கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2026
பார்வையிட்டோர்: 168 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புள்ள சுஜாதா,

நீ தாம்பத்தியத்தைப் பற்றி எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறாயே. அது அவ்வளவு சுலபமாகச் சொல்லி விடக் கூடிய விஷயமல்லவே.

காந்திஜி உயர்தர தாம்பத்தியத்துக்கு உதாரணமாக ராமனையும் சீதையையும் சொல்வது வழக்கம். குழந்தைகளிடம் அன்பைச் செலுத்தி, அன்பைப் பெற வேண்டு மென்று சொன்னேனல்லவா? அதைப்போல் கணவனுக்கு மரியாதை செய்து மரியாதை பெறவேணு மென்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

நாகரீகத்தில் முன்னேறிய நாடுகளில் கல்யாணம் செய்து கொள்ளவே ஆண்கள் பயப்படுகிறார்கள். மனைவியைத் தனக்கு ஒரு சுமையாகக் கருதி நாற்பத்தைந்து வயது வரையில் விவாகத்தைத் தள்ளிப் போடுகிறார்கள். பிறகும் உறுதியான மனமில்லை. நிச்சயமற்ற வாழ்வில் மன அமைதி குறைகிறது. அளவற்ற வருவாய் இல்லாதவன் கல்யாணம் செய்து கொள்ள அஞ்சுகிறான். இப்படி யெல்லாம் பார்க்கும்போது வாழ்வு சாரமற்றுப் போய் விடுகிறது. அந்தக் கஷ்டம் அங்கே பெண்களுக்கும் இருக்கிறது. கணவனைக் கைப் பிடிக்கும் நோக்கத்துடன் உத்தியோகம் பார்க்கப் போகிறார்கள்.

அதற்கு நேர்மாறனது நம் நாட்டின் குழ்நிலை. பெண்ணுக்கு விவாக வயது வந்ததும் கல்யாணத்தைச் செய்துவிட வேண்டுமென்று பெற்றோர்கள் துடிக்கிறார்கள். கல்யாணம் செய்து கொண்டு கைப்பிடித்த கணவனுடன் அன்பு வாழ்க்கை நடத்துவது தான் நம் பாரதப் பெண்ணினுடைய வாழ்க்கை லட்சியம், ஒரு கன்னிகையின் வாழ்வு அவள் கல்யாணத்தில்தான் மலருகிறது. கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து செய்யும் நற்காரியங்கள் தான் பலன தரும். இல்லற தர்மத்தை ஏற்காமல் தனி மனிதனாக நின்று ஒருவன் செய்யும் நற்காரியங்களெதுவும் பலன் தர மாட்டா. “காதல் ஒருவனைக் கைப் பிடித்து, அவன் காரியம் யாவினும் கைகொடுத்து” வாழ்வதைத் தானே மகாகவி ஒரு பெண்ணின் லட்சிய வாழ்வாகக் கூறியிருக்கிறார்!

முக்கிய விசேஷ தர்மங்களுக்கு மனைவியின் கையினால் தண்ணீர் விட்டால் தான் பூர்த்தியாகு மென்று அந்தக் காலத்துக்கு உகந்தபடி ஏற்பாடு செய்து விட்டார்கள். அவர்கள் பழக்க வழக்கங்கள் எளிமையானவை.

அற்ப விஷயத்தில் அறுந்து விடக் கூடிய சின்னக் காரியமல்ல விவாகம். கணவன், மனைவிக்கு அபிப்பிராய பேத மிருக்கலாம். ஒருவருக் கொருவர் மனப்பான்மையில் வித்தியாசமிருக்கலாம். அதற்காக ஐக்கிய பாவம் பாதிக்கப்பட வேண்டியதில்லை. எல்லாத் துறைகளிலும் மாறுதல் செய்து கொள்வது தான் நாகரிகத்தின் வளர்ச்சி யெனக் கருதி நம்முடைய நாட்டின் தாம்பத்தியத்தில் விவாகரத்து என்ற பரிதாபமான பயங்கரமான ஆயுதம் கையாளப் படாமல் இருக்கத் தான் விரும்புகிறேன். எவ்வளவு தான் காலம் மாறினாலும் சில விஷயங்கள் எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும் மாறுபடாத புனிதத்துவம் வாய்ந்தவை. நம் நாட்டு தாம்பத்திய வாழ்க்கையில் குணபேதங்களுக்காகத் தன்னுடைய உயர்வை, கணவனோ, மனைவியோ இழக்க வேண்டா மல்லவா?

அமெரிக்காவில் மிகப் பெரிய பணக்காரியான மாது ஒருத்தி தற்கொலை செய்து கொண்டதாக நீ கூடப் பத்திரிகையில் படித்திருக்கலாம். தனக்குக் கஷ்டமே யில்லை யென்றும், அன்பு, தியாகம் செய்ய ஆசை யிருந்தும் ஒருவருமில்லை யென்றும், நினைத்தபடி நடப்பதால் சலீப்பு ஏற்பட்டு விட்டதாகவும் கூறித் தன்னுடைய தற்கொலையின் காரணத்தை விவரித்திருக்கிறாள்.

இன்றையச் சூழ்நிலையில் தாம்பத்தியத்தில் மாறுதல்கள் இருக்கின்றன. அதைப்பற்றி அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.

பூமாதேவி.

– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.

வசுமதி ராமசாமி2 ஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம். வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 - 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *