போலித் துறவி
கதையாசிரியர்: புலவர் த.முருகேசன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 74
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோசல நாடு ஒரு சிறந்த நாடு. அது பல வளங் களும் நிறைந்தது. அந் நாட்டினைச் சுரதன் என்னும் மன்னன் நன்கு ஆண்டுவந்தான். அவன் பெருவீரம் உடையவன். எனவே, பல சிற்றரசர் அவனுக்குக்கீழ் இருந்து திறை செலுத்தி வந்தனர். அவன் அவையில் மதிவாணன் என்னும் அமைச்சன் இருந்தான். அறிவு நிறைந்த அந்த அமைச்சன் மிகவும் நல்லவன். தன் அறிவினால் நன்கு ஆராய்ந்து மக்களுக்குப் பல நல்ல செயல்களைச் செய்துவந்தான்; மன்னன் தவறு செய்யாதவாறு தடுத்துவந்தான்; தீயவர்கள் மன்னனை நெருங்காதவாறு பார்த்துக் கொண்டான். அரசனிடம் நெருங்கிப் பழக விரும்பிய தீயவர் பலர் நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். மன்னனும் மதிவாணனுடைய அறிவுரைகளைக் கேட்டு மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்துவந்தான். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
ஒரு நாள் மன்னனிடம் வேலை பார்க்கும் காடு களுக்குத் தலைவன் வந்தான். அரசனிடம் “அரசே, நம் அரசுக்குச் சொந்தமான காடுகளில் பல உயர்ந்த மரங்கள் உள்ளன. சிறந்த வனவிலங்குகளும் உள்ளன. அரசரது ஆணைப்படி அவற்றை நான் காத்து வருகிறேன். அதனால், சில நாள்களாகக் காட்டில் வாழும் சில முரடர்கள் தீயவர்களுடன் சேர்ந்துகொண்டு கலகம் செய்கின்றனர். காட்டில் உள்ள விலை உயர்ந்த மரங்களையும் அருமையான விலங்குகளையும் திருடிக் செல்கின்றனர். என்னால் அவர்களை அடக்க முடியவில்லை. மன்னர் உடனே அவர்களை அடக்க ஏற்பாடு செய்யவேண்டுகிறேன்’ எனக் கூறினான்.
மன்னன் தன் அமைச்சன் மதிவாணனே அவர்களை அடக்க வல்லவன் என எண்ணினான். உடனே மதிவாணனைக் காட்டிற்கு அனுப்பினான். முரடர் களை அடக்கித் திருடப்பட்ட பொருள்களை மீட்டு வருமாறு அவனிடம் கூறினான். மதிவாணன் உடனே வீரர்களுடன் காட்டிற்குப் புறப்பட்டான்.
மதிவாணன் அரண்மனையில் இல்லை என்று அறிந்துகொண்ட தீயவர் பலர் மன்னனிடம் வந்தனர். மன்னனுக்குத் தீய வழிகளைக் கற்பித்தனர். அதனால் அவர்கள் நன்மை அடைந்தனர். அவர்களுள் திகம் பரன் என்ற கள்ளத் துறவி ஒருவன் இருந்தான். அவன் தன் பேச்சுத் திறமையினால் மன்னனை ஏமாற்றி வந்தான். தான் கூறுவன யாவும் தவறாமல் நடக்கும் என மன்னன் நம்புமாறு செய்தான். தன்னைச் சேர்ந்த ஒருவனை நொண்டிபோல் நடிக்கச் செய்தான்.
மன்னன்முன் கள்ளத் துறவி அமர்ந்திருந்தபோது அந் நொண்டி வந்தான். துறவியைப் பார்த்து ”ஐயா! தெய்வத்தன்மை உடையவரே! என் கால் முடமாகி விட்டது. இதனை நீங்கள்தான் நீக்கவேண்டும்” எனக் கெஞ்சிக் கேட்டான். உடனே அக் கள்ளத் துறவி “கண்ணை மூடிக்கொண்டு மந்திரம் சொல்லுவதுபோல முணுமுணுத்தான். கண்ணைத் திறந்து ‘இவன் கால் குணமாகுக’ எனக் கைகளை உயர்த்திக் கூறினான். முன்பே அந் நொண்டியிடம் கூறியிருந்ததுபோல. உடனே அவன் நன்றாக நடந்தான். உடனே “நீங்கள் தெய்வமேதான், தீராத என் ஊனம் தீர்ந்துவிட்டது” எனக் கூறித் துறவியின் காலில் வீழ்ந்து வணங்கினான். ”தெய்வமே! என் குறையைத் தீர்த்ததற்காக நான் தரும் காணிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி ஒரு பெரிய பொன்முடிப்பினைக் கொடுத்தான்.
உடனே துறவி, “அப்பா! மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை நீக்குவது என் கடமை. அதற்குப் பொன் வேண்டா. நீயே வைத்துக்கொண்டு நலமாய் இரு. எனக்குப் பொருள்மீது ஆசை இல்லை” எனக் கூறினான். இதனைக் கண்ட மன்னன் மிகவும் வியப் படைந்தான். உண்மையில் அந்தத் துறவி தெய்வத் தன்மை வாய்ந்தவன் என நம்பினான். அதனால் அந்தத் துறவியின்மீது மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டான். அவனைத் தன் அரண்மனையில் தங்கி யிருக்குமாறு வேண்டிக்கொண்டான்.
மன்னன் கூறியபடி அந்தத் துறவி அரண்மனையில் தங்கியிருந்தான். மன்னன் அவனை முழுதும் நம்பினான். மேலும் அவன் தெய்வத்தன்மை வாய்ந்த வன் என எண்ணினரன். எனவே, துறவி கூறுவன எல்லாவற்றையும் செய்தான். துறவி, “இம் மன்னன் என்னை முழுதும் நம்பியிருக்கிறான். அமைச்சன் மதிவாணன் மிக்க அறிவுள்ளவன். அவன் திரும்பி வந்தால் நம்மை நம்பமாட்டான். அதற்குள் இம்மன்னனை ஒழித்து நாமே மன்னனாகிவிடவேண்டும். அதற்கு இம் மன்னனுக்கு நம்மீது மேலும் பக்தி ஏற்படு மாறு செய்யவேண்டும்” என எண்ணினான். அரசன் நம்புமாறு மேலும் சில நிகழ்ச்சிகளைச் செய்துகாட்டி னான். அரண்மனையில் இருந்த ஒரு சிலர் இவனை நம்பவில்லை. இதனை அறிந்துகொண்ட அந்தத் துறவி மன்னனிடம் சொல்லி அவர்களை வேலையிலிருந்து நீக்கிச் சிறையில் அடைத்தான். தன்னுடைய கையாள் களை அரண்மனையில் பல வேலைகளில் அமர்த்தினான். மன்னன் துறவியின் அருகிலேயே இருந்து அவன் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தமையின் அரசியல் வேலைகளைக், கவனிக்கவில்லை. துறவி மன்னனிடம். “நீங்கள் கவலையற்று இருங்கள். இந்நாட்டு மக்களை நான் துன்பமின்றிக் காக்கிறேன். அதோடு மன்னராகிய உங்களைத் தேவலோகம் அனுப்பிவைக்கிறேன். நீங்கள் அரசாங்க வேலைகளைப்பற்றிக் கவலைப்படாமல் நான் சொல்லுகிறபடி பூசை செய்து வாருங்கள்,” எனக் கூறினான்.
மன்னனும் அவனை நம்பினான். அந்தத் துறவி தனக்கு வேண்டியவர்களை அரசாங்க உயர் பதவிகளில் அமர்த்தினான்; மக்களின் வரியை உயர்த்தினான்; வரி தராதவர்களைக் கொடுமைப்படுத்தினான். மன்னனைக் கண்டு முறையிட வந்த மக்களைத் தடுத்துவிட்டான், மன்னனை எவரும் பார்க்க முடியவில்லை. மன்னனின் மனைவிகூடத் துறவியாரின் அனுமதியின்றி மன்னனைக் காண முடியவில்லை. மக்கள் மிகவும் துன்புற்றனர். தங்களது அமைச்சர் மதிவாணன் இல்லையே என வருந்தினர்.
இவ்வாறு அந்தத் துறவி மன்னனைப் பொம்மை யாக்கித் தானே நாட்டுப் பொறுப்பினை மேற்கொண் டான். மன்னனை ஒழிக்கச் சரியான சமயத்தினை எதிர் பார்த்துக்கொண்டிருந்தான். மன்னன் தன்மீது ஐயம் கொள்ளாத வகையில் அவனிடம் நடந்துகொள்வான். தன் கையாள்களோடு பேசும்போது மன்னனை வெளி யேறச் சொல்லிவிடுவான். ஒருவரும் அறியாவகையில் தன்னுடைய ஆள்களோடு பேசி அவர்களுக்குச் செய்ய வேண்டிய திட்டங்களைக் கூறுவான்.
மன்னன், “நீங்கள் இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” எனக் கேட்டால் டனே அத் துறவி “அரசே! நான் இந்த உடலை இங்கேயே விட்டுவிட்டுத் தேவலோகம் சென்று தேவர்களுடன் பேசி வந்தேன். அவ்வாறு நான் தேவலோகம் போய்த் தெய்வ உடலோடு திரும்பி வருவேன். மீண்டும் இவ்வுடலில் புகுந்துகொள்வேன். அத் தெய்வ உடலோடு நீங்கள் என்னைப் பார்க்கலாகாது. ஆகவேதான் தான் உங்களை வெளியே போகச் சொன்னேன்” எனக் கூறிவிடுவான். மன்னனும் அதனை உண்மை என நம்பினான். ஆகவே, எவ்வாறேனும் தெய்வ உடலோடு இருக்கும்போது துறவியைப் பார்த்துவிடவேண்டும் என ஆசைப்பட்டான். ஆனால், துறவி அச்சுறுத்தியதால் அங்ஙனம் பார்க்க முயலாமல் இருந்தான்.
துறவியின் கொடுமைகளைத் தாங்க முடியாது மக்கள் வருந்தினர். அப்போது முதியவர் ஒருவர், “நம்முடைய அமைச்சர் ஒருவர்தாம் நமக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடியவர். அரசர் இப்போது நம் பேச்சினைக் கேட்க மாட்டார்; அந்தத் துறவியின் பேச்சையே கேட்பார். எனவே, நம் நிலையினை அமைச்சருக்கு உடனே தெரிவிக்கவேண்டும்” எனக் கூறினார். எனவே, துறவிக்குத் தெரியாமல் ஒருவனைக் காட்டிற்குச் சென்றிருக்கும் அமைச்சனிடம் அனுப்பினார். அவன் ஒருவரும் அறியாதவாறு காட்டினை அடைந்து அமைச் சனைப் பார்த்தான். அமைச்சனிடம் மன்னனது நிலை யைப்பற்றிக் கூறினான். துறவியின் கொடுமைகளையும் மக்கள் படும் துன்பங்களையும் எடுத்துக் கூறினான். அமைச்சன் அனைத்தையும் கேட்டு மனம் வருந்தினான். மன்னனுக்கு வரவிருக்கும் ஆபத்தினை உணர்ந்தான். மன்னனுக்கும் மக்களுக்கும் வரவிருக்கும் துன்பத்தினைக் காப்பது தன் கடமை எனக் கருதினான். உடனே நாட்டிற்குத் திரும்பினான்.
அமைச்சன் எதிர்பாராமல் வந்ததைக் கண்ட துறவி அதிர்ச்சியடைந்தான். தன் எண்ணம் நிறைவேறாமல் போய்விடுமோ என அஞ்சினான். மன்னனை அமைச்சன் சந்திக்க இயலாமல் செய்தான். அமைச்சன் துறவியின் சூழ்ச்சிகளை நேரில் அறிந்தான். அவனைத் தானும் சூழ்ச்சியாலேயே வெல்ல முடிவு செய்தான். உடனே நேராகத் துறவியிடம் வந்து வீழ்ந்து வணங்கி… “பெருமை உடையவரே, உங்களின் திறமையையும்- சிறப்பினையும் பலர் சொல்லக் கேட்டேன். இப்போது நேராகவே பார்க்கிறேன். உங்களைப்போன்ற ஆற்றல் வாய்ந்தவர் இந்நாட்டில் இருப்பது எங்கள் புண்ணியம். என்னையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு நல்வழி காட்ட வேண்டும்” எனக் கூறினான்,
அமைச்சன் உண்மையாகவே தன்னிடம் பக்தி கொண்டுள்ளதாகத் துறவி நினைத்தான். உடனே ”அமைச்சரே! அப்படியே ஆகட்டும். இன்று முதல் நீங்கள் இங்கேயே நான் சொல்லும் பூசையைச் செய்து வரவேண்டும். வேறு எவருடனும் பேசக்கூடாது. நான் சொல்வதுபோல் நடந்தால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும்’ எனக் கூறினான். அமைச்சனும் அவன் கூறியதைக் கேட்பதுபோலவே நடித்தான். துறவிக்குத் தன்மீது நம்பிக்கை வரவேண்டும் என்பதற் காகச் சில நாள்கள் அவன் கூறியவற்றையெல்லாம் கேட்டான். எவரையும் பார்க்காமல் ஒரே இடத்தில் இருந்து துறவி கூறியது போலப் பூசை செய்து வந்தான். சில நாள்கள் அமைச்சனைக் கவனித்துவந்த துறவி, அவன் தன்மீது உண்மையான நம்பிக்கை வைத் திருப்பதாகவே எண்ணினான். ஒரு நாள் “அமைச்சரே! நான் இப்போது என் உடலை இங்கேயே விட்டுவிட்டுத் தெய்வ உடலோடு தேவலோகம் போகப் போகிறேன். நீங்கள் அத் தெய்வ உடலைப் பார்க்க இயலாது. எனவே, இங்கேயே பூசையில் இருங்கள்” என்று கூறி விட்டு ஓர் அறையினுள் சென்று கதவினைத் தாழிட்டான். அங்கு வந்துள்ள தன் கையாள்களோடு மன்னனைக் கொல்லச் சதி செய்துகொண்டிருந்தான். அவர்களோடு எப்படி மன்னனைக் கொல்வது? நாட்டைக் கைப்பற்றுவது? எனத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான்.
அமைச்சன், துறவி அறைக்குள் சென்றதும் வெளிக் கதவினைத் தாழிட்டு விட்டான். மன்னனைச் சென்று கண்டான்; மன்னன் துறவியை முழுவதும் நம்பி யிருந்ததை அமைச்சன் உணர்ந்து கொண்டான்; துறவியைப்பற்றி எவ்வளவு கூறினாலும் மன்னன் நம்ப மாட்டான் எனத் தெரிந்துகொண்டான்; எனவே, மன்னனது நம்பிக்கையை வைத்தே துறவியை ஒழிக்க முடிவு செய்தான். மன்னனை நோக்கி, “அரசே! இங்குள்ள துறவியார் அடிக்கடி தேவலோகம் சென்று வருவதாகக் கேள்விப்படுகிறேன். அத்தகைய தெய்வத் தன்மை வாய்ந்தவர் நம் நாட்டில் இருப்பது நம் பேறாகும்” எனக் கூறினான். அமைச்சனும் தன்னைப் போலவே துறவியின் பெருமைபற்றி அறிந்து பக்தி செலுத்துகிறான் என எண்ணி மகிழ்ந்தான். உடனே அமைச்சனிடம், ”ஆம் மதிவாணரே! அவர் தெய்வத் தன்மை வாய்ந்தவர். இப்போதுகூடத் தேவலோகம் சென்றிருக்கிறார். மீண்டும் இங்கு வந்து தம் உடலில் புகுந்துகொள்வார். அவரைத் தெய்வ உடலோடு பார்க்கவேண்டும் என விரும்புகிறேன். ஆனால் துறவியார் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். என்ன செய்வது?’ எனக் கூறினான்.
அமைச்சன் இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டான். ”அரசே! இப்போது துறவியார் தம் மனித உடலை இந்த அறைக்குள் விட்டுவிட்டுத் தெய்வ உடலோடு தேவலோகம் சென்றிருப்பார். அவர் மீண்டும் வருவதற்குள் இந்த அறையைக் கொளுத்திவிடுவோம். அவரது உடல் எரிந்துபோய்விடும். தேவலோகம் சென்று திரும்பிய துறவியார் தம்முடைய உடலைக் காணமுடியாததால் அந்தத் தேவ உடலோடுதான் இருக்க வேண்டும். நாம் அவரைத் தேவ உடலோடு கண்டு மகிழலாம். இதனைத் தவிர வேறுவழி இல்லை” என்றான் மன்னனும் துறவியின் தேவ உடலைக் காணவேண்டும் என்ற ஆவலில் அதற்கு இசைந்தான், உடனே அமைச்சன் துறவி இருந்த அறைக்குத் தீயிடச் செய்தான். தீயில் வெந்து கள்ளத் துறவியும் அவன் கையாள்கள் சிலரும் மாண்டனர். மற்றவர்களை அமைச்சன் கைது செய்தான். அரசன்முன் கொண்டு வந்து அவர்களை நிறுத்தினான். அவர்கள் செய்த குற்றங்களைச் சாட்சிகளுடன் மன்னனிடம் கூறினான். மக்கள் மன்னனைக் காண ஏற்பாடு செய்தான். மக்கள் கள்ளத் துறவி செய்த கொடுமைகளைக கூறினர். மக்கள் கூறியதைக்கேட்ட மன்னன் மனம் வருந்தினான். தான் இவ்வளவு நாள் அறிவுகெட்டு, கெட்டவன் ஒருவன் பேச்சைக் கேட்டதை எண்ணி வருந்தினான். தான் செய்த தவறுகட்காக மக்களிடம் மன்னிப்பு வேண்டினான்.
அமைச்சனைப் பார்த்து, “அமைச்சரே! சரியான சமயத்தில் வந்து என்னைக் காத்தீர். உமது அறிவுத் திறனால் நான் கேட்டிலிருந்து தப்பினேன். நாடும் பிழைத்தது. இனி இத்தகைய வஞ்சகர்களை நம்ப மாட்டேன்’ எனக் கூறிப் பாராட்டினான்.
“வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டா” – உலகநீதி
– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.
![]() |
புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உயிர்காப்பான் தோழன்
ஸ்ரீ.தாமோதரன்
October 12, 2026
வறுமையில் செம்மை
புலவர் த.முருகேசன்
October 10, 2026
வில் வீரன்
புலவர் த.முருகேசன்
October 10, 2026
