மினிப் பத்தினி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 83 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பஸ் நின்றது! பலர் இறங்கினர். பலர் ஏறினர். பள்ளிக் கூட நோட்டுப் புத்தகத்தைத் திறந்து வைத்துப் பரீட் சைக்காகப் படித்துக் கொண்டிருந்தான் சுந்தர். அவன் பக்கத்தில் இருந்த முதியவர் எழுந்து இறங்க ஒரு தவநாக ரீக மங்கை மினிச்சட்டையோடு அவன்பக்கத்தில் வந்தமர்ந் தாள், கரையில் நன்றாக ஒதுங்கி உட்கார்ந்து கொண்ட சுந்தர் படிப்பில் மூழ்கி இருந்த போது தன்தோளில் மீண் டும் மீண்டும் அவள் தோள் வந்து முட்டுவதைப் புரிந்து கொண்டு நிமிர்ந்து பார்த்தான்… 

அவள் முகத்தில் விகாரமான உணர்ச்சிகள்! கண்களில் ஒரு வெறி கலந்த கள்ளப்பார்வை. அவன் கூசிக்குனியவே அவள் மீண்டும் இடிக்கத் தொடங்கி அவன் அருகில் மிக அருகில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு தன் கால்களால் அவன் கால்களை ஏதேதோ செய்யத் தொடங்கி விட்டாள்.

அருவருப் படைந்த சுந்தர் ஆத்திரத்தோடு தன் புத்தகங்களை எடுத்து அவளுக்கும் தனக்கு மிடையில் திணித்து விட்டான். பஸ் அடுத்து வந்த நகரத்தில் நின்றபோது முன்சீற்றில் இருந்த ஒருவர் இறங்கினார். ஏமாற்றமும் ஆத்திரமுமாக இருந்த அந்த மோகினி எழுந்து அந்தச் சீற்றில் அமர்ந்து கொண்டு, அங்கும் பக்கத்தில் இருந்த இளைஞனை இன்பபுரிக்கு அழைக்கத் தொடங்கி, பெரும் வெற்றி பெற்று, தன்மார்பும் அவன் தோளும் கதைபேச தானும் மகிழ்ந்து அவனையும் மகிழ்வித்தபடி குதூகலப் பிரயாணம் செய்து கொண்டிருந்தாள்.

அடைந்து திரும்ப வேண்டிய பஸ் நிலையத்தை பஸ் சென்றடைந்தது. பிரயாணிகள் இறங்கிக் கொண்டிருந்தனர். பஸ்ஸில் இருந்த ஒரு முரட்டு வாலிபன் பிரயாணிகளை இடித்துத் தள்ளிக் கொண்டு ஆத்திரத்தோடு சுந்தரை நெருங்கினான்.

படிப்புச் சிந்தனையில் தன்னை மறந்து நின்ற சுந்தரின் கன்னத்தில் அவன் கரம் கொடுத்த அறை அவனை நிலை குலைந்து சுருண்டு விழச் செய்து விட்டது. மறுகணம் பஸ்ஸில் ”என்ன என்ன?” என்ற குரல்கள் “இந்தச் சீற்றில் இவனுடன் இருந்த என் தங்கை இடையில் எழுந்து வேறு சீட்டுக்குப் போனாள் என்றால் அதன் அர்த்தம் என்ன” – அவன் குமுறினான். 

அப்பொழுதுதான் தள்ளாடி எழுத்த சுந்தர் மீண்டும் பிரயாணிகள் கைகளுக்கும் கால்களுக்கும் பந்தாகித்துடி துடித்ததை அந்த மினிப் பத்தினி பார்த்துக் கொண்டு நின்றாள் ஒரு பாவமும் அறியாதவள் போல. 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *