ஈரா
கதையாசிரியர்: எஸ்.பொன்னுத்துரை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2026
பார்வையிட்டோர்: 92
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இத்தா
“உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், மனைவிகள் 4 மாதம் 10 நாட் கள் எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு ‘மரண இத்தா’ என்று பெயர்.) ஆதலால் அவர்கள் தங் களுடைய (‘இத்தா’வின்) தவ ணையை முடித்து விட்டால் (அவர்களில் மறு விவாகஞ் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங் களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றிக் குற்ற மில்லை. நீங்கள் செய்வதை. அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
(குர்ஆன்: 2:234)
‘இத்தா’ என்ற சொல் ‘ஈரா’ என மருவி. கிழக்கிலங்கையில் வழங்கப்படுகின்றது. ‘ஈரா’ என்னுங் கதை மட்டக்களப்புத் தென் பகுதிவாழ் முஸ்லிம் மக்களுடைய பேச்சுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது.
“இண்ட ஒரு பொழுதும் இரிக்கி. நாளக்கி பஜறு வெளிச்ச ஒடன செற கழியுது.”
அவுத்துக் கனி மாமட மகள். அலிமா நாச்சி ஒலகம் தெரிஞ்சவ. அவவும் என்னப்போல ஈரா இரிந்தவ.நான் வாண்ட வரிசந்தான் அவட புரிசனார் மகுத்தானார். நேத்தெண்டாப் போல இரிக்கி. மூணு வரிசம் எவ்வளவு சுறுக்கா ஓடிப்பறிஞ்சி போச்சி. ஈரா இரிக்க எண்டா லேசுப்பட்ட காரியமா? தலக்கி எண்ண பூசாம், சர்வாங்கத்தில பூணாரம் போடாம, வெள்ளப் பொடவ உடுத்தி, ஆம்புளர மொகம் பாக்காம இரிக்க வேணும். ஈரா எண்டா அலிமாநாச்சி சொல்லுக மாதிரி செற வாசந்தான். நாலு மாசம் பத்தரப் பொழுதுக்கு ஊர் ஒலகம் தெரியாம இரிக்க தெண்டால் எவ்வளவு கரச்சல்? அலிமா நாச்சி ஈரா இரிக்க நான் மணவற போகப்போற புதுப்பெண். அவக்கு ஈரா வேலி கட்ட நான் பச்சக்கிடுக எளச்சு சுறுக்கக் கண்டு கூடி இரிந்த எல்லாளும் எரிச்சல் பட்டுக் கதச்சி, கண்ணும் வெச்சுப் போட்டாளு கள். அதுக்குப் பொறகு எனக்குக் கை சுறுக்கில்ல. வாழுகத்துக்கு முந்திக்கூட இரிந்து பாயௌக்கும் தொழில். மத்தப் பொண்டுகள் ஒரு பாயௌக்கிறதுக் கெடயில், நான் ஒரு பாயத் தலக்கட்டிப் போட்டு, அடுத்த பாய அடிப்போட்டு, ரெண்டு குத்துக் குத்திப் போட்டிறுவன். மூணு குத்துக் குத்தினா ஒரு பாய்.
‘‘என்ர சீதேவிக் காக்காக்கு நாளயோட சொவர்க் கத்து வாசல் தொற பட்டுறும். ஹுர்லீன் பெண்டுகள் கனிவர்க்க மெல்லாம் கொடுப்பாங்க.”
ஈன கதக்கவ என்ர மூத்த மதினிக்காரி. அவர்றய ஒடப்பொறப்பு. கள்ள அல்லாக்கு மத்திக்கமா நடக்கி றவள் … நான் ஈராவில இரிந்து வெளியான ஒடன அவருக்கு பிர்தவுசு கெடச்சிரும், பெண்டாட்டிமார் ஈரா இரிந்தா புரிசன்மார்பாவ தோஷம் கொறயுமாம். சொவர்க்கம் கெடக்காட்டியும் அதாபு குறையுமாம்.
