போடியார் மகள்
கதையாசிரியர்: ஞானம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2026
பார்வையிட்டோர்: 51
(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிழக்கு வெளுக்கும் நேரம்; இன்னும் சிறிது நேரத்தில் இரு ளாற் கவ்வப்பட்டிருந்த உலகம் ஒளிபெற்றுப் பிரகாசிக்கும். அன்று தான் மானாகப்போடியாரின் வயல் விதைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. தாமோதரன் போடியாரின் வயற்காரன்’ வயதான தன் தந்தை தாமோதரனுக்காக அவன் மகன் முத்தனும் வயலுக்குச் சென்றிருந்தான். ஆசிரிய கலாசாலைப் புகுமுகப் பரீட் சையின் பெறுபேற்றை எதிர்பார்த்துக்கொண்டிருந்த இளங்காளை முத்தன்.
வயல் வேலைகள் ஆரம்பமாகும் கட்டத்தை அடைந்துகொண் டிருந்தன. தாமோதரன் மாடு பிணைக்கின்ற கயிறுகளை அன்று மற தியாகப் போடியாரின் வீட்டிற்கு அதிகாலையிற் சென்றவன் மறந் துவிட்டு வந்துவிட்டானென்பது அப்போதுதான் அவனுக்குத் தெரியவந்தது. உழவிப் பலகை அடித்துத் தானே விதைப்புத் தொடங்குவது வழக்கம். இதனால் விதைப்புப் பிந்திவிடுமல்லவா. அங்கு வேலை செய்ய ஆயத்தமாயிருந்த முத்தனை அழைத்துப் போடியார் வீட்டிற்குச் சென்று கயிறுகளை எடுத்து வருமாறு கூறி னான் தாமோதரன். தன் தந்தையின் இந்தச் சிறு மறதியினாற் போடியாரின் கண்களுக்குக் கெட்டவர்களாக மாறவிரும்பாத முத்தன் விரைந்தான் கயிறுகளுக்காக.
போடியார் வீட்டை அடைந்துவிட்டான். வாயிற்கதவு திறந் தேயிருந்தது. அங்கு அவன் கண்ட காட்சி இதுவரை அவன் காணா தது. அங்கு முழுப்பகல் வேளையில் முழுமதி ‘காட்சியளித்தது.’ இயற்கை கூடச் சில சமயங்களில் தவறு இழைத்துவிடுகின்றதே என்று முடிவு கட்டினான். இவன் இவ்விதம் முடிவுகட்டுவதற்குத் தான் ஆதாரமாயிருந்தது என்ன? வேறொன்றுமில்லை. ஒரு இள மங்கைதான். மங்கை என்று மனந்தெளிந்த பின்னர்தான் முத்த னுக்கு இயற்கை செய்ததல்ல இந்தத் தவறு; இது தன் கண் செய்தது என்னும் முடிவு தெரிந்தது. அன்றுதான் அப்பேர்ப்பட்ட மலர்க்கொடி மானாகப்போடியாரின் மகள் என்பதை உணர்ந்த அவன் உள்ளே சென்று விடயத்தை உரைக்கின்றான். பின்வருமாறு:-
மாடுபி ணைக்குங்க யிறுகள் – தந்தை
மறதியி னால் இங்கே உள்ளன
தேடிப்பி டித்துக்கொ ணர்ந்திட – என்னைத்
தீவிர மாகஅ னுப்பினார்.
இதழ்கள் விரிந்து இன்னிசை பரந்தது இதற்குப் பதிலாக,
அம்மாஇங் கில்லைவெ ளியிலே – அதால்
அவசரம் வேண்டாம்சற் றேவந்து
சும்மாஇ ருந்தால ழைத்துநான் – அதைச்
சேர்ப்பிக்கி றேன்தங்கள் கைகளில்
கவர்ச்சிதரும் அழகுடன் கானத்தையும் போடியார் மகளுக்கு வாரி வழங்கியிருந்த இறை வனைத் துதித்தவண்ணம் பின்வருமாறு மீண்டும் பாடுகின்றான்:-
அவன்:- வேலைசுணங்கு தீ தொன்றினால் – உடன்
வேளைக்குச் சென்றுவே றெங்கேயும்
‘மேலைப்பொ ழுதிற் றாறோமென்றே – வாங்கி
மேலே தொடருறம் வேலையை.
அவள்:- வீட்டிற்கு வந்துவெ றுமனே – செல்லல்
வேதனையூட் டுஞ்செய லன்றோ
கேட்டாரென் றால்தந்தை என்னையே – நன்றாய்க்
கோபிப்பா ரம்மாவை ஏசியே.
அவன்:- இந்த உபசாரம் போதுமே – இதை
ஏழ்மு றைக்கும்ம றவேனினி
செய்வ தெனஅறி யாமலே – தந்தை
சோருவார் வாறேன்வி டைபெற்றே.
என்று கூறி வாயில் வழியாகச் சென்று கொண்டிருக்கும்போது, ‘மரகதம்! என்னவாம் தாமோதரனின் மகன் வந்துபோறது?” என்று நுழைந்தாள் போடியாரின் மனைவி. அப்போது தான் முத்தன் உதடுகள் ‘மரகதம்’ என்னும் பெயரை அவனையறியாமலேயே உச் சரித்தன, முதன் முறையாக. மீண்டும் முத்தன் உள்ளே கூப்பிடப் படுகின்றான். கயிறுகளை எடுத்து வயலுக்குச் சென்று நேரங்கழித்து வந்த காரணத்தைக் கூறி வேலையைத் தொடருகின்றான். போடி யார் கூட ‘தற்கால இளைஞர்கள் மத்தியில் முத்தன் ஒரு அதிசயப் பிறவி’ என்று கூறுவதுபோல் ஒரு பார்வையை அவன் பக்கம் செலுத்தினார் பரணிலிருந்து.
இரண்டு நாட்கள்; ஒரு உருவம் தலையில் கைப்பெட்டிசதித மாக வரம்புமேல் ஒயிலாக அடிமேல் அடிவைத்து வந்துகொண்ட டி ருந்ததை முத்தன் வயற் பரணிலிருந்து அவதானித்தான். நெருங் கிவந்துகொண்டிருந்த உருவம் ‘மரகதம்’ தானென்று முடிவுகட் டாதிருக்க அத்தனை குருடா என்ன அவன் கண்கள். இருந்தும் “போடியாரின் மகள் வயலுக்கெல்லாம் வருவதா? போடியார் இங்கெல்லாம் மகளை அனுப்புவாரா? ” என்றெல்லாம் அவன் சிந்தனை தொழிற்பட்டது. இருந்தாலும் தான் நினைத்திருந்த ‘மரகதம்’ தன்னிடம் வரும் சந்தர்ப்பத்தைக் கண்ட அவனுக்கு இதைப்பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து ஓடவில்லை. மரகதம் கிட்டி னாள். முத்தன் பாடுகின்றான்.
அவன்:- சின்னஇ டைமுறிந் தேவிழ – ஒன்றாய்ச்
சேர்ந்துமெல் பாதங்கள் பின்னிட
அன்னந டைஅழிந் தோடிட – உன்னை
ஆர்வரக் கூறின ரிவ்விதம்.
அவள்:- நெற்பயிர் இல்லாவெ ளிகளை – நட்டு
“நேர்மை செய்” என்றுமு ளைகளைக்
சற்றே குடுத்துவ ரச்சொன்னார் – எந்தன்
தந்தைஇங் கேஈதோ வைக்கிறேன்.
என்று வைத்துவிட்டுப் போக எத்தனித்த மரகதத்தைத் தன் ஆசையெல்லாங் கூட்டி “மரகதம்!” என்று பெயர்கொண்டே அழைத்துவிடுகின்றான். மரகதத்திற்குப் பருவம் சிவப்பு வர்ணம் பூசினாலும் அவள் அதை மறைத்துக்கொண்டே போலிக் கோபத்தை வரவழைத்து, “என் பெயரைக் கூற உங்க ளுக்கு எவ்வளவு துணிவும், உரிமையும்” என்று கேட்டுக்கொண்டே கடைக்கண்ணால் முத்தனைப் பார்த்துவிட்டு ஒரு அடி எடுத்து வைத் தாள். முத்தன் இதற்கஞ்சுகிறவனா என்ன. அவனும் அவள் பின்னால் ஒரு அடியெடுத்து வைத்து, ”மரகதம்! நான் கூறியது குற்ற மானால் இதோ என் பெயர் முத்தன்; ஆயிரந்தடவைகள் அழை” என்று கூறினான். முத்தனின் வாய்த்துடுக்கோடு போட்டிபோடக் கூடியவளா மரகதம். சமாதானத்திற்கறிகுறியாகக் கூனிக், குறுகி, நெழிந்து தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டே, “உங்களப்பா சிலவேளை……” என்று வாக்கியத்தை முடிக்குமுதல், “அப்பா இங் கில்லை. அவருக்கு உடம்பு குணமில்லை; இன்றேல் இந்த இடத்தில் நீ என்னைக் கண்டிருக்கமுடியுமா?” என்று சரமாரியாகப் பொழிந் தான் முத்தன். இவற்றைக் கேட்டுக்கொண்டே நகர ஆரம்பித்த மரகதத்தை நோக்கி முத்தன் பாடுகின்றான்.
அவன்:- கண்ணே! ம ரகதம் என்றுதான் – நாங்கள்
கணவன் மனைவியாய் ஆகுவோம்?
எண்ணஎண் ணஇனிப் பாகும் நாள் – நமக்
கென்றுதான் வந்திடும் சொல்லடி?
அவள்:- காதல்என் றாலேகடும் வேலி – போடும்
கயவர்மி ளிருமிந் நாட்டிலே
ஏதுமச் சான்விடிவே எமக் – கிங்கு
என்று விடுதலை காணலாம்.
அவன்.- காற்றில சையும்கரு மயிர் – கன்னம்
காட்டும் மெ துமையோடுன்னிதழ்
ஊற்றுஞ்சி வப்பையுங் கண்டபின் – என
துள்ளங்க டக்குமவ் வேலியை.
அவள்:- வீரமுறுக் குள்ள இவ்வுடல் – தன்னை
வேண்டித்த வக்கிடக் கும் உள்ளம்
சோருமோ எத்தடை காணினும் – என்னைத்
தூரஉ தறாது கொண்டிடில்.
அவன்:- முத்தரிசிப் பல்மு றுவலும் – உந்தன்
முந்தானை ஆடிடுங் காட்சியும்
எத்தனை துன்பம்வந் தாலுமே – அதற்
கீடு இணை யில்லைத் தங்கமே.
அவள்:- மச்சான்இ னிநேர மாகுது – என்னை
அப்பாஒ ருவேளை தேடுவார்
நிச்சயம் உங்களைச் சந்திக்க – என்றோ
நீங்கள்ஒ ழுங்குகள் செய்யவும்.
என்று கூறிவிட்டு நடந்து செல்கின்றாள். அவளையே சிறிது நேரம் மறையும் வரை இரசித்துக்கொண்டிருந்த முத்தனுக்குத் தான்தவறி வேளாண்மைப் பயிர்களை மிதித்துக் கொண்டு நின்ற தைக்கூட அறியமுயாமற் போய்விட்டது.
மரகதத்தின் அதிட்டமோ என்னவோ முத்தன் ஆசிரிய கலா சாலைப் புகுமுகப் பரீட்சையிற் றேறிவிட்டான். இரண்டு வருடங் கள் அவன் கல்விக்காகக் கழியவேண்டுமல்லவா ஆனால் முத்தன் – மரகதம் தொடர்பு என்றும் தூயதாகவே இருந்துகொண்டுவந்தது. நாளாக ஆக, ஆக இது போடியார் வீட்டிற்கும், ஏன் தாமோதர னுக்கும் கூடத் தெரியவந்தது. தாமோதரன் தனது பதினைந்து வருடகால சேவைக்கும் தன் மகன் பங்கம் விளைவித்துவிட்டானே என்று உள்ளமுடைந்து போடியார் வீட்டிற்குச் சென்றான். அன்று பின்னேரம்; இருவருக்குமிடையில் இதுபற்றிய நீண்டநேரச் சம் பாஷணையின் பேரில் போடியாருக்கும் இந்த விடயத்தில் விருப்ப முண்டு என்பது தாமோதரனுக்குத் தெரியவந்தது. தன் மகன் எண்ணமும் ஈடேறி இந்த நிகழ்ச்சியினால் தன் மரியாதையும், சேவையின் மகத்துவமும் காப்பாற்றப்பட்டதும் குறித்து அவன் உள்ளத்து ளெழுந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை.
