கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 15, 2025
பார்வையிட்டோர்: 926 
 
 

(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குருவிக் கூடு. 

சிறகு முளைக்காத குருவிக் குஞ்சுகள் சிரித்து ஆரவாரித்தன. மரத்தில் இருந்த அணில், குருவிக் கூட்டுக்குத் தாவி, ‘உங்களுக்கு இன்னும் சிறகு முளைக்கவில்லை சுதந்திரம் இல்லாத உங்களுக்கு என்ன சிரிப்பு?’ என்று கேட்டது. 

குஞ்சுகள் கவனிக்கவில்லை. 

பாம்புக்கு இது வாய்ப்பானது. 

குஞ்சுகளின் சிரிப்பொலி கேட்டு, பாம்பு கூட்டுக்குள் நுழைந்தது. 

நொடிப்பொழுதில் –

பாம்பின் வாயில் குஞ்சுகள் பலியாகிப் போயின. 

அணிலுக்கோ துயரம் தாங்கவில்லை. 

அது மீண்டும் இரைந்து கத்தியது:- 

‘சிறகு விரி 
பிறகு சிரி’

– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *