கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 7, 2026
பார்வையிட்டோர்: 65 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூன்றாம் பரிசுபெற்ற கதை. 

விரிவுரை முடிந்தவுடன் ஒரு கையில் புத்தகங்களுடனும் சேலைத் தலைப்பை மற்றக் கையால் முறுக்கிக்கெண்டும் ஒய்யார மாக விடுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தாள் வாசுகி. அலங் காரமாகப் புடையன் பாம்புபோல் பின்னிவிட்டிருந்த ஒற்றைப் பின்னலும், உடலுடனேயே ஒட்டிக் கொண்டிருந்த பட்டுச் சேலை யும், அதற்குத் தகுந்தாற்போல் அணிந்திருந்த சட்டையும் அவள் நடைக்கு மெருகேற்றின. ‘பாடம் படித்து முடித்துவிட்ட இரு விழிகள், அம் மானின் நடையைத் தூரத்திலேயே நின்று பார்த் துக் கொண்டிருந்தன. ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்த அவ் விழிகள் அவளை அப்படியே விழுங்கி விடுவன போன்று நோக் கின. ஒய்யார நடை மறைந்தது. பெரு மூச்சு விட்டபடியே இரு விழிகளையும் வேறு பக்கம் திருப்பிக்கெண்டு நடந்தான் சேகர். 

சேகர் நடந்துகொண்டே யிருந்தான். அவன் மனம் கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவத்தையே நினைந்து கொண்டிருந்தது…. 

அன்றுதான் சேகருக்கு விரிவுரை வகுப்பு முதன்முதல் ஆரம்ப மாக விருந்தது. விரிவுரை வகுப்புக்குள் நுழைந்த சேகரின் கண்கள் நெருப்பைத் தொட்ட கை விரல்கள் போன்று திகைப் படைந்தன. உருக்கி வார்த்த பொற்பாவை போல் அமர்ந்திருந் தாள் வாசுசி. சக மாணவிகளே கண்டு பொறாமைப்படத் தக்க அழகுச் சிலையாக உட்கார்ந், திருந்தாள் அவள். பெண்களே அவள் அழகைப் பருகும்போது, சேகர் இதற்கு விதி விலக்கல்லவே. ஏதோ புத்தகத்தைப் பார்ப்பன போன்றிருந்த வாசுகியின் விழிகள் சேகர் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் அவனை நோக்கின. இரு கூரிய அம்புகள் தன்மேல் பாய்வதுபோன்ற உணர்ச்சியடைந்தான் சேகர், வாசுகி பார்த்த பார்வையோ சாதாரணமாக வகுப்புக் குள் நுழைபவரைப் பார்ப்பது போல்தான் இருந்தது. ஆனால், சேகரோ அவளைக் கண்டவுடன் அன்று தொடக்கம் அவள்மேல் ஒருவித விருப்பங்கொண்டான். உள்ளத்திலுள்ள விருப்பத்தை அவளிடம் அப்படியே கூறிவிடுவோமாவெனப் பலநாள் அவன் எண்ணினான். ஆனால், அவனிடம் அவ்வளவு தைரியம் இருக்க வில்லை. எவ்வளவு நாட்கள்தான் இங்ஙனம் பொறுத்திருப்பான் சேகர்? அன்று அவன் துணிந்துவிட்டான். விரிவுரை வகுப்புக்குள் புகுந்தவுடன் வாசுகி பக்கலில் ஓர் ஆசனமிருப்பதை அவன் கண்டுவிட்டு உடனே அவ்வாசனத்தில் போய் அமர்ந்துகொண் டான். உட்காருவதற்குத் துணிவுபெற்ற சேகருக்கு அவளுடன் எங்ஙனம் பேச்சை ஆரம்பிப்பதென்பது இன்னுமொரு பிரச்சினை யாயிற்று. வாசுகி என்பது அவளுடைய பெயர் என்பதை வேறு யாரிடமோ அவன் கேட்டறிந்தவனாகிலும், அவள் பெயர் தெரி யாதவன் போன்று பேச்சை ஆரம்பிப்பதற்காக, 

“தங்களுடைய பெயர் என்னவோ?” என்று மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டான் சேகர். ஆண்கள் பக்கத்தில் இருந்தறியாத வாசுகி, சேகர் இங்ஙனம் திடீரெனக் கேட்ட கேள்வியைக் கேட்ட வுடன் திடுக்கிட்டாள். எனினும் தன்னைச் சமாளித்துக்கொண்டு, 

”வாசுகி’ என்று கூறிவிட்டுத் தலையைக் கவிழ்த்துக்கொண் டாள். விரிவுரையாளர் வந்து விரிவுரையாற்றத் தொடங்கிவிட் விரிவுரையைக் கூர்ந்து கவனிப்பவள் போலிருந்தாள் வாசுகி. அப்போது சேகர், 

“உங்களுடைய ஊர் எது?” என்று மற்றக் கேள்வியைப் போட்டான். விரிவுரைக்கிடையில் கதைப்பதை விரும்பாதவள் போன்று, 

“தயவுசெய்து உங்கள் கதையைக் கொஞ்சம் நிறுத்துவீர் களா?” என்று சற்றுச்சினத்துடனேயே கேட்டுவிட்டாள் வாசுகி. இதைக் கேட்ட சேகருக்கு ஆயிரந் தேள்கள் சேர்ந்து கொட்டியது போன்ற உணர்ச்சி உண்டாகியது. அவன் தன் மனத்துள், 

‘சே, இவள் ஒரு பெண்ணா! இவ்வளவு காலமும் கதைக்கச் சந்தர்ப்பங் கிடைக்கவில்லையென்று ஏங்கியிருந்த எனக்கு இன்று கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கதைக்கலா மென்றால் அப்படியே முகத்திலே கரியைப் பூசிவிட்டாளே. மற் றய மாணவ மாணவிகள் இதைக் கவனித்திருந்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்” என்று நினைந்து வருந்தினான். அவன் மனம் விரிவுரையிலுஞ் செல்லவில்லை; முகம் வாசுகி பக்கம் திரும்பவு மில்லை. ஆனால், வாசுகிமேல் வைத்த அன்பையும் அவனால் மாற்ற முடியாதிருந்தது. 

விரிவுரை முடிந்ததும் முடியாததுமாக வாசுகி ‘விடுக்’ கென எழுந்து முன் கதவு வழியாகப் போவதற்குச் சென்று கொண்டிருந் தாள். 

“நடந்த விடயத்தை வேறு யாரிடமும் கூறி விடுவாளோ” என்ற பயத்துடன் சேகர் எழும்பி அவள் சென்ற வழியாகவே சென்று வாயிலில் நின்று பார்த்துக்கொண் டிருந்தான். அவள் விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். 

அன்று நடந்த சம்பவத்தை நினைந்து கொண்டே நடந்த சேகர் தற்செயலாக, 

“சேகர்” என்று அவன் நண்பன் சோமு கூப்பிட்ட குரலில் பழைய நிலைக்கு வந்துவிட்டான். சோமு சேகரின் உற்ற நண் பன். எதுவித இரகசியத்தையும் அவன் சோமுவிடம் கூறாது இருந்ததில்லை. ஆனால், கடந்தவாரம் தனக்கு நேர்ந்த அவமா னத்தைப்பற்றிய விடையத்தைப் பற்றிச் சோமுவிடங் கூறவில்லை. ஆனால். இப்பொழுது அதை அவனிடம் கூறினால்தான் மனத்துக்கு ஆறுதல் கிடைக்குமென நினைந்த சேகர் கடந்த வாரம் விரிவுரை வகுப்பில் நடந்த வரலாற்றை எடுத்துக் கூறினான். அவன் கூறிய வற்றைக் கேட்ட சோமு, 

“பெண்களே இப்படித்தானப்பா, ஒன்றையும் யோசியா மல் எதையுங் கூறிவிடுவார்கள். என்று பெண்கள் தாங்களும் சற்றுப் படித்தவர்கள் என்று உணர்கிறார்களோ, அன்று தொடக்கம், தாங்கள் ஆண்களைவிட ஒன்றிலும் குறைந்த வர்களல்லவென நினைத்து ஒருவித மரியாதையுமின்றிக் கதைக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த ரகத்தைச் சேர்ந்த வளாய்த்தான் இருப்பாள் வாசுகியும். ஆனால், முதலில் எதையும் யோசியாமல் ஒருவர் மனதைப் புண்படுத்திவிட்டுப் பின்பு வருந்துகிற பண்பும் அவர்களிடம் இல்லாமலில்லை” என்று பெண்களைப்பற்றி ஒருசிறிய விரிவுரையாற்றிவிட்டான்.

“சோமு, நான் என்னடா செய்வது? எனக்கோ அவள்மேல் அதிக விருப்பம்; ஆனால், அவளோ இதை உணர்கிறாளில்லை. இதற்கு என்னடா செய்வது?” என்று கேட்டான் சேகர். 

சேகரின் நிலையை நன்குணர்ந்த சோமு அவனுக்காகத் துக்கப் பட்டான். அவனுக்கு எப்படியாவது ஒரு யோசனை கூறவேண்டு மென நினைத்த சோமு திடீரென, 

“அடே சேகர், எனக்கொரு யோசனை தோன்றுகிறது. நாளை எங்கள் விடுதியில் ‘டின்னர்’ நடக்கப்போவது உனக்குத் தெரியுமல்லவா. நாளைக் காலை வாசுகியைத் தனியாகச் சந் தித்து எங்கள் விடுதி ‘டின்னர்’ அழைப்பிதழ் ஒன்றைக் கொடுத்துப்பார். அன்று விரிவுரை கேட்கும் ஆர்வத்தில் நீ கேட்ட கேள்விக்குப் பதில் கூறாது சினந்தாள். இன்று சில வேளை அவள் இணங்கக் கூடும். எதற்கும் இதனால் அவளுடைய மனதைச் சோதித்துப் பார்த்துவிடலாமல்லவா?” என்று கூறினான். 

சோமுவின் யோசனை சரிதான் என்று ஏற்றுக்கொண்டாலும், சற்றுத் தயங்கியபடியே சேகர், 

“சோமு, அவள் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வாளா? அல்லது அன்றுபோல் எரிந்து விழுகின்றாளோ” என்றான். “அதற்கொன்றும் நீ பயப்படாதே, அழைத்துப்பார், அவள் இணங்காவிடில் விட்டுவிடு” என்றான். நேரமாகிவிட்டதை உணர்ந்த நண்பர்கள் தங்கள் விடுதியை நோக்கிச் சென்றார்கள். 

அன்று சனிக்கிழமை, சேகருக்கு விரிவுரைவகுப்பு ஒன்றுமில்லை. ஆனால்,வாசுகிக்கு அன்று விரிவுரை வகுப்பிருப்பது சேகருக்குத் தெரியுமாகையால் காலை எட்டரை மணிக்கே விடுதியைவிட்டுக் கிளம்பினான். ஒன்பது மணிக்கு விரிவுரை முடிந்ததும் வாசுகி தனது சக மாணவிகளுடன் சிரித்துக் கதைத்துக்கொண்டு வந்தாள். அப்போது சேகர் அவளிடம் நேராகச் சென்று, 

“மன்னிக்கவும். உங்களிடம் பேசலாமா?” என்று கேட்டான் ஏதோ தோழிகளிடம் முணுமுணுத்த வாசுகி சற்றுத் தயக்கத்துடன் சேகரிடம் போனாள். சேகர் தான் கதைப்பது அவ களுடைய தோழிகட்குக் கேளாமல் சற்றுத் தூரத்தில் போய் நின் I GOT. சேகரிடம் போன வாசுகி, 

“என்னுடன் என்ன கதைக்கவேண்டும்” என்றாள்.

சேகர் மனத்தில் துணிவை வரவழைத்துக் கொண்டு, 

“தயவு செய்து, இன்று எங்கள் விடுதியில் நடக்கப்போ கும் ‘டினருக்கு’ வருவீர்களா?” என்று கேட்டான். இதைக் கேட்ட வாசுகியின் முகம் மாறியதை சேகர் மாத்திரமல்ல அவளுடைய தோழிகளும் கவனிக்காமலில்லை. 

‘என்னால் வரமுடியாது’ என்று அப்படியே கூறிவிட்டுத் தன் தோழிகளிடம் வந்தாள். நடந்த சம்பாஷணையை யூகித்து அறிந்து கொண்ட தோழிகள் ‘களுக்’ கென்று சிரித்தார்கள். இவர்களுடைய சிரிப்பு சேகரை ஏளனஞ் செய்வதுபோன்றிருந்தது. இப்படி வாசுகி பெண்களிடையே வைத்து அவமானப் படுத்துவாளென நினைத்திராத சேகர், முகத்திலே துக்கந் தோயத் தலையைக் குனிந்த வண்ணம், தன் கால் போன திசைக்கு நடந்து கொண்டிருந்தான். 

சேகரின் அழைப்புக்கிணங்க மறுத்த வாசுகி தோழிகளுடன் விடுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தாள். அவள் தோழிகள் சேகரைப்பற்றிக் கிண்டல் வார்த்தைகளால் கேலிசெய்தபடியே வந்தனர்.ஆனால், வாசுகிக்கோ மனதில் ஒருவித ஆறுதலில்லாம லிருந்தது. 

அவள் தன் மனத்துள், “என்னால் தானே சேகரை, என் னுடைய தோழிகள் கிண்டல் பண்ணிக் கேலியாகக் கதைக்க வேண்டி நேரிட்டது. அன்றும் விரிவுரை வகுப்பில் என் னுடன் கதைக்கமுயன்ற சேகருக்குச் சுடச்சுடப் பதில் கொடுத் தேனே. இன்று நான் ‘டின்னருக்குப் போகாவிடில் ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லியிருக்கலாமே. அதைவிட்டு அவரை அவமானப் படுத்துவது போல் ஒரேயடியாக வரமாட் டேன் என்று கூறிவிட்டேனே” என்று சிந்தித்தாள். 

சேகரில் ஏதோ பரிதாபம் பிறந்தது வாசுகிக்கு. அப் பரிதா பம் சேகரிடம் மன்னிப்புக் கேட்பதுடன் நின்றுவிடாமல் அதன் பின்பும் அவனிடம் அன்பு வைக்கக்கூடிய நிலைமை ஏற்படுத்தியது. 

தன்னால் ஏற்பட்ட அவமானத்திற்காகச் சேகரிடம் எப்படியா வது மன்னிப்புக் கேட்கத் துடித்தாள் வாசுகி. சேகருடன் நேரே கதைப்பதற்கு நாணினாள். ஆனால் அவனுடன் நேரே கதைப்பதற் குச் சந்தர்ப்பங் கிடைத்தபோதெல்லாம் தன்னுடைய நாணத்தை யும் விட்டுக் கதைக்க முயன்றாள். சேகரோ அவளை நேரே பார்த்தா லும் பெண்களுக்கு மத்தியில் வைத்து அவமானப்படுத்திவிடு வாளோ என்ற எண்ணத்தில் தலையைக் கவிழ்த்துக்கொண்டு சென்றுவிடுவான். முன்பு வாசுகியைக் கண்டால் தானாகவே ஒருசிறு புன்னகை புரிபவன் இப்போது அவளை நிமிர்ந்துகூடப் பார்க்காது சென்றதால் வாசுகியின் முயற்சிகள் யாவும் வீணாயின. வாசுகியும் சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்த வண்ணமாகவே இருந்தாள். 

அன்று விவாதமொன்று நடைபெறவிருந்தது. இவ்விவாதத் தில் பங்குபற்றுபவர்களில் சேகரும் ஒருவன். ‘வரதராசன் ஒரு சிறந்த நாவலாசிரியன்’ என்பதுபற்றி ஆதரித்துப் பேசுபவர்களில் ஒருவனாயிருந்தான் சேகர். ஒருசிலர் பேசியபின்பு சேகருடைய முறை வந்தது. வரதராசன் ஒரு சிறந்த நாவலாசிரியன் என நிரூ பிக்கப் பல உதாரணங்களையுங் கூறிக் கவர்ச்சியுள்ள முறையில் இனிமையாகப் பேசினான். அவனுடைய பேச்சை அவனுடைய பேச்சை எல்லோரும் பாராட்டினர், விவாதம் முடிந்தவுடனேயே வாசுகி எல்லோருக்கும் முதல் எழும்பிச் சென்று அவனைப் பாராட்டுமுகமாக, 

“உங்களுடைய பேச்சு இனிமையாயிருந்ததே ‘ ” என்று கூறி விட்டு நின்றாள். வாசுகியைக் கண்ட சேகர் திடுக்கிட்டான்; அத்து டன் அவள் கூறியவற்றைக் கேட்டு ஆச்சரியப்பட்டான். ஆனால், ‘நன்றி’ என்ற வார்த்தையை மாத்திரங் கூறிவிட்டு வெளி சென்றான் சேகர். இந்தச் சந்தர்ப்பத்திலும் தனது கருத்தைத் தெரிவிக்க முடியவில்லையே எனத் துக்கப்பட்டாள் வாசுகி. ளுக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே விடுதிக்கு விரைந்து சென்றாள். அங்கு சேகரிடம் சேர்ப்பிப்பதற்கென ஒரு கடிதம் வரைந்தாள். 

அன்புள்ள சேகருக்கு, 

நான் தங்களுடைய மனம் நோவதற்குக் காரணமாயிருந்த தற்கு உங்களிடம் முதலிலேயே மன்னிப்புக் கோருகின்றேன். 

அன்று நீங்கள் என்னுடைய தோழிகளிடையே வைத்து உங்களுடைய விடுதி ‘டின்னருக்’கு அழைத்தபோது “நான் வர மாட்டேன்” என்று அப்படியே திடீரென்று கூறிவிட்டு என் தோழிகளுடன் சென்றது தவறு என்பதை உணர்ந்துவிட்டேன். அன்று நீங்கள் விரிவுரை வகுப்பில் கதைக்க முயற்சித்த போதும் உங்களுடைய மனத்தை வருத்தக் கூடிய முறையில் நடந்து கொண்டேன் என்று இப்பொழுதுதான் நான் உணருகிறேன். நீங்கள் என்னுடன் கதைக்க முயன்றதையும், உங்களுடைய மனத்திலுள்ள கருத்தையும் இப்பொழுதுதான் நான் உணரமுடி கின்றது. நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகின்றேன். அப்படி நீங்கள் மன்னிப்பீர்களானால் என்னை இன்று மாலைநேரம் பூந்தோட்டத்தில் சந்தியுங்கள். 

திரும்பவும், நான் உங்கள் மனதைப் புண்படுத்தியதற்கு மன்னிப்புக் கோருகின்றேன். 

இங்ஙனம் – அன்புள்ள 
வாசுகி. 