கலாசாலைப் பயிற்சி முடிந்தது. முத்தனுக்கு மணம் உறுதியாக் கப்பட்டது. மணநாளிற்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன் முத்தன் மரகதத்திடம் ஒரு கயிற்றோடு வருகின்றான். தன் மச்சா னின் வரவை ஆவலோடு அனுபவிக்க இருந்த மரகதம் “இது என்ன மச்சான் கையில கயிறு,” என்றாள், அதற்கு முத்தன் பதில் பின்வருமாறு அமைந்திருந்தது.
அவன்;- ஆசைக்க னியே மரகதம் – அன்று
அப்பாஇ தற்கேஅ னுப்பினார்
நேசம னைவி எனக்கின்றே – இதால்
நீ கிடைத் தாய்அதற் காகவே.
அவள்:- இக்கயி றெந்தனில் வாழ்க்கையை – நன்கு
இன்புற ஏற்கஇ டந்தரா
தக்ககயி றுகொணர்ந்திடில் – தானே
தங்கள்ம ரகத மாகுவேன்.
உடனே கன்னத்தைக் கிள்ளிக் குறும்பைத் தெரிவிக்கின்றான் முத்தன். மரகதம், “மச்சான், உங்களப்பா ஏதும் என்னைப்பற்றிக் கூறினாரா ? ” என்றாள்.
“உன்னைப்பற்றிக் கூற என்ன குறை இருக்கின்றது மரகதம்; அதனால் அவர் ஒன்றுமே கூறவில்லை! என்றான் முத்தன். ‘கேலி வேண்டாம்; சொல்லுங்கள்’
“இல்லை; இல்லை; இல்லை போதுமா?” என்றான்.
“இல்ல மச்சான் என்னில் ஒரு குறை இருக்கின்றது. “
“அழகிலென்றாகூறுகிறாய்? எந்தக் குருடனும் கூறமாட்டானேமரகதம்.”
“அழகிலல்ல. வளர்ப்பில்.”
“எங்கள் மானாகப் போடியாரின் வளர்ப்பிலா ? இல்லவே இல்லை. குறும்பாகப் பேசுகிறாயா கண்ணே”
“இல்ல மச்சான். நான் போடியார் மகளல்ல; வளர்ப்பு மகளாம் நேற்றுத்தானறிந்தேன்.
“அப்படியா மரகதம். என் பாக்கியமே பாக்கியம், என்னைப் போன்ற ஏழையை உணரமுடிந்த நீயும் ஒரு ஏழை என்பதில் எனக்கு எத்தனை சந்தோஷம் தெரியுமா? அதுவும் நீ என் மனைவி யாக வரப்போகின்றாயல்லவா.”
“உண்மையாவா மச்சான்?”
”உண்மையாக. ஆனால் ஒன்று நீ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
“என்ன மச்சான்?”
‘உன்னை இத்தனை காலமும் வளர்த்துக் காத்த தகப்பன் போடியாரல்லவா ?”
“ஓம்”
”அப்போ நீ என்றும் போடியார் மகள்தான். சரியா?”
“ஓம் மச்சான்.”
முத்தன் – மரகதம் அணைந்தனர் – வாழ்க்கையிலும் இணைந்தனர்.
(யாவும் கற்பனை)
– இளங்கதிர், 1960-1961, பதிமூன்றாவது ஆண்டு மலர், தமிழ்ச் சங்கம், இலங்கை பல்கலைக்கழகம், பேராதனை.
தொடர்புள்ள சிறுகதைகள்
புது வாழ்வு
இரா.துரைமாணிக்கம்
October 15, 2026
சொல்லாத முடிவுகள்!
கல்பனா ராஜகோபால்
October 15, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 15, 2026