“அப்பிடி இல்லகா புள்ள. ஈரா இரிக்கத்தால ஆம்புளயளுக்கு அங்கித்து வழியில ஒரு நன்மையுமில்ல. புரிசன் மகுத்தான ஒடனயே வேற புரிசனுக்கு வாழ்க்கைப் படலாம். முந்தின புரிசன் மகுத்தான் அண்டைக்கோ, அதுக்கு முந்தியோ ஊடு கூடி புள்ளக் தரிச்சிரிந்தா அந்தப்புள்ள அவர்றய, இவர்றய எண்டு அறிய ஏலாது. நாலு மாசத்தாலதான் ஒருத்தி புள்ளத் தாச்சி எண்டத மத்தவங்க பாத்து அறிஞ்சிக்கலாம். பொண்டாளக் கூடிய ஆம்புளயளக் காணாம வெலகி இரிக்கத்தான் ஈரா வெக்கிறாங்க,’
என்ர சுபகானல்லா! இப்பிடிய சங்கதி! ஆசியத்து மூத்தம்மா ஈமானிஸ்லாம் தெரிஞ்சவ. ஒரு ஒகுத்து தொழுகயும் விடமாட்டா. மிரிவடிக்கால்லதான் நடப்பா. பள்ளிக்கொடம் வெச்சி புள்ளயளுக்கு குர்ஆன் ஓதிக் கொடுக்கிறா. அவ சொன்னாச் செரிதான். நான் எண்ணிக் கிருந்ததெல்லாம் அவருக்கு ஆகிற சமானிலே நல்ல வாழ்ச்சியம் கெடக்கும் எண்டுதான். சாச்சா, காக்கா, தம்பி எல்லாம் என்ன வந்து வந்து பார்ப் பாங்க. வேற ஆம்புளயள்தான் ஒருவரும் வாறதில்ல. புள்ளத்தாச்சிமாரும் வரப்படா.
“அங்குத்து நாளயில் நாளயில நீதான் ஒம்புரிசனுக்குப் பெண்டாட்டி. அவர் தான் ஒனக்குச் சோடு. அந்தத் தட்டுவாணியள் மூணுபேரும் அவன வேணா எண்டு சொல்லி தலாக்குச் சொல்ல வெச்சிற்றாளுகள். அடங்காமாரியள்.”
நான்தான் அவருக்கு ஆகிறத்தில சோடியாம். பாவம் மூத்தம்மாவுக்கு என்ன தெரியும்? என்ர கல்பு சொல்லுது நான் அவருக்குச் சோடியில்ல எண்டு. எனக்கு முந்தி, ஒருதி பின்னால் ஒருத்தியாக மூணு பேர? முடிச்சார். அவளுகளும் ரெண்டொரு வரிசம் பாத்துப் போட்டு வேணாம் வேணாம் எண்டிட்டாளுகள். பாவம் அவளுகள்தான் என்ன செய்வாளுகள்? அவருக் குத்தான் என்ன கொற? காணி பூமிக்கிக் கொறச்சலா? மாடு கண்டுக்குக் கொறச்சலா? நகநட்டு இல்லயா? றிஸிக்கு கொடுக்கல்லயா?… இதுகளுக்காக மட்டுந் தானா வாழுக? நானும் பொறுத்துப் பொறுத்து மனப் தாங்க பூங்காரம் ஏலாமத்தானே மையதீன் மச்சா னோட தொடுப்பு வெச்சன்.
என்னோட வௌயாடினவளுகளெல்லாம் கையில் ஒண்டும் கக்கத்தில் ஒண்டுமாகத் தூக்கிக்கிட்டுத் திரியிறதப் பாத்து வெப்புசாரம் தாங்க ஏலாம், ஒருதரும் இல்லாத நேரத்தில எத்தினதரம் அழுது இரிக்கிறன்? உம்மாதான் என்ன செய்வா? அவவும் தாலியறுத்த கைம்பெண்டாட்டி. எனக்கு மாப்புள எடுக்க அவவால தௌலத்து காணும? இப்பிடி இரிக்கத்தான் மையதீன் மச்சான் பாய் வாங்க வந்தார். நல்ல எளந்தாரி. மொட்டத்தல இல்லாம, சோக்கும் கீக்குமா இரிந்தார். என்ன ஒரு சாதியாப் பாக்க… நானும் அவர ஆனக்கிடுகால பாக்க…
ஆனா, இந்த நேரத்திலதான் என்ர அவர் மூணாம் பொண்டாட்டிய திலாக்கு சொல்லிப் போட்டு என்ன வந்து முடிச்சார். அவருக்கு எங்கட சாச்சாட வயசிரிக் கும். ஒரு நாளக்காவது புரிசன் பொண்டாட்டியா இரிக் காட்டி வாண்டதில என்ன புறசனம்?
“முந்தின தொளுப்புறிகள் செய்யாத பாக்கிசத்த நீ செஞ்சிரிக்காய். அவளுகலிட வகுத்தில் ஆண்டவன் ஒரு காயக் குடுக்கல்ல. ஒண்ட வகுத்திலதான் காச் சிரிக்கி . ஆறு மாச மெண்டாத் துடிக்கும்.”
இப்ப நாலஞ்சி நாளாத் துடிப்புத்தான். புள்ளக்கி உசிர் வந்தாத்தான் துடிக்குமாக்கும். எனக்கு இதுக தெரியாது. இதுதான் தலப்புள்ள. “சோட்டைக்கா வது எங்காக்காக்கு ஒரு புள்ளக் கிணாட்ட இல்ல எண்டு எவ்வளவு கக்கிசப்பட்டம். அந்த நாயகன் ஒரு புள்ளயக் குடுத்திற்று. காக்காவ அழச்சிக்கிட்டான். நாகூர் மீராசாய்பு ஆண்டவர்களே, ஆலிசமில்லாம அந்தப் புள்ளக் குஞ்சயாவது குடுத்திரிங்க. காக்கா சொத்துக் கெல்லாம் அதுதானே உரித்தாளி. வல்ல பெரிய நாயகனே, பூப்போல என்ற வகுத்துச் சொமயக் கழத்தி, நோய் நொடியில்லாம என்ர உசுப் பிராணிய வளத்துத் தந்திர வேணும். அவரிக்கு வாண்ட சங்கைக்காக என்ர புள்ளக்கித்தானே அவர்ற ஆதனமெல்லாம் சேர வேணும். எனக்கு அவரோட எரக்கந்தான். என்ர உசிரக் குடுத்துத்தானே அவரிக்கு அணிவிட பணிவிட எல்லாம் செய்தன். அவர வாப்பாவப் போலவே கவனிச்சி வந்தன். இப்புடி எல்லாம் கஷ்டப்பட்ட என்ர கல்புக்கு மையதீன் மச்சானக் கண்டாத்தான் குளுமை. மகுத்தாகுரத்துக்கு ரெண்டு மாசத்து முந்தி அவருக்கு இரிமல் வரித்தம் ஒரத்திற்று. புளியந்தீவு ஆஸுவத்திரிக்கிக் கொண்டு போனதுக்குப் பொறகு ஊட்டில நான் தனிய. நல்ல முன்னிருட்டுக் காலமும். ஒருவர்ற கண்ணிலயும் படாம மையதீன் மச்சான் வந்து போவார். புரிசன் இல்லாதவங்களோட ஊடு கூடுகது சனா செய்யுறது ஹறாம்தான்.
“நான் போய் நாளக்கி செவகு தொழுதாப்போல வாறன் மச்சாள்.”
ஆசியத்து மூத்தம்மா போறா. ஈராவில இரிந்து. வெட்டக்கு எறங்க அவதான் பாத்தியா ஓதுவா. வாழப் பழம், பிசுக்கோத்து, சாம்புறாணி எல்லாம் வாங்கி வெக்கவேணும். அதுக்கு உம்மா வந்திடுவாக.
– வீ (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, மித்ர வெளியீடு, சென்னை.
![]() |
எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சுகந்தம்
பொ.கருணாகரமூர்த்தி
October 3, 2026
கோணங்கள்
ரேவதி பாலு
October 3, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 3, 2026