கடிதத்தை அவசர அவசரமாக எழுதிய வாசுகி நூல் நிலையத் தில் சேகரைச் சந்திக்கலாமென நினைந்து விரைவாக வந்தாள். அவளும் நூல் நிலையத்தை நெருங்க “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது’ போல் சேகரும் அப்போதுதான் நூல் நிலையத் துக்குள் புகுந்துகொண்டிருந்தான். சேகரை நேரே கண்டு கடிதத்தைக் கொடுக்க வெட்கப்பட்டாள் வாசுகி. புத்தகங்களை வெளியே யுள்ள மேசைமேல் வைத்துவிட்டு உள்ளே சென்றான் சேகர்.. இது தான் தக்க சமயமென நினைத்த வாசுகி சேகரின் புத்தகமொன்றுக் குள் அக்கடிதத்தைத் திணித்தாள். ஆனால், நூல் நிலையத்துக்குள் ளிருந்து வாசுகியைக் கவனித்துக் கொண்டிருந்த சேகர் இதைக் கண்டுவிட்டான். அவனுக்கு விடயம் புரிந்து விட்டது; அத்துடன் அன்று விவாதம் முடிந்தவுடன் அவள் தன்னைப் பாராட்டியதும் அவன் நினைவில் வந்தது. இதை நினைத்து உள்ளூரச் சந்தோஷப் பட்டான் சேகர். ஆனால், என்ன கடிதத்தை வாசுகி என் புத்த கத்துள் வைத்தாளென்று அறிய அவனுக்கு ஆவலாயிருந்தது. உடனே வந்த வேலையையும் விட்டுவிட்டுப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு விடுதிக்குச் சென்றான். அங்கு சென்று புத்தகத்தை விரித்துப் பார்த்தபோது ‘சேகருக்கு’ என்ற முகவரியுடன் ஒரு காகித உறை கிடந்தது. கடிதத்தைப் பிரித்துப் படித்த சேகர் வாசுகி தன்னை உணர்ந்து கொண்டாளே என்று மகிழ்ச்சியடைந் தான். பெண்கள் முதலில் ஒன்றையும் யோசியாமல் செய்துவிட் டுப் பின்பு உணர்ந்து துக்கப்படுவார்கள்’ என்ற நண்பன் சோமு வின் அறிவுரையும் அவன் மனதில் வந்தது. 

மாலை ஐந்து மணி இருக்கும் சேகர் பூந்தோட்டத்தில் ஒரு ஆச னத்தில் தனியாக அமர்ந்துகொண்டிருந்தான். சற்று நேரத்தில் வாசுகியும் அங்கு வந்து சேர்ந்தாள். 

அவள் வந்துகொண்டே, “இப்பொழுதும் என்னை மன் னித்துவிடுங்கள். ஏனென்றால் உங்கனை அதிக நேரம் இங்கு காத்திருக்க வைத்துவிட்டேன்” என்று குறும்பாகக் கூறினாள். அவளுடைய மனமாற்றத்தையும் தன்னுடைய உள்ளக்கிடக் கையை அவள் புரிந்துகொண்டதையும் நினைந்து வியந்த சேகர், 

“உங்களுக்காகவென்றால் எவ்வளவு நேரமும் நான் காத் திருப்பேனே” என்று சிரிப்புடன் கூறினான். 

அதைக் கேட்ட வாசுகி வெட்கத்தோடு தலையைக் குனிந்தாள், சேகருக்கோ அளவில்லாத மகிழ்ச்சி பொங்கியது. 

தன் கையில் மடித்து வைத்திருந்த ஒரு கடதாசியை அவள் சேகரிடம் நீட்டி, 

“இனிமேல் என்னை நீங்கள் ஏமாற்ற மாட்டீர்களென நம்பு கிறேன். இதை, என்னைப்போல் மறுக்கமாட்டீர்கள்” என்று அந்த, விடுதி ‘டின்னர்’ அழைப்பிதழை நீட்டினாள். அந்த அழைப் பிதழ்தான் தன்னை வாசுகியோடு ஒன்று சேர்த்ததென நினைத்த சேகர் ஒரு சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டான். 

(யாவும் கற்பனை) 

– இளங்கதிர், 1959-1960, பன்னிரெண்டாவது ஆண்டு மலர், தமிழ்ச் சங்கம், இலங்கை பல்கலைக்கழகம், பேராதனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *