கவலை ஈன்ற கவலை
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 97
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆசை அருமையாகப் பெற்று வளர்த்த ஒரே மகன் இறந்த திடீரென ஐந்து வயதில் இறந்துவிட்டான். இழப்பைத் தாங்க முடியாத துயரினால் படுத்த படுக்கையான நாகம்மாள் எலும்புந் தோலுமாகி அதன் பின் எழுந்திருக்கவே இல்லை. வழமைபோல் இந்த இரவும் 2 மணியானபின் தான் உறக்கத்தில் கலந்துள்ளாள்.
தம்பித்துரைக்கு இன்னும் தூக்கம் வந்தபாடில்லை. மகனின் பிஞ்சுமுகம்! கலகலசிரிப்பு! அவன் தாமரைக் கைத்தழுவலில் ஏற்படும் மேனிச்சிலிர்ப்பு! – பழைய ஞாபகங்கள் மனதில் கடைவிரிக்க அவன் பெருமூச்சோடு எழுந்து வெளியே வந்தான். அந்த வாடகை வீட்டின் மறு பாகத்தில் குடியிருக் கும் நண்பன் மணியை அழைத்தான்.
கதவைத் திறந்து கொண்டு “என்ன? தம்பித்துரையா? இன்னும் தூங்கவில்லையா?” என்று தூக்கக் குழப்பத்தோடு வெளியில் வந்தான் மணி!
”இல்லையடா! இப்படி எத்தனை இரவுகள்!” என்ற தம்பித்துரையை இடைமறித்து, “உனக்கு ரொம்ப இளகிய மனசப்பா! ஏன்டா! இன்னொரு பிள்ளையைப் பெற்றால் எல்லாம் சரியாகி விடுமே” என்றான் மணி!
”அதற்கு மனைவி லாயக்கில்லையடா! பிள்ளை இறந்த துயரால் அவனைப் பரிகரிக்கத் தவறிவிட்டேன்! அதனால் அவளும் இறவாத பிணமாகிவிட்டாள்!” என்று தம்பித்துரை நெடுமூச்செறிந்தான்.
”நீ குடிக்கப் பழகென்றாலும் கேட்கிறாயில்லை! சரி தூக்கம் தேவையானால் என்னோடு வா!” என்ற மணி முன்னே நடந்தான். நள்ளிரவின் அரையிருளில், மணியின் கையிலிருந்து பத்து ரூபா நோட்டொன்று தெருவோரத்து ஒரு வீட்டின் கதவுளிருந்து வெளியே நீண்ட ஒரு மென்தளிர்க் கரத்துக்கு மாற தம்பித்துரை உள்ளே கரம் பற்றி இழுக்கப்பட்டான். மணி வந்த வழியில் திரும்பி நடந்தான்.
சில நிமிடங்களில், சோர்ந்து தொங்கும் தலையோடு தம்பித்துரை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த பொழுது…… ”உங்கள் அவசரத்தால் நான் ஆபத்தில் மாட்டிக்கொண்டேன்” என்ற பெண்குரல் அவமதிப்பு! அதன் அர்த்தம்?
அந்த இரகசிய விலைமாது இருநூற்றெண்பது நாட்க ளில் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக நேர்ந்துவிட்ட து. இறந்த பிள்ளைக்காக அழுத தம்பித்துரை பிறந்த பிள்ளைக்காகவும் அழநேர்ந்து விட்டதே! ஆமாம் அவன் இரத்தத்தில் பிறந்த மகள் அவனது பாசத்துக்குரிய குழந்தை ஒரு வேசி மகள்.
அந்தச் செல்லக் குழந்தை உலகத்தால் வேசி மகள் என்று இகழப்பட்டு ஒதுக்கப்பட்டு இதயம் புண்பட்டு நாளை அவளும் வேசியாகி……
தம்பித் துரை நடந்ததை எண்ணி மிகவும் கவலைப்பட்டதன் பலனாகப் புதிய கவலையும் சேர்ந்து கொண்டு விட்டது.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
மிகச்சிறிய மிருகங்கள்
நீ.பி.அருளானந்தம்
October 12, 2026
நவீன நல்லதங்காள்
இரா.கலைச்செல்வி
October 12, 2026
ஸ்க்ரைப்
ஜூனியர் தேஜ்
October 12, 2026