அன்பு அதிர்ச்சி! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2021
பார்வையிட்டோர்: 12,550 
 
 

Anbu“என்ன சிம்லா, நீ வாங்கனுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்த, 42 இன்ச் எல்.இ.டி. டிவியை உனக்காக சஸ்பென்சாக வாங்கி வந்து மாட்டினா, சந்தோசத்துல கட்டிபிடிச்சிக்குவேன்னு பார்த்தா, இப்படி கோவப்படுற?” என்று கேட்டான் முத்துச் சோழன்.

“என்னையும் கேட்டிருக்கலாமில்ல. ஏன்டா கேட்காம வாங்கின?” என்றாள் சிம்லா.

“உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாமுன்னு நினைச்சி வாங்கினேன். உனக்கு ரொம்ப பிடிக்குமேன்னு க்ரீன் ஆப்பிளும் வாங்கி வந்து காத்திருந்தா இப்படி கோவப்படுவேன்னு நினைக்கலை.” என்று வருத்தமாய் சொன்னான் முத்துச் சோழன்.

“உனக்கு சொன்னா புரியாது போடா.” என்றாள் சிம்லா.

“என் செல்லம்ல என் பட்டுல்ல, கோவப்படாதடி சிம்ஸ்.” என்றான் முத்துச் சோழன்.

“பெட்ரூம் போனீங்களா?” என்று கேட்டாள் சிம்லா.

“இல்லையே வந்ததிலிருந்து ஹால்ல டி.வி மாட்டிக்கிட்டு இருந்தேன்.” என்றான் முத்துச் சோழன்.

“முதல்ல போயிட்டு வாங்க.” என்றாள் சிம்லா.

சற்றே மன நிறைவுடன் படுக்கை அறைக்கு சென்ற முத்துச் சோழன் உறைந்து நின்றான்.

52 இன்ச் எல்.இ.டி. டிவி மாட்டி இருந்ததுடன் மேசையில் தட்டு நிறைய அவனுக்கு பிடித்த சப்போட்டா, கிவி பழங்கள் அடுக்கப்பட்டிருந்தது.

– 24-01-2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *