ஆனந்தப்படு
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 69
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாற்புறமும் பசியமலைகள் அரண்செய்ய நடுவில் பள்ளத்திலே பரந்து விரிந்து வெள்ளமும் சேறுமாக, வரம்புகளுக்கிடையில் துண்டு துண்டாகக் கிடந்த அந்த வயல் வெளியின் நடுவில் வைக்கோல் வேய்ந்த மூங்கிற்குடிசை! பராகமத்தொழிற் பகுதிக்குச் சொந்தமான அந்த வயலின் மரிப் பாளனாக வந்திருந்த பாஸ்கர், குடிசைவாயிலில் ”அடே காலிப்பயலே வாவெளியே! தெருவில் போகும் பெண்பிள்ளை களோடு கல்யாணப் பேச்சா பேசுகிறாய்?’ என்ற கூக்குரல் கேட்டு, கையில் தடியொன்றோடு முற்றத்திற்கு வந்தான். அங்கே நான்கு இளைஞர்கள் குமுறிக் கொண்டு நன்றனர். வயல் வெளிக்கப்பால் மலை உச்சியில் அவள் – ஆம்! அவன் மலர் சினத்தில் சிவந்துருளும் விழிகளோடு நிற்பது தெரிந்தது.
நொடிப்பொழுதில் அந்த இளைஞர்கள் தன்னைச் சூழ்ந்து கொள்ள முற்படுவதைக் கண்டு திடீரென்று கம்பை வேகமாகச் சுழற்றத் தொடங்கினான் பாஸ்கர். அவனை அணுகமுடி யாமற் போனதோடு, அடிவாங்காமல் தப்பினாலே போதும் என்ற நிலை ஏற்பட்டு இளைஞர்கள் வயல் வரம்பில் வழுக்கி விழுந்தெழுந்து ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு ஓடத் தொடங்கியபோது “ஏ! நில்லுங்கள்!” என்ற ஆணைகேட்டு அச்சத்தோடு நின்று திரும்பிப் பார்த்தனர். “நான் உங் களை அடிக்கமாட்டேன், நீங்கள் என் அன்புக்குரியவளின் அண்ணன்மார் என்பதற்காக” என்று கத்திய பாஸ்கர் மலர் நின்ற மலைப்பக்கம் திரும்பிச் சத்தம் போட்டான்: ”இதோ மலர்! உன் அண்ணன்மாரிடம் நான் அடிவாங்க வேண்டும் என்றுதானே அவர்களை அனுப்பினாய்! சரி! நான் அடிபடு கிறேன் ! நீ பார்த்து ஆனந்தப்படு’ கையிலிருந்த தடியை அவள் அண்ணன்மார் பக்கம் விட்டெறிந்து “அடியுங்கள் என்னை!” என்று பொருமலோடு கைகளை உடலோடு சேர்த் துச் சிலையென நின்றான் பாஸ்கர்.
ஆத்திரமும் அவமானமுமாக நின்ற இளைஞர்களில் ஒருவன் தடியை எடுத்துக்கொண்டு பாய்ந்து வந்து பாஸ்கரின் தலையில் தடாலென்று ஓங்கி அடித்தான். இரத்தம் பீரிட் டுப் பாய்ந்தது மலரின் கண்ணுக்கும் தெரிந்தது. அவன் மீண்டும் மீண்டும் அடித்தான். திடீரென்று ‘ஐயோ அண்ணா! நிறுத்தண்ணா என்று கதறித்துடித்து அங்கேயே விழுந்த மலர் மலைச் சாரலில் உருண்டுருண்டு வந்துவயற் சேற்றில் விழுந்து எழுந்து வரம்புவழியே தள்ளாடி ஓடி வந்தாள். இரத்த வெள்ளத்தில் மயங்கிக்கிடந்த பாஸ்கரின் உடம்பின் மேல் விழுந்து “ஐயோ பாஸ்கர்! என்னை மன்னியுங்கள் நான் பாவி! சண்டாளி” என்று கத்திக் கதறிப் புரண்டாள். அண்ணன்மார் கையிலிருந்த தடி நழுவிவிழ. கண்ணீர் பெருக, திகைத்து நின்றனர்.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
இரண்டு கடவுள் வாழும் வீடு
செ.தமிழ்ராஜ்
October 12, 2026
மதுரை விடியல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 12, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 12, 2026