அகல் விழி
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 74
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விதைகள், காவியங்கள், நாவல்கள், நாடகங்கள். சிறுகதைகள் திறனாய்வுகள் இப்படி ஆயிரம் ஆயிரமாக எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் நான் இத்தனை பெருமைக்கும் ஆளானதே ஒரு சுவையான வரலாறு.
அன்று வேலையிலிருந்து விலகிச் செல்ல இருந்த அந்த நெசவு நிலைய நிர்வாகி பழனியப்பன் தன் சட்டைப் பையிலிருந்து என்னை உருவி எடுத்து அன்புடன் முத்தமிட்டு எதிரில் நின்ற அகல் விழியிடம் கொடுத்த போது இரு கைகளாலும் வாங்கிக் கொண்ட அந்த அழகி, பழனியை அன்பொழுகப் பார்த்துக் கொண்டே என்னை முத்தமிட்டாள்! ”அகல் விழி! நான் எங்கு சென்றாலும் என் இதயம் இந்தப் பேனா வடிவில் உன்னுடனே இருக்கும்.
இருவரும் கண்ணீரோடு பிரிந்தனர். அகல்விழி அன்று முழுவதும் தன் வீட்டில் என்னை முத்தமிடுவதும், கண்ணீரால் கழுவுவதுமாக இருந்தாள். சுவாமிப்படத்தின் அருகே இடந்தந்து கடவுளையும், என்னையும், சேர்த்து வணங்கி வந்தவள், உண்மையில் என்னையா வணங்கினாள்? அவள் அடிக்கடி என்னுதவியால் பழனிக்கெழுதிய கடிதங்களின் சிலவரிகள் எத்தனை உருக்கமானவை.
“மூன்று நிமிடம்கூட உங்களைப் பிரிந்திருக்க முடியாமல் தவிக்கும் நான் மூன்று வருடங்கள் எப்படிப் பிரிந்திருக்கப் போகிறேனோ!”
”வாரத் தில் ஆறு நாட்களாவது கடிதம் எழுதுங்கள் அத்தான்.”
“என்றுதான் இருவரும் நிம்மதியாகத் தூங்கப் போகிறோமோ!”
“மனவேதனையோடு மார்புவலி வேறு பிடித்து விட்டது. நான் வேலைக்குப் போவதில்லை”
“படுத்த படுக்கையாகக் கிடக்கும் என்னை நீங்கள் சிறைமீட்க உடனே வராவிட்டால் என்ன ஆகுமோ……!”
“இத்துடன் தங்களுக்கு எனது ஞாபகமாக ஒரு டசின் கைக்குட்டைகள் அனுப்புவிக்கின்றேன். என்னை நிரந்தரமாகப் பிரிய நேர்ந்து தாங்கள் பெருக்கப்போகும் கண்ணீரைத் துடைக்க இவைகள் போதாதென்பது தெரியும். நான் என்ன செய்வேன்!”
“இத்துடன் தங்கள் பேனா – இல்லை இரண்டு இதயங்கள் அனுப்புகிறேன். மறு பிறவியில் என்றாலும் இணைவோம?”
இப்படி டியெல்லாம் சாகக்கிடந்து எழுதிய அகல்விழி இறுதியில் என்னைப் பழனிக்குத் தபாலில் அனுப்பிவிட்டாள். மணமாகாத ஐந்து தங்கைகளின் அண்ணனான பழனி என்னை இருகைகளாலும் நெஞ்சோடணைத்துக் கொண்டு வீட்டுள் கதறிப்புரண்டு விழுந்தழுதான்.
கண்ணீர் பாயுங் கண்களால் என்னை அடிக்கடி பார்ப்பதும் பெருமூச்சு விடுவதுமாக இன்றுவரை துயர்ப்படும் பழனி சில சமயங்களில் ஆவேசத்தோடு காகிதக் கட்டுகளைப் பிரித்து என்னை எடுத்து அசுரவேகத்தில் சறசறவென்று ஏதோ கிறுக்குகிறான்.
இலக்கியக் குழந்தைகள் ஆம் உலகுக்கு இன்பம் தரும் நிரந்தர மழலைச் செல்வங்கள் அவன் துன்பத்தில் பிறந்தணமிருக்கின்றன.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
இரண்டு கடவுள் வாழும் வீடு
செ.தமிழ்ராஜ்
October 12, 2026
மதுரை விடியல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 12, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 12, 2026