சிவா வெட்ஸ் ஜெனி
கதையாசிரியர்: பிரசன்னா சுவாமிநாதன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: June 23, 2026
பார்வையிட்டோர்: 189

சிவா காதலித்த ஜெனி என்னும் கிறிஸ்தவ பெண் வீட்டுக்கு சாயங்காலம் ஜெனியின் தந்தையான மேஜர் ஜான் பீட்டரை சந்திக்க தனது மீசையை அழகாகவும் கம்பீரமாகவும் இருக்க மீசையை பார்த்து பார்த்து தயார் செய்து கொண்டு இருக்கிறார்.
மேஜர் ஜான் பீட்டருக்கு மீசை மேல் அலாதி பிரியம், தன் மகளுக்கு வரும் மாப்பிள்ளை மீசை கம்பீரமாக இருக்க வேண்டும் என்றும் மீசை இல்லாதவனுக்கு ஜெனியை கல்யாணம் பண்ணி தர மாட்டேன் என்று உறுதி மொழி எடுக்கிறார்.
அந்த ரகசியத்தை ஜெனி சிவாவிடம் சொல்ல அதற்காகவே ஷிவா தன் மீசையை தயார் செய்கிறார். அப்போது அமைதியாக இருந்த தெருவில் பக்கத்துக்கு வீட்டு பையன் வாசலில் வைத்த அணுகுண்டு வெடித்த அதிர்ச்சியில் எதிர்பாராத விதமாக சேவிங் செய்து கொண்டு இருந்த சிவாவின் மீசை பதட்டத்தில் பறிபோய்விடுகிறது.
மீசை இல்லாமல் ஜெனியின் அப்பாவை பார்க்க முடியாது, சாயங்காலத்துக்குள் மீசையும் வளராது. சிவாவின் நண்பர் அய்யப்பனும் மீசைக்காக அலைந்து டாக்டர், ஜோதிடர் , நாடக கலைஞர் என பலரை சந்தித்து கடைசியில் ஒட்டு மீசை வைத்துக்கொண்டு ஜெனியி அப்பா பீட்டரை சந்தித்து,
டி குடித்து கொண்டே பேசும் போது, ஒட்டு மீசை டீக்குள் விழ அனைவரும் அதிர்ச்சியில் உறைய, ஒரு சிரிப்பு சத்தம் மட்டும் படு பயங்கரமா இருக்கிறது.
யார் இப்படி சிரிப்பது என்று பார்த்தால், ஜெனியின் அப்பா ஜான் பீட்டர், சிவா ஒரு அதிர்ச்சி கலந்த அசிங்கத்தில் இருக்க கொஞ்சம் கொஞ்சமாக குடும்பமே சிரிக்கிறது, பிறகு தான் தெரிகிறது பீட்டர் வைத்து இருப்பதும் ஒட்டு மீசை என்று தெரிய வருகிறது.
பீட்டர் மீசை போனதுக்கும் காரணம் அதே அணுகுண்டு தான்.
சிவாவின் வீட்டின் பின்புறம் இருக்கும் ஒரு சலூனில் பீட்டர் சேவ் செய்துகொண்டு இருந்தார், குண்டு வெடித்த அதிர்ச்சியில் சவரகாரர் பீட்டர் மீசையை ஒரு பக்கமாக வலித்து விடுகிறார் , இந்த களேபரத்துக்கு நடுவே ஷிவா மீசை போனதை பற்றி ஐயப்பனிடம் பேசிக்கொண்டு இருப்பதை கேட்டுக்கொண்டு,
சிவா மீசைக்காக செல்லும் எல்லா இடத்துக்கும் பீட்டரும் பின்தொடர்கிறார்;
இறுதியில் சிவாவுக்கும் பீட்டருக்கும் ஒருவழியாக நாடக கலைஞர்களுக்கு மேக்கப் போடும் நல்லசிவத்தின் மூலம் மீசை கிடைத்து நல்ல படியாக காதல் திருமணம் நடந்து முடிகிறது.
சுபம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
வேடிக்கை நடத்துனர்கள்
உரு.வளவன்
June 23, 2026
இவளே என் மனைவி!
அ.லஷ்மி
June 20, 2026
யார் அது?
இரஜகை நிலவன்
June 20, 2026