வணக்கம் பல முறை சொன்னேன்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
இணைய வெளியீடு: November 13, 2026
முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 17 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

கதை சொல்வது கலையா? கதையை ரசிப்பது கலையா? இந்தக் கேள்விக்குப் பதில்தான் இந்தக் கதை.

அன்றைக்கு, தன் குழந்தைக்கு வழக்கம் போல கதை சொல்ல உட்கார்ந்தான் கார்த்தி. பெரும்பாலும், குழந்தைகளுக்கு ராத்திரி தூக்கம் வருவதற்குத்தான் கதை சொல்லப்படும். ஆனால், கார்த்தியின் குழந்தை தாராவுக்கு மட்டும் அவள் சாப்பிடும் போது கதை சொல்லணும். அப்படி கதை சொனால்தான் காய்கறியும் சாதமும் கப்புசப்புன்னு வாய்க்குள் போகும். அதுக்குத்தான் சாப்பிடும் போது கதை சொல்லும் உத்தி.அந்த உத்திக்கு ஒரு காரணம் உண்டு.

குழந்தைக்கு காய்கறியைத் தொட்டுக் கொண்டு தானே சாப்பிடப் பிடிக்காது. வெற்று வெள்ளைச் சோறைக் கூட அள்ளி அள்ளி விழுங்கும் ஆனால், காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடு என்றால் வீடே ரணகளப்பட்டுவிடும்!. சாப்பிடாமல் பட்டினியாய் வேண்டுமானால் தூங்கத் தயார்.

குழந்தையைப் பார்க்கப் பாவமாக இருந்ததால், கதை சொல்ல முடியுசெய்தான் கார்த்தி. இன்று ,எந்தக் கதையைச் சொல்வது? யோசித்தான். அன்றைக்கு ஒரு கவிதை படித்தான். அதைக் கதையாக்கினால் என்ன?! கதையாக்கினான்.

அவன் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் வெளியில் மீட்டிங்கில் பேசப்போவது உண்டு. அந்த மீட்டிங்குகளில் ஒரு ஜோக்கை விநியோகிக்கும் முன் அதை, தான் பாடம் நடத்தும் வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் போட்டுப் பார்த்து அது எடுபட்டால் மீட்டிங்கில் அந்த ‘ஜோக்கை ’அடிப்பது என்பது அவன் வழக்கம். அது மாதிரி ,அன்று அந்தக் கவிதையைக் கதையாக்கி தாராவிடம் விற்பனைக்கு விட்டான்.

கதை சொல்லு கவனத்தை ஈர்த்தாள் தாரா….

சொல்றேன்னு சொல்லீட்டு கதையைத் தொடர்ந்தான்…..

வானைத் தொடுகிற அளவுக்கு வளர்ந்த ஒரு பனை மரம் .அந்த பனை மரத்தின் உச்சியில் வட்டமாய் உயர்ந்து வளர்ந்த பனை இலைகள்! பனைமரத்துக்கு மேலே எப்போதும் வானப் பறவைகள் இங்குமங்குமாக வட்ட மடித்துக் கிறீச்சிட்டன. பறந்து பறந்து உயர்ந்து வானை கிழித்துக் கொண்டு பறந்தன. திரும்பின.

பார்த்த பனை மரத்துக்கு தானும் வானில் பறக்கணும்னு ஆசை வந்தது. பறக்க வேண்டுமானால இறக்கை வேண்டுமே!!! என்ன செய்வது???? யோசித்தது. தன் வட்ட இலை மட்டைகளை இறக்காக்கி கற்பனையில் வானில் சிறகு விரித்துப் பறந்தது. உயர உயர எம்பி எம்பிப் போய் கருத்த மேகங்களைக் கிழித்து உயர்ந்து நட்சத்திரங்ககளையும் தாண்டிப் பறந்தது.

வானத்தில் கிறீச்சிட்டு மகிழ்ந்தது.. அதற்குப் பறப்பதற்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் காற்று கைகொடுத்தது. காற்றில் பனை ஓலையை இறக்காக்கி பனை பறவையாகிப் பறந்து கொண்டிருக்கையில், காற்று வேகம் குறைந்து அடங்க , பறந்த ஓலை, பத்திரமாய் பனை மர வீட்டுக்கே திரும்பியது.

திரும்பியதும்தான் ஒன்று அதற்குப் புரிந்ததாம். உயர உயரப் பறந்தாலும், மர உச்சியே தன் ‘அன்னை மடி’யென்றும் மரம் வேறூன்றி நின்ற, மண்ணே தன் உறுதியான ‘வீடு’ என்றும் உணர்ந்து அமைதியாய் உட்கார்ந்து விட்டதாம்.

என்று சொல்லிக் கதையை முடித்து, தாராவின் முகத்தைப் பார்க்க, தாரா.. என்றைக்கும் போல் இல்லாமல் ‘கதை சூப்பர்’ என்று ‘சர்டிபிகேட்’ கொடுத்து சாப்பிட்டு முடித்தாள்.

கார்த்தி நினைத்துக் கொண்டான்.கதை சொல்வது கலையா? கதையை ரசிப்பது கலையா? என்ற கேள்விக்கு கதையை ரசிக்கும்படி சொல்வதே கலை என்று தாராவின் விமர்சனம் மூலம் தெரிந்து கொண்டு தாராவிடம் சொன்னான்.

சின்னப்பெண்ணான் நீயே ரசிக்கும்படி இந்தக் கதையை எழுக்தியவர் யார் தெரியுமா?? நோபல் பரிசுவாங்கியவரும் நம் தேதிய கீதம் எழுதியவருமான கவிஞர் ரவீந்தர நாத் தாகூர்தான் அந்த மகான் .

எல்லார் இதயத்தையும் என்றும் வெல்லும் படைப்புக்குச் சொந்தக் காரரான் அவருக்கு “வணக்கம் பலமுறை சொன்னேன்!”. நீயும் சொல் என்றான் கர்த்தி தாராவிடம், அவளும் வணக்கம் பலமுறை சொன்னாள்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். கதைகள்: வளர்கவி வெளியிட்ட நால்கள் -…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *