கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2026
பார்வையிட்டோர்: 172 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புக்குரிய சகோதரி சுஜாதா,

நீ அன்புடன் எழுதிய கடிதம் கிடைத்தது. தமிழ் நாட்டு விஷயங்களைப் பற்றி அவ்வப்பொழுது அறிந்துகொள்ள ஆசைப் படுகிறாய். ஆம்! பாரதத்தின் தலைநகரான புது தில்லியில் இருந்தால் தமிழ் நாட்டு அபிமானம் அதிகமாகத்தான் இருக்கும். சென்னையில் இருக்கும் பொழுது அடுத்த வீட்டுச் சகோதரியுடன் கூட நெருங்கிப் பழக மாட்டோம். வடநாட்டுக்குப் போய் விட்டால் அங்கே இருக்கும் தமிழ் நாட்டுச் சகோதரிகளுடன் ஒற்றுமையாக இருக்கத் தோன்றுவது இயற்கை.

நான் விவரமாக ரஸமாகக் கடிதம் எழுதுவேனென்று புகழ்ந்திருக்கிறாய். அது எனக்குப் பெருமையாக இல்லையென்று சொல்வதற் கில்லை.

மதிப்புக்குரிய பிரதமர் ஜவாஹர்லால் நேரு அவர்கள் தம் புதல்விக்கு எழுதிய கடிதங்கள் இன்று உலகம் விரும்பிப் படிக்கும் அறிவுரைகள் நிரம்பி இருக்கின்றன. தமிழ் நாட்டுத் தலைவர் திரு எஸ்.சத்தியமூர்த்தி அவர்கள் தம் அருமை மகளுக்கு எழுதிய கடிதம் அபூர்வ விஷயங்களைத் தாங்குவதாக அமைந்திருக்கிறது.

கடிதம் எழுதுவது ஒரு கலை. அறிவாளிகள் சிந்தனையில் எவ்வளவோ விஷயங்கள் கடைந்தெடுக்கப்படும். சிந்தனை செய்யும் சக்தி எல்லோருக்குமே வருவதில்லை. ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் உள்ளும், புறமும் பார்க்கும் ஆற்றல் அனைவருக்கும் ஏற்படுவதில்லை. ஓரளவு மன அமைதி, பக்குவம் வந்தால்தான் எதையும் தெளிவாக அறிய முடிகிறது.

பெண்கள் கடிதங்கள் எழுதிக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. குடும்பம், சமூகம், கல்யாணம், வீடு, மனத் தத்துவம், தோட்டம், ஆடை அலங்காரம், வெளித் தோற்றம், குழந்தை வளர்ப்பு, இயற்கை, பிரயாணம், பண்பாடு, நிகழ்ச்சிகள், ஆன்மீகம், வைத்தியம், நகரப் பொது நிகழ்ச்சிகள், கலை முதலிய அநேக விஷயங்களைப் பற்றி நீ கடிதம் எழுதவேணுமெனக் கேட்டிருக்கிறாய், முயற்சிக்கிறேன். நம் பண்பாட்டிற்கு ஏற்ப எந்த கல்ல காரியம் ஆரம்பிப்பதற்கு முன்னும் நாம் பிரார்த்தனை செய்வது வழக்கம். எனவே பிரார்த்தனையைப் பற்றி ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயத்தை முதல் கடிதத்தில் தெரிவிக்கிறேன்.

சென்னையை அடுத்துள்ள கிண்டி ராஜ பவன் மாளிகைத் தோட்டத்தில் காந்தி மகாத்மாவின் பிரார்த்தனை உலகநலப் பிரார்த்தனை. அவர் நினைவுச் சின்னமாக ஒரு பிரார்த்தனை மண்டபம் நிறுவி இருப்பதை அறிந்திருப்பாய். காந்தி மகானின் நம்மைப்போல் சொந்த நலனுக்குப் பிரார்த்தனை செய்ய வில்லை. காந்தி மண்டபத்தில் ஒவ்வொரு மாதக் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 5-30 மணிக்குப் பஜனை, கூட்டுப் பிரார்த்தனை, பக்திப் பாடல்கள், அரிய சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. கோபுர சின்னத்துடன் அமைக்கப்பட்ட காந்தி மண்டபத்தின் மேல் தளம் நீலவானம்தான். அந்த மணி மண்டபமும், விரிந்து பரந்து கிடக்கும் நீலவானமும், சூழ்நிலையும் நம் மனத்தில் விசால மனப்பான்மையை உண்டாக்குகின்றன. காந்தி மகானின் புனிதமான பிரார்த்தனை, எளிய வாழ்க்கை, இவைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது மண்டபம். வெளிக் கதவு பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. வெறும் அழகுக்குத்தான் கதவு. உள்ளே இருக்கும் பொருள்களை வைத் ப் பூட்டுவற்கல்ல. தூய உள்ளத்துடன் அந்தக் கோவிலில் நுழைந்தால் விண் பணச் செலவின்றி அவரவர் இஷ்ட தெய்வத்தை உள்ளக் கமலத்தினால் பூஜிக்கலாம். வெளியூரிலிருந்து வருபவர்கள் சென்னை நகரில் பார்த்துப் பயன் பெற வேண்டிய மிக முக்கியமான இடம் காந்தி மண்டபம்தான். மற்ற மற்ற விஷயங்கள் அடுத்த கடிதத்தில்.

பூமாதேவி.

– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.

வசுமதி ராமசாமி2 ஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம். வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 - 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *