கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
இணைய வெளியீடு: November 13, 2026
முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 22 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

ஒரு அழகான தோட்டம். அதில் பூத்துக் குலுங்கும் மலர்கள். பொழுது விடிந்த வுடன் பூக்கள் மலர்கள் அழகாக சிரித்த படி தங்களுக்குள் பேசுகின்றன. ஒரு மலர் அழகு உலகம் அழகு, இயற்கை அழகு, இதை படைத்த இறைவன் அழகு என்றது. மற்றொரு மலரோ நான் தான் அழகு என்றது. பிறகு வேறு ஒரு மலரே அவற்றை கேட்ட படி ஏது பேசாமல் இருந்தது. எனவே இங்கு இருந்த மூன்று மலர்களோ நண்பர்கள்.

இந்த மலர்களின் பேச்சு தொடர்ந்தது. முதல் மலர் இறைவரை தொடுக்கும் மாலையாக ஆகுவேன் என கூறியது. இரண்டாம் மலர் அழகிய பூக்கள் கொண்டு தயாரிக்கப்படும் பூச்செண்டு ஆகுவேன் என்றது. இந்த உலகில் எல்லாமே சிறப்பு வாய்ந்தது. இறைவன் படைப்பில் எதுவும் குறைந்தது இல்லை. உலகில் உயிரினங்கள், உயிரற்றவை என எல்லாம் ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டு உள்ளது. நம் படைப்பிற்கும் தேவை உள்ளது. அதை சரியான காலம் மற்றும் நேரத்தில் நிறைவேற்றப்படும் என மூன்றாம் மலர் பக்குவமாக கூறியது.

ஒரே செடியில் பூத்த மலர்கள் ஆயினும் வேறுபட்ட எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் இலக்குகள் கொண்டவை ஆவை. மூன்று மலர்களும் அதிகம்பேசி கொண்டு இருந்ததால் தோட்டகாரர் வருவதை கவனிக்கவில்லை. திடீரென மூன்று மலர் பறிக்கப்பட்டது. ஆ… என அலறியது அது. பின் மற்றவையும் பறிக்கப்பட்டு தனித்தனியே கொண்டு செல்லப்பட்டது.

மூன்றிற்கும் நண்பர்களை பிரிந்து சென்றதில் சற்று கவலையாக இருந்தாலும் நாம் என பயன்பாட்டிற்கு செல்ல போகிறேன அதற்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. முதல் மலர் வியாபாரி இடத்திற்கு சென்ற பின் தொடுக்கப்பட்டு கோவிலுக்கு சென்று இறைவனின் விக்கிரகத்தில் மாலையானது. இரண்டாம் மலர் ஒரு நிறுவனத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் கொடுக்கும் பூச்செண்டு ஆனது.

மூன்றாமி மலர் கும்பாபிஷேகம் நடக்கும் இடத்திற்கு சென்றது. அங்கு (கும்பாபிஷேகம்) குடைமுகு நிகழ்ச்சி முடிந்து கோபுரத்தில் பூஜையின் போது கோபுரத்தின் மாலையானது. அதன் எண்ணம் போல மற்றவை அதன் இலக்கை அடைய பெற்றது. ஆனால் உயர்ந்த எண்ணம் கொண்டவை உயர்வான இடத்திற்கு சென்றது. இறைவன் அனைத்து முடிவுகளை நம்மிடம் கொடுத்தது ஏன் தெரியுமா நாம் எண்ணங்கள் எப்படிப்பட்டது என பார்க்க தான். அதற்கு ஏற்றபடியே அதை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார். முயற்சியும், எண்ணங்களும் நம்முடையது ஆனால் முடிவுகள் இயற்கையுடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *