வறுமையில் செம்மை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 72 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நம் தாய் நாடாகிய இந்திய நாட்டின் விடுதலைக் காகப் பாடுபட்டவர் பலர். அப்படிப்பட்ட நாட்டுப்பற்று மிக்க நல்லவர் பலர் தமிழகத்திலும் இருந்தனர். அவர்களுள் ஒருவரே ‘கப்பலோட்டிய தமிழர்’ எனப் போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்கள் நம் தாய் நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டுத் துன்பப் பட்டவர் அவர். வெள்ளையரை இந் நாட்டைவிட்டு வெளியேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுப் பல ஆண்டுகள் சிறையில் துன்புற்றார். சிறைச்சாலையில் செக்கு இழுக்குமாறு கொடுமைப்படுத்தப்பட்டார். அத்தகைய நல்லவரின் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சி ஒன்றை அறிந்துகொள்வது சிறப்புடையது. 

வெள்ளையர் இந்நாட்டில் வாணிகம் செய்ய வந்தனர்; தம் சூழ்ச்சியாலும் இந்திய மன்னர்களின் பொறுப்பற்ற தன்மையாலும் இந் நாட்டினை ஆளும் உரிமை பெற்றனர், ஆட்சி அவர்களிடம் இருந்ததால் வாணிகம் மூலம் பெரும்பொருளை இந்தியாவிலிருந்து இங்கிலாந்து கொண்டுசென்றனர். 

தம் வாணிகம் பெருக வேண்டுமென்பதற்காக இந்தியத் தொழில்களும் வாணிகமும் வளராமல் தடுத்தனர். இந்த நிலைகண்டு கொதித்தெழுந்தார் வ.உ.சிதம்பரனார். வெள்ளையரது வாணிகத்தினை எதிர்த்துப் போராடத் துணிந்தார். அப்போது கப்பல் மூலம் நடைபெறும் வாணிகப்பொருள் போக்குவரத்து முழுதும் வெள்ளையரிடமிருந்தது. வ.உ.சி. அவர்கள் இந்தியக்கப்பல் கழகம்’ ஒன்றை நிறுவ முடிவு செய்தார். 

நல்லவர் பலரின் பொருள் உதவியோடு இரண்டு கப்பல்களை வாங்கினார். தூத்துக்குடித் துறைமுகத்தி லிருந்து பொருள்களை ஏற்றிச்செல்லும் பணியில் இரு கப்பல்களும் ஈடுபட்டன. வ.உ.சி. அவர்கள் இந்திய வாணிகர் அனைவருக்கும் “இந்தியக் கப்பல் மூலமே பொருள்களை அனுப்ப வேண்டும்” எனப் பணிவான வேண்டுகோள் விடுத்தார். நாட்டுப் பற்றுமிக்க நல்ல வாணிகர் பலர் இந்தியக் கப்பல்மூலமாகத் தம் பொருள் களை அனுப்பினர். 

கப்பல் வாணிகம் சிறிதுசிறிதாக வளர்ந்தது இதனைக் கண்ட வெள்ளையர் கவலையடைந்தனர். இந்தியாவில் தமது வாணிகம் குறையும் என அஞ்சினர். மேலும் இந்திய மக்களிடம் நாட்டுப்பற்று மிகுந்து தம் ஆட்சிக்கே இடையூறு ஏற்படக் கூடும் எனப் பயந்தனர். 

எனவே, இந்தியக் கப்பல் கழகத்தை அழித்துவிடும் முயற்சிகளில் ஈடுபட்டனர். தங்கள் கப்பல் மூலம் குறைந்த கட்டணத்தில் பொருள்களை ஏற்றிச் செல்வதாக வாணிகர்களுக்கு ஆசை காட்டினர். நாட்டுப்பற்றில்லாத வாணிகர் சிலர் அந்த வலையில் சிக்கித் தங்கள் பொருள்களை ஆங்கிலக் கப்பல் மூலமே அனுப்பத் தொடங்கினர். எனவே, இந்தியக் கப்பல் நிறுவனத்தின் வருவாய் குறைந்தது. அதனால் இந்தியக் கப்பல்கள் ஓடமுடியாமல் செய்வதற்கான எல்லாச் செயல்களையும் வெள்ளையர் செய்ய முற்பட்டனர். 

வ.உ.சி.மனம் கலங்கினார். தம் பேச்சுவன்மை யால் ஆங்கில அரசை எதிர்த்தார். இந்தியர் இந்திய வாணிகத்தினை ஆதரிக்கவேண்டுமெனத் தீவிரமாகப் பல இடங்களில் பேசினார். அவருக்குத் துணையாகச் சுப்பிரமணிய சிவா போன்ற நல்லவர்கள் இருந்தார்கள். இளைஞர் பலர் வாணிகர் பலரை நேரில் சென்று
வேண்டிக்கொண்டு பொருள்களை இந்தியக் கப்பல்மூலம் அனுப்புமாறு செய்தனர். இதனால் இந்திய வாணிகர் பலர் மனம் மாறிக் கட்டணத்தைப் பொருட்படுத்தாமல் இந்தியக் கப்பல்களில் தம் பொருள்களை அனுப்பினர். மீண்டும் கப்பல் நிறுவனம் புத்துயிர் பெற்றது. 

வெள்ளையர் முயற்சிகள் தோல்வியடைந்தன. எனவே, ஆங்கில அரசினர்க்கு வ.உ.சி. மீது மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது. “வ.உ.சி. அவர்களால்தாம் இந்தியக் கப்பல் நிறுவனம் நன்கு நடைபெறுகிறது. அவரை ஒழித்துவிட்டால் நிறுவனம் நடைபெறாது” என எண்ணினர். 

எனவே, வ.உ.சி. அவர்களுக்குப் பல தொல்லைகள் தந்தனர். அவர் நடத்திவந்த வழக்குரைஞர் தொழிலுக் கான உரிமையைப் பறித்தனர். எனவே, அவர் வழக்குரைஞராகத் தொழில் நடத்த முடியவில்லை. அவருக்கு வருவாய் குறைந்தது. குடும்பத்தில் வறுமை மிகுந்தது. மேலும் வ.உ.சி. மீது பல பொய் வழக்கு களைத் தொடுத்து அவரைச் சிறையில் அடைத்தனர். ஆயினும் வ.உ.சி.யினுடைய தளரா முயற்சியாலும் ஊக்கத்தாலும் கப்பல் நிறுவனம் நடைபெற்றுவந்தது. 

பல துன்பத்திற்கு உள்ளாக்கியபோதும் கலங்காமல் இருந்த. வ.உ.சி.யைக் கண்டு ஆங்கிலேயர் வியந்தனர்; அச்சுறுத்தி இவரைப் பணியவைக்க முடியாது என அறிந்தனர்; அவரது குடும்பத்தின் வறுமை நிலைமையைக் கண்டனர். எனவே, பொருளாசை காட்டி அவரைப் பணியவைக்க முடிவெடுத்தனர். அதன்படி வெள்ளையர் வ.உ.சி. அவர்களை அழைத்தனர். உங்கள் குடும்பம் வறுமையில் உள்ளது. நீங்கள் நாட்டுக்கு உழைப்பதால் உங்களுக்கு என்ன பயன்? உங்கள் மனைவி மக்கள் வளமாக வாழ நீங்கள் வழிதேடிக் கொள்ள வேண்டாவா? எனவே, நாங்கள் கொடுக்கும் பெருந் தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதற்குப் பதிலாக இந்தியக் கப்பல் நிறுவனத்தின் பொறுப் பிலிருந்து நீங்கள் நீங்கிவிடுங்கள். அப்படிச் செய்தால் ஆங்கில அரசு உங்களுக்கு மேலும் பல நன்மைகள் செய்யும்” எனக் கூறி ஆசைகாட்டினர். பெருந்தொகை கொண்ட பணமுடிப்பையும் அவரிடம் தந்தனர். 

அந்தக் காலத்தில் அவருக்கு ஆங்கிலேயர் தருவ தாகச் சொன்ன பொருள் மிக அதிகம். வறுழை நிலையில் வாடியிருந்த வ.உ.சி. அவர்கள் நினைத் திருந்தால், அந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டு வளமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், நாட்டுப்பற்றும் நேர்மையும் அஞ்சாமையும் பெற்றிருந்த வ.உ.சி. அவர்கள் அத் தொகையைப் பெறாமல் ஆங்கிலேயருக்கு ஏமாற்றத்தைத் தந்து வெளியேறினார். அதற்குப் பிறகு மேலும் தீவிரமாக விடுதலை இயக்கத்தில் ஈடு பட்டு உழைத்தார். மிகுந்த வறுமைநிலையில்கூட நேர்மையிலிருந்து மாறாத அவரது மன உறுதி வியக்கத் தக்கதன்றோ? 

“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.” – முதுரை

“புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.” – பழமொழி 

– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.

புலவர் த.முருகேசன் புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *