கைதூக்கிகள்!
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 847
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பேர் பெற்ற பிரசங்கி ஒருவர் பெரிய எழுப்புதல் கூட்டத்தில் மனந்திரும்புதல் பற்றி மிக எழுச்சியோடு பேசினார். செய்திகேட்ட யாவரும் கண்ணீர் சிந்தி அழுதார்கள். ‘தங்கள் பாவங்களுக்காக உண்மையாய் மனஸ்தாபப்படுகிறவர்கள் தங்கள் கையை உயர்த்துங் கள்’ என்றார் பிரசங்கி.
எல்லோருமே கைகளை உயர்த்தினார்கள்.
பிரசங்கியார் பரத்துக்கு நேராகத் தம் இரு கைகளையும் ஏறெடுத்துக்கொண்டு. ‘மிகாவேல் தூத னே! நியாயாசனத்துக்கு முன் உருவின பட்டயத்தோடு நிற்கிறவனே, மாய்மாலமாய் தூக்கி இருக்கிற கைகளை உடனே வெட்டு’ என்றார்.
எல்லோரும் கைகளைக் கீழே போட்டுவிட்டார்கள்.
“மனுஷருடைய மாயத்தை அவர் அறிவார்” [யோபு 11:11]
“தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக் கடவன்” [1 கொரிந்தியர் 10:12]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வீடு
எஸ்.பொன்னுத்துரை
October 15, 2026
சுவை
எஸ்.பொன்னுத்துரை
September 22, 2026
சிதை
எஸ்.பொன்னுத்துரை
September 22, 2026
