ளே..! இடம் எப்படி இருக்கு..?” கேட்டார்.
“அருமையா இருக்கு மாமா.” அவனும் அதை ரசித்துக் கொண்டே சொன்னான்.
“ஏன் கம்முன்னு இருக்கே..? என்ன யோசனை..?”
“உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்….”
“என்ன..?”
“அமைச்சர் ஆனந்தவள்ளி கொலை வழக்கை நீங்கதானே துப்புத் துலக்கி முடிச்சீங்க..?”
“ஆமாம். அதுக்கு என்ன..?!”
“அது பத்தி எனக்குத் தெரியனும் மாமா..?”
“ஏன்..?” துணுக்குற்றுப் பார்த்தார்.
“சும்மாதான். தெரிஞ்சுக்கனும்ன்னு ஆசை.”
தன்ராஜ் பதில் சொல்லவில்லை.
“சொல்லலாமா கூடாதா.. மாமா..?”
“சொ…சொல்லலாம்..”
“சொல்றதால ஏதாவது சங்கடம், பாதிப்புன்னா வேணாம் மாமா..”
“…”
“ஓய்வு பெற்ற பிறகு எத்தனையோ போலீஸ் உயர் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளெல்லாம் தாங்கள் சந்தித்த சவால், திறமைகளையெல்லாம் புத்தகமாய் வெளியிடுறாங்க. தொடராய் எழுதி மக்களுக்குத் தெரியப்படுத்துறாங்க. அப்படி உங்க சாகசம், திறமைகளைக் கேட்டு தெரிஞ்சுக்க ஆசை மாமா.”
“ஏதாவது பத்திரிக்கைக்குத் தொடர் எழுதப் போறீயா..?” தன் சந்தேகத்தைக் கேட்டார் தன்ராஜ்.
“இல்லே மாமா. உங்க புத்திசாலித்தனம், சாகசம், திறமை எல்லாம் எனக்குத் தெரிய ஆசை மாமா.. நமக்கும் பொழுது போகனும்…” நிறுத்தினான்.
“சரி சொல்றேன்..!” நிமிர்ந்து அமர்ந்தார்.
மேகம் மொத்தமாய் வந்து அவர்களை முத்தமிட்டு முழுக்கி குளிரடித்துவிட்டுச் சென்றது.
“இந்த ஆனந்தவள்ளி கொலை வழக்குன்னு சொன்னதுமே எனக்கு முதன் முதலாய் நினைவுக்கு வரும் ஒரே ஆள் பிலவேந்திரன்தான் மாப்ளெ!” என்று ஆரம்பித்து நிறுத்தினார் தன்ராஜ்.
“அவன் யாரு மாமா..?” விகாஷ் அவரை திரும்பிப்பார்த்துக் கேட்டான்.
“மருத்துவமனை பிணவறை காவலாளி!”
“மாமா..!!!…” விகாஷ் கொஞ்சமாய்த் திடுக்கிட்டான், துணுக்குற்றான்.
“ஆமாம் மாப்ளெ. வயசு ஒரு 35, 36 இருக்கும். இளைஞன். கல்வித் தகுதி. அடிப்படையில் பிணவறை காவலாளி வேலை. திருமணமாகி மூணு வயசுல ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பன்.” நிறுத்தினார்.
“அப்படியா மாமா…?”
“ஆமாம் மாப்ளெ!
முக்கியச் செய்தி
அமைச்சர் ஆனந்தவள்ளி கொலை. படுக்கை அறையில் மர்ம சாவு!'”
என்கிற தொலைகாட்சி செய்தியை அன்னைக்குப் பார்த்திருந்தால்… துள்ளிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பக்கத்தில் உள்ள ஆளைத் தூக்கி தட்டாமாலை சுத்தி இருப்பான். இல்லே…கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருப்பான்! அவ்வளவு மகிழ்ச்சி..!”
“ஏன் மாமா…?” விகாஷ் விபரம் புரியாமல் அவரைப் பார்த்தான்.
“அதுவா…? விவகாரம் வேற…”
“என்ன மாமா..?”
“அவனுக்குப் பொண்ணுங்க பிணத்து மேல் ஒரு கண்!” என்கிற அதிர்ச்சி செய்தியை வெளியிட்டார் தன்ராஜ்.
“மாமா..!” சுற்றுச் சூழல் மறந்து விகாஷ் மெலிதாய் பயத்துடன் அலறினான்.
அடுத்து….
“நிஜமா மாமா…?!” கேட்டு நம்ப முடியாமல் திணறி வாய்பிளந்தான்.
“ஆமாம் மாப்ளெ! பிணவறைக்கு சிதைந்து உருக்குலைந்து வரும் பெண்கள் உடல், கிழவிகள் பிணங்களைத் தவிர… அம்பது வயதிற்குள் வரும் அனைத்துப் பிணங்களையும் அவன் விட்டு வைக்க மாட்டான். அதுவும் சிறு வயசு, சிக்குன்னு இருக்கும் குமரிகள் பிணங்களென்றால் அவனுக்குக் கொண்டாட்டம், குதூகலம்!” என்றார்.
“மாமா…!” விகாஷ் அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்று அமைதியாய் அலறினான்.
“அவனோட பழக்கம் அப்படி மாப்ளெ..”
“எப்படி மாமா..?!” அதிலிருந்து இறங்கி குரல் பயமாய் ஒலித்தது.
”உனக்கு எனக்கெல்லாம் பெத்தத் தாய் உயிரை விட்டாலும் அடுத்த நிமிசம் அந்த பிணத்துக்கிட்ட போகவே பயம். சிலருக்கு அப்படி இல்லே. பிணத்தை எரிக்கிற புதைக்கிற வெட்டியானுக்குப் பயமா…?”
“கிடையாது.”
“அது அவர்களுக்கு ஒரு மரக்கட்டை. அவ்வளவுதான்! மாப்ளெ! பிணங்களோடு பழக்கம் வைத்திருக்கும் மனுசனுங்க இங்கே அங்கேன்னு உலகத்தின் எல்லா மூலைகளிலும் இருக்காங்க.”
“படிச்சிருக்கேன் மாமா அது சம்பந்தமா ஒரு ஆங்கிலப் படமும் பார்த்திருக்கேன். அதெல்லாம் கற்பனைன்னு தான் நினைச்சிருந்தேன். இப்போ நீங்க சொல்லித்தான் உண்மைன்னு நம்பறேன்.” என்றான் விகாஷ்.
“பிலவேந்திரன் தான் மட்டும் ஜோலியை முடிச்சதோட நிறுத்த மாட்டான். அவனை மாதிரி நாலைஞ்சு பேர் இருக்கானுங்க. பிணந்தின்னி கழுகுகள் அவனுங்களுக்கும் சேதி சொல்லி வரவழைத்து காசு பார்ப்பான்”.
“மாமா..?!” விகாசுக்கு நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்கியது. எச்சில் கூட்டி விழுங்கி அதை குறைத்தான்.
“இவன் பழக்கத்தை ஒரு டாக்டர்தான் கண்டுபிடிச்சார்.” – தன்ராஜ் தொடர்ந்தார்.
“எப்படி மாமா…?”
“பிலவேந்திரன் பிணத்தை அறுத்து அதை பரிசோதனை செய்யும் டாக்டருக்கு உதவும் வேலையும் செய்வான். ஒரு பிணத்தை அறுத்து பரிசோதனை செய்யும்போது அடிவயித்துல தற்போது இருந்ததற்கு அடையாளமாய் விந்துக்கள் தேங்கி இருந்தது.. எப்படின்னு அறுத்த பிலவேந்திரனிடம் கேட்டிருக்கார்.
“தெரியலையே.. டாக்டர்..?” அவன் சொல்லி இருக்கான்.
“இது காதல் தோல்வியில் தூக்கு மாட்டி தொங்கின பெண். இப்படி இருக்க வாய்ப்பு இல்லே. ராத்திரி நீதான் இங்கே காவல் இருந்தே. இப்போ அறுக்கிறதும் நீதான் உண்மையைச் சொல்லு..?” கேட்டிருக்கார்.
“டாக்டர்! விபரம் புரியாமல் பேசாதீங்க. இவளை பல பேர் கெடுத்து கொன்னு மரத்துல மாட்டிவிட்டுப் போயிருப்பானுங்க சார்..”
“இல்லே. இவள் தற்கொலை. வீட்டில் தொங்கியவள். எனக்கு சந்தேகமா இருக்கு. இங்கே என்னவோ நடந்திருக்கு..உண்மையைச் சொல்..?” கறாராய்க் கேட்டிருக்கார்.
டாக்டருக்குப் படித்தவரில்லையா..? அவருக்கும் இதைப் பத்தியெல்லாம் தெரிந்திருக்கும்! அந்த சந்தேகத்துல அவர் அவனை அப்படி கேட்டிருக்கார்.
அதுக்கும் அவன் பயப்படாம….
அதெல்லாம் எனக்குத் தெரியாது. வந்த வேலையை முடித்துவிட்டு போங்க. இல்லேன்னா… அறுக்கிற வேலை, தைக்கிற வேலையெல்லாம் உங்கள் வேலை. எனக்கு உங்களுக்கு உதவும் வேலை. நான் வெளியில போறேன். நீங்க வேலைய முடித்துவிட்டு கூப்பிடுங்க. துணியைப் போட்டு மூட நான் வர்றேன்.” சொல்லி கிளம்பி இருக்கான்.
இவன் இப்படித்தான்! என்கிற உண்மை இவருக்குப் புரிஞ்சி போச்சி. ஆளைக் கையும் மெய்யுமாய் பிடித்தால்தான் உண்மையை ஒத்துக்க கொள்வான்! நினைத்து கம்முன்னு இருந்து வேலையை முடித்தார்.
அப்புறம் ஒரு நாலைந்து பிணங்களும் இப்படி இருந்தது. இவர் கண்டுக்கலை.
பதினாறு வயசுப் பொண்ணு. +2 ல தோல்வின்னு விசத்தைக் குடிச்சி செத்துடுச்சி. போலீஸ் விசாரணை முடித்து பிணம் பிணவறைக்கு வந்தாச்சு. மாப்ளெ..! அன்னைக்கு இவன் வழக்கம் போல் இரவு காவல்.
ராத்திரி பத்து மணிக்கு மேல் நைட் டூட்டி பார்க்கிற டாக்டருக்குப் போன்.
“பொண்ணு கழுத்துல கையில பத்து பவுன் அளவுக்குப் வளையல், சங்கிலி, தோடு போட்டிருந்தாள். அதிர்ச்சி, அவசரத்துல அதெல்லாம் கவனிக்காமல் விட்டுட்டோம். இருக்கான்னு பாருங்கன்னு புகார்.. பார்த்துச் சொல்லுங்க டாக்டர்” காவல் நிலையத்திலிருந்து இன்ஸ்பெக்டர் சொல்லி இருக்கார். டாக்டர் போனை வைத்துவிட்டு பிணவறையை நோக்கி போயிருக்கார்.
அது மருத்துவனை வளாகத்தில் மருத்துவமனை கட்டிடங்களைத் தாண்டி புளியன், புங்கன், ஆலமரங்கள் நிறைந்த விசாலமான இடத்தில் தனித்திருக்கும் கட்டிடம். பகலில் போகவே எல்லாருக்கும் நெஞ்சு திக் திக் அடிக்கும்.
டாக்டர் துணிந்து போனார். அறை வாசலில் பிலவேந்திரன் இல்லே.
பூட்டிவிட்டு டீ குடிக்க வெளியில் போயிருக்கலாம்! ன்னு நினைத்துப் பார்த்தார். கதவில் பூட்டு தொங்கவில்லை. கதவைத் தள்ளிப் பார்த்தார். உள்ளே தாழ்ப்பாள்.
விசயம் இவருக்குப் புரிஞ்சு போச்சு.
“பிலவேந்திரன்! பிலவேந்திரன்!” ன்னு கதவைத் தட்டி அழைத்தார்.
சிறிது நேரத்தில் முகம் உடம்பெங்கும் வியர்வை வழிய அரைகுறையாய் மாட்டிய பேண்ட், சட்டையோட வந்து அவன் திறந்தான்.
டாக்டர் உள்ளே போனார்.
பிணத்து மேலே, கீழே துணிகள் விலகி… அலங்கோலம்.
“என்ன பிலவேந்திரன் இது….”
“கண்டுக்காதீங்க டாக்டர். மண்ணு தின்னுட்டுப் போறதை மனுசன் தின்னுட்டுப் போறான்..!” இவன் கஞ்சா போதையில் சொல்லி அவர் காலைப் பிடிச்சிருக்கான்.
அவரும் மன்னித்து விட்டு இவன் மேல என்ன நடவடிக்கை, எப்படி எடுக்கலாம்ன்னு யோசித்து, குழம்பிக் கொண்டிருக்கும்போதுதான் வசமா சிக்கினான்.”
“எப்படி மாமா..?”
“வா டீ குடிச்சுட்டு வந்து சொல்றேன்.” சொல்லி எழுந்தார் தன்ராஜ்!
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
October 15, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 15, 2026
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
October 12, 2026
