நெஞ்சில் நஞ்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2026
பார்வையிட்டோர்: 7 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீலத்திரைக் கடல் உறுமி ஆர்ப்பாட்டம் புரிந்துகொண்டிருந்தது. அந்த அழகை ரசித்தபடியே பருத்தித்துறைக் கடற்கரை மணற் பரப்பில் உட்கார்ந்திருந்தேன். ஒளி மங்கிக்கொண்டிருந்தது. ஆனால் இன்னும் என் இதயங் கவர்ந்தவள் என்னைச் சந்திக்க வர வில்லை,

சொன்ன சொல் தவறமாட்டாதவள் தான் அவள். ஆனால் தன்னை அலங்கரித்துக்கொண்டு அழகாக நடந்துவர அவளுக்கு ஒரு மணித்தியாலம் வேண்டாமா? 

காதற் போராட்டத்தோடு கையிலே உறுத்தும் கடிகாரத் தைப் பார்த்துப் பூத்துபோய்விட்ட என் கண்களுக்கு இரு உருவங் கள் விருந்தளித்தன. 

அந்த உருவங்கள்- 

இரண்டு குழந்தைகள்; ஒன்று ஆண். மற்றது பெண். இருவ ருக்கும் சுமார் ஆறு ஏழு வயது இருக்கலாம். 

இந்தக் குழந்தைகள் ஏன் என் கருத்தைக் கவர்ந்தார்கள்? அதைத்தான் பேனா அழுது தொலைக்கின்றது. 


அழகை அள்ளிவீசும் பருத்தித்துறைக் கடற்கரையிலே எத்த னையோ உருவங்கள் அங்கும் இங்கும் காட்சியளித்தன. ஒரு கரை யிலே காதல் கனிந்த கல்லூரி மாணவ மாணவியர். தங்கள் தங் கள் கல்லூரி ‘வார்டனு’க்குச் சாக்குப் போக்குச் சொல்லிவிட்டு வந்த வரலாற்றைத் தமக்குள் சொல்லிச்சிரிக்கும் ஒலி காற்றிலே மிதக்கின்றது. மறுகரையில் காரியாலயங்களில் வேலை செய்த சோர்வை அரிவையரை ரசிப்பதன்மூலம் போக்கிக்கொள்ளும் ஒண்டிக்கட்டைகள்; இப்படி எத்தனை எத்தனையோ ரகங்கள். இந் தப் புராண காதையைக் கேட்கவேண்டுமென்றால் அஞ்சல் அலுவ லகத்தினில் வேலை பார்க்கும் போஸ்ட்மாஸ்டர் கந்தப்பரைக் கேட் டுப்பார்த்தால் தெரியும். இதற்குக் காரணம் அவர் முற்றும் துறந்த முனிவராக மாறியது தானோ என்னவோ? 

ஆனால் எனக்கு ஏன் இந்த வீண் வம்பு ? அந்தச் சிறு உருவங் கள் என் எண்ணத்தைத் தம்மேல் திருப்பிவிட்டுவிட்டார்கள். அவர்கள் மேடும் பள்ளமும்! 

இல்லை – வானமும் மண்ணும். 

அதோ கந்தல் துணியொன்றால் கோவணம் கட்டிக்கொண்டு நிற்கின்றானே ஒரு கறுவல். அவன் தான் இடும்பன். தன் கரிய உரு வத்திலும் அழகு இருக்கிறதென்பதை அவன் கன்னங்குழியச் சிரிப் பதன்மூலம் உணர்த்திக்கொண்டிருந்தான் 

அவனுக்குப் பக்கத்திலே பட்டுப் பாவாடை காற்றில் சலசலக் கச் செல்வச் செழிப்பில் வளர்ந்திருக்கும் அவள் அவள் தான் அஜந்தா நின்றுகொண்டிருந்தாள். அவளுக்கு இடும்பனைப் பார்ப்ப தில் ஏதோ இனம் தெரியாத விருப்பம் இருந்தது. 

“டேய் உனக்கு என்னடா பெயர்?” அஜந்தா பயத்தை விரட்டிவிட்டுத் துணிச்சலுடன் கேட்டாள். அவளின் சுழலும் கண் களின் அழகு இடும்பனுக்கு புது உற்சாகத்தைக் கொடுத்தது. 

“எனக்குப் பேர்…” அவனுக்கு உடனே தன் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. தலையைச் சொறிந்து கொண்டான் அவனை எல்லோரும் அவனுடைய பூட்டனின் பெயரால் தான் அழைப்பது வழக்கம். காரணம் அவன் தன்னுடைய பூட்டனை அப்படியே உரித்து வைத்துக் கொண்டு பிறந்திருக்கின்றானாம். அது அவனுடைய ஞாபகத்தினில் திடீரென்று வந்தது. உடனே “என்ரை பெயர் கிளியன் என்று சொல்லிவிட்டு அவன் சிரித்தான். 

அஜந்தாவும் கூடவே சிரித்தாள்! அவனுடைய பெயர் அநா கரிகம் என்று கூறி அவள் முகத்தைச் சுளிக்கவில்லை. 

தன் கையிலே கிடந்த “சொக்கிலெட்டு’க்களை அவனிடம் நீட்டிவிட்டு அவனைப் பரிவோடு அஜந்தா பார்த்துக்கொண்டிருந் தாள். அவளுக்கு நாம் பாரியின் தோன்றல்கள் என்று வரட்டுக் கௌரவம் கொள்ளத் தெரியவில்லை. ஆனால் அதைத் தெரிந்து கொள்ளாமலே பிறரை ஆதரிக்கும் அந்தப் பண்பு அவளிடம் இருந்தது. 

இடும்பனுக்கோ இனிமேல் “சொக்கிலெட்” கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஏக்கம். ஒரே ஒரு முறை அவனுடைய தாய் செல்லி அவனுக்கு வல்லிபுரக் கோயிலில் வாங்கிக் கொடுத்த சொக்கிலெட்டைத் தவிர அவன் மறுபடியும் தின்று சுவைத்தது கிடையாது! கடைசியாக இருந்ததை இடும்பன் அஜந்தாவின் வாயருகே கொண்டுபோனான். அவள் தன் குமுதமலர் வாயை அகல விரித்து அதைப் பற்றிக் கொண்டு கை கொட்டிச் சிரித்தாள். அந்த இரு ஜீவனதும் கபடமற்ற சிரிப்பு அலைகளுடன் கூடிச் சுருதி கூட்டியது. 


மெல்ல மெல்ல இருள் எங்கும் ஆதிக்கம் செலுத்தத் தொடங் கியது. அந்த இரு இளம் சிறார்களும் தம்மை மறந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய விளையாட்டின்போது ஊட லும் கூடலுமாய்த் தோன்றின. 

அந்தக் குழந்தை உலக வாழ்வு என் மனத்தைக் கவ்வத் தொடங்கியது. நான் குழந்தையாகவே என்றும் இருக்கவேண்டும்; மறுபடியும் குழந்தைப் பருவத்து மலர்ச்சியை அனுபவிக்கவேண் டும் என்ற ஆசை என்னை அரித்தது, குழந்தை உலக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த என்னை மட்டுமல்ல இடும்பனையும் அஜந் தாவையுமே திடுக்கிட வைத்தது ஓர் குரல். 

‘மூதேவி; களிசறை; உன்னை எங்கேயெல்லாம் தேடுவது? கரையானோடை உனக்கென்னடி விளையாட்டு ?”- ஆங்கில நாகரிக மயமாகத் தோற்றத்திற் காட்சியளித்த நடுத்தர வயது ஆசாமி உறுமினார். ஆனால் உள்ளத்தால் மட்டும் அந்தக் கனவான் நாகரிகம் அடைந்துவிடவில்லை. 

“போங்கப்பா. எங்கடை வீட்டு ஜிம்மியுடன் விளையாடுவதி லும் பார்க்கக் கிளியனுடன் விளையாடுறதுதான் எனக்கு ரொம்ப வும் பிடிச்சிருக்கு. 

“சீ அதிகப் பிரசங்கி. இவன் கரையான்; சாதி குறைவு; இவ னோடை சமமாக விளையாடலாமா?” 

“சாதி என்றால் என்னப்பா? நாங்களென்ன கூட?” 

“உனக்கு ஒன்றுமே விளங்காது. இன்னும் ஐந்தாறு வயது போன பின் எல்லாம் தானாக விளங்கும். பேசாமல் வரப்போறாயா? அல்லது முதுகிலை இரண்டு வேணுமோ?” 

தனது தந்தையின் முகத்தை ஏறிட்டு நோக்கிய வண்ணம் பயந்துபோய்த் தந்தையைப் பின் தொடர்ந்தாள் அஜந்தா. ஆனால் அவள் மறையும் வரை இடும்பனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். 


இந்தக் காட்சி என் உள்ளத்தை உலுக்கிவிட்டது. “இன்னும் ஐந்தாறு வயது போனபின் எல்லாம் தானாக விளங்கும்” என்ற மூர்க்கக் குரல் எனக்கு நஞ்சாகத் தோன்றியது. 

சாதி வேறுபாடு இன்றி வெள்ளை மனத்துடன் பழகும் அஜந்தா-நாளடைவில் சாதி வேற்றுமை எண்ணத்தை அடைந்து விடுவாள். அவள் நெஞ்சில் நஞ்சு வேரோடிவிடும். அப்பொழுது அவள் இடும்பனை விரும்புவாளா? கேள்விக் குறி என் மனக்கண் முன்னே விஸ்வரூபமாக நின்றது. 

இவ்வாறு சிந்தனை முகத்தில் தன் அடையாள முத்திரையைப் பதிக்கவே நான் அந்தத் துர் ஆத்மாவைத் திரும்பி நோக்கினேன். அத்தத்துர் ஆத்மா- 

அவளின் கால் அடிச் சுவட்டுக்களை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தது. 

“ஏண்டா பயலே நிக்கிறாய்” தோளிலே வலையை இழுத்துப் போட்டுக்கொண்டு அவன் தகப்பன் நாகன் அவனை நோக்கி முன்னேறினான். 

“இல்லையப்பா….வந்து…நாமா நாயா உசத்தி?” ஆவல் இடும்பனின் குரலில் நிறைந்திருந்தது. 

“ஓ துரைக்கு நாயையும் பூனையையும் பற்றியோ ஆராய்ச்சி ? நான் வலை வீசி மாயுறன் 

“அதுக்கில்லை… நாங்க… சாதி குறைவாம்… ஏன் அப்படி?” “ஓகோ நீ கவர்ணர் துரையாகப் போறியோ ? கால் வயிற்றுக்கே கஞ்சிக்கு வழியில்லை; சாதியாம் சாதி” வலைவீசி உரத்துப் போய் விட்ட நாகனின் கை இடும்பனின் பிஞ்சு முதுகைப் பதம் பார்த்தது. 

இடும்பன் வீல் என்று கத்திக்கொண்டே ஓட்டம் எடுக்கவில்லை. சந்தையில் கழிவு மீன் சதைகளை உட்கொள்ளப் போட்டியிட்டுக் கடிவாங்கி; வழியும் இரத்தத்துடன் வந்து கொண்டிருந்த சொறி பிடித்த நாயை அவன் வைத்த விழிவாங்காமல் ஏறிட்டுப் பார்த்தான். 

சொறிநாயும் அவனை ஏறிட்டுப்பார்த்தது. 

இருவர் பார்வையிலும் ஏக்கம். இடும்பன் முதுகைத் தடவிக் கொண்டே மீண்டும் அந்த நாயைப் பார்த்தான். அவனை அறியா மலே அவன் உதடுகள் படபடத்தன. 

“எங்கப்பரும் பேசுறார், நாயிலும் பார்க்க நான் குறைவு; அப்படியென்றால் நான் நாயாகப் பிறந்திருக்கக் கூடாதோ? வல் லிபுரக் கோயிலானே அடுத்தமுறை என்னை நாயாக்கிப்போடு.”

(யாவும் கற்பனை) 

– இளங்கதிர், 1960-1961, பதிமூன்றாவது ஆண்டு மலர், தமிழ்ச் சங்கம், இலங்கை பல்கலைக்கழகம், பேராதனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *