உறவுகள்… ஒரு தொடர்கதை..!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 7,991

சே! என்ன வாழ்க்கை இது?! என்ன மனிதர்கள் இவர்கள்?! உறவுகளும் அப்படித்தான்., நண்பர்களும் அப்படித்தான். காரியம் என்றால் குழைகிறார்கள்…! காரியம் ஆனதும் கவுந்தடிச்சுப் படுத்துக் கொண்டு கண்டுக்காம இருந்து விடுகிறார்கள்.
இனிமேல் “No more friends and no more relatives!” என்றான் வசந்தன் வாழ்க்கை வெறுத்துப் போய்.
காதுகளில் கடவுளின் கனிவான குரல் அசரீரியாய்….”No more friends .. என்று வேணாச் சொல்!., no more relatives என்று சொல்லாதே! காரணம் ‘நண்பர்களை வேணா நீ தீர்மாணிக்கலாம்!., ஆனால் உறவை நான்தான் தீர்மாணிக்கிறேன்!” என்றது குரல்.
என்ன வேணுமானாலும் கடவுள் சொல்லட்டும்., ஆனால், மனசு கேட்க மாட்டேங்குதே?! என்ன செய்ய?!!
‘என்ன உன் பிரச்சனை?’
‘உறவும் நட்பும் காசுக்காகத் தானே பல்லிளிக்கிறது?’
உண்மைதான்! ஆழ யோசித்தால் நீ நினைப்பது சரிதான். உறவும் நட்பும் காசைக் கருதித்தான்.
ஆனால், உறவையும் நட்பையும் ‘மகசூல்தரும் ‘காசு’ என்று மனக்கோட்டை கட்டாதே! வசூல் வழங்கும் வட்டியல்ல… உறவும், நட்பும்! அவை ஒருவகையில் மகிழ்ச்சி தரும் அந்தஸ்தைக் கொடுக்கும் முதலீடுகள்! அவ்வளவே!.
‘உறவின், நட்பின் பலம் அடுக்கு மாடியின் அஸ்திவாரம் போல…! அதை அழகு பார்க்கலாம்., அதன் ஆழம் பார்க்கவோ .. அசைத்துப் பார்க்கவோ கூடாது!’
‘அசரீரிகள்’ ஆண்டவன் குரலாய் அடிமனதிலிருந்து ஒலிக்கின்றன!. அதை ‘ஆழ்மன வெளிப்பாடு!’ என்றாலும் ‘ஆன்மீக புலப்பாடு!’ என்றாலும் அர்த்தம் ஒன்றுதான்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கலையாத வேடம்
எஸ்.மதுரகவி
June 17, 2026
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 17, 2026
திருப்புமுனை
ஜெயந்தி சங்கர்
June 17, 2026

Supper story and iam very impressed 😊