பங்காளிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 3 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிவம் பலசரக்குக் கடையின் பங்காளர் சபைப் பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அவ்வாண்டு இலாபத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதற்குரிய காரணங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர் பங்காளிகள்! 

கடை கணக்காளரைக் கைக்குள் போட்டுத் தினம் ஐந்து பத்தாக அடித்துச் செல்லும் மனேஜர் எழுந்து பங்காளர்கள் தம் தம் கடமைகளை நேர்மையாகவும் விசு வாசததோடும் செய்ய வேண்டும்” என்று அறிவுரைத்து அமர்ந்தார். கட்டுப்பாட்டு விலைப்பொருட்களைக் கள்ளச் சந்தையில் ஒரு விலைக்கு வாங்கி அதிலும் கூடியவிலையைக் கணககுக் காட்டும் கொள்வனவுப் பொறுப்பாளர் எழுந்து, 

“நம்பிக்கை நாணயம், விசுவாசம், நேர்மை, என்ற நல்லி லட்சியங்களை நாம் கடைப்பிடித்து ஒழுகினால் நிச்சயம் லாபம் அதிகரிக்கும்!” என்று முழங்கி விட்டு உட்கார்ந்தார். சொந்த வேலையாக வெளியூர் சென்று விட்டு வியாபார அலுவலாகச் சென்றதாக நிலை நாட்டிப் பிரயாணச் செலவும் சம்பளமும் கறந்து கொள்ளும் பங்காளர் எழுந்தார். ‘பங் காளிகள் கடையின் நலங்கருதித் தியாகங்கள் பல புரிய வேண்டும்” என்று பண்புரைத்து அமர்ந்தார். கடைத் திறப்புக்களை வைத்திருக்கும் பொறுப்பை ஏற்று நள்ளிரவில் கடைதிறந்து பால் மா பிஸ்கட் டின்கள் களவாடிச் செல்ப வர் எழுந்தார். ”பிறர் சொத்தில் சுண்ணாம்புக் கட்டியும் நமக்குச் சேரக் கூடாதென்ற எண்ணம் நமக்கு வேண்டும். என்று உரைத்துப் பத்தினி போல் உட்கார்ந்தார். 

ஐந்தாவது பங்காளர் கடை நிர்வாகத்தில் பங்கு பற்ற மல் நிர்வாகப் பொறுப்பிலுள்ள அத்தனை பேரின் திருவிளை யாடல்களையும் ஆதார பூர்வமாக அறிந்திருப்பவர் கடைசி யாக நிதானமாக எழுந்து நின்று பேசினார்: “நம் கடையின் பங்காளர்களும் நிருவாகிகளுமான நண்பர்கள் இனிமேலென்றாலும் தங்களுக்கிருக்க வேண்டிய நல்ல பண்புகளை எடுத்துச் சொன்னார்கள் சொன்னார்களே ஒழிய இனியே னும் திருந்தி நடப்பார்களோ என்பது சந்தேகமே! எனவே நான் இந்த ஆண்டோடு பங்கு வியாபாரத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன்” நான்கு பங்காளர்களும் திடுக்கிட்டுத் திருதிரு வென்று விழிக்க அவர் அமர்ந்தார். 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *